lifestyles Uncategorized

30 வயதிற்குப் பிறகு ஆண்கள் அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டிய 10 வைட்டமின்கள்..!

ஆண்களின் வயது அதிகரிக்க, அதிகரிக்க அவர்களது உடல் பலவித மாற்றங்களுக்கு உள்ளாகின்றன. இந்த சமயத்தில் அவர்களிடம் இயற்கையாகவே சில குறிப்பிட்ட ஹார்மோன் மற்றும் ஊட்டச்சத்துகள் குறையத் தொடங்குகின்றன. 30 வயதிற்குப் பிறகும் நல்ல உடல் திடகாத்திரத்தோடும் உயிர்சக்தியோடும் இருக்க வேண்டுமென்றால் வைட்டமின் சத்துகள் மீது நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். 30 வயதைக் கடந்த ஆண்கள் அனைவரும் அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டிய 10 வைட்டமின் குறித்தே இந்தக் கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.




Buy BEST CHOICE NUTRITION Vitamin E 50 ...

வைட்டமின் டி : 30 வயதிற்குப் பிறகு ஆண்களின் டெஸ்டோஸ்டெராயின் அளவு குறையத் தொடங்குகிறது. இதனால் உடலின் ஆற்றலும் தசைகளும் பாதிக்கப்படுகின்றன. இங்குதான் வைட்டமின் டி ஒரு ஹீரோ போல் செயல்பட்டு நம்முடைய டெஸ்டோஸ்டெராயின் அதிகரிக்க உதவுவதோடு வலிமையான எலும்புகளுக்கு கால்சியம் சத்து கிடைப்பதற்கும் உதவுகிறது. குறிப்பிட்ட புற்றுநோய் மற்றும் இதய நோயிலிருந்தும் நம்மை வைட்டமின் டி காக்கிறது.

வைட்டமின் பி12 : சிவப்பு ரத்த அணுக்களையும் நரம்பியம் மண்டலங்களையும் ஆரோக்கியமாக பராமரிக்க வேண்டியது மிகவும் முக்கியமாகும். இறைச்சி உணவுகளில் இருக்கும் வைட்டமின் பி12 இதை கச்சிதமாக செய்கின்றன. வீகன் மற்றும் சைவ உணவுப் பிரியர்கள் இறைச்சி உணவுக்குப் பதிலாக சப்ளிமெண்ட்ஸ் அல்லது செறிவூட்டப்பட உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.

வைட்டமின் பி6 : சிவப்பு ரத்த அணுக்கள் உற்பத்தி ஆவதற்கும் நோய் எதிர்ப்பு செயல்பாட்டிற்கும் உதவும் வைட்டமின் பி6, உடலின் பலவித செயல்பாட்டிற்கும் காரணமாக இருக்கிறது. மீன், சிக்கன், தானியங்கள், பாதாம், சூரியகாந்தி விதைகள் ஆகியவற்றில் நிறைந்திருக்கும் வைட்டமின் பி6, புரத மெடபாலிஸத்திற்கும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் உதவி புரிகிறது.




மாக்னீசியம் : இதயம் மற்றும் தசைகள் ஆரோக்கியத்திற்கு மாக்னீசியம் மிகவும் அவசியமாகும். சர்க்கரை அளவு மற்றும் உயர் ரத்த அழுத்தத்தை ஒழுங்குப்படுத்தி நல்ல தூக்கத்திற்கும் உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்வதற்கும் உதவியாக இருக்கிறது மாக்னீசியம்.

துத்தநாகம் : ஹார்மோன் சமநிலைக்கும் டெஸ்டோஸ்டெரோன் அளவுக்கும் மிகவும் முக்கியமானது துத்தநாகம். டெஸ்டோஸ்டெரோன் எஸ்ட்ரோஜெனாக மாறாமல் இருப்பதற்கும் விறைப்புத்தன்மை குறைபாடு வராமல் தடுப்பதற்கும் இது உதவியாக இருக்கிறது. சிப்பி, பூசணி விதை ஆகியவற்றில் துத்தநாகம் நிறைந்துள்ளது.

ஓமேகா-3 : அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்த ஓமேகா-3, ரத்த நாளங்களுக்கும் மூளைக்கும் இதயத்திற்கும் அரணாக செயல்படுகிறது. கொழுப்பு மீன்களில் அதிகமாக உள்ள ஓமேகா-3, புரோஸ்டேட் புற்றுநோய் மற்றும் இதய நோய் வரும் ஆபத்திலிருந்து நம்மை காக்கிறது.

ஃபோலேட் : டிஎன்ஏ சீரமைப்பிற்கும் செல் பிரிவிற்கும் அவசியம் தேவைப்படும் ஃபோலேட், நம் ஆரோக்கிய மேம்பாட்டில் முக்கிய பங்காற்றுகிறது. கீரைகள் போன்ற பச்சை இலை காய்கறிகளில் ஃபோலேட் அதிகம் உள்ளது.

வைட்டமின் கே : ரத்தன் உறைவதற்கும் எலும்பு ஆரோக்கியத்திற்கும் அவசியம் தேவைப்படும் வைட்டமின் கே, வயதான ஆண்களுக்கு வரக்கூடிய டிமென்ஷியா நோயிலிருந்து காக்கிறது. பச்சை இலை காய்கறிகள், பழங்கள், எண்ணெய்களில் வைட்டமின் கே அதிகம் உள்ளது.




வைட்டமின் ஏ : பார்வை திறன், சருமம், நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவை அனைத்துக்ம் வைட்டமின் ஏ சத்தையே நம்பியுள்ளது. ஆண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்திற்கும் குறிப்பாக விந்தனு உற்பத்திக்கும் புரோஸ்டேட் ஆரோக்கியத்திற்கும் உதவியாக இருக்கிறது. கேரட், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பால் பொருட்களில் வைட்டமின் ஏ சத்து அதிகமுள்ளது.

Buy Livogen Tablet - MedPlus

இரும்புச்சத்து : உடல் ஆற்றலுக்கும் ஆக்ஸிஜன் பரிமாற்றத்திற்கும் சிவப்பு ரத்த அணுக்கள் உற்பத்திக்கும் இரும்புச்சத்து மிகவும் அவசியமாகும். 30 வயதிற்கு மேலுள்ள ஆண்கள் உடல் களைப்பை போக்கவும் உயிர்சக்தியை பராமரிக்கவும் இரும்புச்சத்து அதிகமுள்ள உணவுகளை தங்கள் டயட்டில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!