தோட்டக் கலை

நாவல் பழம் வளர்ப்பு

நாவல் பழம் மரம் அனைத்து மண்களிலும் வளரும் தன்மை கொண்டது. உப்புத் தன்மை மிக்க மற்றும் நீர் தேங்கிய நிலையில் இருந்தாலும் நாவல் பழம் மரம் வளர்ப்பு சிறப்பாக இருக்கும், எனினும் அதிகமான உற்பத்தி மற்றும் நல்ல வளர்ச்சிக்கு ஈரப்பதத்தை தக்கவைத்துக்கொள்ளும் களிமண் அல்லது செம்மண் சிறந்தது.

நாவல் பழம் மரம் மிகுந்த வறட்சியை கூட தாங்கி வளரக்கூடிய பழப்பயிர் ஆகும். நாவல் பழங்களில் இரும்புச்சத்தும், கனிமங்கள் மற்றும் புரதங்கள் அதிகமாக இருக்கிறது. நாவல் பழம் மரம் வளர்ப்பது எப்படி, நாவல் பழம் பயன்கள், நாவல் மரம் சாகுபடி, நாவல் பழம் வகைகள் ஆகியவற்றை பற்றி இந்த கட்டுரையில் காணலாம்.




நடவு செய்தல்

நாவல் பழம் மரம், விதை மற்றும் நாற்று முறையில் நடவு செய்யலாம். நல்ல விதைகளாக தேர்வு செய்து விதைக்கவும். விதைகள் முளைக்க சுமார் பத்து முதல் பதினைந்து நாட்கள் ஆகும். நாற்றுகள் மூலம் நடவு செய்த நாவல் மரத்தில் எட்டு முதல் பத்து ஆண்டுகளிலும், ஒட்டுச் செடிகள் மூலம் வளர்ந்த நாவல் மரங்கள் மூன்று முதல் நான்கு ஆண்டுகளிலும் பலனை கொடுக்கும்.

நாவல் பழம் மரம் வளர்ப்பு மற்றும் பராமரிப்பு

நாட்டு நாவல் மரம் நன்கு வளர்ந்த நிலையில், ஒரு மரத்திற்கு எழுபது கிலோ வரை தொழு உரத்தை அளிக்க வேண்டும், நாவல் மரம் வளரும் மண்ணில் அதிக ஊட்டசத்து காணப்பட்டால் அதன் இலைகள் அதிக அளவில் வளரும், எனவே தான் தொழு உரத்தை அளிக்கிறோம்.

நாவல் செடிகள் வளர்ச்சி அடையும் காலம் வரை களைகள் இல்லாமல் பராமரிப்பது அவசியம். நாவல் பழ மரத்திற்கு கவாத்து செய்யும் போது, உலர்ந்துபோன மற்றும் குறுக்கில் செல்லும் கிளைகளை நீக்கினால் போதுமானது, இவ்வாறு செய்வதால் நாவல் மரம் வளர்ப்பு சிறக்கும்.




மகசூல் மற்றும் சாகுபடி

நாவல்-பழம்

நாற்று மூலம் வளர்ந்த நாவல் மரம் ஒன்றிலிருந்து ஆண்டுக்கு எண்பது முதல் நூறு கிலோ வரை நாவல் பழங்கள் கிடைக்கும். ஒட்டுச் செடி மூலம் வளர்ந்த மரத்திலிருந்து அறுபது முதல் எழுபது கிலோ வரை நாவல் பழங்கள் கிடைக்கும். நாவல் மரங்கள் தொடர்ந்து ஐம்பது முதல் அறுபது ஆண்டுகள் வரை பலனை கொடுக்கும்.

நாவல் பழம் மரம் ஒரு இலை உதிரா மரம் ஆகும். இதை பிப்ரவரி – மார்ச் மாதம் மற்றும் ஜுலை – ஆகஸ்ட் மாதம் ஆகிய இரண்டு பருவங்களிலும் நாவல் பழம் மரம் வளர்ப்பு செய்யலாம்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!