Serial Stories மல்லிகைப் பந்தல்

மல்லிகைப் பந்தல்-16

(16)

சென்னைக்கு வந்த உமாபதிக்கு எங்கே போவது என்று தெரியவில்லை. இரண்டு மூன்று நாட்கள் ப்ளாட்பாரத்தில் தூங்கினான். கையிலிருந்த காசை வைத்துக் கொண்டு சாப்பிட்டான். கையிலிருந்த பணம் தீர்ந்துவிட்டால் என்ன செய்வது என்று புரியவில்லை. ஒரு ஹோட்டலில் வேலைக் கேட்டான். வேலைத் தேடி சென்னை வந்ததாகக் கூறினான். வசதியாக வாழ்ந்த பிள்ளை அவன். தான் சம்பாதித்துத்தான் குடும்பத்ததைக் காப்பாற்ற வேண்டும் என பொய் சொன்னான். 

ஆயிரம் பேருக்கு அன்னதானம் போடும் குடும்பத்தை சேர்ந்தவன் அங்கே எச்சில் தட்டுக் கழுவினான். அங்கேயே சாப்பிட்டு அங்கேயே தங்கினான். ஏனோ… இப்படி குடும்பத்தை விட்டு வந்தது கூட ஒரு நிம்மதியாக இருந்தது. இனி தன் வாழ்க்கை எப்படி பயணிக்கப் போகிறது என்ற எந்த யோசனையும் இல்லாமல் வேலைப் பார்த்து வந்தான். அவ்வப்போது அம்மாவையும் அப்பாவையும் எண்ணி அழுவான்.

எல்லாம் ஒரு வாரம்தான். அந்த ஹோட்டலுக்கு போலிஸ் வந்தது. அவனைப்பற்றி விசாரித்தது. கையோடு அழைத்துக் கொண்டு சென்றது. 

“ஐய்யோ… நான் எந்த தப்பும் செய்யலை…செய்யலை… “ அவன் கத்தகத்த அவனை ஜீப்பில் ஏற்றியது. ஜீப்பில் அப்பா வீரமணி இருந்தார்.

“பாவிப்பயலே…உனக்கு என்னடா குறை வச்சேன்? வீட்டை விட்டு ஏன்டா ஓடிவந்தே?” கட்டியணைத்துக் கொண்டு கதறினார். 

வீட்டிற்கு அழைத்து வரப்பட்டான்.

வரும் வழியில் “ஏன்டா… வீட்டை விட்டுப் போனே?” என்று மறுபடி மறுபடி அவர் கேட்ட கேள்விக்கு அவனுக்கு பதில் சொல்லும் தைரியம் இல்லை. அம்மா எந்த விசயத்தையும் அவரிடம் சொல்லவில்லை என்பது மட்டும் தெரிந்தது. பொய்யாய் ஏதேதோ காரணங்களை சொன்னான். 

“பரிட்சையில மார்க் ரொம்ப கம்மியா வந்தது. அதான்…நீங்க அடிப்பிங்கன்னு…” என்று சொன்னான்.

“ஒரு பக்கம் உங்கம்மா விசத்தைக் குடிச்சுட்டு ஆஸ்பத்திரியில கிடக்கா. நீ ஒருபக்கம் ஊரைவிட்டு ஓடிட்டே. என் நிலமையை யாராச்சும் நினைச்சுப் பார்த்திங்களாடா?”

நொந்துக் கொண்டார்.

‘அம்மா எப்படிப்பா இருக்குது?’ என்று அவன் கேட்ட கேள்விக்கு அவர் எதுவும் பதில் சொல்லவில்லை. “விட்டுக்கு வந்து பாரு உனக்கேத் தெரியும்.” 

வீட்டுக்கு வந்துப் பார்த்தவனுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. உள்ளே நுழையும்போதே மாடியறையிலிருந்து பெரும் கூச்சல் கேட்டது. அம்மாவின் குரல். 

‘அப்பா… அம்மாவுக்கு என்னாச்சு? ஏன் அம்மா இப்படிக் கத்துது?”

“அந்தக் கொடுமையை நான் என்னன்னு சொல்ல? உங்கம்மாவுக்கு பேய் பிடிச்சுட்டு. அதனாலதான் அவ வெசம் குடிச்சிருக்கா.”

தூக்கிவாரிப் போட அதிர்ந்தான் உமாபதி. “அம்மாவுக்கு பேய் பிடிச்சிட்டா?”

“அடப்பாவி பயலே…ஊரு ரெண்டுபட்டு கிடக்கும்போது நீயும் ஏன்டா எங்களை இழுத்து சந்தியில வச்சுட்டு ஓடிப்போன பாவிப் பயலே. உன் ஆத்தாவுக்கு பேய் புடிச்சுப் போயி அதனால அவ வெசத்தைக் குடிச்சு சாகப் போயிருக்கா. காப்பாத்தி வச்சும் கட்டுக்கடங்காம கத்திக்கிட்டுக்கிடக்கறா. அந்தக் கொடுமையைப் பாருடா…” இப்படித்தான் சுந்தரவள்ளி வீட்டிற்கு வந்தவனுக்கு வரவேற்பு அளித்தாள். 




“அம்மா… அம்மா…” என அம்மாவைப் பார்க்க மாடிப்படியில் ஏறப் போனவனை இழுத்துப் பிடித்து நிறுத்தினாள். 

“இந்தாடா…புடிச்ச பேய் அவளோடப் போகட்டும். நீ போனா உன் மேல பாய்ஞ்சிடப் போகுது. வெள்ளிக் கிழமை வெள்ளிக் கிழமை சாமியாடி வந்து பேய் ஓட்டறார். போக மாட்டேங்குது. யாரும் கிட்டப் போகக் கூடாதுன்னு சொல்லியிருக்கார் மீறி போனா போறவங்க மேல பேய் ஏறிடும்னு சொல்லியிருக்கார்”

சுந்தரவள்ளி சொல்லிக் கொண்டிருக்கும் போதே மாடியிலிருந்து அம்மாவின் கூக்குரல் வீட்டையே கிடுகிடுக்க வைத்தது.

வீரமணி கண் கலங்க தலைக் குனிந்து அமர்ந்திருந்தார். 

உமாபதி உறைந்த நிலைக்குப் போய்விட்டான். ‘அம்மாவுக்குப் பேய் பிடித்திருக்கிறதா?’  அவனால் நம்ப முடியவில்லை. 

அம்மாவைப் பார்க்க யாரையும் அனுமதிக்கவில்லை. மூன்று வேளையும் காவிக் கட்டிய பெண்மணி ஒருத்தி வந்தாள். அவள்தான் சாமியாடியின் சி~;யையாம். அவள்தான் சாப்பாட்டு தட்டை மேலே எடுத்து சென்று லலிதாவிற்கு கொடுத்து சாப்பிட வைத்துவிட்டு வருவாள். பேய் வேறு யாருடைய பேச்சையும் கேட்காதாம்.

உமாபதிக்கு இந்த பேய் கதையை நம்ப முடியவில்லை. அம்மாவிற்கு என்னைப் பற்றிய ரகசியம் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. அதைத்தாங்க முடியாமல்தான் அன்றைக்கு அரளிவிதையை அரைத்துக் குடித்திருக்கிறாள். அவள் கண் விழித்தபோது நான் வீட்டைவிட்டு ஓடியிருக்கிறேன். இரண்டாவது அதிர்ச்சி. அதனால் மனநிலை பாதிக்கப் பட்டிருக்கிறாள். அதைப் போய் பேய் பிசாசு என கதைக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

‘அம்மாவுக்கு நான் திரும்பி வந்துவிட்டது தெரிந்தாலே குணமாகிவிடுவாள். என் முகத்தைப் பார்த்தாலே…தெளிந்துவிடுவாள். ஆனால்…யாரும் அம்மாவிடம் என்னை அனுமதிக்க மறுக்கிறார்கள்.’

வெள்ளிக்கிழமை சாமியாடி தன் புடை சூழ வந்தார். தன் தூதர்களுடன் மாடியறைக்கு சென்றார். அங்கே யாரையும் அனுமதிக்கவில்லை. மாடியறையிலிருந்து புகை மூட்டமும், மந்திரங்கள் ஒலிக்கும் கணீரென்ற சாமியாடியின் குரலும் வெளியே வந்தது. அந்த புகை மூட்டமும், மந்திர ஒலியும் வீட்டை ஒரு வித அமானு~;யத்தில் கொண்டுவந்திருந்தது. 

உடுக்கை ஒலி வேறு வீட்டை ரெண்டாக்கியது. மாடிக்கு செல்ல யாருக்கும் அனுமதி வழங்கவில்லை. உமாபதிக்கு அம்மாவைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையும், பாசமும் உண்டானது. அவனையும் அனுமதிக்கவில்லை. 

பூஜைகளை முடித்துக்கொண்டு சாமியாடி தன் பரிவாரங்களுடன் கீழே வந்தார். கட்டுப் பணத்தை கையில் வாங்கிக் கொண்டு இன்னும் இரண்டு வெள்ளிக் கிழமைக்கு பேயோட்டி பூஜை செய்தால்..ஆடு, கோழி என பலிகொடுத்தால் பேய் போய்விடும் என்று கூறிவிட்டுப் போய்விட்டார்.

உமாபதிக்கு அம்மாவை ஒரு நல்ல மனநல மருத்துவரிடம் காட்டினால் நன்றாகயிருக்கும் என்றுத் தோன்றியது. அம்மாவின் இந்த நிலைக்கு தான்தான் காரணம் என அவனுக்கு தௌ;ளத் தெளிவாகத் தெரிந்ததது. தான் ஆண் அல்ல என்ற உண்மை தந்த அதிர்ச்சியால்தான் அம்மா மனநிலைப் பாதிக்கப்பட்டிருக்கிறாள் என்று நினைத்தான். அப்பாவிடம் எல்லாவற்றையும் சொல்லிவிடலாமா என நினைத்தான். 

என்றைக்கிருந்தாலும் இந்த உண்மை தெரியத்தானே போகிறது. அம்மாவிடம் சொன்னதைப் போல் அப்பாவிடமும் சொல்லிவிடலாமா?

அம்மாவுக்குத் தெரிந்ததும் அம்மா தற்கொலை முயற்சி செய்தாள். அதனால் மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கிறாள். அப்பாவுக்கு உண்மைத் தெரிந்தால் அவருடைய நிலை எப்படியிருக்குமோ? நினைக்கவே பயமாக இருந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் அவன் தவித்துக்கொண்டிருந்தான்.

பூஜைக்கு வேண்டிய ஏற்பாடுகளை முன் கூட்டியே செய்ய சாமியாடியின் சி~;யைகள் வந்தனர். அந்த அறையை சுத்தமாக ஒழித்து துடைத்து வைக்க வேண்டும் என சாமியாடி ஆணையிட்டிருப்பதாகக் கூறினர்.  பலியிட ஐந்து கோழிகளை பிடித்து வைக்கும்படி சுந்தரவள்ளியிடம் சொல்லிவிட்டு மாடிக்கு சென்றனர். அங்கிருந்த அலமாரிகளில் இருந்த பழைய துணி புத்தகங்கள் என எல்லாவற்றையையும் ஒழித்துக் கொண்டு வந்து கூடத்தில் போட்டனர்.




அவற்றையெல்லாம் எடுத்து வைத்த சுந்தரவள்ளி பேரனை அழைத்தாள். 

“இந்தா… இதெல்லாம் அந்த அறையில இருந்த உன்னோட பழைய சட்டைங்க. வேணுங்கறதை எடுத்துக்கிட்டு வேண்டாத பழைய சட்டைகளை போடு. யாருக்காவது கொடுக்கலாம்”

உமாபதி தன்னுடைய சட்டைகளை வாரிக் கொண்டு தன் அறைக்கு வந்தான். எல்லாம் அவன் வேண்டாமென்று தூக்கிப் போட்ட சட்டைகள்தான். அதில் ஒரு சட்டை மட்டும் அவனுடைய பள்ளி சீருடை சட்டையாக இருக்க அதை மட்டும் தனியே எடுத்து வைத்தவன் எதுவோ உறுத்த அதைப் பிரித்தான்.

அதிர்ந்தான்.




What’s your Reaction?
+1
10
+1
8
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!