Beauty Tips

அழகுக்காக கொலஜன் சப்ளிமெண்ட்ஸ்கள் மாத்திரைகள் எடுத்துக்கொள்கிறீர்களா..?

நம்முடைய அழகிற்காக பயன்படுத்தப்படும் கொலஜன் சப்ளிமெண்ட்ஸ்கள் நம் உடலில் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்துகின்றன. அதுபற்றி விரிவாக இந்தக் கட்டுரையில் பார்போம்.

கொலஜனின் பக்க விளைவுகள் : நகங்கள் வலிமையாக இருக்க வேண்டியும் தலைமுடி கவர்ச்சிகரமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் பலர் கொலஜன் சப்ளிமெண்ட்ஸ்களை எடுத்துக் கொள்கிறார்கள். இந்த சப்ளிமெண்ட்ஸ்களில் பல்வேறு சாதக அம்சங்கள் இருந்தாலும், இதில் பாதகங்கள் இருப்பதையும் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். கொலஜன் சப்ளிமெண்ட்ஸ் பயன்படுத்துவதால் வரக்கூடிய 6 பக்கவிளைவுகள் என்ன என்பதை தற்போது தெரிந்துகொள்வோம்.




சிறுநீரக கற்கள் : கொலஜன் சப்ளிமெண்ட்ஸ் பயன்படுத்துவதால் வரக்கூடிய முக்கியமான குறைபாடு சிறுநீரக கற்கள். சில குறிப்பிட்ட கொலஜன் வகைகளை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளும் போது, அதுவும் குறிப்பாக விலங்குகளிடமிருந்து பெறப்படும் கொலஜன்களில் சிறுநீரக கற்களை உருவாக்கும் ஆபத்து அதிகமுள்ளது. இதற்கு முக்கிய காரணம் கொலஜன் சப்ளிமெண்ட்ஸில் உள்ள அதிகளவு ஆக்ஸலேட் மற்றும் கால்சியம் சிறுநீரகத்தில் கற்களை உருவாக்குகின்றன.

செரிமானப் பிரச்சனைகள் : பெரும்பாலும் அழகிற்காக பயன்படுத்தப்படும் கொலஜன் சப்ளிமெண்ட்ஸ், நமது செரிமான அமைப்பில் எதிர்மறையான தாக்கத்தை உண்டாக்குகிறது. கொலஜன் சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொண்ட சிலருக்கு வயிறு உப்புசம், வாய்வுத் தொல்லை, வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்பட்டுள்ளது. இரைப்பைக் குடல் சம்மந்தமான பிரச்சனை உள்ளவர்களிடம் இந்த அறிகுறிகள் அதிகமாக காணப்படுகின்றன.




அதிகப்படியான கால்சியம் திரட்சி : நம்முடைய எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவியாக இருக்கும் கால்சியம் கொலஜன் சப்ளிமெண்ட்ஸில் அதிகளவு உள்ளது. எனினும் இந்த சப்ளிமெண்ட்ஸ் மூலம் நம் உடலில் அதிகப்படியான கால்சியம் சேர்வதால், ரத்தத்தில் கால்சியம் அளவு அதிகமாகி ஹைபர்கால்சிமியா தாக்குகிறது. குமட்டல், வாந்தி, உடல் பலவீனம், குழப்பம் போன்றவை இதன் அறிகுறிகளாகும். நீண்ட கால நோக்கில் இது உங்கள் இதய நலனைக் கூட பாதிக்கும். ஆகவே கொலஜன் சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்ளும் முன்பு மருத்துவரிடம் ஆலோசனை செய்து கொள்ளுங்கள்.

தலைவலி மற்றும் தலைசுற்றல் : சில சமயங்களில் கொலஜன் சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்ளும் போது தலைவலியும் தலைசுற்றலும் வரலாம். இதன் அறிகுறிகள் ஒவ்வொரு நபர்களுக்கு இடையே மாறுபடும். கொலஜன் சப்ளிமெண்ட்ஸ் சாப்பிட்ட பின் தொடர்ச்சியான தலைவலி அல்லது தலைசுற்றல் இருந்தால் உடனே மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறவும்.




அலர்ஜி : தலைவலி மற்றும் தலைசுற்றல் : சில சமயங்களில் கொலஜன் சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்ளும் போது தலைவலியும் தலைசுற்றலும் வரலாம். இதன் அறிகுறிகள் ஒவ்வொரு நபர்களுக்கு இடையே மாறுபடும். கொலஜன் சப்ளிமெண்ட்ஸ் சாப்பிட்ட பின் தொடர்ச்சியான தலைவலி அல்லது தலைசுற்றல் இருந்தால் உடனே மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறவும்.

சில அரிதான சமயங்களில் கொலஜன் சப்ளிமெண்ட்ஸை எடுத்துக்கொள்ளும் போது அலர்ஜி ஏற்படக்கூடும். அரிப்பு, வீக்கம், சிராய்ப்பு, மூச்சுவிடுவதில் சிரமம், அனாபிலாக்டிக் அதிர்ச்சி போன்றவை இதன் அறிகுறிகளாகும். கொலஜன் சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்வதற்கு முன்பு அதன் லேபிளில் கூறப்பட்டுள்ளதை கவனமாக வாசிப்பது மிகவும் முக்கியம்.

கல்லீரல் பிரச்சனை : கொலஜன் சப்ளிமெண்ட்ஸ் பயன்படுத்தும் சில நபர்களுக்கு அரிதாக கல்லீரல் பிரச்சனை ஏற்படுவதாக கூறப்படுகிறது. இது கல்லீரல் நொதிகளை அதிகப்படுத்தும் அல்லது கல்லீரல் பாதிப்பை உண்டாக்கும். இதற்கான சரியான காரணங்கள் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. காரணமின்றி அடிவயிற்றில் வலியோ அல்லது மஞ்சள் காமாலை போன்ற அறிகுறிகள் இருந்தால் அல்லது கொலஜன் சப்ளிமெண்ட்ஸ் சாப்பிட்டதும் சிறுநீர் அடர் மஞ்சள் நிறத்தில் வெளியேறினாலோ உடனே மருத்துவமனைக்கு சென்று ஆலோசனை பெறுங்கள்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!