gowri panchangam Sprituality

இன்றைய ராசி பலன் (28.03.24)

சந்திர பகவான் இன்று துலாம் ராசியில் பயணம் செய்கிறார். இன்று மாலை 05.44 வரை திருதியை. பின்னர் சதுர்த்தி. இன்று மாலை 05.28 வரை சுவாதி. பின்னர் விசாகம். பூரட்டாதி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.




மேஷ ராசி அன்பர்களே!

தொழில் சம்பந்தப்பட்ட சிக்கலான பிரச்சனைகளில் சுமூகமான முடிவு காண்பீர்கள். வியாபாரத்தை நிதானமாக நடத்துவீர்கள். வருமானத்தை அதிகரித்து தலை நிமிர்ந்து நிற்பீர்கள். மனதிற்குப் பிடித்த பெண்ணின் ஆசையை நிறைவேற்றி வைப்பீர்கள். தாயாரின் இடுப்பு வலியை போக்குவதற்கு பெல்ட் வாங்கி கொடுப்பீர்கள்.விநாயகரை வழிபடுவதன் மூலம் மனமகிழ்ச்சி அதிகரிக்கும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி  உறவினர்களால் பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரியங்களில் அனுகூலம் உண்டாகும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

ரிஷப ராசி அன்பர்களே!

அக்கம் பக்கத்து சில்லறை சண்டையில் மாட்டிக் கொள்வீர்கள். இருப்பினும். அதை சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். வெளியூர் பயணங்களில் விரும்பத்தகாத செயல்களை எதிர்கொள்வீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். தந்தையாருக்கு கண் புரை நோய்க்கு மருத்துவ சிகிச்சை மேற்கொள்வீர்கள்.ஆஞ்சநேயர் வழிபாடு நன்மை தரும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியுடன் ஆதாயமும் தரும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.

மிதுன ராசி அன்பர்களே!

நினைத்த காரியத்தை நிதானமாக நிறைவேற்றுவீர்கள். உங்கள் வாக்கு வன்மையால் வியாபாரத்தில் வருமானத்தைப் பெருக்குவீர்கள். கணவன் மனைவியிடையே விட்டுக் கொடுத்து மகிழ்ச்சியை பரிமாறி கொள்வீர்கள். மகனுக்கு பைக் வாங்கி பரிசளித்து சந்தோஷப்படுவீர்கள். உறவினர்களின் பிரச்சினையைத் தீர்க்க உதவி செய்வீர்கள்.தட்சிணாமூர்த்தி வழிபாடு தடைகளைத்  தகர்த்துவிடும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் விவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நன்று.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தேவையற்ற செலவுகளால் கையிருப்பு கரையும்.

கடக ராசி அன்பர்களே!

வியாபாரத்தை விரிவுபடுத்த வித்தியாசமாக சிந்திப்பீர்கள். தொழில்துறை போட்டிகளை தகர்த்து எறிவீர்கள். சில நேரங்களில் மற்றவர் பேச்சுகளை தவறாக புரிந்து கொள்வீர்கள். வெளிநாட்டு பயணம் செல்ல ஏற்பாடு செய்வீர்கள். நீங்கள் நல்ல காரியங்களை செய்து மற்றவர்களின் புகழ்ச்சியை பெற்று பெருமிதம் கொள்வீர்கள்.வியாபாரம் சுமாராகத் தான் இருக்கும். துர்கை வழிபாடு காரிய வெற்றி தரும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிர்பார்த்த செய்தி கிடைப்பது தாமதமாகும்.

சிம்ம ராசி அன்பர்களே!

நீங்கள் விரும்பாத இடத்திற்கு பணி மாறுதல் செய்யப்படுவீர்கள். வியாபாரம் தொடர்பான பயணங்களில் மிகுந்த அல்லல்படுவீர்கள். குழந்தை பாக்கியம் ஏற்பட்டு குதூகலம் அடைவீர்கள். கலைத்துறையினர் புதிய முயற்சியில் இறங்கி வெற்றி கொடி நாட்டுவீர்கள். காதலியின் மன வருத்தத்தை போக்குவீர்கள். பழைய கடன்களை பக்குவமாக வசூல் செய்வீர்கள்.விநாயகப் பெருமானை வழிபடுவதன் மூலம் மனமகிழ்ச்சி அதிகரிக்கும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப்பணிகளில் பங்கேற்கும் வாய்ப்பு ஏற்படும்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க வகையில் ஆதாயம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

கன்னி ராசி அன்பர்களே!

ரியல் எஸ்டேட் தொழிலில் எதிர்பாராத ஏற்றம் அடைவீர்கள். கலைஞர்கள் தங்குதடையின்றி புதிய வாய்ப்பைப் பெறுவீர்கள். கடுமையான நோய் தாக்கத்திலிருந்து விடுபடுவீர்கள். நீங்கள் எதிர்பார்த்த புதிய வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வீர்கள். வியாபாரத்தில் இருந்த இடையூறுகளை குறைப்பீர்கள். உத்தியோகத்தில் ஊதிய உயர்வை பெறுவீர்கள்.மகாலட்சுமியை வழிபட மகிழ்ச்சி கூடுதலாகும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கிய பிரமுகர்களின்  உதவியால் காரிய அனுகூலம் உண்டாகும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களிடம் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வராது என்று நினைத்த கடன் தொகை கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டாகும்.

துலா ராசி அன்பர்களே!

பண வரத்து அதிகமாகி வீட்டுக் கடனில் ஒரு பகுதியை அடைப்பீர்கள். வெளிநாட்டுப் பயணத்தில் சாதகமான பலன்களை அடைவீர்கள். உயரதிகாரிகள் மூலம் உத்தியோகத்தில் உதவிகள் பெறுவீர்கள். பிள்ளைகளின் நடத்தையால் பெருமைப்படுவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் மூலம் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். பொருளாதார மேம்பாடு காண்பீர்கள்.முருகப்பெருமானை வழிபடுவது நன்று.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் திடீர் செலவுகள் ஏற்படக்கூடும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குடும்பப் பெரியவர்களால் ஆதாயம்  உண்டாகும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளால் நிலை குலைந்து போவீர்கள். கைக்கு எட்டிய வாய்ப்புகளை பயன்படுத்த முடியாமல் தடுமாறுவீர்கள். வியாபாரக் கடன்களை வசூலிப்பதில் சிரமப்படுவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் கலக்கமடைவீர்கள். கணவன்-மனைவி இருவரும் பழைய விஷயங்களைக் கிளறி அமைதியை கெடுப்பீர்கள் .லட்சுமி நரசிம்மர் வழிபாடு நற்பலன்களை அதிகரிக்கச் செய்யும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல்நலனில் கவனமாக இருப்பது அவசியம்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வருகையால் செலவுகள் அதிகரிக்கும்.

தனுசு ராசி அன்பர்களே!

அலுவலகப் பணி தொடர்பாக அலைய வேண்டிய கட்டாய நிலைக்க ஆளாவீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்யப்போய் தேவையில்லாத பிரச்சனையில் மாட்டிக்கொள்வீர்கள். வாடிக்கையாளர்களிடம் வாக்கு சாதுரியமாகப் பேசாவிட்டால் நஷ்டம் அடைவீர்கள். அலட்சியமாக வேலை செய்தால் ஆபத்தில் சிக்குவீர்கள். சந்திராஷ்டமம். எச்சரிக்கை தேவை.சிவபெருமானை வழிபடுவதன் மூலம் நன்மைகள் அதிகரிக்கும்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய  முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பதற்றம் தவிர்க்கவும்.

மகர ராசி அன்பர்களே!

ஆன்மீகப் பணியில் அதிக நாட்டம் கொள்வீர்கள். மறைமுக எதிர்ப்புகளை தாண்டி வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பால் பெருமை அடைவீர்கள். உடன் வேலை பார்க்கும் பெண்ணின் உள்ளத்தை கொள்ளை அடிப்பீர்கள். குடும்ப உறவுகளை ஒன்றிணைக்க பாடுபடுவீர்கள். பணியிடத்தில் பாராட்டப்படுவீர்கள்.இன்று தட்சிணாமூர்த்தியை வழிபடுவதன் மூலம் சிரமங்களைக் குறைத்துக் கொள்ளலாம்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது,

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

கும்பராசி அன்பர்களே!

உண்மையாகவும் நேர்மையாகவும் நடக்க வேண்டும் என்று உறுதியாக இருப்பீர்கள். தொழில் தொடர்பான இழுபறி நிலைகளை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் மந்தமான போக்கு காணப்பட்டாலும் பண வரவால் மகிழ்ச்சி அடைவீர்கள். அரசு வேலையில் உள்ளவர்கள் மேலதிகாரிகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்வீர்கள். சந்திராஷ்டமம். எச்சரிக்கையாக செயல்படுங்கள்.மகாவிஷ்ணுவை வழிபட மகிழ்ச்சி அதிகரிக்கும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்கள் மூலம் சில சங்கடங்கள் ஏற்படும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் இணக்கமாக நடந்து கொள்வது நல்லது.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் மகிழ்ச்சியுடன் பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.

மீனராசி அன்பர்களே!

பெண்கள் துணிச்சலுடன் செயலாற்றி காரியசித்தி அடைவீர்கள். விருப்பமான உறவுகளுடன் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். அலுவலகப் பணிகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். மேலதிகாரிகள் கொடுத்த வேலையை முடித்து பாராட்டுப் பெறுவீர்கள். அரசாங்க உதவிகளை சுலபமாக பெறுவீர்கள். தர்மசிந்தனை அதிகரித்து பிறருக்கு உதவி செய்வீர்கள். சந்திராஷ்டமம். நிதானமாக நடந்து கொள்ளுங்கள்.வேங்கடேச பெருமாளை வழிபட சிரமங்கள் குறையும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு  திடீர் செலவுகளால் மனதில் சஞ்சலம் ஏற்படும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாயின் விருப்பத்தை நிறைவேற்ற செலவு செய்ய வேண்டி வரும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!