தோட்டக் கலை

குளிர்காலத்தில் தோட்டத்தில் நன்கு வளரக்கூடிய காய்கறிகள்!!!

 தோட்டத்தில் குளிர்காலத்தில் வளரக்கூடிய பல்வேறு செடிகளை விதைத்தால், தோட்டம் அழகாக பச்சை பசேலென்று இருப்பதோடு, சமைப்பதற்கு காய்கறிகளையும் தோட்டத்திலேயே பெறலாம். இதனால் காய்கறிகளுக்காக செய்யும் பணச்செலவு குறைவதோடு, நம் கண்முன்பே ஆரோக்கியமான முறையில் வளர்க்கப்படும் காய்கறிகளைப் பெறலாம்.

அதுமட்டுமல்லாமல் இக்காலத்தில் வளரக்கூடிய காய்கறிகளுக்கு அதிகமான கவனிப்பு வேண்டும் என்பதில்லை. எனவே தமிழ் போல்ட் ஸ்கை குளிர்காலத்தில் வளரக்கூடிய சில காய்கறிகளை உங்களுக்காக பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை உங்கள் தோட்டத்தில் வளர்க்க ஆரம்பித்து, பணத்தை மிச்சப்படுத்துங்கள்.




தக்காளி

அன்றாட சமையலில் சேர்க்கப்படும் தக்காளியின் விலை தற்போது அதிகமாக இருப்பதால், அத்தகைய தக்காளியை வீட்டிலேயே இக்காலத்தில் பயிரிட்டால், தக்காளியானது நன்கு வளரும். ஏனெனில் நவம்பர் மாதம் தக்காளி சீசன். ஆகவே இந்த தக்காளியை பயிரிட்டு, தக்காளியைக் கொண்டு பல்வேறு ரெசிபிக்களை சமைத்து சாப்பிடுங்கள்.

பசலைக்கீரை

இந்த பச்சை இலைக் காய்கறிகளில் ஒன்றான பசலைக்கீரை குளிர்காலத்தில் நன்கு வளரக்கூடியது. ஆகவே இந்த கீரையின் விதையை வாங்கி பயிரிட்டுங்கள். இதற்கு அளவான பராமரிப்பு இருந்தால், இது நன்கு வளரும்.

வின்டர் ஸ்குவாஷ்

வின்டர் ஸ்குவாஷ் கூட குளிர்கால காய்கறி தான். இத்தகைய காய்கறியை தோட்டத்தில் விதைத்தால், இது விரைவில் வளரும்.

முட்டைக்கோஸ்

சாலட்டுகளில் அதிகம் சேர்க்கப்படும் முட்டைக்கோஸின் சீசன் நவம்பர் மாதம் தான். எனவே இந்த காய்கறியை தோட்டத்தில் வளர்த்து, சமையலில் அதிகம் சேர்த்து, அதன் பல்வேறு நன்மையைப் பெறுங்கள்.




அஸ்பாரகஸ்

அஸ்பாரகஸை அதிகம் சாப்பிட்டால், காதலுணர்ச்சியானது அதிகரிக்கும். எனவே நவம்பர் மாதத்தில் இதனை தோட்டத்தில் பயிரிட்டு, காதலுணர்வை அதிகரித்து, துணையுடன் காதலை பரிமாறிக் கொள்ளுங்கள். அதற்கு அந்த செடியின் ஒரு சிறு பகுதியை வைத்து வளர்க்க வேண்டும்.

வெங்காயத்தாள்

சுவைக்காகவும், மணத்திற்காகவும் சேர்க்கப்படும் வெங்காயத்தாள் கூட குளிர்காலத்தில் வளரக்கூடிய காய்கறியாகும். இந்த காய்கறியை விதைத்தப் பின், வெங்காயமானது வருவதற்கு முன் பறிக்க வேண்டாம். இல்லாவிட்டால், அது இனிப்புச் சுவையுடன் இருக்கும்.

பட்டாணி

என்ன இந்த மாதம் பட்டாணியின் விலை குறைவாக உள்ளதா? அதற்கு காரணம் நவம்பர் மாதம் தான் பட்டாணியின் சீசன். எனவே இந்த பட்டாணியின் விதையை ஒரு ஈரமான துணியில் கட்டி, முளைக்க ஆரம்பிக்கும் போது, அதனை விதைக்க வேண்டும். லெட்யூஸ் லெட்யூஸ் கூட குளிர்கால காய்கறியாகும். எனவே இதனை இப்போது தோட்டத்தில் வைத்தால் நன்கு வளரும்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!