தோட்டக் கலை

குளிர்காலத்தில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற சில டிப்ஸ்கள்…

குளிர்காலம் வறட்சியான சூழலை உடன் அழைத்துக் கொண்டு வரும் என்பது ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாகும். எனினும், குளிர்காலத்தில் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டாக அவசியமான சத்துக்களையும், சர்க்கரைப் பொருட்களையும் தாவரங்கள் தங்களுக்குள் சேர்த்து வைத்துக் கொண்டு உயிர்வாழ முயற்சி செய்து வருகின்றன. எனவே, கோடை காலங்களில் தேவைப்படுவதைப் போல அதீத கவனம் செலுத்தி அவற்றை பாதுகாக்க அவசியம் இல்லை. எனினும், குளிர் காலத்திலும் கூட செடிகளுக்கு முறையாக தண்ணீர் ஊற்றி பராமரிப்பதை நிறுத்தி விடக் கூடாது.




தோட்டங்கள் வைத்திருப்பவர்கள் யாராக இருந்தாலும் சரி, குளிரின் காரணமாக செடிகள் மற்றும் புற்களின் வேர்கள் பாதிக்கப்படுமாறு நிலவும் வறட்சியான சூழலைப் பற்றி குறை கூறாமல் இருப்பதில்லை. குளிர்கால மாதங்களில் நிலவும் ஜில்லிடும் குளிர் மற்றும் வறட்சியான சூழல்களால் வளர்ந்து வரும் தாவரங்களின் வேர்கள் சுருண்டு விடுகின்றன. எனவே, போதுமான அளவு தண்ணீரை விட்டு, நிலத்திலுள்ள ஈரப்பதம் ஆழமாக ஊடுருவிச் செல்வதை உறுதி செய்து உங்கள் வீட்டுச் செடிகளை பாதுகாத்துக் கொள்ளுங்கள். உண்மையில் குளிர்கால மாதங்களில் செடிகளை பாதுகாக்க அதிகபட்ச முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

How To Get Rid Weeds In Home,கல் உப்பை வைத்தே எப்படி செடிகளில் உள்ள பூச்சி, களைகளை விரட்டலாம்? - how to get rid weeds in your home in a natural way - Samayam Tamil

பல்லாண்டுகளாகவே வாழ்ந்து வரும் மரங்கள் மற்றும் புற்கள் குளிர் பருவநிலையின் காரணமான போதுமான அளவு தண்ணீர் இல்லாமையால் சேதமடைந்தும் மற்றும் தண்ணீர் இல்லாமலும் வறட்சியடைந்தும் காணப்படும். குளிர்காலத்தை தாவரங்கள் தாக்குப்பிடிக்க வேண்டும் என்றால் அவற்றிற்கு சற்றே அதிகமான கவனத்தை கொடுக்க வேண்டும், அப்பொழுது தான் வசந்த காலத்தில் அவற்றைக் காண முடியும். குளிர்காலத்தில் வறட்சியுடன் மோதலைத் தவிர்க்க செடிகளுக்கு தண்ணீர் விடுவதை தீர்வாக கருதலாம்.

இங்கே குளிர்காலத்தில் தோட்டங்களை பராமரிப்பது தொடர்பான சில டிப்ஸ்கள் தரப்பட்டுள்ளன. இவற்றைப் பின்பற்றி உங்கள் வீட்டுத் தோட்டத்தின் மரங்கள் மற்றும் செடிகளை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.




தவறான முறையில் தண்ணீர் விடுதல்

குளிர் காலத்தில் செடிகளுக்கு தண்ணீர் விடுவதை சற்றே கவனத்துடன் ஆராய வேண்டும். செடியில் மொட்டுக்கள் பூக்கவில்லை என்றாலோ அல்லது இலைகள் தளர்ந்து கிடந்தாலோ, நீங்கள் தவறான முறையில் தண்ணீர் ஊற்றுகிறீர்கள் என்று அர்த்தம். தண்ணீர் விடுவதற்கென தனியான விதிமுறைகள் எதுவும் இல்லை. ஒவ்வொரு செடியின் தேவைக்கேற்பவும் தண்ணீரின் அளவு மாறுபடும். சில தாவரங்கள் அதிகமான தண்ணீர் ஊற்றுவதால் துன்பப்படவும், வேறு சில தாவரங்கள் பூக்கள் அரும்புவதற்காக அதிகளவு தண்ணீரையும் எதிர்பார்க்கும் தன்மையையும் கொண்டிருக்கும்.




குளிர்காலமும், தாவரங்களுக்கான தண்ணீர் பராமரிப்பும் குளிர் காலத்தில் தாவரங்களுக்குத் தண்ணீர் விடுவதற்கு முன்னர், போதுமான அளவு தண்ணீரை உங்கள் தோட்டத்திற்கு விட வேண்டும். புதிதாக நடப்படும் செடிகளுக்கு தண்ணீர் அதிகமாக தேவைப்படும். மேலும், குளிர் காலம் தொடங்குவதற்கு 2 அல்லது 3 வாரங்களுக்கு முன்னதாகவே தோட்டத்தில் ஆழமாக தண்ணீர் பாய்ந்து தொடர்ந்து தண்ணீர் விடுதல்.

பெரிய மற்றும் மொத்தமான இலைகளை கொண்ட செடிகளுக்கு தொடர்ந்து தண்ணீர் விட வேண்டும் என்பது குளிர் கால செடிகள் பராமரிப்பில் முக்கியமான அம்சமாகும். தரைக்கடியில் வேர்களை கொண்டிருக்கும் செடிகளுக்கும் கூட தொடர்ந்து தண்ணீர் விட வேண்டியது அவசியமாகும். எல்லா செடிகளுமே ஒரே அளவிலான ஈரப்பதத்தை எதிர்பார்ப்பதில்லை, சில செடிகள் காய்ந்து கிடப்பதையும், சில செடிகள் ஈரப்பதமாக இருப்பதையும் தங்களுக்கு ஏற்றார் போல் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றன.

மண்ணை ஊற வைத்தல்

குளிர் காலத்தில் உங்கள் செடிகளுக்கு 6 முதல் 8 அங்குல ஆழ அளவிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது குறிப்பிடத் தக்க விஷயமாகும். இந்த பொதுவான முறையை புல்வெளிகள், சில வகை மரங்கள் மற்றும் புற்களுக்கு பயன்படுத்த வேண்டும். இந்த அளவு ஆழமாக தண்ணீர் விடுவதன் மூலம் வேர்களும், செடிகளின் மேல் பகுதிகளும் போதிய அளவிற்கு ஈரப்பதத்தில் ஊறியிருக்க முடிகிறது. மரங்கள், புற்கள் மற்றும் புல்வெளிகளுக்கு தண்ணீர் விடுவதை உறுதிப்படுத்துங்கள் மற்றும் அவற்றின் வேர்களை தெளிப்பான்கள் (Sprinklers) மற்றும் தண்ணீர் விடும் ஹோஸ்களால் (Hose) பாதுகாத்து வாருங்கள். ‘




மூன்று வாரங்களுக்கு தண்ணீர் விடுதல்

தண்ணீர் விடும் அளவு மண் மற்றும செடியின் தன்மையைப் பொறுத்து மாறுபடும். எனினும், 2 அல்லது 3 வாரங்களுக்கு தண்ணீர் விடுவது போதுமானதாக இருக்கும். மண்ணில் எவ்வளவு ஆழத்திற்கு தண்ணீர் சென்றுள்ளது என்று நீங்கள் அறிய விரும்பினால், ஒரு திருப்புளி (Screw Driver), தையல் ஊசி, மண் வெட்டி அல்லது ஒரு இரும்புக் கழி கொண்டு மண்ணில் குத்தி அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் மண்ணில் குத்திய பொருள் ஈரப்பதத்துடன் வெளி வந்தால், எத்தனை அங்குல நீளத்திற்கும், ஆழத்திற்கும் அந்த ஈரப்பதம் உள்ளது என்று காண முடியும். அப்பொழுதும் மண் வறண்டு காணப்பட்டால், மீண்டும் தண்ணீர் விடுங்கள்.

தண்ணீர் ஹோஸ்

குளிர் காலங்களில் ஹோஸ் பைப்களைப் பயன்படுத்தி வளர்ந்த மரங்கள் மற்றும் புற்களின் அடிப்பகுதியில் குறைந்தது 30 நிமிடங்களுக்கு தண்ணீர் விடுங்கள். இந்த தண்ணீர் மண்ணின் ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ள உதவும். இந்த வழிமுறைகளைப் பயன்படுத்தி குளிர் காலத்தில் உங்கள் மரங்கள், செடிகளை தண்ணீர் பற்றாக்குறையில் இருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!