தோட்டக் கலை

குளிர்காலத்தில் தோட்டத்திற்கு வேலி அமைக்க சில டிப்ஸ்

உங்கள் வீட்டு புல்வெளி மற்றும் முற்றம் அழகுற தோற்றமளிக்கவும், சில புதுமையான எண்ணங்களை செயல்படுத்தவும் உதவும் இடமாக தோட்டங்கள் உள்ளன. உங்கள் வீட்டுத் தோட்டத்தை அழகுற காட்சியளிக்கச் செய்ய பல்வேறு ஐடியாக்கள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் வேலித் தோட்டம் அமைத்தல். தோட்டத்தில் நேராக உள்ள இடங்களில் வேலித் தோட்டம் அமைக்கலாம். உங்கள் தோட்டத்தை ஸ்டைலாக அழகுபடுத்தவும், பாதுகாக்கவும் வேலித்தோட்டங்கள் உதவியாக இருக்கும். உங்களால் சிறிதளவு நேரத்தை செலவிட முடியும் மற்றும் தோட்டத்தை சீரமைக்க முடியும் என்று தோன்றினால், உங்கள் தோட்டத்தை வேலித் தோட்ட அமைப்புகளால் மிகவும் கவர்ச்சியான இடமாக மாற்ற முடியும்.




தோட்டங்களை வடிவமைப்பவர்களுக்கு மிகவும் பிடித்தமான விஷயங்களில் ஒன்றாக வேலித் தோட்டங்கள் உள்ளன. உங்கள் தோட்டத்தில் நீங்கள் செய்த வேலையை அழகுற வெளிப்படுத்த வேலித் தோட்டங்கள் உதவுகின்றன. உங்களிடம் தோட்டம் அமைப்பதற்கு குறைந்த அளவே இடம் இருந்தால், வேலித் தோட்டம் சிறந்த தேர்வாக இருக்கும். இதன் மூலம் உங்கள் தோட்டம் சற்றே அதிக நீளத்துடன், அழகுற காட்சியளிக்கச் செய்ய முடியும். மேலும், வேலியை இவ்வாறு பயனுள்ள வகையில் தோட்டமாக அமைப்பதால், தோட்டத்தில் இடத்தையும் சேமிக்க முடியும் என்பது நடைமுறை உண்மையாகும்.

இங்கே சில வெவ்வேறு வகையான குளிர்கால வேலித் தோட்ட அமைப்புகள் பற்றிய விளக்கங்களை உங்களுக்காக கொடுத்துள்ளோம், அவற்றை உங்களுக்கு வசதியானதை தேர்வு செய்து பயன்படுத்தி மகிழுங்கள்.




மர வேலி

மரங்களைக் கொண்டு வேலி அமைப்பது என்பத வழக்கமான மற்றும் பாரம்பரியமான வேலி அமைப்பு முறையாகும். இது செலவு குறைவானது மற்ற்றும் எளிதானது என்பதால், எவரும் விரும்பும் வேலித் தோட்டங்களில் முதலிடம் பெறுகிறது. வீட்டின் பின்புறத்தில் சரணாலயம் அமைக்க முனைந்தால், மர வேலி அதற்கு மிகவும் ஏற்ற இடம் என்பதில் ஐயமில்லை.

செயின் லிங்க் வேலி

செலவு மற்றும் பயன் என்ற வகையில் கணக்கிடுபவர்கள் தேர்ந்தெடுக்கும் வேலித் தோட்டங்கள் செயின் லிங்க் வேலி அமைப்புகளாகும். இந்த வேலித் தோட்டங்கள் உங்கள் தோட்டத்தை சிறப்பானதாகவும், ஈர்ப்பு மிக்கதாகவும் காட்டும். செயின் லிங்க் வேலிகளை உருவாக்குவது குளிர்காலங்களில் மிகவும் பயனுள்ள வகையிலான குறிப்பாகவும் மற்றும் குளிர்காலங்களில் பூச்செடிகளை படர விடுவதற்கும் மிகவும் ஏற்றதாகும்.

பிக்கெட் ஸ்டைல் வேலிகள்

எல்லா நாட்களிலும் விருப்பமான வேலி அமைப்பாக இருப்பது பிக்கெட் ஸ்டைல் வேலிகளாகும். காட்டேஜ் பாணியிலான தோட்டங்களில் பயன்படுத்த மிகவும் ஏற்ற வேலி அமைப்பாக பிக்கெட் ஸ்டைல் வேலிகள் உள்ளன. பிக்கெட் ஸ்டைல் வேலிகளுக்கு அருகில் வெண்மையான பூச்செடிகளை நட்டு வைப்பது, மிகவும் பிரபலமான குளிர் கால தோட்ட அமைப்பிற்கான குறிப்பாகும்.




PVC வினைல் வேலிகள்

வேலித் தோட்டங்கள் வடிமைப்பவர்களிடம், தன்னுடைய நீடித்த உழைப்பு மற்றும் நிலைப்புத் தன்மைகளால் மிகவும் வேகமாக பிரபலமடைந்து வரும் அமைப்பாக PVC வினைல் வேலிகள் உள்ளன. குறைவான பராமரிப்பு செலவையும் மற்றும் உங்கள் தோட்டத்தைப் பாதுகாக்க மிகச் சிறந்த வேலியாகவும் இது உள்ளது.

செடிகளே வேலிகள்

உங்கள் தோட்டத்தில் பசுமைப் பரப்பு அதிகமாக இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், செடிகளையே வேலிகளாக அமைப்பது என்ற ஒரு வழி உள்ளது. இதன் காரணமாக உங்கள் தோட்டம் மிகவும் இயற்கையாக காட்சியளிக்கும். இவ்வாறு வேலி அமைப்பதற்கு குளிரைத் தாங்கும் செடிகளை தோந்தெடுக்க வேண்டும் என்பது இந்த இடத்தில் மிகவும் பயனுள்ள ஐடியாவாக இருக்கும்.

மூங்கில் வேலி

தோட்டங்களை விரும்புபவர்களுக்கு பரவலாகவே பிடித்தமான வேலியாக மூங்கில் வேலிகள் உள்ளன. அதிகமான அளவிற்கு பாதுகாப்பு தொல்லைகள் இல்லாத இடங்களில் இந்த வேலி மிகவும் ஏற்றதாகும். நல்ல தடிமனான மூங்கில்களை கிடைமட்டமாக பயன்படுத்தினால், அவற்றில் ஓட்டை போட்டு செடிகளை நட்டு பசுமையாக காட்சியளிக்கச் செய்ய முடியும்.




மெட்டாலிக் வேலிகள்

உங்கள் வீட்டுத் தோட்ட வேலிகளில் செடிகள் உயர்ந்து படர வேண்டும் என்று விரும்பினால், மெட்டாலிக் வேலிகளை பயன்படுத்துங்கள். மெட்டாலிக் வேலிகள் நீண்ட காலம் உழைப்பவையாகவும், உறுதியாகவும் இருக்கும். வேலித் தோட்டங்களை பராமரிக்கும் விஷயங்களில், மெட்டாலிக் வேலிகளின் நிலைப்புத்தன்மை மற்றும் எளிதான பராமரிப்பு முறைகள் மிகவும் குறிப்பிடத்தக்கவையாக இருக்கும்.

சிக்கன் ஒயர் வேலிகள்

வேலித் தோட்டத்தில் பயன்படுத்த மிகவும் எளிமையான வழியை நீங்கள் தேடினால் உங்களுக்கு கிடைக்கும் பதிலாக சிக்கன் ஒயர் வேலிகள் என்ற அமைப்பு முறை உள்ளது. பல்வேறு வகையான அகலங்கள் மற்றும் கண்ணிகளுடன் கிடைக்கும் சிக்கன் ஒயர் வேலிகளைக் கொண்டு உங்கள் தோட்டத்தை தனித்தன்மையுடன் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

அலுமினியம் வேலிகள்

குறைந்த செலவில் நிறைந்த பலன் கொடுக்கும் வேலியாக அலுமினியம் வேலிகள் உள்ளன. குளிர்காலத்திற்கு ஏற்ற செடிகளை இந்த வேலியின் பாதையில் நீங்கள் நட்டு பராமரிக்கலாம். உயர்ந்து, பரந்து வளரும் செடிகளை வளர்க்கவும் இந்த அலுமினிய வேலி அமைப்புகள் உதவுகின்றன.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!