தோட்டக் கலை

மாடி தோட்டத்தில் பச்சை பட்டாணி

பச்சை பட்டாணி வளர்ப்பு மற்ற செடி வளர்ப்பிலிருந்து சற்று வேறுபட்டது, ஏனெனில் விரைவில் பலனை தரக்கூடியது. பொதுவாக நாம் பச்சை பட்டாணியை கடைகளில் வாங்கி தான் சமைத்து சாப்பிடுவோம், ஆனால் அதை வீட்டில் முளைக்க வைத்து சமைத்து சாப்பிடுவது ஒரு தனி திருப்தியை தரும். அதைவிட, இயற்கை முறையில் விளைவித்து சாப்பிடுவதால், உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை நல்ககூடியது.
வளர்க்கும் முறை

மகத்துவமிக்க இந்த பச்சைபட்டாணி வளர்ப்பது எப்படி, பச்சை பட்டாணி பயன்கள்,எப்படி வீட்டிலேயே பச்சை பட்டாணி செடி வளர்க்கலாம் ஆகியவற்றை இக்கட்டுரையில் காண்போம்.




மாடி தோட்டத்தில் பச்சை பட்டாணி எளிதாக வளர்க்கும் முறை

பச்சை பட்டாணியை விதைப்பதற்கு முன்பு, அதற்கு தொட்டி தயார் செய்வது மிகவும் முக்கியம், அந்த வகையில் உங்களிடம் நெகிழிப்பை அல்லது அகலமான தொட்டி இருக்குமேயானால் அதை எடுத்துக்கொள்ளவும். பட்டாணியின் வேர்கள் அதிகம் ஆழமாக போகாது, எனவே நீங்கள் தொட்டியில் அதிகமாக மண் நிரப்ப தேவையில்லை. ஒரு நெகிழிப்பையை எடுத்து அதில் பாதி மண்கலவை சேர்த்தால் போதும்.




பச்சைபட்டாணி விதைப்பு முறை

பச்சை பட்டாணியை பயிரிட, உங்களுக்கு பச்சை பட்டாணி தேவைப்படும், அது உலர்ந்த பச்சை பட்டாணியாக இருந்தாலும் கூட அதையும் பயன்படுத்தலாம். அந்த பட்டாணியை ஒரு இரவு முழுதும் தண்ணீரில் ஊறவைக்கவும், பிறகு அந்த பச்சை பட்டாணியை நீரில் இருந்து வடிக்கட்டி எடுத்துக்கொண்டு, ஒரு காட்டன் துணியின் உள்ளே முடிந்து வைத்திருக்கவேண்டும். இரண்டு நாட்களுக்கு பிறகு பார்த்தால் அவை முளைப்பு விட்டு வளர்ந்திருக்கும்.

முளைகட்டிய பச்சை பட்டாணிதனை, நீங்கள் தயார் நிலையில் வைத்திருந்த அந்த தொட்டியில் பட்டாணியை விதைப்பு செய்ய வேண்டியது தான், ஒவ்வொரு பட்டாணிக்கும் நான்கு அல்லது ஐந்து இன்ச் இடைவெளி விட்டு அடுத்த பட்டாணிதனை விதைக்கவும்.




முக்கியமாக கவனிக்க வேண்டியது பட்டாணியை விதைக்கும்பொழுது முளைப்பு கீழிருக்கும்படி விதைக்க வேண்டும், விதைத்த பிறகு மண்ணை சற்று லேசாக வைத்து மூடினாலே போதுமானது. பிறகு அதன் மீது சிறிது தண்ணீர் தெளிக்க வேண்டும்.

பூச்சி தாக்குதல் மற்றும் உரமேலாண்மை

பட்டாணிச்செடி வளர்ப்பு முறையில்,பச்சை பட்டாணி ஆரோக்கியமாக வளர எந்தவித பூச்சி தொல்லையும் இல்லாமல் பார்த்து கொள்ளவேண்டும். பூச்சிகள் வராமல் தடுக்க, வேப்பம்புண்ணாக்கை அந்த தொட்டியில் உள்ள மண் கலவையின் மேல் சிறிது சேர்த்து கிளறிவிட்டால் போதுமானது, பட்டாணிச்செடி நல்ல முறையில் வளரும். மேலும் வீட்டில் மீதமாகும் காய்கறி கழிவுகள் மற்றும் அரிசி, பருப்பு கழுவிய நீரை அதில் தினமும் சேர்ப்பதன் மூலமாக சிறந்த முறையில் வளரும்.

அறுவடை

பட்டாணி செடிகள் பொதுவாகவே 35 நாட்கள் அல்லது 40 நாட்களில் பூ வைக்கத்தொடங்கி விடும். பட்டாணி செடியானது 60 அல்லது 70 நாட்களில் பெருன்பான்மை வளர்ச்சியை அடைந்து விடும். இந்த செடிகள் முழுதும் வளர்ந்த பின்பு 80 ஆவது நாட்களில் பச்சை பட்டாணியை நீங்கள் அறுவடை செய்யலாம். கத்திரிக்கோல் கொண்டு நறுக்கி நீங்கள் பட்டாணி சாகுபடி செய்யலாம்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!