Serial Stories கோகுலம் காலனி

கோகுலம் காலனி-22 (நிறைவு)

22

” பெற்றவர்கள் விருப்பம் , நலம் என்று அடுத்தவர்களுக்குத்தான் புத்திமதி சொல்வீர்கள் போல .உங்களுக்கென்றால் எல்லாம் தன்னிஷ்டம்தானா …? ” 

கேட்டபடி வந்து நின்றவளை ஏறிட்டு புருவம் சுருக்கினான் நந்தகுமார் .” என்ன விசயம் ராகவி…? ஏன் உனக்கு சம்பந்தமில்லாத விசயங்களில் இடை புகுகிறாய் ..? ” 

” சம்பந்தமில்லாத விசயமா …உங்களுக்கும் இந்த கோகுலம் காலனிக்கும் சம்பந்தம் இல்லையா ..? ” 

” ஒரு காலத்தில் எனக்கு மிகவும் பிடித்த காலனி ்இப்போது அப்படி இல்லை .அதனால் இந்த காலனியை விட்டு வெளியேற போகிறேன் “

” ஏன் …? ஒரு காலத்தில் பிடித்தது இப்போது ஏன் பிடிக்காமல் போனது …? ” 

” ஷ் …இதோ பார் ராகவி .உனக்காக உன் அண்ணனை தேடி இரண்டு முழு நாட்கள் உன்னுடனே இருந்!ததில் என் தொழிலில் நிறைய குளறுபடிகள் விழுந்து விட்டது .ஒரு வாரம் ஆன பின்னும் அதை சரி செய்ய முடியவில்லை .நான் அதனை சரி செய்ய வேண்டும் .உரிமையாளரிடம் ஒப்படைக்க வேண்டும் .எங்கள் வெளிநாட்டு பயணத்தை பார்க்க வேண்டும் .இத்தனை வேலைகளையும் விட்டு விட்டு வெட்டியாக உன்னுடன் பேசிக் கொண்டிருக்க எனக்கு நேரமில்லை .கிளம்பு….” 

” என்னுடன் பேசுவது உங்களுக்கு வெட்டி வேலையா ..? நீங்கள் இங்கிருந்து போக கூடாது …” 

” விருப்பமில்லாதவர்களுக்கு மத்தியில் வாழவதென்பது மிகவும் கொடுமையானது ராகவி .அதற்கு நான் தயாரில்லை …” 

” இல்லை .உங்களை விரும்பாதவர்கள் இங்கே யாருமில்லை .நீங்கள் இப்படி நாடு விட்டு நாடு போக வேண்டிய அவசியம் இல்லை ” 

” நிஜமாகவா ..? ” 

” நிச்சயமாக ” 

” கொஞ்சம் குட்டியாக கொலுக் மொழுக்கென்று இரட்டை சடையும் , ப்ரௌன் கலர் யூனிபாரமுமாக ஒரு பள்ளிச் சிறுமி இந்தக் காலனியில் இருந்தாள் .அவளுக்கு என்னை பிடிக்குமா …? ” 

ராகவி முகம் சிவந்து தலை குனிந்தாள் .” பிடிக்கும் ” மெலிதாய் முணுமுணுத்தாள் .நந்தகுமார் அவள் அருகே வந்தான் .

” நிமிர்ந்து என் முகம் பார்த்து பேசு ராகவி .உன் குடும்பத்திற்கு செய்த உதவிக்கு நன்றிக் கடனென எதையாவது பேசி வைக்காதே …” 

நந்தகுமார் பேசி முடிப்பதற்கும் ராகவியின்  இதழ் அவன் கன்னத்தில் பதிவதற்கும் சரியாக இருந்த்து .” உண்மையைத்தான் சொன்னேன் …” கிசுகிசுத்தாள் .




” என்னால் நம்ப முடியவில்லை ” சொன்ன நந்தகுமாருக்கு உண்மையாகவே நடப்பதை நம்ப முடியவில்லை .

” நம்புங்கள் ” காந!தத்தோடு ஒட்டத் துடிக்கும் இரும்பாய் ராகவியின் இதழ்கள் அடுத்து நகர்ந்த இடம் நந்தகுமாரின் இதழ்கள் .

” உனக்கு நம் முதல் முத்தம் நினைவில் இருக்கிறதா ராகா ..? “தன் முகமருகே நெருங்கி வந்த பூவிதழ்களை பார்த்தபடி  சொக்கலாய் ஒலித்தது நந்தகுமாரின் குரல் .

அன்று …

ராகவி பத்தாவது படித்துக் கொண்டிருந்தாள் .நந்தகுமார் காலேஜ் படித்துக் கொண்டிருந்தான் .ராகவியின் ஸ்கூல் ப்ராஜெக்ட் ஒன்றை ராகவி அண்ணனிடம் முடித்து தருமாறு கொடுக்க , அவன் அதனை நந்தகுமாரிடம் கொடுத்து   முடித்து வாங்கினான் .தேங்க்ஸை நந்தாவிற்கு சொல்லி விடு என தங்கையிடம் கை காட்டி விட ராகவிக்கு நந்தகுமாரை தனியாக சந்திக்க மிகுந்த பயம் .

அவன் எப்போதும் அவளுக்கு ஏதாவது தொல்லை கொடுத்துக் கொண்டே இருப்பவன் .ராகவி பெரும்பாலும் அவனை தனியாக சந்திக்கவே மாட்டாள் .இன்றோ ….சூழல் …   பயந்து கொண்டே போய் நந்தகுமாரிடம் நன்றி சொல்ல…அவன் எதிர்பாராத விதமாக அவளை இழுத்து அணைத்து இதழ்களில் முத்தமிட்டான் .ராகவி விடுபட முயல விடாமல் மேலும் இழுத்து அவள் இதழ்களை புண்ணாக்கினான் .

மூன்று முழு நிமிடங்களுக்கு பிறகு நந்தகுமார் அவளை விடுவித்த போது  ,ராகவியின் இதழ்கள் தடித்து , சிவந்து ரத்தம் கசிந்து கொண்டிருந்த்து .இத்தனை நாள் வரை அவளிடம் சிறு பிள்ளைத்தனமான சேட்டைகள் செய்து கொண்டிருந்தவன் , இன்றோ உடலால் வளர்ந்து உள்ளத்தால் வளராத இரண்டும் கெட்டான் பருவத்தில் இருந்த சிறுமியின் மனம் உணராது தனது வாலிப சேட்டையை காட்டி விட்டான் .

ராகவி அன்று முழு மூச்சாக அவனை வெறுத்தவள்தான் .இப்போது வரை அவனை பயத்துடன்தான் பார்த்து வருகிறாள் .

தன் இதழ் படிந்து மீண்ட ராகவியின் இதழ்களை நம்ப முடியாமல் உணர்ந்தான் நந்தகுமார் .

” என்னை மன்னித்து விட்டாயா ராகா ..? ” 

” ம் …” 

” நான் அன்று தப்பு செய்து விட்டேன் ராகா …” 

” கெட்டவன்தானேடா நீ .தப்பு தப்பாகத்தானே செய்வாய் .அப்போதெல்லாம் என்னை எப்படி பயமுறுத்தி வைத்திருந்தாய் …? ” 

” அப்போதைய எனது மனநிலையை என்னால் இப்போதும் புரிந்து கொள்ள முடியவில்லை ராகா .எப்போதும் உன் பக்கத்திலேயே இருக்க வேண்டும் .உனக்கு தேவையானதை செய்ய வேண்டும் .உன்னால் கவனிக்கப்பட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்பதை தவிர அப்போதெல்லாம் என் மனதில் வேறு எதுவும் இருந்ததில்லை ராகா .அன்று அந்த முத்தம் கூட நீ  என்னை ஸ்பெசலாக  கவனிக்க வேண்டும் , என்பதற்காகவே நான் கொடுத்திருக்கலாம் ….” 

” ம் இருக்குமே . உனக்கு உடம்பு கொழுப்பு .அதற்கு ஏதேதோ காரணம் சொல்கிறாய் . ஒரு பள்ளிக்கூட சிறுமியிடம் செய்யும் காரியமாடா அது …? ” ராகவி இப்போதும்  கோபமாகவே அவன் சட்டையை பிடித்து உலுக்கிறாள் .

” அன்று செய்த அந்த அடாத செயலுக்காக ஐந்து வருடங்களாக நான் இரவும் , பகலும் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறேன் ராகா .ஒவ்வொரு முறை உன் பக்கத்தில் வரும் போதெல்லாம் என்னை பயமாக பார்ப்பாயே …அப்போதெல்லாம் இன்னும் ஏனடா உயிரோடு இருக்கிறேனென தோன்றும் …” 




” சீச்சி என்ன பேச்சு பேசுகிறீர்கள் …? ” ராகவி அவனை அணைத்துக் கொண்டாள் .நந்தகுமார் அவளை சோபாவில் அமர்த்தி அவள் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டான் .

” இதுவும் என்னுடைய ஆசைகளில் ஒன்றுதான் ராகா .இப்படி உன் மடியில் தலை வைத்து படுத்துக் கொள்ள வேண்டுமென்பது …” 

” ஏதோ நிறைய வேலை இருப்பதாக யாரோ சொன்னதாக நினைவு …” ராகவி அவனை சீண்டினாள் .

” ஆமாம் நிறைய வேலைகள் இருக்கிறது .எல்லாமே உன்னிடம்தான் .முன்பு விபரம் இல்லாமல் தப்பு தப்பாக செய்த்தை எல்லாம் இப்போது சரியாக செய்ய வேண்டியிருக்கிறது …” சொன்னபடி ராகவியின் முகத்தை தன்னருகே இழுத்தான் .

” இன்று ஓ.கேதானே …? அன்று போல் இல்லையே …” முடித்து விட்ட தன் முத்தத்தை விசாரித்தான் .

” சீ போடா …” கொஞ்சலாக குத்தியவளின் கையை தன் நெஞ்சில் ஏந்தியவன் , ” அன்று சிறுமியாக இருந்த உன்னை ரொம்ப மனதில் புண்படுத்தி விட்டேனென உணர்ந்து கொண்டேன் ராகவி .அங்கே மலேசியாவில் இருந்த போதெல்லாம் ஒவ்வொரு நிமிடமும் உன் நினைவுதான் .சீக்கிரம் இங்கே திரும்பி வந்து உன்னை சமாதானப்படுத்தி கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமென்று நினைத்திருந்தேன் . ஆனால்  இங்கே திரும்பி வந்த பிறகு அன்று இரவு எங்கள் வீட்டிற்குள் பிரம்ம கமலத்திறகாக  வந்த போதும் , அதே அவசர புத்தி .மீண்டும் உன் மனதை காயப்படுத்தி அனுப்பினேன் .அதென்னவோ உன்னை பார்க்கும் போதெல்லாம் சட்டென உனக்கு முத்தம் கொடுத்து விட வேண்டும் போலுள்ளது .இது ஏதாவது புது வகை வியாதியாக இருக்குமோ ..? ” சீண்டினான் .

ராகவி அவன் தலை முடிக்குள் கையை நுழைத்து ஆட்டினாள் .” உதட்டில் சூடு வைத்தால் இந்த வியாதியெல்லாம் பறந்து விடும் .செய்யவா …? ” 

நந்தகுமாரின் முகம் வாடியது .” அந்த அளவு கோபம்தான் இல்லையா ராகவி ….? ” 

” இல்லையென்று சொல்லமாட்டேன் .உங்கள் மேல் மிகுந்த கோபமும் , வெறுப்பும் இருந்த்து உண்மை .பெண்களை கேவலமாக நினைக்கும் , பார்க்கும் ஆணாதிக்க கொடூரன் நீங்கள் என உங்களுக்கு மனதில் ஒரு வடிவம் கொடுத்து வைத்திருந்தேன் .ஆனால் என் அம்மாவிற்காக பேசியது , உங்கள் அம்மாவை நடத்திய விதம் இதுவெல்லாம் உங்கள் மீதிருந்த தவறான அபிப்ராயத்தை மாற்றியது .பெண்களை மதிப்பவர் நீங்கள் எனும் எண்ணம் என்னுள்ளே வந்த்து .அத்தோடு இப்போது அண்ணனை கூட்டி வந்தது ,ரேகாவிற்கு ஒரு நல்ல வழி காட்டியது  பாகுபாடு பாராது எங்கள் வீட்டில் சமைத்தது, பெண்களை பற்றிய உங்கள் கருத்துக்கள் எல்லாமே நீங்கள் மாறுபட்ட மனிதராகி விட்டீர்கள் எனச் சொல்லியது …” 

” நேற்று உங்களுக்கு நன்றி சொன்ன போது கூட , மனதின் ஓரம் சிறு பயம்தான் .நமது முந்தைய நன்றி சொன்ன நாள் மனதில் நிரடியபடியேதான் இருந்த்து .ஆனாலும் விலகி ஓடுவதற்கு பதிலாக இருந்து சமாளிக்க வேண்டுமென தோன்ற ஆரம்பித்தது .நான் உங்களை விட்டுப் போக விரும்பவில்லை நந்தன் ” 

நந்தகுமார் வேகமாக அவளை அணைத்துக் கொண்டான் .அசைந்தால் கை நழுவி விடுவாளோ என்பது போலொரு பயம் அந்த அணைப்பில் இருந்த்து .

” உனக்கு என் சமையல் வேலை பிடிக்கவில்லையோ எனும் கவலையும் எனக்கு இருந்தது ராகவி …” 

” ஏன் அப்படி நினைத்தீர்கள் ..? ” 

” நீயும் முரளியும் பேசிக் கொண்டிருந்த போது என்னை பட்லர் என்று கேலியாக பேசிக் கொண்டிருந்தீர்கள் . அது எனக்கு பிடிக்கவில்லை .நான் எனக்கு சோறு போடும் இந்த தொழிலை யாரும் பழித்து பேசுவதை விரும்ப மாட்டேன் .” 

” உங்கள் கவலை சரிதான் .எனக்கு முதலில் இந்த வேலை பிடிக்கவில்லை .ஆனால் அதனை நான் சொன்னதும் உனக்கு பிடிக்காத்து எனக்கும் வேண்டாமென இந்த வேலையை உதறியிருந்தீர்களானால் என் மதிப்பில் மிகவும் தாழ்ந்திருப்பீர்கள் . என் தொழிலை யாருக்காகவும் மாற்றிக் கொள்ள மாட்டேன் என நிமிர்ந்து நின்றீர்கள் பாருங்கள. அப்போதே என் மனதிலும் நிமிர்ந்து விட்டீர்கள் .” 




” நன்றி ராகா .என்னை புரிந்து கொண்டதறகு ” 

” இதற்கெல்லாம் நன்றி எதற்கு …? காலமெல்லாம் ஆக்கி போட ஒரு நல்ல புருசன் கிடைத்திருக்கிறான. எந்த முட டாளாவது வேண டாமென்பாளா ..? ” 

” ஏய் உனக்கு சமையல்காரனாடி நான் …? ” நந்தகுமார் அவள் காதை திருக , 

” பின்னே …கல்யாணத்திற்கு பிறகு சமையல் வேலையெல்லாம் நானேதான் என்று உறுதி சொன்னபிறகுதான் நம்ம கல்யாணம் ” 

” சரிதான் .அதெல்லாம் உறுதி கொடுத்துடுறேன் .அதற்கு பதிலாக நீ எனக்கு நிறைய செய்ய வேண்டுமே …” 

” என்ன செய்ய வேண்டும் ..? ” 

நந்தகுமார் தன் தேவைகளை கூச்சமின்றி சொல்ல ஆரம்பிக்க கூச்சத்தில் சிவந்த ராகவி அவனுக்கு தாராளமாக அடிகளை தரத் தொடங்கினாள் .

விருப்பத்தோடு அந்த அடிகளை குனிந்து முதுகில் வாங்கிக் கொண்டிருந்தான் ராகவியின் காதலன் .

– நிறைவு –




What’s your Reaction?
+1
27
+1
11
+1
1
+1
2
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!