Samayalarai

விதவிதமாக குளு குளு குல்ஃபிஸ்!

‘குல்ஃபி’ 16ஆம் நூற்றாண்டில் டெல்லியில் முகலாய ஆட்சியிலேதான் முதன் முதலில் உருவானது. இது இந்தியா, பாகிஸ்தான், ஸ்ரீலங்கா, மியான்மர் போன்ற பல நாடுகளிலும் பிரபலமாக இருக்கிறது. சாதாரணமாக சாப்பிடக் கூடிய ஐஸ்கிரீமை விட குல்ஃபி சற்றே கிரீமியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அத்தகைய பெருமை மிக்க குல்ஃபியை வீட்டிலேயே செய்து பார்க்கலாம்.




மலாய் குல்ஃபி செய்ய தேவையான பொருட்கள்.

பால்-1 லிட்டர்.

முந்திரி-50 கிராம்.

பாதாம்- 50 கிராம்.

பிஸ்தா- 50 கிராம்.

குங்குமப்பூ- ஒரு சிட்டிகை.

கன்டென்ஸ்ட் மில்க்- 50 கிராம்.

மலாய் குல்ஃபி செய்முறை விளக்கம்.

முதலில் அடுப்பில் 1 லிட்டர் பாலை காய வைக்க வேண்டும். அதேசமயம் மிக்ஸியில் முந்திரி, பிஸ்தா, பாதாம் ஆகியவற்றை கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். காய்ச்சி கொண்டிருக்கும் பால் ½ லிட்டர் வரும் வரை சுண்ட வேண்டும். அதில் கொஞ்சம் குங்குமப்பூ சேர்த்து நன்றாக பாலை கின்டவும். இப்போது கொரகொரப்பாக அரைத்து வைத்த நட்ஸை இதனுடன் சேர்க்கவும். இனிப்பிற்காக கன்டென்ஸ்ட் மில்க் 50 கிராமை சேர்த்து நன்றாக கின்டி இறக்கவும்.

இப்போது அதற்கென்று இருக்கும் அச்சு இருந்தால் அதை எடுத்துக்கொள்ளுங்கள். அப்படியில்லை என்றால் வீட்டில் இருக்கும் டம்ளரையே பயன்படுத்தி கொள்ளலாம். இப்போது டம்ளரில் செய்து வைத்திருக்கும் கலவையை ஊற்றி பிரிட்ஜில் 8 மணி நேரம் வைத்து எடுத்தால் சுவையான மலாய் குல்ஃபி தயார். நீங்களும் வீட்டில் குளு குளுன்னு குல்ஃபி செய்து சாப்பிட்டு பாருங்கள்.




ஆரஞ்ச் குல்ஃபி செய்ய தேவையான பொருட்கள்:

பால்-1 லிட்டர்.

சக்கரை-1/4 கப்.

பிரஸ் கிரீம்-1 தேக்கரண்டி.

பொடியாக நறுக்கிய பாதாம்-1 தேக்கரண்டி.

பொடியாக நறுக்கிய பிஸ்தா-1 தேக்கரண்டி.

ஆரஞ்ச் புட் கலர்-1 சிட்டிகை.

ஆரஞ்ச் பழம்-2

ஆரஞ்சு குல்ஃபி செய்முறை விளக்கம்:

ஆரஞ்சு குல்ஃபி
  • முதலில் அடுப்பில் 1 லிட்டர் பாலை நன்றாக காய்ச்சவும். இப்போது அதில் ¼ கப் சக்கரை சேர்த்து நன்றாக கின்டவும்.

  • பொடியாக நறுக்கிய பாதாம், பிஸ்தா சேர்த்து கொள்ளவும் அத்துடன் பிரஸ் கிரீம் 1 தேக்கரண்டி, ஆரஞ்ச் புட் கலர் ஒரு சிட்டிகை. இப்போது அந்த கலவையை நன்றாக கின்டி இறக்கவும்.

  • பிறகு இரண்டு ஆரஞ்சு பழத்தை எடுத்து கொள்ளவும். பழத்தின் முனையிலே சிறிதாக வெட்டி விட்டு உள்ளேயிருக்கும் சுளையை மட்டும் தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். தோலை குடுவை போல செய்து வைத்துக்கொள்ளவும்.

  • இப்போது ¼ கப் ஆரஞ்ச் ஜூஸ் மற்றும் ஆரஞ்சு சுளையைசெய்து வைத்திருந்த கலவையுடன் சேர்த்து கின்டவும். பிறகு ஆரஞ்சு தோலை குடுவை மாதிரி செய்து வைத்திருந்தோம் அல்லவா அதில் அந்த கலவையை ஊற்றி அப்படியே பிரிட்ஜில் 8 மணி நேரம் வைத்து எடுக்கவும். இப்போது சுவையான ஆரஞ்சு குல்ஃபி தயார். இந்த வெயிலுக்கு வீட்டிலேயே குல்ஃபி செய்து என்ஜாய் பண்ணுங்க.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!