தோட்டக் கலை

வீட்டுத் தோட்டங்களில் அலங்கார குத்துச் செடிகள்

வீட்டுத் தோட்டங்களில் மரங்கள் நடுவதை விட ஒரு சில அலங்கார குத்துச் செடிகளை நட்டு வைத்திருப்பார்கள். இந்த குத்து செடிகள் மரங்களைவிட சிறியதாக இருக்கும். அவற்றை தனியாக நடுவதை விட கூட்டமாக நடுவதே நல்லது. குத்து செடிகளிலும் மலர் அழகுச் செடிகள் மற்றும் இலை அழகுச் செடிகள் உள்ளன. அலங்கார குத்து செடிகளை வேலியாக அல்லது தடுப்பு சுவராகப் பயன்படுத்தலாம்.




ஆரோக்கியம் தரும் தோட்டக் கலை | ஆரோக்கியம் தரும் தோட்டக் கலை - hindutamil.in

இலை அழகு குத்துச் செடிகள்:

எழிலூட்டும் தோட்டங்களில் ஒரு குறிப்பிட்ட பகுதியை தன்னிலைப்படுத்தி சேர்ப்பதற்காக சற்றே உயரமாக வளரும் அழகிய இலையைக் கொண்டுள்ள செடிகள் நெருக்கமாகவும் நேர் வரிசையிலும் நடப்படுகின்றன. இத்தகைய செடிகள் நெருக்கமாகவும் அடர்த்தியாகவும் வளரும் இயல்புடையவையாக இருப்பது அவசியம்.




குத்துச் செடிகள் நடும்முறை

  • குத்துச் செடிகள் தரையில் நடுவதற்கு முன் நிலத்தில் குழிகள் எடுக்க வேண்டும் குழிகளின் அளவு 1 ½ அடி நீளம் x 1 ½ அடி அகலம் x 1 ½ அடி ஆழம் ஆகும். குழிகளில் மக்கிய தொழு உரம் , செம்மண் , மணல் மற்றும் மேல் மண் ஆகியவற்றை சமமான அளவுகளில் இட வேண்டும்.

  • பின் மழைக்காலங்களில் , பாலிதீன் பைகளில் நன்கு வளர்ந்த அலங்கார குத்து செடிகளை பராமரிக்கலாம்.

  • செடிகள் துளிர் விட்டு நன்கு வளரும் போது பூச்சி , நோய்கள் ஏதாவது தென்பட்டால் அவற்றை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும். செடிகள் ஓரளவு வளர்ந்த பிறகு செடிகளைச் சுற்றி உரம் இட்டு மண் அணைத்து நீர் பாய்ச்ச வேண்டும்.




இலை அழகு குத்துச் செடிகள்

மிகவும் அழகிய இலையையுடைய குறுஞ்செடியான டுராண்டா செடிகள் தரைமட்டத்திற்கு சற்றே அதிகமாக வளரும் தன்மை பெற்றது. டுராண்டா செடிகள் நீர் குறைவான இடங்களில் வளரும் தன்மை பெற்றது.

மருதாணி, காட்டுக் கருவேப்பிலை போன்ற செடிகள் உயரமான வடிவில் கவாத்து செய்வதற்கு ஏற்றது. இவற்றின் இலை சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல அழகு சேர்க்கும் தன்மை பெற்றது.




அகாலிபா போன்ற மிதமான உயரமுள்ள செடிகள் அதிகம் மறைப்புச் செடிகளாக வளர்க்கப்படுகின்றன. இவ்வகை செடியின் இலைகள் பச்சை, சிவப்பு மற்றும் வேறுபட்ட வண்ணங்களில் உள்ளன. பீநாரி (க்ளீரோடென்ரான் இனெர்மி) செடிகள் பெரும்பாலும் பாதை மற்றும் சாலை ஓரங்களிலும் வெளிப்புற எல்லையிலும் நடப்படுகின்றன. இத்தகைய செடிகளைக் கால்நடைகள் உண்பதில்லை. குறைந்த உயரம் மற்றும் நடுத்தரமான உயரத்தில் இச்செடியை செய்து பராமரிக்கலாம்.




மலர் அழகுச் செடிகள்

பெரும்பாலான எழிலூட்டும் இடங்களில் பூக்களை உடைய மறைப்புச் செடிகள் அதிகம் விரும்பப்படுகின்றன. பார்லேரியா, பாகினியா, காகிதப்பூ, சிசால்பினியா, சேஸ்ட்ராம், கேசியா, டோம்பியா, யுபோர்பியா, ஹேமிலியா, செம்பருத்தி , மல்லிகை , முல்லை, மருதாணி, முசாண்டா, அரளி, பவள மல்லி, பெண்டாஸ், பிளம்பாபோ, டேக்கோமா போன்றவைகள் பூக்கும் குத்துச்செடிகள் ஆகும்.

காகிதப்பூ, ‘லூயி வதினா’ போன்ற போன்வில்லா இரகங்கள் அடர்த்தியான பூங்கொத்துகளில் பல வண்ணங்களில் பூக்களைப் பெற்றுள்ளது. ஹெமிலியாஇ ப்யூசியா போன்ற பூஞ்செடிகள் சிவப்பு , ஆரஞ்சு வண்ணங்களில் பூத்து சூழ்நிலையை அழகுபடுத்துகின்றன. சற்றே உயரமாக வளரும் செம்பருத்தி, லன்டோனா, மாதுளை டெக்காமோ போன்ற செடிகள் நம்நாட்டில் அதிகம் மறைப்புச் செடிகளாக வளர்க்கப்படுகின்றன. இவற்றின் பூக்கள் பல வண்ணங்களில் உள்ளதால் நிலையான மறைப்புச் செடிகளாக வளர்க்கப்படுகின்றன.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!