தோட்டக் கலை

மாடித்தோட்டத்தில் முலாம்பழம் பயிரிடும் முறை

நாம் அனைவரும் அன்றாட காய்கறிகளை நமது வீட்டு மாடியில் பயிர் செய்யலாம். இவ்வாறு பயிர் செய்வதினால் நமக்கு உடல் நலத்தை காப்பதுடன் இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளை உண்ட திருப்தியும் ஏற்படும். எனவே நம்மால் முடிந்த அளவுக்கு மாடித்தோட்டங்களை ஏற்படுத்தலாம். மாடித்தோட்டத்தில் முலாம்பழம் பயிரிடும் முறை யை இங்கு காணலாம்.




Semena melounu – Meloun cukrový Stellio F1 – Cucumis melo

தேவையான பொருட்கள்

  • Grow Bags அல்லது Thotti.

  • அடியுரமாக இட மணல், தென்னை நார் கழிவு, மண்புழு உரம், செம்மண், வேப்பந்தூள், பஞ்சகாவ்யா.

  • விதைகள்

  • நீர் தெளிக்க உதவும் பூவாளி தெளிப்பான்

  • பந்தல் போடுவதற்கான உபகரணங்கள்

தொட்டிகள்

தேங்காய் நார் கழிவு இரண்டு பங்கு, மாட்டுச்சாண‌ம் ஒரு பங்கு, சமையலறை கழிவு ஒரு பங்கு என இயற்கை உரங்களை கொண்டு தொட்டியை நிரப்பி ஆற விட வேண்டும்.

இது கொடி வகை என்பதால் மூன்று அடிக்கு மேல் இருக்குமாறு தொட்டிகளில் மண் மற்றும் உரக்கலவையை நிரப்ப வேண்டும்.




விதைத்தல்

நல்ல தரமான ஆரோக்கியமான விதைகளை தேர்ந்தெடுத்து விதைக்க வேண்டும். ஒரு குழிக்கு 3 விதைகள் வரை ஊன்றலாம்.

நீர் நிர்வாகம்

விதைகளை விதைத்தவுடன் பூவாளியால் நீர் தெளிக்க வேண்டும். தினம் காலை அல்லது மாலை வேளையில் தண்ணீர் தெளிக்க வேண்டும்.

உரங்கள்

வீட்டு சமையலறை கழிவுகளை ஒரு குழியில் கொட்டி மக்கச்செய்து அதனை உரமாக பயன்படுத்தலாம்.

செடிகளைக் காக்கும் இயற்கை பூச்சிக் கொல்லியான வேப்ப எண்ணையை மாதம் ஒரு முறை தெளிக்க வேண்டும்.

வேப்ப இலைகளைச் சேமித்து நன்கு காய வைத்துத் தூள் செய்துகொள்ள வேண்டும். இந்தத் தூளைச் செடி ஒன்றுக்கு ஒரு பிடி வீதம் செடியின் வேர் பகுதியில் போட்டு கிளறிவிட வேண்டும். இதுவே அடி உரமாகவும், பூச்சிக் கொல்லியாகவும் செயல்படும்.




பாதுகாப்பு முறைகள்

  • வளரும் நுனி கிளைகளை கவாத்து செய்வதால் அதிக கிளைகள் தோன்றுவதற்கு ஏதுவாக இருக்கும். 15 நாட்களுக்கு ஒருமுறை கழிவுகளைக் கிளறி விட வேண்டும்.

  • பஞ்சகாவ்யா 50 மில்லி என்ற அளவில் ஒரு லிட்டர் நீரில் கரைத்து பூக்கும் சமயத்தில் பைகளில் ஊற்ற வேண்டும். இதனால் பூக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இது சிறந்த நோய் தடுப்பானாகவும் செயல்படும்.

அறுவடை

காய்களின் மேற்பரப்பிலுள்ள வலைகளுக்கு இடைப்பட்ட பகுதி மஞ்சள் நிறமாகவும், வலைகள் மங்கலான வெள்ளை நிறமாகவும் மாறும்போது காய்களை அறுவடை செய்ய வேண்டும்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!