தோட்டக் கலை

மாடித்தோட்டத்தில் மஞ்சள் வளர்ப்பு

மஞ்சள் வளர்ப்பு சமீபகாலமாக நமது நாட்டில் பெரிய அங்கீகாரம் பெற ஆரம்பித்திருக்கிறது. இந்த மூலிகை இந்தியா, இந்தோனேசியாவின் இயல் தாவரம் ஆகும். இந்த மஞ்சள் மூலிகையானது ஆண்டு முழுவதும் பயிர் செய்யப்படும். மஞ்சள் தாவரத்தின் வேர் கிழங்கின் அறிய பண்புபை மக்கள் உணர ஆரம்பித்திருப்பதுதான், அதன் சமீபத்திய பிரபலத்துக்குக் காரணமாக விளங்குகிறது. மஞ்சளுக்கு இந்தியக் குங்குமப்பூ எனும் பெயரும் இருக்கிறது.




மஞ்சள்-சாகுபடி

மஞ்சள் செடி வளர்ப்பு, மஞ்சள் சாகுபடி செய்யும் முறை, மாடித்தோட்டத்தில் மஞ்சள் வளர்ப்பு, மஞ்சள் குலை செடி வளர்ப்பு, மஞ்சள் பயிரில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு முறைகள், மஞ்சளில் அதிக மகசூலை எடுக்க என்ன செய்ய வேண்டும், மஞ்சள் வகைகள், மஞ்சள் நன்மைகள் ஆகியவற்றை இக்கட்டுரையில் காண்போம்.




மஞ்சளில் விதை தேர்வு

மண்கலவையின் தன்மை மற்றும் தட்பவெப்பநிலை ஆகியவற்றை பொருத்து நல்ல மஞ்சள் வகைகளை விதைக்காகத் தேர்ந்தெடுக்க வேண்டும். இயற்கையான முறைகளில் தேர்ந்தெடுத்த விதைகள் தான் நல்லது. விரலி மஞ்சள் அல்லது கிழங்கு(குண்டு) மஞ்சளை விதையாகப் பயன்படுத்தலாம்.

மஞ்சள் வகைகள்

கஸ்தூரி மஞ்சள், கப்பு மஞ்சள், கறி மஞ்சள், மர மஞ்சள், விரலி மஞ்சள், என மஞ்சளில் பல வகைகள் இருக்கிறது. அனைத்து மஞ்சளும் வெவ்வேறு வகையான பயன்களை தர வல்லது.

மாடித்தோட்டத்தில் மஞ்சள் வளர்ப்பு

மஞ்சள்-வளர்ப்பு




மாடித்தோட்டத்தில் மஞ்சள் வளர்ப்பது எப்படி என்று காணலாம், மஞ்சள் கிழங்கை உடைத்து 2 இன்ச் ஆழத்தில் நெகிழிப்பையில் அல்லது தொட்டியில் வைத்தால் மஞ்சள் செடி முளைத்து வரும். மஞ்சள் கிழங்கு முளைத்து வர ஒரு மாதம் கூட ஆகலாம்.

நெகிழிப்பையை பொறுத்தவரை ஒன்னேகால் அடி பை சரியாக இருக்கும். ஒரு பையில் ஒரு செடியை மட்டுமே வளர்க்க வேண்டும். கிழங்கு வகையை பொறுத்தவரை பை அல்லது தொட்டியில் வளர்க்கும் போது கூடுதல் உரமேலாண்மை மிக அவசியம். நல்ல செறிவுள்ள மண்கலவையை தேர்ந்தெடுப்பது சிறந்தது.

பஞ்சகாவியாவை இரண்டு வாரத்திற்கு ஒரு முறை தெளிக்கலாம். மஞ்சள் அறுவடை செய்ய 8 முதல் 10 மாதங்கள் ஆகும். மஞ்சள் 60 சென்டிமீட்டர் முதல் 90 சென்டிமீட்டர் வரை வளரும் தன்மையுடையது.

8 முதல் 10 மாதங்களுக்கு பிறகு மஞ்சள் அறுவடை செய்யலாம். பச்சை நிறம் மாறி இலையானது மஞ்சள் நிறமாக மாறி வாடத் தொடங்கும். அச்சமயம் அதன் தாள்களை அறுத்துவிடலாம், இதன் பின்னர் ஒரு மாதத்திற்கு பிறகு மஞ்சள் கிழங்கை சேதப்படுத்தாமல் அறுவடை செய்ய வேண்டும்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!