lifestyles

உங்க சீலிங் ஃபேன் மெதுவாக சுத்துதா? இதை ஃபாலோ பண்ணுங்க!

தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கடந்த மே 4 ஆம் தேதி கத்திரி வெயில் தொடங்கிய நிலையில் வெப்பம் மேலும் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் அன்றாட தேவைகளுக்கு கூட வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

Remote & Underlight Ceiling Fan ...

கோடையின் கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் பலரும் ஏசி, ஏர் கூலர்களை வாங்க கடைகளுக்கு படையெடுக்கின்றனர். ஆனால் பெரும்பாலான மக்கள் ஏசி வாங்க முடியாத சூழலில் உள்ளனர்.

இந்த சூழலில் மின்விசிறி மெதுவாக இயங்க ஆரம்பித்தால், அறை வெப்பமாகிவிடும். உடனே பொதுமக்கள் தங்கள் மின்விசிறி தான் பிரச்னை என நினைத்துக்கொண்டு புது மின்விசிரி வாங்க திட்டமிடுகின்றனர்.

ஆனால் அதற்கு முன்பாக சில விஷயங்களை செய்ய மறந்து விடுகின்றனர். மின்விசிரியின் சிறிய குறைபாடு கூட அதன் வேகத்தை குறைக்கலாம். எனவே மின்விசிரியின் வேகத்தை அதிகரிக்க இவற்றை பின்பற்றுங்கள்.




மின்தேக்கியில் குறைபாடு : மின்தேக்கியின் முக்கிய பணி,  மின்விசிரியில் உள்ள மோட்டருக்கு சரியான சக்தியை வழங்குவது ஆகும். மின்விசிரியின் 90% பிரச்னைகளுக்கு காரணம் அதில் இருக்கும் மின்தேக்கி தான்.

மின்தேக்கி பழுதடையும்போது மோட்டருக்கு மின்சாரத்தை மாற்ற முடியாது. இதன் காரணமாகவே மின்விசிரியின் வேகம் குறைய ஆரம்பித்துவிடுகிறது. எனவே உங்கள் மின்விசிரி மெதுவாக சுற்றினால், முதலில் மின்தேக்கியை சரிபாருங்கள்.

பிளேடு : மின்விசிரியின் பிளேடுகள் மீது நாம் பல சமயங்களில் கவனம் செலுத்துவதில்லை. மின்விசிரி மெதுவாக சுற்றுவதற்கு அதுவும் ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். எனவே உங்கள் மின்விரி வளைந்தோ, நெளிந்தோ இருக்கிறதா என்பதை உறுதி செய்துக்கொள்ளுங்கள்.

பேரிங் : மின்விசிரிகளில் அழுக்கு, தூசி மற்றும் குப்பைகள் சேர வாய்ப்புள்ளது. இதன் காரணமாக மின்விசிரியின் வேகம் குறைய வாய்ப்புள்ளது. எனவே அடிக்கடி மின்விசிரியை சுத்தம் செய்யுங்கள்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!