Serial Stories வா எந்தன் வண்ணநிலவே…

வா எந்தன் வண்ணநிலவே-17

17

எழில்நிலா டிரைவரை தவிர்த்து விட்டு தன் காரை தானே எடுத்துக் கொண்டு கிளம்பி இருந்தாள். அவள் எங்கு சென்றாள் என்பது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. உயிரற்ற உடல் போல சோபாவில் விழுந்த மகனை கண்டு பதறினர் பெற்றோர்.

” டேய் என்னடா இது? எழுந்திரு அடுத்த ஆக வேண்டியதை பார்க்கலாம்” தெய்வசிகாமணி மகனை அதட்டினார்.

” அவள் ரொம்ப சென்சிடிவ் அப்பா. என்னை புரிந்து கொள்ளாமல் போய்விட்டாளோ…” நடுங்கியது நித்யம?வாணனின் குரல்.

” அப்படியெல்லாம் இருக்காது. சொன்னால் புரிந்து கொள்ளக்கூடிய பெண் தான் அவள். யாரையாவது பார்க்க சென்றிருக்கலாம். எழுந்து வா நாம் விசாரிக்கலாம்”

” என்னங்க முறைப்படி எழில் வீட்டினருக்கும் நாம் தகவல் கொடுக்க வேண்டும்” கவலையுடன் சொன்னாள் சந்திராவதி.

உடன் துள்ளி எழுந்தான் நித்யவாணன். “அம்மா சாருகேசி அங்கிள் மகள் மானசி என்று அமெரிக்கா போகிறாள்?”

 சந்திராவதி யோசித்து இன்றுதான்னு நினைக்கிறேன். அப்படித்தான் அவர்கள் சொன்ன ஞாபகம். மதுரையில் பிளைட் ஏறுவதாக சொன்னார்கள்”




” வா நித்யா அவர்கள் வீட்டில் விசாரிக்கலாம்” தெய்வசிகாமணி சொல்லிக் கொண்டிருக்கும் போதே நித்யவாணன் வாசலுக்கு பாய்ந்து காரை எடுத்து விட்டான்.

” நீங்கள் பின்னால் வாருங்கள்” விரைவாக காரை ஓட்டினான்.

சாருகேசி வீட்டை அடைந்தபோது அவர்கள் காரில் கிளம்பிக் கொண்டிருந்தனர், “வாங்க மாப்பிள்ளை மதுரை ஏர்போர்டிற்குத்தான் கிளம்பி கொண்டிருக்கிறோம்” மைனாவதி சொல்ல கண்களால் அங்கிருந்தோரை சலித்துவிட்டு “மானசி எங்கே?” என்றான்.

 ” கொஞ்ச நேரம் முன்புதான் எழில் இங்கே வந்தாள். மானசியும், அவளும்  பேசிக் கொண்டே முன்னால் காரில் ஏர்போர்ட் போகிறோம் என்று சென்றிருக்கிறார்கள். நாங்கள் இதோ கிளம்பி கொண்டிருக்கிறோம்”

 நித்யவாணன் மனம் ஒரு நிமிடம் ஆடியது. இருவரும் தனியாக போயிருக்கிறார்களா? மீண்டும் தன் காரை சீறவிட்டான்.

 தனது அமெரிக்க பயணத்தை பற்றியும் படிப்பை பற்றியும் சந்தோசமாக பேசிக்கொண்டே வந்த மானசியின் பேச்சை கேட்டுக் கொண்டே மெல்ல காரை ஓட்டிக் கொண்டிருந்தாள் எழில்நிலா.

” ஐந்து வருடங்கள்  நான் அமெரிக்காவில் இருந்து இந்த பக்கம் வரவே மாட்டேன் அக்கா. பிறகு புது ஆளாக மாறி வருவேன். எல்லோரும் என் பின்னாலேயே ஓடி வருவார்கள் பாரேன்”

” அப்படி யாரை உன் பின்னால் வர வைக்க வேண்டும் என்று விரும்புகிறாய் மானு?” எழில்நிலா கேட்க முதலில் திடுக்கிட்டவள் பிறகு சமாளித்துக் கொண்டாள். 

“என்னை யாரெல்லாம் வேண்டாம் என்று ஒதுக்கினார்களோ, அவர்கள் எல்லாம் கண்டிப்பாக என் பின்னால் வருவார்கள்”

” அப்படி யார் உன்னை ஒதுக்கினார்கள் மானசி?”

மானசி எழில்நிலாவை உறுத்தாள். “உனக்கு என்னிடம் ஏதாவது கேட்க வேண்டுமா அக்கா?”

” நான் எதையாவது தெரிந்து கொண்டேன் என்று சந்தேகப்படுகிறாயா மானு?”மானசியின் முகம் இறுகியது. 

“இன்ஸ்டாகிராமில் நித்தியை என்னை பாலோ பண்ண வேண்டாம் என்றவள் நீ விழுந்து விழுந்து ஃபாலோ பண்ணுகிறாயே காரணம் என்ன மானு?” 

“அவருடைய ஒவ்வொரு போட்டோவிற்கும் பேரா பேராவாக கமெண்ட் போடுகிறாயே, ஏன் மானு?”

மானசி நேர் பார்வையாக ரோட்டை வெறித்தபடி அமர்ந்திருந்தாள்.

” அதில் சில கமெண்ட்களை வாசித்தேன் மானு.ஏன் இவ்வளவு மோசமாக…”

“ஏய் போதும் நிறுத்து.என்ன மிரட்டுகிறாயா? இவ்வளவு நாட்களாக உன் புருஷன் மிரட்டிக் கொண்டிருந்தான். இப்போது நீயா? எனக்கு யாரிடமும் பயம் கிடையாது. ஆமாம் நான் அவனை காதலித்தேன். instagram ல் தான் பார்த்து காதலிக்க ஆரம்பித்தேன். பிறகுதான் அவன் பக்கத்து எஸ்டேட் காரன் என்று தெரிந்தது. நேரடியாகவே அவனை சந்தித்து என் காதலை சொன்னேன்”

” இங்கே என்னை பார் எழில், நான் ரொம்பவும் அழகு இல்லையா! எத்தனை ஆண்கள் என் பின்னால் சுற்றுகிறார்கள் தெரியுமா? இவனானால் சின்ன பெண்… படிக்கிற வேலையை பார் என்று எனக்கு அட்வைஸ் கொடுக்கிறான்”

” அதுதான் நாக்கை பிடுங்குகிறார் போல் கேட்டேன்… ஆம்பளை தானேடா நீ என்று. பட்டென்று அடித்து விட்டான். அத்தோடு எங்கள் வீட்டு பக்கம் வருவதையே நிறுத்தியும் கொண்டான். இதையெல்லாம் கூட நான் பொறுத்துக் கொள்வேன். ஆனால் அவன் உன்னை பார்த்த பார்வை இருக்கிறது பார்.ஷப்பா அதை என்னால் தாங்க முடியவில்லை.”

” நான் இருக்கிறேன் என்று அன்று பார்க்கில் உன் பக்கமே திரும்பாமல் இருக்கிறானாம் .ஆனால் அவன் போனில் உன்னை போட்டோக்கள் எடுத்துக் கொண்டிருந்தான். அதெப்படி எழில் நாம் இருவரும் அருகருகே இருக்கும்போது அழகியான என்னை விட்டு கருவாச்சியான உன் பக்கம் அவன் பார்வை போகும்? இதனை என்னால் நம்பவே முடியவில்லை”

” நேரடியாக அவனிடமே கேட்டேன். இப்போது அப்பா அம்மாவிடம் சொல்லி விடுவேன் என்று மிரட்டினான். எனக்கு வேறு வழி தெரியவில்லை. அவனைப் பற்றி உன்னிடம் பற்ற வைத்தேன். நீங்கள் இருவரும் சந்திக்கக் கூடாது என்று நான் திட்டமிட கடவுளே எனக்கு உதவி செய்து உன் அப்பாவை உடல் நலம் சரியில்லாமல் ஆக்கிவிட்டார். நீ இங்கிருந்து போய் விட்டாய்”

” விட்டது சனி என்று நான் நிம்மதியாக கொஞ்சம் அலட்சியமாக இருந்து விட்டேன். திடீரென்று நீங்கள் இருவரும் திருமணம் வரை வந்து நிற்கிறீர்கள். திருமணத்திற்கு முதல் நாள் தான் எனக்கு தகவல் தெரிந்து டூரை பாதியில் கேன்சல் செய்துவிட்டு ஓடி வந்தேன்”

” அவனானால் எனக்கு தூக்க மாத்திரை கொடுத்து தூங்க வைத்து திருமணத்தை நடத்திக் கொண்டான். தாலி கட்டினாலும் இப்போது வரை நீங்கள் இரண்டு பேரும் சேர்ந்து வாழவில்லை தானே? இனியும் சேர மாட்டீர்கள். உன் புருஷன் உன்னை இங்கே தனியாக அடைத்து வைத்து கொடுமைப்படுத்துவதாக உன் அப்பா அம்மாவிடம் தகவல் சொல்லி இருக்கிறேன்.”




உன்னை இங்கிருந்து கூட்டி போய்விட அவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். இனி நீங்கள் இருவரும் பிரிய வேண்டியதுதான். ஒன்று அவன் ஐந்து வருடங்கள் கழித்து என்னையே திருமணம் செய்து கொள்ள வேண்டும், அல்லது காலம் முழுவதும் பிரம்மச்சாரியாகவே இருக்க வேண்டும். இதுதான் அவனுக்கு தண்டனை”

 ஒரு மாதிரி வெறி பிடித்தவள் போல் பேசியவனை கண்கள் கலங்க பார்த்தாள் எழில்நிலா “நான் உன்னை எவ்வளவு நம்பினேன்? இப்படி என் வாழ்வோடு விளையாடி விட்டாயே?”

” என் வாழ்க்கையோடு உன் புருஷன் விளையாடினானே அது தெரியவில்லையா உனக்கு”

” ஏய் முட்டாளாடி நீ ?காதலிக்கும் வயதா உனக்கு? இப்போதுதான் பள்ளி படிப்பையே முடித்து இருக்கிறாய். அதற்குள் என்ன காதல்?”

” காதலிப்பதற்கு வயது எதற்கடி? நீ மட்டும் அவன் பின்னாலேயே இளித்துக் கொண்டு சுற்றினாயே, அழகாக இருக்கிறான் என்று தானே? அதே உணர்ச்சி எனக்கும் இருக்கும் தானே?”

” அறிவு கெட்டவளே முதலில்தான் புத்தி இல்லாமல் ஏதோ செய்தாய், இப்போது எங்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. அப்படி எளிதாக எங்களை பிரிக்க முடியாது. என் கணவர் நல்லவர் என்று என் அம்மா அப்பாவிடம் சொல்ல எனக்கு எவ்வளவு நேரம் ஆகும்?”

எழில்நிலாவின் விளக்கத்தில் மானசியின் முகம் கொடூரமாக மாறியது. “நீ உயிரோடு இருந்தால் தானே உன் அம்மாவிடம் சொல்வாய்? இப்போதே செத்துப் போய் விடு”என்றவள் எட்டி எழில்நிலா பக்கத்து டோர் லாக்கை ரிமூவ் செய்து அவளை பிடித்து கீழே தள்ளி விட்டாள்.

 தடுமாறிய காரை சுலபமாக தன் கைவசம் கொண்டு வந்து மதுரையை நோக்கி ஓட்டிச் செல்லலானாள்.




What’s your Reaction?
+1
35
+1
20
+1
2
+1
0
+1
1
+1
0
+1
6
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!