Serial Stories நீ காற்று நான் மரம்

நீ காற்று நான் மரம்-31

31

         முரளியின் பரிசோதனை முடிவுகளை மோகனிடன் காண்பிக்கிறார் டாக்டர்.

“நினைத்தது போலவே தான்..உடலில் எலும்பு முறிவு எதுவும் இல்லை…

ஆனால் வைரஸ் அல்லது பாக்டீரியா தாக்குதல் இருக்கலாம்..”

“அதற்கு இன்னும் சில டெஸ்ட் எடுக்க வேண்டும் மோகன்..உங்களுக்கும் இதெல்லாம் தெரியும் என நினைக்கிறேன்..”

“பார்ப்போம் …கடவுள் இருக்கிறார்…நல்லது நடக்கட்டும்.”

வீட்டில் ஒருவருக்கும் நிம்மதி இல்லை.

மோகன் குடும்பம் ஆரம்பம் முதலே இன்பம், துன்பம் இவற்றை மாறி மாறிப் பார்த்த குடும்பம்.

அவை முக்கியமாக பணக் கஷ்டம் தான்.ருக்குவின் அப்பாவும் , கோவிந்தனின் பெற்றோர்களும் கோவிந்தன் , ருக்குவின் சிறு வயதிலேயே தவறி விட்டனர்.

அதற்கு பிறகு பெரிய அளவில் யாரும் மருத்துவ மனையில் படுத்தது கூட கிடையாது. கலகலப்பாக தனம் பாட்டி அனைவரையும் கஷ்டம் தெரியாமல் வளர்த்தாள்.

அதே, வீணாவின் குடும்பம் அந்த பணக் கஷ்டம் கூட இல்லாமல் வளர்ந்த குடும்பம்.

செல்லமாக வளர்த்த வீணாவின் நடவடிக்கையால் ஏதாவது பெரிய இன்னல் வந்து விடுமோ என ஒரு கட்டத்தில் ரகோத்தமன் பயந்தார்.

ஆனால் மோகனை விட வீணாவுக்கு வேறு ஒரு நல்ல கணவன் கிடைக்கமாட்டான் என புரிந்து கொண்டு இவர்களது காதலுக்கு பச்சைக் கொடி காட்டினார்.

விஜி ரகோத்தமனிடம்,

” நாம ஜாதக பொருத்தமே பார்க்கலயே..”

“ஒரு வேளை அதனால் தான் இப்படி ஆகி விட்டதோ???”

ஏதாவது பரிகாரம் இருக்குமோ, செய்யலாமா???” என்கிறாள்.




ரகோத்தமனும் கோவிந்தனும் இதில் ஒரே நிலைப்பாடு தான். அந்த நாராயணன் நினைத்தால் எதுவும் செய்வான். நடந்தது நடக்கப் போவது அனைத்தும் அவன் செயல் நவக்கிரங்களுமே அந்த மும்மூர்த்திகளின் ஆணைப் படி தானே இயங்குகின்றன.

துன்பத்தை தரும் கடவுள் அதைப் போக்கவோ, அல்லது தாங்கிக் கொள்ளும் சக்தியோ கொடுப்பார் என்பது இவர்களின் நம்பிக்கை. அவனிடம் சரணாகதி அடைந்தவர்கள் இவர்கள்.

நினைவு வந்து வந்து போனது முரளிக்கு…

” அங்கே கொட்டப்பட்ட மூட்டைகளில் இருந்தது மருத்துவக் கழிவுதான் என கண்டுபிடிக்கப்பட்டு அரசு நடவடிக்கை ஆரம்பித்து விட்டது…ஆனால்…. முரளி அதன் பாதிப்பிலிருந்து மீளவில்லை…

இரண்டு நாள் கழித்துத்தான் முழுக்க நினைவு திரும்பியது.

திருமண நாளிலிருந்து முழுக்க முழுக்க மோகன் முரளி இருக்கும் மருத்துவ மனையிலேயே இருந்தான்.

ருக்கு…” நான் இருக்கேன்..நீ வீட்டுக்கு போய் வீணாவுக்கு துணையாயிரு… ” என்றாள்.

” இத்தனை நாள் நானா அவளுக்கு துணையா இருந்தேன்???.” சள்ளென கோப்பட்டான் அம்மா மேல்.

வீணாவுக்கும் முரளி மேல் மிகுந்த பாசம். அவன் மூலம் தானே முதலில் மோகனையே அணுக ஆரம்பித்தாள்.

ஆனால் முரளி மேல் எவ்வளவு அன்பு வைத்திருந்தால் இப்படி மோகன் அம்மாவிடம் கோபப் படுவான் என அறிந்து, மோகனின் குறிப்பறிந்து நடக்க ஆரம்பித்தாள் இரண்டு நாளாய்.

தன்னை பற்றி ‘தாரா ஏதோ தவறாக பேசிய போது’ மோகன் கோபப்பட்டதை கேள்விப் பட்டிருக்கிறாள்.இப்போது தான் அவனின் கோபத்தை நேரில் பார்க்கிறாள்.




முரளிக்கு நினைவுக்கு வந்த போது,

“மருத்துவமனையில் அண்ணா தனக்கு அருகில் இருப்பதை பார்க்கிறான்..

“மோகனுக்கு நினைவு வந்து விட்டது” என நர்ஸ் டாக்டரிடம் சொல்லப் போக,

“அண்ணா…எனக்கு இப்போ வலி எதுவும் இல்லை….” என சொல்ல நினைக்கிறான்…”

“நாக்கு சுழலவில்லை…”

“கையால் எனக்கு ஒன்றும் இல்லை” என சொல்லி மோகனின் கையை பிடிக்கப் பார்க்கிறான்..கைகள் பொத்தென விழுகிறது.

காலைத் திருப்புகிறான்..ஆனால் அதுவும் முடியவில்லை…

மோகன்…

“சொல்லுடா…பரவாயில்லையா????”

முரளியின் விழிகள் மட்டுமே அசைகிறது..வாயில் உதடுகள் அசைகிறது.ஒலி வருகிறது…ஆனால் வார்த்தை வரவில்லை.

முரளியின் கைகளை மோகன் பிடித்த பிடியில் “நான் இருக்கிறேண்டா… உனக்கு “என சொல்கிறான்.

“மோகனுக்கு விளங்கி விட்டது…வைரஸ் அட்டாக் தன் வேலையை ஆரம்பித்து விட்டது…”

‘டாக்டர் சொன்னது போல…’

‘ஆனால் உயிருக்கு இது வரை ஆபத்தில்லை..’என புரிந்தது…

வீணாவுக்கு கால் பண்ணி வரவழைத்தான்.

நான் இல்லாத போது

” முரளியை நீதான் பாத்துக்கணும்…”

‘நீ அவனை பாத்துக்க…எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு…. ஒரு ரெண்டு மணி நேரம் கழித்து வருகிறேன்…”

முரளியிடம் ,

“எனக்கு பதில் வீணா உன்னை பாத்துப்பா…கவலைப் படாதே…” என சொல்லி விட்டு வெளியே வந்து முரளியின் நிலையை விளக்குகிறான்.

அனைவரிடமும், டாக்டர் வந்து விளக்குகிறார்..

இது அந்த கால பெரியம்மை நோய் போல இவனை பாதித்துள்ளது..

இதற்கு வெளி நாட்டில் மருந்து இருக்கிறது.. “ஆனால் எந்த அளவு குணமாகி திரும்ப பழைய நிலைக்கு வருவான் என சொல்லமுடியாது ”  என்கிறார்.

மோகன் டாக்டர்  வில்லியம் டெய்லரை போனில் அணுகி நிலையை விளக்கி உதவி கேட்க,

ரிப்போர்ட்ஸ் அவருக்கு அனுப்பி வைக்கப் பட்டது…

உலக அளவில் பெரிய மருத்துவமனைகளை அவர் அணுக,

மருந்துகள் இரண்டு நாட்களில் அனுப்பி வைக்கபடுகிறது..

இரு வாரங்களில்,

கால்களில் திறன் வந்து சக்கர நாற்காலியில் உட்கார வைக்கப் படுகிறான்.

கைகள் சைகை காட்டும் அளவுக்கு முன்னேற்றம் ஏற்படுகிறது.

விரல்களில் பிடிப்பு ஏற்படவில்லை.

வாயிலிருந்து ஒலி மட்டும் வருகிறது… வார்த்தை இன்னும் வரவில்லை.

முரளி வீட்டுக்கு அழைத்து வரப் படுகிறான்.

மோகன் முரளிக்கு,

‘தாயுமானவனாக’ ஆகிறான்.

வீணா தவிர மற்றவர்கள் மோகனிடம் பேசக் கூட பயந்தார்கள். செய்யும் வேலையில் அவனது அர்ப்பணிப்பு அவர்கள் அறிந்தது தானே.

ஆனால் இப்போது தம்பிப் பாசமும் சேர்ந்ததால் உணர்ச்சிப் போராட்டத்தில் இருக்கிறான் என அனைவரும் புரிந்து கொண்டார்கள்.

அந்த பேதை வீணா தான் பாவம்…

அருகில் இருந்தும் பூவின் மணத்தை அறிய முடியாத

ஜலதோஷக்காரி போல,

தட்டு நிறைய இனிப்பு கொட்டிக் கிடந்தும் அனுபவிக்க முடியாமல் இருக்கும் சர்க்கரை வியாதிக்காரி போல இருக்கிறாள்.

“மோகா….” நான் ஒண்ணு சொன்னா கேப்பீங்களா…தப்பா இருந்தா வேண்டாம்..”

என ஆரம்பிக்கிறாள்..

“முரளிக்கு பூரணமாக குணமாவது பற்றியது தவிர வேறு எதுவும் இப்போதைக்கு வேண்டாம்….”

“மருத்துவ முயற்சி ஒரளவிற்கு எடுபட்டது. ஆனால் இந்த முயற்சி முழுமை பெற அந்த  தெய்வத்திடம் ஏன் நாம நேரில் முறையிடக் கூடாது..”

மோகனுக்கு இவள் ஏதோ சொல்ல வருகிறாள் என புரிந்து

“ஹ்ம்ம் சொல்லு…”

”  நாம சந்திச்சதுக்கு காரணமா இருந்த திருக்கோவிலூருக்குப் போய் நாம் முதலில் ஒன்றாய் சேவித்த த்ரிவிக்ரமனை வேண்டிக் கொள்ளலாமே..”

“அந்த வருஷத்துக்கு அப்புறம் இருவரும் சேர்ந்து அங்கே போகவில்லையே…”

மோகனுக்கு இப்போது அவள் சொல்வது விளங்க ஆரம்பித்தது..

“ஆனால் முரளியை இந்த நிலையில் விட்டு விட்டு….”

” முரளியையும் அழைத்துகொண்டு,இரு குடும்பங்களும் ஒன்றாக போய் வருவோம்..”

“அப்பாவிடம் சொல்கிறேன்

ஏற்பாடு செய்வார்…நீங்க அனுமதித்தால்…”

“உடனே ஏற்பாடு செய்….”என சொல்கிறான் மோகன்.

” எப்படி துள்ளித் திரிந்தவள், எனக்காக எப்படி தன்னை மாற்றிக் கொண்டிருக்கிறாள்…”

“இவள் எனது வாழ்க்கையில் வந்ததே வசந்தம் போல இருக்கிறதே…”

பாட்டி சொல்வது போல,

“நல்ல பொண்டாட்டி ,  நல்ல புருஷன் கிடைப்பது எல்லாம் பூர்வ ஜன்ம பலன் தான் போல இருக்கு..”

“நாம இனி இவளையும் மெதுவாக கவனிக்கணும்…”

என எண்ணிக் கொள்கிறான்.

தனம் பாட்டி

“என் செல்லமே…நான் நினைத்ததை சொல்லிட்டயே….”

“எனக்கு இந்தப் பேச்சை எடுக்கவே பயமா இருந்தது… “

என்றாள் வேனில் ஏறிக் கொண்டே.

குடும்பமாக முதல் வெளியூர் பயணம் மோகனுக்கும் வீணாவுக்கும்.

ஆனால் மோகன் முரளிக்கு அருகில் உட்கார்ந்து கொள்கிறான்.

“உனக்கும் ஒரு சேஞ்சாக இருக்குமேடா…”

முரளி வீணாவை பார்த்து கை கூப்ப ,

எல்லோர் கண்களிலும் நீர்.

தனம் பாட்டி வீட்டில் அனைவரும் இறங்க ,

ருக்கு கதவைத் திறந்து உள்ளே போக,மோகனும் வீணாவும் இரு புறமும்

முரளியை வீல் சேரில் வைத்து படிகளில் தூக்கி வர,

விஜியை நோக்கி கை அசைக்கிறான்…

“அவளை நோக்கி கை கூப்புகிறான்….தனது காலையும் வீல் சேரையும் காட்டுகிறான்..”

மோகனுக்கு புரிந்து விட்டது…

“நீ ஒன்றும் உணர்ச்சி வசப்படாதே முரளி..”

மற்றவர்களுக்கு புரியவில்லை..

“என்ன சொல்கிறான்?

முரளி”

என விஜி கேட்க,

“ஒன்றுமில்லை ஆண்ட்டி..

அவனுக்கு ஏதோ பழைய நினைவு ” என சொல்லும் போதே,

தெருவில் இரு சிறுவர்கள்,

“டேய் பாவம்டா அந்த அங்கிள் …நொண்டி போல இருக்கு…”

விஜிக்கும் ரகோத்தமனுக்கும் விளங்கி விட்டது.

முதல் நாள் சந்திப்பில் “விஜியை பாவம் நொண்டி..என சொல்லியதும், அதற்கு மோகன் தம்பியை கடிந்ததும் விஜிக்கும் ரகோத்தமனுக்கும் நினைவுக்கு வர,

” நீ எதையும் நினைச்சு குழப்பிக்காதே….” “உலகளந்தப் பெருமாளை வேண்டிக்கோ..அவன் கால் பட்ட இடத்தில் உன் கால் பட்டால் எல்லாம். சரியாகிடும் ” என்றாள் விஜி.




மாலை அனைவரும் கோவிலுக்குப் போக,

முரளியை அங்கே சில நிமிடங்கள் கால் ஊன்ற வைத்தனர் மோகனும் வீணாவும்..

கோவிலிருந்து வெளியே வரும் போது…

விஜியும் ரகோத்தமனும்

முரளியை அழைத்து வர,

“வீணாவின் கையை பிடிக்கிறான் மோகன் ஆதரவோடு..”

“வீணா…நல்லது செஞ்சே வீணா…முரளிக்கு இப்படி ஆனதும் என்றும் விளங்கலை.”

“அதனால அருகே இருந்தும், உன்னைக் கூட

நான் கவனிக்கவில்லை..”

“புரிகிறது மோகா..”

“முரளி என்ன இருந்தாலும் உங்க ‘தொப்புள் கொடி’ உறவாச்சே..”

“என்ன சொன்னே ???.என்ன சொன்னே???”

“நான் உணர்ச்சி வசப்பட்டு அப்படி சொல்லிட்டேன்…மன்னிச்சுடுங்க..”

“இல்லை திரும்ப சொல்லு…”

“உங்க ‘தொப்புள் கொடி’ உறவாச்சே…” நு சொன்னேன்.”

“நான் உணர்ச்சி வசத்தில் இதை யோசிக்கலையே..”

“கையை கொடு..”

“அது ஏற்கனவே உங்களிடம் தான் இருக்கு…”

அவள் கையை எடுத்து கண்ணில் ஒற்றிக் கொள்கிறான்.




What’s your Reaction?
+1
7
+1
5
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!