Serial Stories மந்திரச்சாவி

மந்திரச்சாவி-7

மந்திரம்..7

உறுதுணை யாவ துயிரும் உடம்பும்

உறுதுணை யாவ துலகுறு கேள்வி

செறிதுணை யாவது சிவனடிச் சிந்தை

பெறுதுணை கேட்கிற் பிறப்பில்லை2 தானே.

ஆருயிர் உய்வதற்கு நேரிய பெருந்துணையாவது மக்களுடம்பேயாம். மேலும் உயர்ந்தோர் எனக்கொள்ளப்படும் உலகோர் திருவடியுணர்வால் கூறும் ஒற்கத்தின் ஊற்றாந்துணையாகிய நற்கேள்வி உயிர்க்கு உறுதுணையாகும். நற்கேள்வி – சிவனடியே சிந்திக்கச் செய்யும் திருப்பெருகு சிவஞானம். நம்மைவிட்டகலாது ஒட்டியுறைவதாகிய செறிதுணை சிவனடி மறவாச் சிந்தையேயாம். அதனால் பெறப்படும் அளவில் பேற்றினைக் கேட்பின் பிறப்பற்றுச் சிறப்புற்று இறப்பில் பேரின்பம் உறப்பெற்று என்றும் ஒன்றுபோல் பிரிவின்றி நின்று வாழ்வதாம். ‘உலகம் உயர்ந்தோர் மாட்டு’ 




***************

கிழிந்த நாராய் மயங்கிக் கிடந்தவளைப் பார்த்து தவித்துப் போனான் கார்த்திக்.

தன்னுடைய பிரச்சினையை இவள் மேல் திணித்து இவளையும் சித்திரவதைப்படுத்துகிறோமோ?

பாவம் இவன் போகிற இடத்துக்கெல்லாம் அலையவிட்டு உடல்நலம் கெட்டுவிட்டதோ?

சே…எதையோ நினைத்துக் கொண்டு கிடைத்த வாழ்வை வீணாக்கி விட்டோமோ?

மனிதன் கையிலிருக்கும் நொடியை விட்டு பழைய நேரத்தை தேடி எல்லாவற்றையும் இழக்கிறான்”

பணிக்கர் சொன்னது காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தது.

இதுவரை எத்தனையோ பேரை இந்த சாவிக்காகச் சந்தித்து விட்டான்.

அதில் நல்லவர்களும் வல்லவர்களும் சுயநலக்காரர்களும் அடக்கம்.

ஆனால் இந்த இடத்துக்கு வந்ததும் ஒரு ஆசுவாசம் வந்தது.

இத்தனை பெரிய அஷ்ட மங்கள பூஜையை செய்ய ஒத்துக் கொண்டதும் அதற்கு தான்.

அவர் கூறிய விஷயங்கள் அவனுக்கு ஏற்புடையதாகவே இருந்தது.

பக்கத்து ஊரில் உள்ள சிவன்கோவிலில் நெய் விளக்கு போட்டு விட்டு ஊருக்குப் போகச் சொல்லியிருந்தார்.

எல்லாம் முடித்துக் கிளம்பும் நேரத்தில் ஸ்வேதா மயங்கிக் கிடக்கிறாள்.

சதீஷ் பக்கத்தில ஏதாவது ஆஸ்பிடல் இருக்கா?

இருக்கு சார்.ஒரு ஆயுர்வேத ஆஸ்பிடல் இருக்கு சார்.




நாடி பிடித்துப் பார்த்து டெஸ்ட் செய்த டாக்டர்..

நீங்க யார்? இவங்க கணவரா?

ஆமாம் டாக்டர்.

கவனமாப் பாத்துக்குங்க.ரொம்ப வீக்கா இருக்காங்க.ஸ்டிரெஸ் இல்லாம வச்சுக்கணும் .டானிக் தர்றேன் கொடுங்க சரியாயிடும்.

இனிமே மயக்கம் வராதில்ல?

மாசமா இருக்கிறவங்களுக்கு லேசா மயக்கம் வரத்தான் செய்யும்.

டாக்டர் என்ன சொல்றீங்க.?மாசமா இருக்காளா?

யெஸ்.நீங்க அப்பாவாகப் போறீங்க.

சட்டென ஆயிரம் மலர்கள் அவனுள் மலர்ந்த மாதிரி இருந்தது.எல்லா கவலையும் தீர்ந்த மாதிரி.

எதையெதையோ தேடி ஓடிவிட்டேன்.கைநிறைய பொக்கிஷம் கிடைச்ச மாதிரி இருக்கு.

பணிக்கர் சொன்ன மாதிரி…

எனக்குக் கிடைச்ச மாதிரி ஒரு அப்பா யாருக்கு கிடைப்பாங்க.

அம்மா இல்லாத குறை தெரியாம எப்படி வளர்த்தார்.

நான் அவரோட பிள்ளையா இல்லாம கூடப் போகட்டுமே.பரிசுத்தமான அன்போட தானே வளர்ந்தேன்.

அதை விட்டுட்டு எதையோ தேடிப் போனேனே.

என்னால அப்படி என் பிள்ளையை வளர்க்க முடியுமா தெரியல.ஆனா என்னை சுற்றியிருக்கிறவங்க மேலே பிரியமா இருக்க முடியும்.

எல்லோரையும் சந்தோஷமா வச்சுக்க முயற்சி பண்ண முடியும்.

இது வரை பாதுகாத்த அந்த பெட்டியை சாவியோடு தூக்கி ஆற்றில் எறிந்தான்.

சோர்ந்து போயிருந்த ஸ்வேதாவை மெல்ல அணைத்துக் கொண்டான்.

நாம ஊருக்குப் போகலாம் ஸ்வேதா.




திரூருக்கா?

இல்லை சென்னைக்கு.

அப்ப அந்த சாவி…

அதை தூக்கி எறிஞ்சிட்டேன்.

ஊரில இருக்கிற வீடு சொத்து….

சதீஷை துபாய்க்குப் போக வேண்டாம் னு சொல்லிட்டேன்.வீடு நிலபுலனையெல்லாம் அவன் பார்த்துக்குவான்.

நிஜமாத்தான் சொல்றீங்களா..

சத்தியமா…

சுந்தரேசன் வீடு மீண்டும் விழாக்கோலம் பூண்டிருந்தது.

லலிதா ஆரத்தி தட்டோடு உள்ளேயும்வெளியேயும் அலைந்து கொண்டிருந்தாள்.

உறுதுணையாவது உயிரும் உடம்பும்

செறிதுணையாவது சிவனடிச் சிந்தை..

சுந்தரேசன் ஜபித்துக் கொண்டிருந்தார்.

என்னங்க போதும்…

இனியாவது பழையபடி கலகலனு மாறுங்களேன்.

“விளைந்து கிடந்தது மேலைக்கு வித்தது

விளைந்து கிடந்தது மேலைக்குக் காதம்”

பாடுங்க….பாடுங்க

பேரன் வந்து பிடிச்சிழுத்தா தானா திருந்தப் போறீங்க..

சுந்தரேசன் புன்னகைத்துக் கொண்டார்.

கார்த்திக்கும் ஸ்வேதாவும் ஜோடியாக வந்திறங்கியதும் உள்ளமெல்லாம் குளிர்ந்து போனது லலிதாவுக்கு.

என்னை மன்னிச்சிடுங்க மாமா அத்தை.

இனிமே எந்தப் பிரச்சினையும் வராம பார்த்துக்கிறேன்.

எது எப்படியோ அந்த பணிக்கருக்குக் கோவில் கட்டித்தான் கும்பிடணும்.

எங்களால மாத்த முடியாத மனசை மாத்தியிருக்காரே.

அம்மா நீ கோவில் கட்டறதானா ஷைலுக்குத் தான் கட்டணும்.

என்னடி சொல்றே..




ஆமாம் மா.

கார்த்திக் மனம் மாறணும் னா அதுக்கு ஒரு மனநல மருத்துவர் வேணும் னு எனக்கு தோணிப்போச்சு.

ஆனா கார்த்திக் தப்பா எடுத்துப்பாரோனு பயமாவும் இருந்தது.அப்புறம் மெதுவா ஷைலுக்கிட்டே பேசினேன்.அவ தான் கேரள பணிக்கர் ஐடியா கொடுத்தா.

அப்ப அவர் டாக்டரா?

ஆமாம் மா.

கார்த்திக் அப்ப இருந்த மனநிலையில ஜோதிடம் கைரேகை னு வேறு திசையில பயணிக்க ஆரம்பிச்சாரு.

அதனால தான் அவர் வழியிலேயே போய் அவரைத் திருப்ப நினைச்சோம்.

சதீஷ் தானே அவரைப் பற்றி சொன்னான்.

நான் தான் சதீஷ்கிட்ட சொல்ல சொன்னேன் மா.

எது எப்படியோ மாப்பிள்ளை மாறினாரே

கொடுத்த ட்ரீட்மெண்ட் அப்படி.

ரொம்ப சமத்தா வேலை பார்த்திருக்கேடி.

உனக்கு உதவ வேண்டிய உங்கப்பா தான் இப்படி ஆயிட்டாரே!

இல்லைமா நீ நினைக்கிற மாதிரி.இந்த விஷயம் அப்பாவாலே ஆரம்பிக்கல.

அவர் எனக்கும் உதவாமலும் இல்லை.

என்ன சொல்ற நீ?அவர் தானே பூர்வீக கிராமத்துக்கு எல்லோரையும் இழுத்து வந்தார்.

ஆமாம் மா.அப்பா அப்படி செஞ்சதுக்கு காரணமே கார்த்திக் தான்.

கார்த்திக்கா?

ஆமாம் மா.கொரோனா ஆரம்பிச்சதில முழு லாக்டவுன்.அது இது னு வீட்டிலகருந்தே வேலை பார்க்க ஆரம்பிச்சோம்.ஆரம்பத்தில ஜாலியாத்தான் இருந்தது.ஆனா நாளாக ஆக வேலை பிரஷரும் டென்ஷனும் ஜாஸ்தியாயிடுச்சு.கொஞ்ச கொஞ்சமா கார்த்திக் சுபாவம் மாற ஆரம்பிச்சது.எதுக்கெடுத்தாலும் டென்ஷனாக ஆரம்பிச்சார்.அதனால தான் அப்பா பிளான் பண்ணி கிராமத்துக்கு கூட்டி வந்தார்.

இதெல்லாம் என் கிட்ட சொல்லலையே.

நீங்க பயப்படுவீங்கனுதான் மா.

அது சரி.ஆனா பாதியில ஓடி வந்திட்டாரேடீ.




அதுவும் அவர் ஃபிஸிக்கலா இங்கே இல்லை.ஆழ் மனசில என்னோட தொடர்பில்தான் இருந்தார்.அவர் பண்ணினது தியானமில்லை.அங்கே இருந்தபடி என்னோட மனசுகிட்டே பேசிட்டே இருந்தார் .அதனால தான் தைரியமா என்னால சில முடிவுகளைத் தீர்க்கமா எடுக்க முடிஞ்சது.

சின்ன வயசுல எனக்கு எக்ஸாம் பயம் வரும் போதெல்லாம் அப்பா அப்படி செஞ்சிருக்காரே.உனக்கு நினைவில்லையா?

சரி தான்.அதை அஙாகேயிருந்தே செய்ய வேண்டியது தானே

அதுக்குத்தான் முயற்சி பண்ணினார்

கார்த்திக் மனசை தன் கன்ட்ரோலுக்கு கொண்டுவர நினைச்சார்.ஆனா கார்த்திக்குக்கு அது தெரிஞ்சுபோய் அப்பாவை மூர்க்கமா எதிர்க்க ஆரம்பிச்சார்

அடக் கடவுளே

அங்கேயே இருந்தா கார்த்திக்குக்கு அப்பா மேல வெறுப்பு அதிகமாயிடும்.அதான் கிளம்பிட்டார்

மாப்பிள்ளைக்கு நேராவே இதையெல்லாம் சொல்றியே

அவர்கிட்ட எல்லாமே சொல்லிட்டேன் மா.எங்களுக்குள்ள எந்த ஒளிவுமறைவும் இருக்கக் கூடாது.

.

சுந்தரேசன் பூஜையறையிலிருந்து வெளியில் வந்தார்.

கார்த்திக்..உங்க வீட்டை நேத்து சுத்தம் பண்ணினோம்.அங்கே ஒரு சாவி…

என்னங்க…மறுபடியும் சாவியா?

அதிருக்கட்டும்.உங்க வீட்ல கண்ட சாவி மாதிரியே ஒண்ணை உங்கப்பா பெட்டியில் பார்த்தேன்.அதில் பிறப்பு ரகசியம் னு ஒரு புக் இருக்கு.

அது திருமூலர் எழுதின திருமந்திரத்தில் பிறப்பைப் பற்றிக் கூறியதன் ஆராய்ச்சிக் கட்டுரை.

அப்புறம் அந்த நீலா உங்கப்பாவுக்கு கடிதம் எழுதல.அவர் பேர்ல இருக்கிள இன்னொருத்தருக்கு அனுப்பிய கடிதமாம்.டிடெக்டிவ் ரிப்போர்ட் இதோ இருக்கு.

மாமா…ஐயம் ரியலி சாரி. என் மனசுங்ற பேழையில அன்பையும் ப்ரியத்தையும் நிறைச்சு வச்சிருக்கேன்.அதைத் திறக்கற மந்திரச்சாவி உங்க மகள்கிட்டே இருக்கு.இனிமே அது போதும் எனக்கு.

வேறு எந்த சாவியும் வேண்டாம்.

மனம் தான் எல்லாம்.மனமே மகிழ்ச்சி.அதுவே துயரம்.அதனால் தான் எண்ணம் போல் வாழ்வு என்கிறார்கள்.இனி என் மனசையும் உங்க மகளையும் பத்திரமா பார்த்துக்குவேன்.

நானும் உங்களையும் உங்க வாரிசையும் பத்திரமா பார்த்துக்குவேன் கார்த்திக்.

பழைய குதூகலம் களைகட்ட

 

லலிதா மகிழ்வோடு நிற்க

ஸ்வேதா கார்த்திக்கின் தோளில் வாஞ்சையோடு சாய்ந்து கொண்டாள்.

முற்றும்.




What’s your Reaction?
+1
5
+1
5
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!