health benefits lifestyles

பெண்கள் 30 வயதுக்கு பின் எலும்பு ஆரோக்கியத்தை பராமரிக்க என்ன செய்யலாம்..?

பெண்கள் தங்கள் எலும்புகளின் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். அதுவும் குறிப்பாக 30 வயதை கடந்த பெண்கள் கூடுதல் அக்கறையோடு இருக்க வேண்டும். ஏனென்றால் இந்த சமயத்தில் தான் எலும்பின் அடர்த்தி அதிகமாகும்.




ஆகையால் அதற்குண்டான ஊட்டச்சத்து மற்றும் பராமரிப்பு முறைகளை நாம் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. எலும்பு ஆரோக்கியத்தில் ஏற்படும் சிறு சிறு பிரச்சனைகளை கவனிக்காமல் விட்டால், அது நாளடைவில் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுக்கும். எலும்பு ஆரோக்கியம் தொடர்பாக 30 வயதை கடந்த பெண்களிடம் காணப்படும் அறிகுறிகள் பற்றியே இப்போது தெரிந்துகொள்ளப் போகிறோம்.

எலும்பு ஆரோக்கியத்திற்கு மிகவும் அத்தியாவசியமான கால்சியம் சத்து ஒவ்வொரு பெண்ணிற்கும் அவசியம் தேவை. 99 சதவிகித கால்சியம் எலும்பு மற்றும் பற்களில்தான் உள்ளது. கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் எலும்பு முறிவு ஏற்படும் ஆபத்தை 50 சதவிகிதம் குறைக்க முடியும்.

உடலில் போதுமான கால்சியம் சத்து இல்லையென்றால் எலும்புகள் மட்டும் பலவீனமடைவதில்லை; கூடவே ஈறுகள் மற்றும் பற்களும் சேர்ந்து பலவீனமடைந்து அறிகுறிகளை வெளிப்படுத்துகின்றன. முக்கியமாக கர்ப்பிணி பெண்கள் மற்றும் PCOS/PCOD பிரச்சனை உள்ளவர்களுக்கு போதுமான அளவு கால்சியம் சத்து கிடைக்காத காரணத்தால் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும்.




உடலில் கால்சியம் சத்து உறிஞ்சப்படுவதற்கு வைட்டமின் டி அவசியமாகும். உலகளவில் ஒரு பில்லியனுக்கும் அதிகமானோர் வைட்டமின் டி குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்களின் தசைகள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.

பெண்களின் எலும்பு ஆரோக்கியத்தை எப்படி அதிகப்படுத்துவது? பெண்களின் வயது அதிகரிக்க, அதிகரிக்க, அவர்களின் ஒட்டுமொத்த உடல்நலனையும் பராமரிப்பதற்கு எலும்பு ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் எலும்புப்புரை மற்றும் எலும்பு முறிவு போன்ற பிரச்சனைகளை தவிர்க்க முடியும். எலும்புகளை பலப்படுத்துவதற்கு சில வழிமுறைகளை ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.




தினசரி நீங்கள் செய்யும் உடற்பயிற்சியில் கூடுதலாக எடை தூக்கும் பயிற்சியையும் சேர்த்துக் கொள்ளுங்கள். குடும்பத் தலைவிகளுக்கும் அலுவலகத்தில் பணியாற்றும் பெண்களுக்கும் இந்தப் பயிற்சி பயனுள்ளதாக இருக்கும்.

மாக்னீசியம், வைட்டமின் கே2 அதிகமுள்ள உணவுகளை உங்கள் சரிவிகித டயட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள். இவை உங்கள் எலும்பு ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்தை தருவதோடு மெனோபாஸ் மற்றும் மாதவிடாய் சுழற்சி சமயத்திலும் உதவியாக இருக்கிறது.

உடலுக்கு தேவையான நீர்ச்சத்து இல்லாமல் இருப்பது, கஃபைன் மற்றும் மதுபானங்களை பருகுவது போன்றவையும் எலும்பு அடர்த்தியில் குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும்.




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!