தோட்டக் கலை

மூலிகை செடிகள்

சிறு உடல் உபாதை என்றாலும் மருத்துவமனைக்கு செல்லும் இக்காலத்தில் யாரும் மூலிகைகளைப் பற்றி நினைப்பதில்லை. வீட்டில் ஒரு சில மூலிகைகளை வளர்த்து அதில் கிடைக்கும் இலைகளை உணவில் சேர்த்து வந்தால் உடல் நலம் ஆரோக்கியம் பெறுவதோடு மருத்துவச் செலவுகளும் குறையும், மேலும் வீட்டிலேயே சுத்தமான காற்றும் கிடைக்கும். பாரம்பரியமாக நாம் பயன்படுத்திய மூலிகைகளை பற்றி நம் குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டும். அவர்களை வீட்டுத் தோட்டங்களில் மூலிகைகள் வளர்க்கவும் ஊக்கப்படுத்த வேண்டும்.




நிலவேம்பு (சிறியா நங்கை)

“நிலவேம்புக்கான தேவை தற்போது மிகவும் அதிகரித்துள்ளது. பெரும்பாலான அரசு மருத்துவமனைகளிலும் நிலவேம்பு கஷாயம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதன் விதைகள் தானாகவே விழுந்து நன்றாக முளைக்கும்.

நில வேம்பிற்கு குறைந்த அளவு நீரும் போதுமானது. அறுவடை செய்யும் போது அடியோடு வெட்டாமல் கிளைகளை விட்டு வெட்ட வேண்டும், அந்த கிளைகள் மீண்டும் துளிர்த்து விடும். முழுசெடியும் மருத்துவ குணமுடையது என்பதால் வீடுகளில் வளர்ப்போர் முற்றிய செடிகளை வேரோடு பிடுங்கி தூளாக இடித்து வைத்துக்கொண்டு அவ்வப்போது கஷாயமாக பருகலாம்.”




திருநீற்றுப்பச்சிலை

“மிகுந்த வாசனையுள்ள இந்தச் செடி வகை, தேனீக்களை வரவழைப்பதில் மிக முக்கியப் பங்காற்றக்கூடியது. இதன் பூக்களில் எந்நேரமும் தேனீக்கள் இருப்பதைக் காணமுடியும். துளசியைப்போல் தினமும் ஒன்றிரண்டு இலைகளை சாப்பிடலாம். சளி, தொண்டைவலி, காதுவலி போன்றவற்றிக்கு நல்ல மருந்து.

குளியல் பொடி தயாரிப்பில் முக்கியமான மூலிகையாக திருநீற்றுப் பச்சிலை பயன்படுகிறது. மேலும் இதன் விதைகளை (சப்ஜா) குளிர் பானங்களில் சேர்த்தும் பருகலாம். மேலும் காய்கறி சாலட் செய்யும் போதும் பயன்படுத்தலாம்.

வல்லாரைக் கீரை: சிறிதளவு வல்லாரைக்கீரை கொடியை பறித்து, உங்களது வீட்டு மண்ணில் புதைத்து வைத்தாலே போதும். சுலபமாக வளரக்கூடிய கீரை வகைகளில் இதுவும் ஒன்று. குழந்தைகளுக்கு ஞாபக சக்தியை  அதிகமாக கொடுக்கும் மூலிகை கீரை என்றும் சொல்லலாம்.




 

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!