Samayalarai

காரசாரமான காளான் குடைமிளகாய் வறுவல்…

கலர்கலரான குடைமிளகாய் மற்றும் குடைபோன்ற காளான் யாருக்கு தான் பிடிக்காது சொல்லுங்க

இப்படி அனைவருக்கும் பிடித்த குடைமிளகாய் மற்றும் காளான் வைத்து காரசாரமான சுவையுடன் வறுவல் செய்தால் எப்படி இருக்கும்.? அதுவும் இந்த வறுவலை மூணு வேளையும் நீங்க தோசை, சப்பாத்தி, சூடான சாதத்தோட சேர்த்து சாப்பிட்ட அப்படி ருசியா இருக்கும். மசாலா பொருட்களின் வாசனையோட காரசாரமான இந்த காளான் குடைமிளகாய் வறுவலை நீங்க வீட்டிலேயே ஈஸியா செய்யலாம்…




தேவையான பொருட்கள் :

  • குடைமிளகாய் – 1

  • காளான் – 250 கிராம்

  • வெங்காயம் – 1

  • தக்காளி – 1

  • பூண்டு – 2 பல்

  • எண்ணெய் – 2 டேபிள் தூள்

  • உப்பு – தேவையான அளவு

  • மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்

  • மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்

  • கொத்தமல்லி தழை




முதலில் காளான், குடைமிளகாய், வெங்காயம், தக்காளி, பூண்டு ஆகியவற்றை நன்றாக அலசி அவற்றை சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்

அடுப்பில் வாணலியை வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும் அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்

பிறகு அதனுடன் நறுக்கிய பூண்டு சேர்த்து சிறுது நேரம் வதக்கி பின்பு நறுக்கி வைத்துள்ள தக்காளியைப் போட்டு நன்கு வதக்க வேண்டும்

அவை அனைத்தும் நன்கு வதங்கியவுடன் தீயை குறைவாக வைத்து அதில் மிளகுத் தூள் சேர்த்து மீண்டும் நன்கு வதக்கி கொள்ள வேண்டும்.

பின்பு காளான் மற்றும் குடைமிளகாய் சேர்த்து  பிரட்டி அதனுடன் சிறிது தண்ணீர் மற்றும் போதுமான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கி மூடி வைக்கவும்

குறிப்பு – பொதுவாக காளானில் இருந்து தண்ணீர் வெளிவரும் என்பதால் நாம் சேர்க்கும் தண்ணீரின் அளவில் கவனம் செலுத்துவது அவசியம்.

காளான் மற்றும் குடைமிளகாய் நன்கு வெந்து தண்ணீர் வற்றியதும் அதனை இறக்கி அதில் தேவையான அளவு கொத்தமல்லி  தழையை தூவினால் காளான் குடைமிளகாய் வறுவல் ரெடி…

இந்த காரசாரமான காளான் குடைமிளகாய் வறுவலை நீங்கள் சூடான சாதம் மற்றும் சப்பாத்தியுடன் சேர்த்து பரிமாறி அனைவரையும் அசத்தலாம்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!