lifestyles

எலுமிச்சை-யில் 7 லட்சம்.. லாபம் பார்க்கும் ஆனந்த் மிஸ்ரா

2017 ஆம் ஆண்டில் உத்தரப் பிரதேசத்தில் எலுமிச்சை பண்ணைகளைத் தேடி ஆனந்த் மிஸ்ரா அலைந்தார், சில மாவட்டங்களுக்குச் சென்ற அவர் விவசாயிகள் பெருமளவு கோதுமை, நெல், உருளைக்கிழங்கு, மற்ற பயிர்களை சாகுபடி செய்வதைப் பார்த்தார். எங்கும் எலுமிச்சையைப் பார்க்க முடியவில்லை. பாரம்பரியமான பயிர்களில் விவசாயிகள் ஐந்து மாதங்களில் அறுவடை செய்து லாபத்தைப் பார்க்கின்றனர். இதனால் அவர்களால் வேறு தோட்டப்பயிர்களுக்கு மாற முடியவில்லை. ஆனால் நான் ஒரு முறை முதலீடு செய்து நீண்டகாலத்துக்கு லாபத்தைப் பெற விரும்பினேன் என்று ஆனந்த் மிஸ்ரா கூறினார்.




இதைத் தொடர்ந்து அவர் எலுமிச்சைப் பண்ணையை அமைக்க முடிவு செய்தார். ஆந்திரப் பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பரவலாக எலுமிச்சை சாகுபடி செய்யப்படுகிறது. உத்தரப் பிரதேச விவசாயிகளுக்கு எலுமிச்சை சாகுபடி முற்றிலும் புதிய விஷயமாகும், யாருமே எலுமிச்சையைப் பயிரிடவில்லை. எனவே நான் ரிஸ்க் எடுக்க முயற்சி செய்துவிட்டேன். ஒன்று நான் நீச்சல் கற்றுக் கொள்ள வேண்டும் அல்லது தண்ணீரில் மூழ்கி சாகவேண்டும் என்று ரேபலியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் கூறியதாக பேசும் ஆனந்த் மிஸ்ரா அவரது முயற்சியில் அவர் வெற்றி பெற்று விட்டார்.

எலுமிச்சையை மற்ற பாரம்பரியமான பயிர்களை ஒப்பிடும் போது நான் ஆண்டுக்கு ஐந்து முறை லாபம் பார்த்து விட்டேன். 40,000 முதல் 50,000 ரூபாய் வரை வருமானம் வந்தது என்று அந்த விவசாயி கூறுகிறார். அவரது 2 ஏக்கர் நிலத்தில் இருந்து எலுமிச்சை சாகுபடி மூலம் 7 லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறார். கடந்த ஆண்டு ஆனந்த் மிஸ்ரா 400 கிரேட் எலுமிச்சையை விளைவித்தார். அவற்றை உள்ளூர் சந்தையில் ரூ.40 முதல் ரூ.70க்கு விற்பனை செய்தார். இந்த வெற்றியைத் தொடர்ந்து அவர் ரேபரேலியின் எலுமிச்சை மனிதர் என்று செல்லமாக அழைக்கப்படுகிறார்.

ரேபரேலியின் கச்நாவன் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த் மிஸ்ரா ஒரு பிபிஏ பட்டதாரி. உத்தரப்பிரதேசத்தின் நொய்டா, பஞ்சாப், பிஹார் உள்பட பல நகரங்களில் 13 வருடங்கள் வேலை பார்த்தார். இருந்தாலும் அவருக்கு சொந்த ஊர் நினைப்பு மாறவில்லை. கிராமங்களில் மக்கள் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கின்றனர். நகரமக்களுக்கு பல்வேறு இம்சைகள் உள்ளன. கிராம மக்கள் தூய காற்றையும் இயற்கையாக விளைந்த காய்கறிகளையும் சாப்பிட்டு நோயின்றி நீண்ட காலம் வாழ்கின்றனர். நான் எப்போது சொந்த ஊருக்கு போனாலும் விவசாயத்தில் ஈடுபடுவேன். எனது வேலையில் நான் மகிழ்ச்சியாக இருந்தாலும் எனது முன்னோர்களின் நிலத்தைப் பயன்படுத்தவே நினைத்தேன் என்கிறார் ஆனந்த்.




இந்த நிலையில் 2016இல் வேலையை விட்டு விட்டு பண்ணைத் தொழிலில் இறங்கினார். அவரது தாயாரைத் தவிர குடும்பத்தினர் அனைவரும் ஆனந்த் மிஸ்ராவின் முடிவை ஆதரித்தனர். அவரது குடும்பம் பாரம்பரியமாக நெல், கோதுமை, பருப்பு, பட்டாணி ஆகியவற்றை பயிரிட்டது. அதற்கு மாறாக ஆனந்த் மிஸ்ரா எலுமிச்சையை விளைவித்தார். தொடக்கத்தில் அவரது நிலத்தில் தாயின்சா என்ற நீண்ட புல்லை வளர்த்தார். இது நிலத்தில் கார்பன் அளவை அதிகரித்தது. பின்னர் நிலத்தை சமப்படுத்திவிட்டு 900 எலுமிச்சை செடிகளை பயிரிட்டார். ஒரு செடியின் விலை ரூ.200 ஆகும். அந்தச் செடிகளை வாராணசியில் உள்ள ஒரு நர்சரியில் வாங்கினார். இதில் வளர்ந்த எலுமிச்சைப் பழம் நல்ல திரட்சியாக அதிக சாறு தரும் தரமானதாக இருந்தது.

இந்த எலுமிச்சை ஒவ்வொன்றும் 100 கிராம் எடை இருந்தது. வழக்கமான பழங்கள் 30 முதல் 50 கிராம் தான் இருக்கும். எலுமிச்சை செடியை நடும்போது கிழக்கு மேற்காக நட வேண்டும். அந்த பிராந்தியத்தில் வீசும் காற்றுக்கு ஏற்றவாறும் நடலாம். இதனால் சூறாவளி வீசும்போது செடிகள் வேரோடு பிய்ந்து வராது. 10 அடிக்கு 10 அடி இடைவெளி விட்டு வரிசையாக செடிகளை நடவேண்டும் என்று ஆனந்த் தெரிவித்தார். ஒவ்வொரு 400 எலுமிச்சை செடிக்கும் நடுவே 50 சாத்துக்குடி செடிகளை நட்டால் குறைந்த செலவில் நிறைய லாபம் பார்க்கலாம் என்கிறார். அவர் தனது நிலத்தில் இயற்கை மற்றும் செயற்கை உரங்களைப் பயன்படுத்துகிறார். மழைக்காலத்துக்கு முன்பாக 15 கிலோ இயற்கை உரத்தை ஒவ்வொரு செடிக்கும் இட்டால் நல்ல விளைச்சல் கிடைக்கும். அத்துடன் டிஏபி, யூரியா, பொட்டாஷ் போன்ற உரங்களையும் சேர்த்து இடுகிறார் ஆனந்த். நிறைய லாபத்தைப் பார்த்தாலும் கிராமத்தில் நிம்மதியான வாழ்க்கையை அனுபவிக்கிறார் ஆனந்த் மிஸ்ரா. பொதுவாக, சிறிய பூஞ்சை மற்றும் பூச்சி தாக்குதல்களில், மாட்டு சிறுநீர், வெல்லம், பூண்டு மற்றும் மிளகாய் விழுது ஆகியவற்றைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட கரிம பூச்சிக்கொல்லிகளை தெளிப்போம்.




இந்த கலவையை இரண்டு முதல் மூன்று நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும். ஆனால் இலைகளில் சேதம் கட்டுப்பாட்டை மீறும் போது, குளோர்பைரிஃபோஸ் போன்ற பூச்சிக்கொல்லிகளை அனுமதிக்கப்பட்ட அளவு பயன்படுத்துகிறோம். ஒரு சீசனில் ஒரு முறை மட்டுமே தெளிக்க வேண்டும்,” என்று அவர் விளக்குகிறார். எலுமிச்சை பழம் ஒரு மரத்தில் காய்ப்பதற்கு சுமார் நான்கு ஆண்டுகள் ஆகும். கடந்த ஆண்டு, 100 டன் எலுமிச்சை பழங்களை அறுவடை செய்ததாக ஆனந்த் கூறுகிறார். எலுமிச்சை விவசாயம் ஆனந்துக்கு தொடர்ந்து வருமானம் வருவதை உறுதி செய்கிறது. ஏனென்றால் எலுமிச்சை பழத்துக்கு ஆண்டு முழுவதும் தேவை உள்ளது. 1.85 லட்ச ரூபாய் முதலீட்டுக்குப் பிறகு, இன்று ஆனந்த் தனது இரண்டு ஏக்கர் நிலத்தில் 7 லட்சம் ரூபாய் வரை லாபம் ஈட்டுகிறார். பெரும் லாபத்தை விட, 50 வயதான அவர் கிராமத்தில் மன அழுத்தமில்லாத வாழ்க்கையை நடத்துவதில் திருப்தி அடைகிறார். நல்ல சம்பளம் தந்த வேலையை உதறியதற்காக வருத்தப்படவில்லை. முன்பு, நான் ஒரு வேலைக்காரனாக இருந்தேன், இப்போது நான் ஒரு பண்ணையின் உரிமையாளராக ஆகிப் பெருமைப்படுகிறேன் என்று அவர் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறார்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!