Serial Stories தேவதை வம்சம் நீயோ

தேவதை வம்சம் நீயோ-13

13 

 

“அக்கா” பின்னால் கேட்ட

தம்பி மாதவனின் குரலில் உள்ளுக்குள் உற்சாகம் ஊற்றெடுக்க கையில் எடுத்து பார்த்துக் கொண்டிருந்த பிளாஸ்டிக் காதணியை வைத்துவிட்டு திரும்பினாள் அஞ்சனா.

இன்னமும் இரண்டு மாதத்தில் வெளிநாடு போய் படிக்கப் போகிறான்! சின்ன பிள்ளை போல் அக்காவை பார்த்ததும் ஓடி வருவதைப் பார்! மனம் கனிய உடன் பிறந்தவனை பார்த்து நின்றாள்.

“இன்னைக்கு உன்னை பார்ப்பேன்னு நினைக்கலக்கா வெரி ஹேப்பி” அவள் கை பற்றி கொண்டு குதூகலித்தான்.

“என்னடா மால் பக்கம்?”

“இது உன்னை கேட்க வேண்டிய கேள்வி, நீ எங்கே இந்த பக்கம் ?மதியம் சமையல் வேலை இருக்குமே?”கற்பகவல்லி கேட்டாள்.

” ஒருநாள் சமைக்கா விட்டால்தான் என்ன?” வெடுக்கென்று கேட்ட மகளை கொஞ்சம் கவலையாக பார்த்தாள்.

“அஞ்சு என்னம்மா? உன் வீட்டில் ஏதாவது பிரச்சனையா?”

“எந்நேரமும் வீட்டிற்குள் முடங்கி சமைத்துவிட்டு டிவி பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். இல்லாமல் ஒரு பெண் கொஞ்சம் மூச்சு விடலாம் என்று தனியாக வெளியே வந்தால் அவளுக்கு ஏதோ பிரச்சனை அப்படித்தானே அம்மா?”

கற்பகவல்லியின் கவலை அதிகமானது “என்னென்னவோ பேசுகிறாய்.  வீட்டு ஆண்களுக்கு சமைத்து போடுவது என்பது அவ்வளவு பெரிய குற்றமா?’

.

“நிச்சயம் இல்லை அம்மா. நம்முடைய சமையலின் அருமையை அவர்கள் உணர்ந்துவிட்டால் குற்றம் இல்லை. இல்லையென்றால் உணர வைக்க வேண்டியது நம்முடைய கடமை”

“ரொம்ப சரியாக சொன்னாய் அக்கா. அம்மா உங்கள் பத்தாம் பசலி கொள்கைகளை அக்காவிடம் திணிக்காதீர்கள். அவளுடைய வாழ்க்கையை பார்த்துக் கொள்ள அக்காவிற்கு தெரியும். ஸ்பூன் பீடிங் வேண்டாம். ப்ளீஸ் அம்மா” சொன்ன மாதவனின் தலையை பெருமிதமாய் கலைத்து விட்டாள் அஞ்சனா.




“வருங்காலம் பெண்களுக்கு உகந்ததாக இருக்கும் என்பதற்கான அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்து விட்டது மாது. வா நாம் இருவருமாக மாலை ஒரு ரவுண்டு வருவோம்” அம்மாவை காபி ஷாப்பில் அமர்த்தி விட்டு அக்காவும் தம்பியுமாக கிளம்பினர்.

மாதவனின் வெளிநாட்டு பயணத்திற்கு தேவையான சில சாமான்களை வாங்கியதோடு தனக்கும் சில அணிகலன்கள் உடைகளை வாங்கிக் கொண்டாள் அஞ்சனா.

குளிருக்கு போடும் ஜாக்கெட் ஒன்றை தேர்ந்தெடுத்த மாதவன் “கலிபோர்னியாவில் தாங்க முடியாத அளவுக்கு குளிர் இருக்காதாம் அக்கா

சாதாரண ஜாக்கெட் போதும்னு அத்தான் சொன்னார்.அப்படி தேவையென்றால் அங்கே போய் உல்லன் டிரஸ் வாங்கிக்கலாம்னு சொன்னார்”

” எந்த அத்தானை பற்றியடா பேசுகிறாய்?”

மாதவன் அக்காவை ஒரு மாதிரி பார்த்தான் “என்னக்கா நம்ம அத்தானை பற்றித்தான். வேறு யாரைப் பற்றி பேச போகிறேன்?”

“அவரையா… அவரை நீ பார்த்தாயா? பேசினாயா?”

“அத்தான் உன்னிடம் ஒன்றும் சொல்லவில்லையா அக்கா, நானும் அவரும் அடிக்கடி பார்த்து, பேசிக்கொண்டுதானே இருக்கிறோம். எனக்கு நிறைய டிப்ஸ் கொடுத்திருக்கிறார் .அதோட கலிபோர்னியால அவரோட ஃப்ரெண்ட்ஸ் சொந்தக்காரங்க இருக்காங்களாம். அவங்க அட்ரஸ் கூட கொடுத்திருக்காரு. ஏதாவது அவசர உதவினா அவங்க கிட்ட கேட்டுக்கலாம்னு சொல்லியிருக்காரு. இதெல்லாம் உனக்கு தெரியாதா அக்கா?”

ஒரு வார்த்தை தன்னிடம் சொல்லவில்லையே என்று நினைத்த மறுகணமே அப்படி இயல்பாக பேசிக் கொள்ளுமளவு உங்களுக்குள் என்று இருந்திருக்கிறது என்ற குரலும் கேட்க, “சொன்னார்டா நான் தான் மறந்துட்டேன்”என்பது போல் ஏதோ சொல்லி தம்பியை சமாளித்தாள்.

“அக்கா நம்ம அத்தான் ரொம்ப சூப்பர் இல்ல” மாதவன் சொன்னபோது ஏனோ தன்னையே பாராட்டியது போல் ஒரு உற்சாகம் அஞ்சனாவினுள் எழுந்தது. அவளை அறியாமலேயே தம்பியின் பேச்சுக்கு சம்மதித்து ஆடியது அவள் தலை.

“ஆஹா பாராட்டிற்கு நன்றி மாது” திடுமென இவர்கள் பேச்சில் இடையிட்ட கோகுலை இருவருமே எதிர்பார்க்கவில்லை.

“எதற்கு நன்றி?” மாதவன் விழிக்க, “என்னை பாராட்டினாயே”கோகுல் தலைநிமிர்த்திக் கொள்ள அக்கா தம்பி இருவருக்குமே சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது.

“நான் என் அத்தானை பாராட்டினேன்” மாதவன் பெருமிதத்தோடு அஞ்சனாவின் தோளில் கை போட்டுக் கொண்டான். “நம் அத்தான் சூப்பர் இல்லக்கா!” என்றான் மீண்டும்.

கோகுல் முகம் சிவக்க இருவரையும் முறைத்தான். இவர்கள் இருவருக்கும் அத்தான் என்றால் என்னை தவிர வேறு ஒருவனா? அதுவும் இரண்டு பேருமே இப்படி பெருமையாக சொல்லிக் கொண்டு… அஞ்சனாவின் முகத்தை பார்க்க, உற்சாகத்தோடு சிறு வெட்கச் சிவப்பும்.

“மாது விடுடா, கோகுல் மூட் அவுட் ஆகிவிடப் போகிறார், பாவம் புது மாப்பிள்ளை வேறு” அஞ்சனாவின் கேலியை நம்ப முடியாமல் பார்த்தான் கோகுல்.

“என் திருமணத்திற்காக ஷாப்பிங் வந்தேன்” தலையை நிமிர்த்திக் கொண்டு அறிவித்தான்.

“உங்கள் திருமண விஷயம்தான் தெரியுமே அத்தான். திரும்பத் திரும்ப அதையே ஏன் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்?” மாதவன் பச்சை பிள்ளையாக கண்களை சிமிட்டிக்கொண்டு கேட்டான்.

“இரண்டு நாட்களுக்கு முன்பாக மெனெக்கட்டு கோவிலுக்கு என்னை தேடி வந்து அவர் கல்யாண விஷயம் சொன்னார் மாது” தம்பியின் கிண்டலில் தானும் இணைந்து கொண்டாள்.




கோகுலின் முகம் கருத்தது.

தனக்கு திருமணம் என்றதும் அஞ்சனாவின் முகம் ஏமாற்றத்தில் சுருங்குவதை பார்க்கவேண்டுமென்றே அவள் கோவிலுக்கு வரும் நேரம் தெரிந்து நேரிடையாக அங்கே போயிருந்தான்.

இவர்கள் பேசுவதை சத்யநாதன் பார்த்தது தவிர அவன் எதிர்பார்த்த விளைவுகள் எதுவும் அஞ்சனாவிடம் இல்லை. மிகுந்த சந்தோசத்துடன் வாழ்த்துக்கள் சொன்னவளை இன்னமும் அவனால் நம்ப முடியவில்லை.

 “இப்படி அப்பாவின் பணம் மொத்தத்தையும் வழித்தெடுத்துக்கொண்டு போய் வெளிநாட்டில் படிக்கத்தான் வேண்டுமோ உனக்கு?”

“கோகுல் வார்த்தைகளை யோசித்து விடுங்கள். என் தம்பிக்கு நாங்கள் செலவழித்து படிக்க வைக்கிறோம். இதில் கருத்து சொல்ல உங்களுக்கு உரிமை கிடையாது”

“அட விடுக்கா, விளக்கம் சொல்லுவதற்கு கூட ஒரு தகுதி வேண்டும்” மாதவன் அஞ்சனாவின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு போனான். இருவரையும் ஒரு வித வெறியோடு பார்த்து நின்ற கோகுல் உடனே தேடிப்போனது சத்யநாதனை.

“அஞ்சனாவை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். வாழ்வை முடித்துக் கொள்ளும் தவறான முடிவெடுத்து விடப் போகிறாள். எனக்கு திருமணம் முடிவானதை கேட்டதிலிருந்தே மிகுந்த கவலையோடு இருக்கிறாள்”

குள்ளநரியாய் கண்கள் கலங்கி நின்றான்.




What’s your Reaction?
+1
49
+1
19
+1
3
+1
4
+1
2
+1
0
+1
5
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!