Serial Stories நீ காற்று நான் மரம்

நீ காற்று நான் மரம்-25

25

 

   ரகோத்தமன் கலைக் கல்லூரிக்கு முதல்வர் ஆன செய்தி குழுமத்தில் பரவ அனைவரும் அவர் அலுவலகத்திற்கு சென்று வாழ்த்து தெரிவிக்கின்றனர்…

கோவிந்தனுக்கு விஷயம் தெரிந்தது மதியம் தான்.

இந்த வாழ்த்து சொல்லும் நடை முறையும் அவருக்கு புதியது….யாரோ இதனை சொல்ல மாலை தான் செல்கிறார்.

அவருடைய உதவியாளர்….

” உங்களை அப்புறம் பார்க்கிறேன் என சொல்லி விட்டார். நீங்க போகலாம் என அனுப்பி விட்டார்..”

” அந்தஸ்து விளையாட ஆரம்பித்து விட்டது. இந்த மோகன் தான் பாவம்…”என நினைத்து வீடு வந்து சேர்கிறார்.

வீட்டில்” ரகோத்தமன் சார்…முதல்வர் ஆகி விட்டார்…எல்லோரையும் பார்த்த அவர் என்னை பார்க்க மறுத்து விட்டார்..”

தனம் பாட்டியும், ருக்மணியும்

” என்னவாக இருக்கும்….இவர் சொல்வது போல அந்தஸ்து பிரச்சனை யாக இருக்கலாம் …”

பதவியும் பணமும் தான் ஒரு மனிதனை மற்றவர்களிடமிருந்து விலக்கி வைக்கிறதே!!!….இதில் ஏதாவது ஒன்றோ, அல்லது இரண்டுமே குறைந்தால் மீண்டும் பழைய படி நட்பு உறவு வட்டங்களில் சுற்ற தொடங்குகிறார்களே….

மூவரும் இதில் அனுபவப் பட்டவர்கள் ஆனதால் இப்போது மோகனை நினைத்து பேசிக் கொண்டிருக்கின்றனர்…

” என்ன ஆச்சு….??

மாலை நூலகக் குறிப்பு வேலை முடிஞ்சு வந்த மோகன் இவர்களின் முக குறிப்பறிந்து கேட்கிறான்..

”  வீணா வின் அப்பா கலைக் கல்லூரி முதல்வர் ஆகிட்டாராம்…அப்பாவை பார்க்க மறுத்து விட்டாராம்.. ” ருக்கு சொல்ல,

” அப்பா…நீங்க நடந்தது என்ன என ஒண்ணு விடாம சொல்லுங்க..”

கோவிந்தன் முழுக்க சொல்ல….

”  நீங்க சொல்வது போல அந்தஸ்து பிரச்சனை இருக்கலாம்…ஆனால் அங்கே அவரை பார்க்க போனது எல்லோரும் உங்க மாதிரி , அல்லது உங்களையும் விட குறைவான அந்தஸ்து உள்ளவர்கள் தானே…

நீங்களாக ஏதாவது கற்பனை செய்து கொண்டு கவலை படாதீங்க…”

“இல்லைடா மோகன் நம்ம அதிர்ஷ்டம் தான் தெரிஞ்சதாச்சே….

அதனால் தான் பயப்படுகிறேன்..”




“நீ என்று இல்லைப்பா…

நிறைய பேர் …ஒன்றுமில்லாத விஷயங்களுக்கு காரண காரியங்கள் கற்பித்து கவலைப் படறாங்க…”

“காரணம் தெரிந்தால் நடவடிக்கை எடுக்கலாம்…காரணம் அறியாமல் நாமும் குழம்பி மற்றவர்களையும் குழப்ப வேண்டாமேப்பா…”

“நடப்பது நடந்தே தீரும்…

நேர்மறையான எண்ணங்களை வளர்ப்போமேப்பா…இனிமேலாவது….”

“அவருக்கும் ஏதாவது வேலை இருக்கலாமே….நாளை பார்க்க முயற்சி செய்யுங்க..அப்புறம் பார்க்கலாம்…”

”  இல்லைடா….நேத்து முரளியின் பேச்சுக்கு பிறகு அவங்க கிளம்பி போனப்புறம் ஒண்ணும் பேசலையே…அது தான் கொஞ்சம் கவலையா இருக்கு எனக்கும்…” என ருக்கு சொல்லி கொண்டிருக்கும் போதே ,

வாசலில் காரிலிருந்து இறங்கி ஓடி வருகிறாள் வீணா..

” பாட்டி ….அப்பா பிரின்ஸிபால் ஆகிட்டாரு….”  சந்தோஷத்தில் பாட்டியை கட்டிக் கொண்டாள்.

பின்னாலேயே விஜியை மெதுவாக கை பிடித்து படியேற்றி ரகோத்தமன் உள்ளே வருகிறார்.

”    வாழ்த்துக்கள் சார்….நான் வந்தேன் உங்களை பார்க்க…ஆனால் பார்க்க முடியலை…” என்றார் கோவிந்தன்.

“தெரியும்…மாமி ஒரு தட்டு கொண்டு வாங்கோ “

தட்டில் பூச்சரம், பழங்கள் வைத்து இவர்களிடம் கொடுத்து ,

மாமி, மாமா பாட்டி…நில்லுங்கோ …

சேவிக்கறோம்..” என்றார் கோவிந்தன்.

மோகன் அப்பாவையும் அம்மாவையும் பார்க்க ,

ருக்கு ….” பார்த்தீங்களா….மோகன் சரியாதான் சொல்லிருக்கான்…”

அதுக்குள்ள நீங்க எங்களை குழப்பிட்டீங்களே….ருக்கு கோவிந்தன் மேல் பழி போட…”இப்போ எதுக்கு தேவையில்லா பேச்சு…”

என தனம் அடக்க…

”  கோவிந்தன் மாமா…மத்தவங்களை மாதிரி உங்களை என் அறையில் பார்ப்பது மரியாதை இல்லை…. இந்த விஷயத்தில்..”

திருக்கோவிலூர் வந்ததிலிருந்து முழுக்க உதவியது தனம் மாமி தான்…”

இங்கே வந்து இறங்கிய போது சின்ன வீடு என்றாலும் ஒரு வாரம் கூட்டு குடும்பம் மாதிரி இருந்தோம்.

விஜிக்கு போனிலேயே எல்லாவற்றிற்கும் உதவி செய்தாங்க ருக்கு மாமி..

இவங்க ரெண்டு பேர் ராசியால் தான் வந்ததிலேருந்தே ரெண்டே வருஷத்தில் இப்படி ஒரு முன்னேற்றம்.

“அதுவும் இல்லாம மோகன் என்ற் ஒரு நல்ல மாணவனைச் சேர்த்து கல்லூரி பிரபலமாக உதவியது நான் தான் என சேர்மன் மேல எனக்கு தனி மரியாதை…”

” அங்க சுத்தி…. இங்க சுத்தி…. உங்க மோகன் பேச்சு எடுப்பியே…”

வீணாவின் குரலில் சந்தோஷம் தெரிந்தது..

” ஏன் உன் மோகன் இல்லையா…???”

இது ரகோத்தமன்…

“அதானே…”என்று சேர்ந்து கொண்டாள் விஜி…”

“போப்பா….என்னை கிண்டல் பண்றதே உன் வேலை ஆயிடுத்து இப்போலாம்….”

அப்பா மடியில் போய் செல்லமாக உட்காருகிறாள்…

இவர்களின் அனைவரின் பேச்சிலும் முகத்திலும் தெரிந்த சந்தோஷம் இப்போ கோவிந்தன் குடும்பத்துக்கும் தொற்றிக் கொள்ள,

“என்னடி வீணா….மோகன் பேச்சு எடுத்த உடனே அப்பா மடியிலே ஏறி உக்காந்துக்கறே..”

“அதுக்கெல்லாம் இன்னும் நிறைய நேரம் இருக்கு.

“நாங்க கூறை புடவை லாம் வாங்கணுமே…’

என்று கிண்டலில் தனம் பாட்டி சேர்ந்து கொள்கிறாள்…”




“விட்டா .. அவ இன்னிக்கே ரெடி…..நாங்களும் தான்…”

ரகோத்தமன் நேரடியாக அறிவித்து விட்டு

“ஆனா மோகன் , தன் இலக்கை அடையட்டும்.

படித்து வேலைக்கு சேரட்டும்..அது தான் அவன் விருப்பமாக இருக்கும்..உங்களுக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லையே…” என்றார் ரகோத்தமன்…

“சார்…இதை விட சந்தோஷம் எங்க குடும்பத்துக்கு என்ன இருக்கும்..நீங்க எல்லாம் தெரிஞ்சவர்…நீங்க சொன்னா சரிதான்…”என்றார் கோவிந்தன்.

“மாமா….நீங்க கல்லூரி தவிர மத்த வேளைல என்னை ரகு, ரகோ என்றே சொல்லுங்கோ….”

“இந்த சார்….. நம்மை தள்ளி வைக்கிறது…”

“ரகோ இனி உங்க சகோ மாதிரி தான்…”

” அங்கிள்…சகோ…. நு சொல்லி உறவு முறைய மாத்தி குழப்பிடாதீங்க…”

அப்புறம் வீணாக்கா பாவம்” என்று

முரளி சேர்ந்து கொள்ள,

” அப்போ நீ மட்டும் ஏண்டா என்னை அக்கானு கூப்பிடுறே..”

“இப்போ அப்படித் தான்…கல்யாணத்துக்கு அப்புறம் மாத்திக்கறேன்…”

எல்லோரும் கலகலப்பாக பேசிக் கொண்டிருக்க மோகன் மட்டும் நிதானமாக,

” அங்கிள் நீங்க சொல்வது…., என் இலக்கை புரிந்திருப்பது சரிதான்..

வீணாவுக்கும் புரியும்….”

“காத்திருப்போம் இருவரும்…காலம் நல்லதே செய்யும் நமக்கு…” என்றான்..

சிறிது நேரம் கழித்து வீணா குடும்பம் கிளம்பிச் செல்ல

” கோவிந்தன்…எப்பேர்பட்ட நல்ல மனுஷன்…மோகன் நீ அதிர்ஷ்ட சாலி டா…” “உன்னால் எல்லா நல்லதும் நடக்கும் நம்ம குடும்பத்துக்கு…”என்றார் கோவிந்தனும்.

” அண்ணாவை இந்த வீட்டில் புரிந்து கொண்டது நான் மட்டும் தான்..அதனால் தான் அவன் என்ன சொன்னாலும் நான் தலையாட்டுவேன்…” என்றான் முரளி..

காரில் வீடு வரும் வழியில்,

“வீணா…சந்தோஷம் தானே உனக்கு…”

“அப்போதும் மோகன் மட்டும் முகத்தில் சந்தோஷம் இருந்தாலும் வார்த்தைகளை அளந்து தெளிவாக பேசுகிறான்….”

“சந்தோஷம் மட்டுமல்ல ,இக்கட்டான சூழலிலும் அவன் விஷயங்களை மூளயிலிருந்து யோசிக்கிறான்…”

“மனத்தின் உணர்ச்சிகளை ஒதுக்கி விட்டு பேசுகிறான் ..”

“அதனால் தான் அவனை என் மாப்பிள்ளை என்றேன்..” என்றார் ரகோ..




நேத்து நீ ‘மோகா’  வை மாப்பிள்ளை நு சொன்ன ராசி தான் உனக்கு பிரின்ஸிபால் போஸ்ட் கிடைச்சது..”

“இனிமே தினம் ஒரு வாட்டி சொல்லு”

என சிரித்து விட்டு,

“ஆனா மோகனும் கொஞ்சம் “மொக்க பார்ட்டி” தான் உன்னைப் போலவே…” என சொல்லி சிரிக்கிறாள் வீணா…

காலங்கள் உருண்டோட,

மோகன் இறுதி வருடம், வீணாவும் இறுதி வருடம்,

முரளி இப்போது அதே கல்லூரியில் ஆங்கில இலக்கியம் சேர்ந்திருக்கிறான்…

அத்துடன் வீணாவும் முரளியும் , வீணையிலும், புல்லாங்குழலிலும் முறையே கச்சேரி செய்யும் அளவுக்கு தேர்ச்சி ஆகிறார்கள்.

மோகன் ஆராய்ச்சிக் கட்டுரை தொகுப்பு வேலைகள் மூலம் அதிக ஆர்வம் மேற் கொண்டு விடுமுறை நாட்களிலும் வேலை செய்கிறான்.

கேம்பஸ் இண்டெர்வியூவில் மூன்று கம்பெனிகளில் நடந்ததில் ஒன்றிலும் தேர்வாகவில்லை மோகன்.

கோவிந்தன் குடும்பத்தில் மீண்டும் அனைவர் முகத்திலும் கவலை…




What’s your Reaction?
+1
5
+1
9
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!