தோட்டக் கலை

தோட்டத்தில் மண் பிரதானம் ஏன்?

வீட்டுத் தோட்டத்தில் கவனிக்க வேண்டிய விஷயமே மண்தான். கண்ட இடத்துல மண்ணைஅள்ளிட்டு வந்து போடக்கூடாது. செம்மண்ணும், மணலும் கலந்த கலவையோடு எலும்புத் தூள், சுண்ணாம்புத்தூள், வேப்பம்பிண்ணாக்கு எல்லாத்தையும் கலந்துதொட்டியில் போட்டிருக்கதால நல்ல இயற்கை உரமா இருக்கு

தோட்டக் கலை – மாடித்தோட்டம் – Pg Novels

பொன்னாங்கண்ணி கீரை……….

நிறைய சத்துள்ள ஒரு கீரையாக பொன்னாங்கண்ணி கீரையை சொல்லலாம். கண் பார்வைக்கு ரொம்ப நல்ல கீரை. பச்சையும், முழு பிங்க் நிறத்திலும் இந்த கீரை வரும். செடியில் இருந்து பறித்த கீரையில் இருந்து ஒரு குச்சியை வைத்தால் வளர்ந்து விடும். வேண்டும் போது தேவையான அளவு வெட்டி எடுத்துக் கொள்ளலாம். பிறகு தளிர் விட்டு வளர்ந்து விடும்.

பொன்னாங்கண்ணி கீரையில் பூச்சி அரிப்பு வந்து இலையில் சின்ன சின்னதாய் ஓட்டை விழும். தண்ணீர் விடும் போது வேகமாக நீரை செடி மீது பீச்சி அடிப்பதன் மூலம் அந்த பிரச்சினை கட்டுப்பாட்டில் வந்திருக்கிறது.

கொத்தமல்லி………..

புதினா மாதிரி மல்லியும் நிறைய மருத்துவ குணம் கொண்டது. கொத்தமல்லியை நாம் கீரையாக அவ்வளவு பயன்படுத்துவது கிடையாது. கொத்தமல்லியில் சட்னி, சாதம் செய்யலாம். கிச்சனில் இருக்கும் முழு மல்லியில் இருந்து கொஞ்சமாய் எடுத்து தூவி விட்டால் போதும். வளர்ந்து விடும். நன்றாக வளர்ந்ததும் பிடுங்கி பயன்படுத்திக் கொள்ளலாம். பூப்பதற்கு முன் பறிப்பது நல்லது. கொத்தமல்லி இந்த செடி வைப்பதற்கு, மரப்பெட்டியில் மண்ணை நிரப்பி, 1/4 இன்ச் ஆழத்தில் மல்லி விதையை, சரியான இடைவெளியில் வரிசையாக விதைத்து, தண்ணீர் ஊற்றி, போதிய சூரிய வெளிச்சம் கிடைக்கும் இடத்தில் வைத்து வளர்க்க வேண்டும்.




வீட்டிற்குள் வளர்க்க ஏற்ற செடிகள் எவை?

அலமாண்டா, ஆண்டிகோனான், அரிஸ்டோலோகியா, மனோரஞ்சிதம், ஆஸ்பராகஸ், பிக்னோனியா, காகிதப்பூ, பெரண்டை, கிளி மாட்டிஸ் சங்கு புஷ்பம், பைகஸ் ஐவி போன்ற செடிகள் வீட்டிற்குள் வளர்க்க ஏற்ற செடிகளாகும்

செம்பருத்தி செடி

தோட்டத்தில் வருடம் முழுவதும் பூக்களைத் தரக்கூடியவாறான செடியை வைப்பதற்கு ஆசைப்பட்டால், அதற்கு செம்பருத்தி செடி சரியானதாக இருக்கும். செம்பருத்தி செடியை பராமரிப்பது என்பது மிகவும் ஈஸியானது. அனைவருக்கும் செம்பருத்தியில் உள்ள வெரைட்டிகள் தெரியுமோ இல்லையோ, ஆனால் அந்த செம்பருத்தி கண்ணைப் பறிக்கக்கூடிய வகையில் பல்வேறு நிறங்களில் உள்ளது. மேலும் அவை அனைத்தும் ஒரே மாதிரி இல்லாமல், சில செம்பருத்தி பூக்கள் வடிவம் மற்றும் அளவுகளில் மாறுபட்டிருக்கும். குறிப்பாக இந்த செம்பருத்தி செடியில் உள்ள ஒரு தனித்துவம் என்னவென்றால், அந்த பூவானது செடியின் இலைகளை பல்வேறு காலங்களில் ஒரே மாதிரி வைத்திருக்கும்.




செடி,கொடி,மரம் வளர்ப்பவர்களுக்கான டிப்ஸ்

1. செடிகளுக்கு விடப்படும் தண்ணீர் மிகவும் உப்பு தண்ணீராக இருக்க கூடாது.

2. தொட்டிகளில் செடியை வளர்ப்பவர்கள் குறிப்பாக ஒன்று முதல் ஒன்றரை அடி ஆழமன சிமென்டு தொடிகளை பயன் படுத்தினால் திரும்ப திரும்ப செடிகளை நடுவதற்கு வசதியாக இருக்கும். தொட்டிகளில் செம்மண், மணல், கார்டன்ப்ளூம் உரத்தை கலக்கவும்.

3. செடிகளுக்கு காலையிலும், மாலையிலும் தண்ணீர் விடவும். இயற்கை உரங்களைப் போடு வளர்க்கப்படும் செடிகளில் வளரும் காய்கள், சுவையாக இருப்பதோடு உடல் எஅலத்திற்கும் மிக நல்லவை




 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!