lifestyles News

குழந்தைகளை எந்த வயது வரை உங்களுடன் தூங்க வைக்கலாம்..? கண்டிப்பாக பெற்றவர்கள் தெரிந்துகொள்ளுங்கள் .!

ஒவ்வொரு குழந்தைகளுக்கும் ஒவ்வொரு விதமான தூங்கும் முறை இருக்கும். சில குழந்தைகள் தலையணைகள், போர்வைகள் மற்றும் பொம்மைகளுடன் தூங்குவதை விரும்புவார்கள். இன்னும் பல குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் தூங்கும் பழக்கத்தை வழக்கமாகவே கொண்டுள்ளனர். இந்த பழக்கம் அவர்கள் சிறு பிள்ளையாக இருக்கும் வரை சரி, ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவர்கள் பெரியவர்களாக வளரும்போது ஒரு சில அசௌகரியங்கள் ஏற்படும்.

ஏன், திடீரென குழந்தைகளை விட்டு வேரெங்காவது செல்லும் சூழல் ஏற்பட்டால் கூட மிக சிரமமாக தோன்றும். இவ்வாறிருக்கையில் குழந்தைகள் தனித்தனியாக அவ்வபோது தூங்குவது மிகவும் அவசியமாகும். ஏன் என்பது பற்றி இப்பொழுது விரிவாக பார்க்கலாம்.




குழந்தைகள் ஏன் தனியாக தூங்க பழக வேண்டும் தெரியுமா?

குழந்தைப் பருவத்தில், பெற்றோரிடம் அதிக பற்றுதல் இருக்கும். இந்த காரணத்திற்காக, அவருடன் தூங்குவது தவறல்ல. ஆனால் குழந்தைகள் வளரும்போது, ​​அவர்கள் தனியாக தூங்கப் பழக விரும்புகிறார்கள். சில நேரங்களில் குழந்தையே தனியாக தூங்க விரும்பினால் கூட பெற்றோர்கள் விடுவதில்லை. இது முற்றிலும் தவறான செயல். இப்படி தொடந்து செய்யும் பட்சத்தில் அக்குழந்தை எப்பொழுதும் தூங்குவதற்கு பெற்றோரை தேடுவதற்கு அதிக வாய்ப்பு உண்டு.

News18

உங்கள் குழந்தைகளை தனியாக தூங்க வைப்பதற்கான உதவிக்குறிப்புகள் :

திடீரென உங்கள் பிள்ளையை தனியாக தூங்க வற்புறுத்தாதீர்கள். எந்த குழந்தையாக இருந்தாலும் திடீரென தனியாக இருக்கப் பழகி விடாது. அதற்கு முதல் படியாக அவர்களை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை தனியாக தூங்க வையுங்கள். அதன் பின்னர் தனியாக தூங்கும் நாட்களை படிப்படியாக அதிகரிக்கவும். இதனை தொடர்ந்து செய்வதன் மூலம் அவர்கள் தனியாக தூங்குவதற்கு சிறிது பழகிக் கொள்வார்கள்.




தினமும் இரவு உறங்கச் செல்வதற்கு முன் உங்கள் குழந்தைகளை ஃபிரஷ் அப் செய்து நைட் டிரெஸ் போட்டு விட்டு அவர்களை மெத்தையில் தூங்கும் நிலையில் படுக்கவைத்து போர்வைகளை போத்தி அருகில் அமர்ந்து நல்ல கதை ஒன்றை சொல்லுங்கள்.

பின்னர் விளக்குகளை அணைத்து விட்டு குட்நைட் சொல்லிவிட்டு செல்லுங்கள். இவ்வாறு உங்கள் குழந்தைகள் தனியாக உறங்குவதை கான சிரமமாக இருக்கலாம். இன்றே இந்த வழக்கத்தை முறித்துக் கொள்ளலாம் எனத் தோன்றலாம். ஆனால் இவ்வாறாக செய்வது மிகவும் முக்கியம். இப்படி செய்தால் தான் உங்கள் குழந்தைகள் விரைவாக தனியாக உறங்குவதற்கு பழகுவார்கள்.

குழந்தைகளை தனியாக உறங்க வைப்பதற்கு ஏற்ற வயது என்ன தெரியுமா?

நிபுணர்களின் கூற்றுப்படி படிப்படியாக குழந்தைகளை 8 வயதிலிருந்தே தனித்தனியாக தூங்க வைக்க முயற்சி செய்யலாம். இந்த வயதிற்கு பின்னர் குழந்தைகள் பெரியவர்களாக தொடங்குகிறார்கள். எதனையும் சமாளிக்கும் திறனும் வளரத் துவங்குகிறது.




What’s your Reaction?
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!