தோட்டக் கலை

இந்த திசையில் கறிவேப்பிலை செடியை வெச்சா.. வீட்டில் செல்வம் இருமடங்கு அதிகரிக்கும்

ஒவ்வொருவருமே தங்கள் வீட்டை அழகாக வைத்துக் கொள்ள விரும்புவார்கள். வீட்டின் அழகு என்பது வீட்டிற்கு உள்ளே மட்டுமின்றி, வெளியேயும் பொருந்தும். வீட்டின் வெளிப்புறத்தை அழகாக வைத்துக் கொள்ள பலர் செடிகளை வாங்கி வைப்பார்கள். அப்படி செடிகளை வைப்பதாக இருந்தால், ஒவ்வொரு செடியையும் வாஸ்து சாஸ்திரத்தின் படி சரியான திசையில் வைக்க வேண்டும்.

ஏனெனில் தவறான திசையில் செடிகளை வைத்து வளர்த்து வந்தால், அது வாஸ்து தோஷங்களை ஏற்படுத்தி, வீட்டில் பல பிரச்சனைகளை கொண்டு வருவதோடு, வீட்டின் மகிழ்ச்சியையே அழிக்கும். என்ன தான் செடிகள் வீட்டிற்கு வெளியே இருந்தாலும், அவை ஒருவரது வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.




வீட்டில் செடிகளை வளர்க்க விரும்பும் பலர், பெரும்பாலும் வீட்டிற்கு மற்றும் சமையலுக்கு பயனுள்ளதாக இருக்குமாறான செடிகளைத் தான் வளர்ப்பார்கள். அதில் மிகவும் முக்கியமான செடி தான் கறிவேப்பிலை. தினசரி சமையலில் கட்டாயம் சேர்க்கப்படும் ஒரு பொருள் தான் கறிவேப்பிலை. எளிதில் வளரக்கூடிய கறிவேப்பிலையை வீட்டில் வளர்க்க விரும்பினால், அதை வாஸ்து விதிகளைப் பின்பற்றி வைக்க வேண்டும். இப்போது வாஸ்துப்படி கறிவேப்பிலை செடியை எங்கு வைக்க வேண்டும் என்பதைக் காண்போம்.

எந்த திசையில் கறிவேப்பிலை செடியை வைக்க வேண்டும்?

வாஸ்து சாஸ்திரத்தின் படி, கறிவேப்பிலை செடியை வைக்க சிறந்த திசையாக கருதப்படுவது சந்திரனுக்கு உரிய திசையான மேற்கு திசை தான். இந்த மேற்கு திசையில் கறிவேப்பிலை செடியை வளர்த்து வந்தால், அது அந்த வீட்டில் உள்ளோரின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மேலும் வீட்டில் உள்ள பிரச்சனைகள் குறைந்து, வீடு மகிழ்ச்சியாக இருக்கும்.




எதிர்மறை ஆற்றலை நீக்க…

வீட்டின் தோட்டத்தில் கறிவேப்பிலையை செடியை ஒருவர் வைத்து வளர்த்து வந்தால், அது அந்த வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலை வெளியேற்றுவதோடு, வீட்டிற்கு நல்ல அதிர்ஷ்டத்தையும் கொண்டு வரும். அதோடு வீட்டில் செல்வமும் பெருகும்.

கறிவேப்பிலையின் நன்மைகள்

கறிவேப்பிலை ஜோதிடத்தில் மட்டுமின்றி, ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையிலும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. கறிவேப்பிலை புற்றுநோய் மற்றும் சர்க்கரை நோய்களின் அறிகுறிகளில் இருந்து நிவாரணத்தை அளிக்கிறது. அதுவும் இதில் உள்ள மருத்துவ பண்புகள், வயிற்று புற்றுநோயைத் தடுக்க உதவுகிறது. மேலும் இது இதய நோயைத் தடுக்கவும் உதவுகிறது. கண்களுக்கும் நல்லதாக கருதப்படுகிறது. முக்கியமாக தலைமுடிக்கு மிகவும் நல்லது.

செல்வம் பெருக எந்த திசையில் வைக்க வேண்டும்?

வாஸ்து சாஸ்திரத்தின் படி, கறிவேப்பிலையை செடியை மேற்கு திசையை விட, தென்கிழக்கு மூலையில் வைப்பது இன்னமும் நல்லதாக கருதப்படுகிறது. இந்த திசையில் கறிவேப்பிலை செடியை வைத்தால், அது வீட்டிற்கு செல்வ செழிப்பைக் கொண்டு வரும். எனவே உங்கள் வீட்டில் செல்வம் பெருக விரும்பினால், கறிவேப்பிலை செடியை வீட்டின் தென்கிழக்கு மூலையில் வைத்து வளர்த்து வாருங்கள்.




What’s your Reaction?
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!