Serial Stories ஜில்லுன்னு ஒரு நெருப்பு

ஜில்லுன்னு ஒரு நெருப்பு-9

9


“தினப்புயல்” பத்திரிக்கை அலுவலகம்.

“வாங்க சார்”  அந்த ஜோல்னாப் பைக்காரன் விஜயசந்திரனை எடிட்டர் அறைக்குள் இட்டுச் சென்றான்.

ஊதுபத்தி மணம் கமழ்ந்த அந்த அறைக்குள், ஒரு பெரிய மேஜைக்குப் பின்னால் தடிமனான கண்ணாடியை போட்டுக் கொண்டு, தடிமனான ஒரு சட்டப் புத்தகத்தில் மூழ்கியிருந்த எடிட்டர் இவர்களை பார்த்ததும் தலையை தூக்கி,  “என்ன வாசு?… யாரு இவர்?” என்று கேட்டார். 

 “சார் … ஆக்சுவலா இவர் யாரு?ன்னு எனக்குத் தெரியாது!… பட் இவர் ஒரு மேட்டர் சொல்றார்!… போலீஸ்காரங்க அதை நம்பாமல் இவரை அடிச்சுத் துரத்திட்டாங்க!… எனக்கென்னமோ இவர் சொல்றதுல ஏதோ ஒரு விஷயம் இருக்கும் போலத் தெரியுது!… நீங்க அதைக் கேட்டுட்டு… உங்க அபிப்பிராயத்தை சொல்லுங்க சார்!… அதுக்கப்புறம்… நான் மேற் கொண்டு டீல் பண்றேன்” என்றான் ஜோல்னாப்பை வாசு.

“இஸிட்?… சொல்லுங்க மிஸ்டர்… வாட் ஈஸ் தி மேட்டர்?” அந்த தடிமனான புத்தகத்தை மூடி வைத்தபடி கேட்டார் எடிட்டர்.

விஜயசந்திரன் சொல்ல ஆரம்பிக்க,  “தம்பி… முதல்ல உங்க பேரை சொல்லுங்க தம்பி” என்றார் எடிட்டர்.

 “விஜயசந்திரன் சார்”

 “ம்… இப்ப மேலே சொல்லுங்கள்” என்ற எடிட்டரிடம் டாக்டர் எழுதிக் கொடுத்த அந்த சின்ன டைரியைக் காட்டினான். “இது அவர் எனக்குப் போட்டுக் குடுத்த ஆட்டோகிராப் சார்”

சோடாப்புட்டி கண்ணாடியை கழற்றி நன்கு துடைத்து விட்டு, அந்த டைரியிலிருந்த எழுத்துக்களை நிதானமாய் வாசித்தார் எடிட்டர்.

சில நிமிடம் மௌனத்திற்கு பிறகு,  “யெஸ் வாசு!…. இவர் சொல்றது சரிதான்!… டாக்டர் ஏதோ ஆபத்தில் இருக்கார்” என்றார் எடிட்டர்.

 “எப்படி சார் சொல்றீங்க?” வாசுவும், விஜயசந்திரனும் ஒரே குரலில் கேட்க,

“எனக்கு ஓரளவுக்கு “ஹேண்ட் ரைட்டிங் சைக்காலஜி” தெரியும்!… அதாவது… எழுத்துக்களின் வடிவத்தைக் கொண்டு எழுதுபவரின் மன நிலையைப் படிக்க முடியும்!… டாக்டர் எழுதிக் குடுத்திருக்கற இந்த எழுத்துக்கள்ல தெரியற நடுக்கத்தைப் பார்க்கும் போது கண்டிப்பா இதை எழுதினவங்க ஏதோ ஒரு வித டென்ஷன்ல இருக்காங்க!ன்னு தெளிவாத் தெரியுது!…. மே பி… அவங்க ஆபத்திலே இருக்காங்க!ன்னு கூடச் சொல்லலாம்!…” எடிட்டர் தெளிவாய்ச் சொல்ல,

 “ஸோ… டாக்டர் கிருபாகரன் ஆபத்தில்தான் இருக்கிறார்ன்னு நீங்களும் உறுதியா சொல்றீங்க… அப்படித்தானே எடிட்டர் சார்?” வாசு கேட்டான்.

 “நிச்சயமா… அதுல துளிக்கூட சந்தேகமில்லை” எடிட்டர் உறுதிபடச் சொல்ல, விஜய சந்திரன் பறந்தான்.

“பார்த்தீங்களா… பார்த்தீங்களா?… நான் அப்பவே சொன்னேன் அல்லவா?… போலீஸ்காரங்க வராட்டிப் பரவாயில்லை!… வாங்க நாமே போய் டாக்டரைக் காப்பாத்த ஏதாச்சும் செய்வோம்?…”

“மிஸ்டர்… மிஸ்டர்… கொஞ்சம் பொறுமையா இருங்க!… நீங்க நினைக்கிற மாதிரி இது நாம தனியா டீல் பண்ற விஷயம் அல்ல!… டாக்டர் கிருபாகரன்… இந்த நாட்டோட முக்கிய மனிதர்!… நாம ஏதாவது செய்யப் போக… அதுவே டாக்டரோட உயிருக்கு ஆபத்தாப் போய்ட்டா நமக்குத்தான் பிரச்சனை” எடிட்டர் சீரியஸாகிச் சொல்ல,

“சரி என்னதான் பண்ணலாம்?ங்கறீங்க?” விஜயசந்திரன் எரிச்சலாய்க் கேட்டான்.




“முதல்ல போலீஸ் கமிஷனருக்கு இன்ஃபார்ம் பண்ணுவோம்!.. அவங்க டூட்டியை அவங்க செய்யட்டும்!… ஒரு பொறுப்புள்ள சிட்டிஸனா… நாம நமக்குக் கிடைச்ச தகவலைச் சொல்லி விட்டோம்ங்கற திருப்தில நாம விலகிடுவோம்” என்றார் எடிட்டர்.

அப்போது இடையில் புகுந்த வாசு, “எடிட்டர் சார்!… என்னோட கருத்தை நான் சொல்லலாமா?..”

புருவங்களை உயர்த்தி அவனுக்கு அனுமதி தந்தார் எடிட்டர்.

“எனக்கென்னமோ… இதை ஒரு சேலஞ்சா எடுத்துக்கிட்டு நாமே ஏன் களத்தில் இறங்கக்கூடாது?ன்னு தோணுது!… இப்பெல்லாம் பத்திரிக்கைக்காரங்க இன்வெஸ்டிகேஷன் ஜர்னலிஸம்ன்னு சொல்லிக்கிட்டு எவ்வளவோ சாதிக்கறாங்க!… பெரிய பெரிய அரசியல்வாதிகளின் ஊழல்களையெல்லாம் இன்வெஸ்டிகேட் பண்ணி… பத்திரிக்கைகள் போட்டு… அவங்களுக்கெல்லாம் தண்டனை கூட வாங்கிக் குடுத்திருக்காங்க!… ஒரு கிரைமைக் குடைஞ்சு… அதுல யார்யாரெல்லாம் சம்மந்தப்பட்டிருக்காங்க?ன்னு கண்டுபிடிச்சு வெளிய கொண்டு வந்திருக்காங்க!… அப்படியெல்லாம் அவங்க சாதிச்சதினாலதான் சொஸைட்டில பத்திரிக்கைக்காரங்களுக்கு ஒரு மதிப்பும் மரியாதையும் வந்திருக்கு!… பெரிய பெரிய முதலைகளெல்லாம் கூட பத்திரிக்கைக்காரங்க!ன்னா பயப்படறங்க!… அதே மாதிரி நாமும் ஒரு முயற்சி பண்ணினா என்ன சார்?” என்றான் வாசு.

“ஆமாம் சார்… நாம இறங்கினா நிச்சயம் நம்மாலேயும் ஏதாவது சாதிக்க முடியும் சார்” என்றான் விஜயசந்திரன்.

ஒரு நீண்ட யோசனைக்குப் பிறகு, “சரி செய்வோம்… செஞ்சுதான் பார்ப்போம்” எடிட்டரும் சுறுசுறுப்பானார். “ஓ.கே… மொதல்ல நாம டாக்டர் இந்த விஜயசந்திரனுக்கு ஆட்டோகிராப் போட்டுக் குடுத்த அந்த ஸ்பாட்டுக்குப் போய்… அங்கிருந்து ஆரம்பிப்போம்… என்ன?”

விஜயசந்திரன் தன் யமஹாவை பத்திரிக்கை ஆபீஸிலேயே நிறுத்தி விட்டு, எடிட்டரின் ஃபியட்டில் ஏறிக் கொள்ள மூவரையும் சுமந்து கொண்டு அந்த கார் வாளையார் செக் போஸ்ட்டை நோக்கிப் பறந்தது.

                                                                               ****

போலீஸ் கண்ட்ரோல் ரூம்.

ஓய்வில்லாமல் போன் கதறிக் கொண்டேயிருந்தது. 

“ச்சை… காலையிலிருந்து எத்தனை போன்?” சலிப்புடன் எடுத்தார் ஒரு காவல் அதிகாரி. “ஹலோ!… சொல்லுங்க… கண்ட்ரோல் ரூம்தான்”

“சார்…. நான் டாக்டர் கிருபாகரனோட பி.ஏ. வாசுகி பேசுறேன்!… என்ன சார்… இப்ப நிலைமை என்ன ஸ்டேட்டஸ்ல இருக்கு?… டாக்டரோட வேர் அபௌட்ஸ் பத்தி ஏதாவது தெரிஞ்சிருக்கா?” சற்றுக் காட்டமாகவே கேட்டாள்.

“சிவியரா சர்ச் பண்ணிட்டுத்தான் இருக்கோம் மேடம்!… சிட்டியை விட்டு வெளியே போற எல்லா ரூட்டையும் லாக் பண்ணிட்டோம்!… செக்போஸ்ட்ல கூட காப்ஸை நிறுத்தி இருக்கோம்!… உள்ளே வர்ற… வெளிய போற… எல்லா வாகனங்களையும் சோதனை பண்ணிட்டிருக்கோம் மேடம்”

 “சார்… டாக்டர் கடத்தப்பட்ட விஷயம் இதுவரைக்கும் பத்திரிகைக்காரங்களுக்கு தெரியாது!…  நாங்கதான் அமுக்கி வெச்சிருக்கோம்!…  நீங்க சீக்கிரம் கண்டுபிடிச்சிடுவீங்க என்கிற நம்பிக்கைல!.. ஆனா… உங்ககிட்ட எந்தவித இம்ப்ரூவ்மெண்ட்டுமே தெரியலை!…. எனிவே… பிரஸ்ஸுக்கு நியூஸ் போறதுக்கு முன்னாடி டாக்டரை மீட்டுட்டா பரவாயில்லைன்னு தோணுது!… இல்லேன்னா இந்த விஷயம் பார்லிமெண்ட் வரைக்கும் எதிரொலிக்கும்”

“டோண்ட் வொரி மேடம்… இன்னும் சில மணி நேரத்துல நமக்கு பாசிட்டிவ் இன்ஃபர்மேஷன் வரும் மேடம்” என்றார் அந்தக் காவல் அதிகாரி.




“ஓகே… நான் கமிஷனரை நேர்ல மீட் பண்ணி மீதியைப் பேசிக்கறேன்” போனை வைத்தாள் வாசுகி.

எதிரே நடுங்கிக் கொண்டே நின்ற வாட்ச்மேனை எரிப்பது போல் பார்த்துக் கொண்டே,   “யோவ் ஒழுங்காச் சொல்லு… அந்த வேன் உள்ளார வரும் போது நீ கேட்லதான் இருந்தியா?… இல்ல… பொண்டாட்டியப் பார்க்க வீட்டுக்கு போயிட்டியா?…” கேட்டாள் வாசுகி.

 “அய்யோ சாமி சத்தியமா நான் கேட்லதான் மேடம் இருந்தேன்!… அவங்க ரெட் கிராஸ் சொஸைட்டி வேன்னு சொன்னதுனாலதான் உடனே உள்ளார விட்டேன்” 

“சரி… அவங்க ஐ.டி.கார்டு ஏதாச்சும் காட்டினார்களா?”

“இல்லையே மேடம்” இரண்டு கைகளையும் விரித்துக் காட்டிச் சொன்னான் வாட்மேன்.

“அவங்க காட்டலேன்னாலும் நீ கேட்டிருக்கணும் அல்லவா?” தலையைச் சாய்த்துக் கொண்டு கேட்டாள் வாசுகி.

“இல்ல மேடம்… டாக்டர் ஏற்கனவே என்கிட்ட ”ரெட் கிராஸ் சொஸைட்டி வேன் வரும்… உள்ளார விட்டுடு”ன்னு சொல்லியிருந்ததால் யோசிக்கவே இல்லை மேடம்… சட்டுன்னு விட்டுட்டேன் மேடம்!… எல்லாம் என் கெட்ட நேரம் மேடம்”  அழுது விடுவான் போலானான்.


“இங்க பாருய்யா…. டாக்டர் உயிருக்கு மட்டும் ஏதாச்சும் ஆபத்து வரட்டும்?… உன்னையப் புடிச்சு தூக்கில் தொங்க விடச் சொல்லி நானே கமிஷனருக்குச் சொல்லிடறேன்” மிரட்டலாய்ச் சொன்னாள் வாஅசுகி.

“அய்யய்யோ… வேண்டாம் மேடம்!… நான் புள்ளகுட்டிக்காரன் மேடம்!” பதறினான் வாட்ச்மேன்.

“சரி…. சரி… நான் போய் கமிஷனரைப் பார்த்திட்டு வர்றேன்!… போன் எதாச்சும் வந்தா…. குறிச்சு வை!… நேர்ல யார் வந்தாலும் உள்ளார போக அனுமதிக்காதே… என்ன?” சொல்லி விட்டுத் தன்  ஆக்டிவாவில் ஏறிப் பறந்தாள் வாசுகி.




What’s your Reaction?
+1
4
+1
7
+1
1
+1
0
+1
0
+1
1
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!