Serial Stories தொடுவதென்ன தென்றலோ

தொடுவதென்ன தென்றலோ -3

3

செம்பருத்தி படிப்பில்‌ கெட்டிக்காரி ஃபர்ஸ்ட்‌ ரேங்க்‌ எடுக்காவிட்டாலும் இரண்டாவது மூன்றாவது இடத்தில்‌ தன்னை தக்கவைத்து கொள்வாள்‌. பத்தாம்‌ வகுப்பு, பனிரெண்டாம்‌ வகுப்புகளில்‌ நல்ல மதிப்பெண்கள்‌ பெற்று பரிசோடு வீடு திரும்பியவள்‌. கல்லூரியிலும்‌ அப்படித்தான்‌. இதுவரை நடந்த செமஸ்டர்களில்‌ தொண்ணூறு சதஷீதத்துக்கு குறையாமல்‌ மதிப்பெண் எடுத்திருந்தாள்‌.

அன்று கல்லூரியில்‌ அவளுக்கு கிளாஸ்‌ டெஸ்ட்‌ இருந்தது. வகுப்பில் கவனித்தது மட்டும்தான்‌. வீட்டில்‌ ஒன்றுமே படிக்கவில்லை. முதல்நாள் முழுவதும்‌ புத்தகத்தைப்‌ பிரித்து வைத்திருந்தாளே தவிர ஒரு எழுத்துக்கூட

மனதில்‌ பதியவில்லை. காரணம்‌ பெண்பார்க்கும்‌ படலம்‌ பற்றிய பேச்சு, அத்தையின்‌ வரவு, எல்லாவற்றையும்‌ தாண்டி அவளின்‌ ரகசிய காதலுக்கு இடறு வந்துவிடுமோ என்ற பயம்‌. இந்த லட்சணத்தில்‌ படிப்பில்‌ எப்படி கவனம்‌ செல்லும்‌?. அது மட்டுமல்லாமல்‌ அத்தையின்‌ களேபாரம்‌ வேறு கூட சேர்ந்து கொண்டது. ஒரு வழியாக அத்தையை அவள்‌ போக்கிலேயே பேசி தனக்கு இப்போ கல்யாணம்‌ பண்ணிக்கிற ஐடியாவே இல்லை. அவங்க வந்து பார்த்துட்டு போகணும்னா போகட்டும்‌ என்னோட விருப்பத்தை மீறி அப்பா எந்த முடிவையும்‌ எடுக்க மாட்டார்‌. அதனால இது கன்‌ஃபார்மா நடக்கும்னு சொல்ல முடியாது அத்தை. என்று சொன்ன பிறகுதான்‌ மாலதியின்‌ முகம் தெளிந்தது.

“அதானே பார்த்தேன்‌ நாலும்‌ தெரிஞ்சவ நீ…! உனக்கா நல்லது கெட்டது என்னன்னு புரியாது?. உங்கப்பா அம்மாதான்‌ அவசரப்படறாங்க!? நீ நிதானமா தான்‌ இருக்கே! இப்பதான்‌ எனக்கு நிம்மதியா இருக்கு. ஏன்னா…நீ நல்லா படிச்சு பெரிய வேலைக்கு போன பிறகு கல்யாணம்‌ பண்ணிக்கணும்‌ என்பதுதான்‌ என்னுடைய ஆசை. சரி நீ இதே நிலையிலேயே. இரு மனசு மாறி அவங்க சொல்றாங்கன்னு சம்மதம்‌ சொல்லிடாதே? அப்புறம்‌ பிற்காலத்துல அவசரப்பட்டு முடிவெடுத்து விட்டோமேன்னு கவலைப்படும்‌ நிலை உருவாகும்‌ அதுக்காகத்தான்‌ சொல்றேன்‌…” என்று செம்பருத்தியிடம்‌ ஒரு முறைக்கு இரு முறை தூபம்‌ போட்டுவிட்டு மாலதி விட்டிற்கு கிளம்பும்போது இரவு ஒன்பதாகி விட்டது. அதன்‌ பிறகு சாப்பிட்டுப்‌ படுத்த செம்பருத்தி உடனே உறங்கியும்‌ விட்டாள்‌. விடிந்த பிறகு கல்லூரிக்கு கிளம்பவே நேரம்‌ சரியாக இருந்தது.

“அம்மா நான்‌ கிளம்புறேன்மா…”

“என்னம்மா இவ்வளவு சீக்கிரம்‌ கிளம்பிட்டே? சாப்பாடு கூட இன்ன

கட்டலையே..?”

“பரவாயில்லம்மா நான்‌ கேண்டின்ல சாப்பிட்டுக்குறேன்‌. இன்னைக்கு ஒரு டெஸ்ட்‌ இருக்கு, சரியா படிக்கல கிளாசுக்கு போயிட்டு ஃபிரண்டுங்க கூட டிஸ்கஸ்‌ பண்ணி படிக்கணும்‌…”

“சரி சரி செலவுக்கு பணம்‌ வச்சிருக்கியா?”

“இருக்கும்மா…அப்பாதான்‌ என்னோட அக்கவுண்ட்ல பணம்‌ போட்டு வச்சிருக்காரே! அப்பா கிட்ட சொல்லிடு…வரேம்மா”

“பத்திரமா போயிட்டு வா…” வாசல்‌ வரை வந்து மகளை அனுப்பிவிட்டு உள்ளே வந்தாள்‌ தேவகி.

தெருமுனை தாண்டியவுடன்‌ இவளுக்காக தோழி சுபா வெயிட்‌ பண்ணிக் கொண்டிருந்தாள்‌. சுபா எல்கேஜியில இருந்து இவளுடன்‌ படிப்பவள்‌. அவ்வப்போது இருவரும்‌ சண்டைபோட்டுக்கொண்டு மாத கணக்கில்‌ பேசாமல்‌ இருந்து பின்பு பேசிகொள்வார்கள்‌.

“என்னடி செம்பருத்தி அரை மணி நேரம்‌ முன்னாடியே போகணும்னு மெசேஜ்‌ போட்டு இருக்க! என்ன விஷயம்‌?”

“அதுவா இன்னைக்கு டெஸ்டுக்கு ஒன்னும்‌ படிக்கல கிளாஸ்க்கு போயிட்டு படிக்கலாம்னு தான்‌…”




“நீதான்‌ நடத்தின உடனே படிச்சிடுவீயே? என்ன ஆச்சு விட்டுல ஏதாவது விசேஷமா?”

“விசேஷமெல்லாம்‌ ஒன்னுமில்ல எங்க அத்த வந்திருந்தாங்க பேசிக்கிட்டு இருந்ததுல சரியா படிக்கமுடியல. சரி சரி சீக்கிரம்‌ வா…படிக்காம எப்படி எழுத போறேன்னு தெரியல?.” புலம்பிக்கொண்டே ஐந்து நிமிடம்‌ நடந்து அந்த பஸ்‌ ஸ்டாண்ட்‌ அடைந்தார்கள்‌. பஸ்ல அதிக கூட்டமில்லாததால்‌ உட்காருவதற்கு இடம்‌ கிடைத்தது. அருகருகே அமர்ந்து கொண்ட இருவரும்‌ நோட்டை பிரித்து வைத்து படிக்கத்‌ தொடங்கினார்கள்‌.

சற்று தூரம்‌ சென்றபோது யாரோ சிலர்‌ கைகாட்டி பஸ்ஸை நிறுத்தினார்கள்‌. முன்னாடி ஒரு பெரிய ஆக்சிடென்ட்‌ போலீஸ்‌ என்கொயரி பண்ணிக்கிட்டு இருக்கு கொஞ்சம்‌ பஸ்ஸை ஓரங்கட்டுங்க..” என்றார்‌ இன்னொரு பஸ்‌ டிரைவர்‌.

செம்பருத்திக்கு தூக்கிவாரிபோட்டது இதே சம்பவம்தான்‌ அன்றும்‌ நடந்தது.

அப்போதான்‌ அவளுடைய ரகசிய காதலனை முதல்‌ முதலில்‌ சந்தித்தாள்‌.

நான்கு வருடங்களுக்கு முன்பு செம்பருத்தி பிளஸ்டூ படித்துக்கொண்டிருந்த

சமயமது! முழாண்டு தேர்வு நடந்து கொண்டிருந்தது. இதேமாதிதான் அன்றும்‌ தோழியர்‌ இருவரும்‌ பஸ்ஸில்‌ பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார்கள்‌. திடீர்‌ பிரேக்‌ போட்டு பஸ்ஸை நிறுத்தினார்‌ டிரைவர்‌.

“என்னடி…பஸ்‌ நிக்குது? என்ன ஆச்சுன்னு தெரியலையே?” என்று இவர்கள் சுற்றிலும்‌ பார்வையை படரவிட்ட போது டிரைவர்‌ கண்டக்டர்‌ உட்பட அனைவரும்‌ கீழே இருந்தார்கள்‌.

“ஏதோ பிரச்சனைடீ…வரிசையா பஸ்‌ நிக்குது.” என்று இருவரும்‌ பேசிக் கொண்டே நோட்டை மூடிவிட்டு கீழே இறங்கினார்கள்‌.

“சார்‌ என்ன சார்‌ ஆச்சு இவ்ளோ பஸ்‌ நிக்குது.*

“முன்னாடி ஏதோ ஆக்சிடென்ட்‌ நடந்திருக்கு போலீஸ்‌ வர வரைக்கும் நிறுத்தி வச்சிருக்கானுங்க…”

“அய்யய்யோ எப்படி ஸ்கூல்‌ போறது? இன்னைக்கு பப்ளிக்‌ எக்ஸ்சாமாச்சே? என்னடி பண்றது ஒன்னும்‌ புரியலையே? என்று பதறியப்படி ஒருவர் முகத்தை ஒருவர்‌ பார்த்துக்கொண்டார்கள்‌.

“கொஞ்ச தூரம்‌ நடந்து போய்‌ ஆட்டோ புடிச்சுக்கோங்கம்மா இப்போ இது கிளியராகாது.” என்றார்‌ பஸ்‌ டிரைவர்‌.

“ஆமா…வாடி போகலாம்‌…” என்று இருவரும்‌ பரபரப்பாக அங்கிருந்து கிளம்பியப் போது சுமார்‌ பத்து வாகனத்தை தாண்டிய பிறகு ரோட்டில்‌ அந்த பெண்‌ தலை குப்புற விழுந்து கிடந்தாள்‌. தலையில்‌ அடிபட்டிருக்க வேண்டும்‌ கவிழ்ந்திருந்த தலைப்பகுதியில்‌ இருந்து ரெத்தம்‌ கசிந்துகொண்டிருக்க, எப்போதும்போல ஒரு கூட்டம்‌ வேடிக்கை பார்த்துக்‌ கொண்டிருந்தது.

“ஹலோ கொஞ்சம்‌ வழி விடுங்க…எல்லாரும்‌ இப்படி வேடிக்கை பார்த்துகிட்டு இருந்தா என்னங்க அர்த்தம்‌? ஆம்புலன்ஸ்க்கு கால்‌ பண்ணியாச்சா?” ஒரு இளைஞனின்‌ குரல்‌ அது.

“கால்‌ பண்ணியாச்சு சார்‌ இன்னும்‌ ஆம்புலன்ஸ்‌ வரல…”

“ஒரு ஆட்டோ புடிங்க ஹாஸ்பிட்டல்‌ கூட்டிட்டு போகலாம்‌. ஹலோ…ஆட்டோ கொஞ்சம்‌ இப்படி வாங்க…” அங்கிருந்தவர்களில்‌ பார்வை ஆட்டோவை நோக்கியது. “ஐயோ சார்‌…நான் புள்ளைக்குட்டிகாரன் போலீஸ்‌ கேஸ்‌ன்னு என்னால அலையமுடியாது  சார்‌..ஆள விடுங்க…”

“ஹலோ பணம்‌ அதிகமா தரேங்க…கொஞ்சம்‌ வந்து ஹெல்ப்‌ பண்ணுங்க…”

“சார்‌ இவ்வளவு பேசுநீங்களே உங்க வண்டில கூட்டிட்டு போகலாமே?” அருகில்‌ நின்றிருந்த நபர்‌ கேட்டார்‌.

“ஓகே நானே கூட்டிட்டு போறேன்‌…” சற்றும் யோசிக்காமல் பட்டென்று பதில் சொன்னவனை, அருகில்‌ நின்றிருந்த மற்றொருவன்‌ தடுத்தான்‌.

“டேய்‌…எதுக்குடா வம்பு ஆம்புலன்ஸ்க்கு கால்‌ பண்ணினா உடனே வரப்போகுது…”

“என்னடா சொல்ற ஆம்புலன்ஸ்‌ கால்‌ பண்ணி எப்ப வந்து எப்ப எடுத்துட்டு போறது நம்ப கார்ல கூட்டிட்டு போயிடலாம்‌…வா”

“சொன்னா கேளு…போலீஸ்‌ கேஸுன்னு நம்மால அலைய முடியாது…”

“டேய்‌…இதுவே நம்ம அக்கா தங்கச்சியா இருந்தா விட்டுட்டு போவோமா?

“நீ என்ன வேணா சொல்லு இது சரிப்பட்டு வராது…”

அவனுடைய நண்பன்‌, காரில்‌ ஏற்றிச்செல்ல சம்மதிக்காததால் இருவருக்குள்ளும்‌ வாக்குவாதம்‌ நடந்தது.

அதற்குள்‌ ஆம்புலன்ஸின்‌ சத்தம்‌ அருகில்‌ கேட்க, பாதிக்கப்பட்டவங்களுக்கு உதவனும்னு நினைக்கிற அந்த நல்ல மனுஷன்‌ யாரென்றும்‌ அவன் முகத்தை பார்த்து விடுவதென்றும்‌ கூட்டத்துக்கு பின்னால்‌ நின்ற செம்பருத்தி கால்களை உயர்த்திப்‌ பார்த்தாள்‌.

வெண்ணிற முழுக்கை சட்டை, மெருன்௧கலரில்‌ டை, சாக்லேட்‌ கலரில்‌ பேண்டும்‌ போட்டிருந்தவன்‌ அந்த இடத்திற்கு சற்றும்‌ பொருத்தமில்லாமல்‌ இருப்பதாய்‌ தோன்றியது.

‘ஆள பாக்க பெரிய இடத்துப்‌ பையன்‌ மாதிரி ஸ்மார்ட்டா இருக்கான்‌. டாக்டரா இருக்கலாம்‌ இல்ல ‘ஐஏஎஸ்‌: ஆக கூட இருக்கலாம்‌. ஆக மொத்தம் பெரிய பதவியில்‌ இருக்கிறான்‌ என்பது மட்டும்‌ அவனுடைய தோரணையிலிருந்து புரியுது. ஆனாலும்‌ ஜென்டில்மேன்தான்‌. ஒரு பிர்சனை என்றவுடன்‌ உடனே களத்துல இறங்கி உதவிசெய்ய போராடுறானே! சூப்பர்‌…! சூப்பர்‌…! உண்மையிலேயே இவன்தான்‌ ஹீரோ.” என்று மெச்சியப்படி அந்த இடத்தை கடந்து எதிர்பட்ட ஆட்டோவை நிறுத்தி ஏறிக்கொண்டார்கள்‌. போகும்‌ வழியில்‌ சுபாவிடம்‌ பேச்சு கொடுத்தாள்‌.




“ஏண்டி சுபா…அந்த ஒயிட்‌ ஷர்ட்‌ போட்டிருந்தவனைப்‌ பற்றி என்ன நினைகிறே?”

“நான்‌ ஒன்னும்‌ நினைக்கல ஆக்சிடென்ட்‌ ஆன இடத்துல ஒரு சிம்பத்தியை கிரியேட்‌ பண்றதுக்காக இப்படியெல்லாம்‌ சில பேர் பண்ணுவாங்க…ஆனா…உண்மையாகவே அவங்களுக்கு ஹெல்ப்பிங்‌ டெண்டன்ஸி இருக்காது. எல்லாம்‌ ஒரு சுய விளம்பரம்‌ தான்‌. சரி  சொன்னவரு அவரோட கார்லேயே அந்த பொண்ணை ஏத்திட்டு போக வேண்டியதுதானே? என்று எதிர்‌ கேள்வி கேட்டாள்‌ சுபா.

“அவர்தான்‌ ஏத்திட்டு போறேன்னுதான்‌ சொன்னாரே அவர்‌ ஃபிரண்டுதான்‌ தடுத்திட்டார்‌? அதுக்குள்ள ஆம்புலன்ஸ்‌ வந்துடுச்சு! அவர்‌ மேல தப்பு  இருக்கிறதா எனக்கு தோணல.”

“உனக்கு தோணாது! நீ யாரை பார்த்தாலும்‌ நம்பிடுவே…இதோ பார்‌ நமக்கு பிப்டீன்‌ மினிட்ஸ்‌ வேஸ்ட்‌ ஆனதுதான்‌ மிச்சம்‌… என்று பேசிக்‌ கொண்டே பள்ளிவளாகத்தில்‌ வந்திறங்கினார்கள்‌.

மதியம்‌ லஞ்சுக்கு பிறகு வானம்‌ இருண்டு மழை கொட்ட தொடங்கியது. அய்யய்யோ ரெயின்‌ கோட்டு கூட எடுத்துட்டூ வரலையே? என்று அங்கிருந்த முகங்கள்‌ குழப்பத்தில்‌ ஆழ்ந்தன. செம்பருத்திக்கு அந்த மழை மகிழ்ச்சியை கொடுத்தது. மழையில்‌ குதித்து ஆடி பாட வேண்டும்‌ என்று மனம்‌ துள்ளியது. காரணமே இல்லாமல்‌ அன்று காலை பார்த்தவன்‌ கண்‌ முன்னால்‌ வந்தான்‌. அந்த வெண்ணிற முழுக்கை சட்டை சொட்டசொட்ட நனைந்து கொண்டூ நிற்பதாய்‌ தோன்றியது. வெள்ளை சட்டைக்காரன்‌ ஸ்மார்ட்டா இருக்கானே! என்று இவளின்‌ மனம்‌ அவனையே நினைத்தது. “என்ன ஆச்சு எம்மனசு ஏன்‌ இப்படி தாவித்தாவி போகுது? முதல்ல மனச கண்ட்ரோல்‌ பண்ணனும்‌ யாரு எவருன்னு தெரியாத ஒருத்தன்‌ மேல எதுக்கு இப்படி ஒரு ஈர்ப்பு தோன்றுகிறது.? நடக்காத விஷயத்தை நினைக்கக கூடாது. தகுதிக்கு மீறி ஆசைப்படவும்‌ கூடாது என்று மனதை கடிவாளமிட்டு அடக்கினாள்‌.

மழை விடாமல்‌ பொழிந்து கொண்டிருக்க, பள்ளி வளாகம்‌ முழுவதும் தண்ணீர்‌ நின்றது. இந்த வெயில்ல கூட வாழ்ந்திடலாம்‌. மழைன்னா இந்த சென்னை தாங்கவே தாங்காது. என்று புலம்பிக்‌ கொண்டே வாசலை அடைத்துக்‌ கொண்டு நின்றார்கள்‌ மாணவிகள்‌. அதிலும்‌ ஒருவர்‌ இருவர்‌ இறங்கி நடக்க முயன்ற போது “நீ பாட்டுக்கு இறங்கி போற கொஞ்சம்‌ வெயிட்‌ பண்ணி மழை விட்ட உடனே போகக்கூடாதா? என்று வகுப்பாசியர்‌ கடிந்துகொண்டார்‌.

சுமார்‌ அரை மணி நேரத்திற்கு பிறகு பெருமழை குறைந்து தூறல்‌ தூரத் தொடங்கியது. ஒவ்வொருத்தராக கிளம்ப இவர்கள்‌ இருவரும்‌ பஸ் ஸ்டாண்டை அடைந்தார்கள்‌ செம்பருத்தி அப்பாவிடமிருந்து கால்‌ வந்தது

“அப்பா சொல்லுங்கப்பா…”

“செம்பருத்தி…மழையில நனையாத…எங்க இருந்தாலும்‌ ஒரு ஆட்டோ புடிச்சு விட்டுக்கு வந்துடு…” என்று அக்கறையோடூ பேசிய அப்பாவை பெருமையோடு எண்ணினாள்‌. இதுவரை கோபப்பட்டு பேசாதவர்‌ அன்பு பாசம்‌ தவிர வேறு எதுவும்‌ தெரியாது. ஆனால்‌ அத்தை மாலதி வந்து விட்டால்‌ கொஞ்சம்‌ அதிகாரத்தை காட்டுவார்‌. தங்கை மேல்‌ பாசத்தை பொழிவார்‌. அது தெரிந்த விஷயம்‌ தான்‌ மற்றபடி மனைவி பிள்ளைகளை எந்த சூழ்நிலையிலும்‌ விட்டுக்‌ கொடுக்காமல்‌ பேசுவார்‌.

அப்பா சொன்னது போல ஆட்டோவை நிறுத்தி ஏறப்போனபோது இவர்களோடு அந்த வழியாக செல்லும்‌ இன்னொரு பெண்ணும்‌ இணைந்து கொள்ள மூன்று பேரும்‌ ஆட்டோவில்‌ ஏறினார்கள்‌. பாதி தூரம்‌ போன பிறகு

ஆட்டோ வேகமெடுத்து செல்லத்‌ தொடங்கியது. தூறல்‌ பெருமழையாய் மாறியது. வைப்பர்‌ கொண்டு துடைத்தது போக மெல்லிய பனி படர்ந்திருந்தது.

“ரொம்ப மழையா இருக்கு மெதுவாவே போங்க அண்ணே…” என்று சொன்னார்கள்‌. சில நிமிடங்களுக்கு பிறகு மழை சற்று ஓய்ந்திருந்தது. அந்த  பஸ்‌ நிறுத்தத்திற்கு அருகில்‌ ஆட்டோவை நிறுத்திவிட்டு ரெயின்கோட்டோடு இறங்கிப்‌ போய்‌ முன்பக்க கண்ணாடியை துடைத்தார்‌ ஆட்டோக்காரர்‌.

பிசுபிசுத்த தண்ணீர் ஆடைகளில்‌ ஒட்டிக்கொண்டது. துப்பட்டாவை சரி செய்தபடி இடது பக்கமாய்‌ தலையை  திரும்பியவளுக்கு இன்ப அதிர்ச்சி!. காரணம்‌ சாலையோரத்தில்‌, காலையில்‌ பார்த்த அதே கார்‌ அதே வெண்ணிற முழுக்கை சட்டைக்காரன்‌ முன்புற இருக்கையில்‌ அமர்ந்திருப்பது தெரிந்தது. போனில்‌ யாருடனோ சிரித்துப்‌ பேசிக்‌ கொண்டிருந்தது கருத்தைக்‌ கவர்ந்தது. அவனின்‌ வசிகர சிரிப்பு இவளுக்குள்‌ ஏதோ செய்தது.

அன்று இரண்டாவது முறையாக செம்பருத்தியின்‌ கண்களுக்கு தென்பட்டான்‌ அந்த வெள்ளை சட்டைக்காரன்‌. அவனின்‌ வசிகர சிரிப்பில்‌ மயங்கி போனவள்‌, தோழி தன்னை கவனிக்கக்கூடும்‌ என்ற அச்சத்தில்‌ இயல்பாய்‌ இருப்பது போல்‌ காட்டிக்‌ கொண்டாள்‌.

ஹன்ரடு வாட்ஸ்‌ வாட்ஸ்‌ பல்பு போல அவனின்‌ முகம்‌ பிரகாசித்தது. அப்படி சுவாரஸ்யமாய்‌ யாரிடம்‌ பேசிக்‌ கொண்டிருக்கிறான்‌? அவன்‌ பேசியது யாரிடம்‌ ஆணா…பெண்ணா..? ஒரு வேளை அவனுடைய…? வேணாம்‌ வேணாம்‌ எதற்கு வீண்‌ கற்பனையெல்லாம்‌ பண்ணிக்கொண்டூ?. அவன்‌ எனக்கானவனாகவே இருக்கட்டும்‌. அவனுக்கு இன்னும்‌ கல்யாணம் ஆகவில்லை என்பதே நிலைக்காக இருக்கட்டும்‌. என்று நினைத்த மாத்திரம்‌

தன்னையே குறைப்பட்டுக்‌ கொண்டாள்‌. அவன்‌ யாரிடம்‌ பேசினால் நமக்கென்ன வந்தது.? நான்‌ ஏன்‌ அதையெல்லாம்‌ ஆராய்ச்சி பண்ணனும்‌? மனம்‌ என்பது ஒரு குரங்குன்னு சொல்லுவாங்க! உண்மையிலேயே என் மனமும்‌ அப்படித்தான்‌ இருக்கிறது. குரங்கைப்போல தாவிக் கொண்டிருக்கிறது. வீடு வரும்‌ வரை அந்த வெள்ளை சட்டைக்காரனைப்‌

பற்றின நினைப்பே மனதை மென்று தின்றது.

“அடியேய்‌…செம்பருத்தி என்ன காலகாத்தாலே கனவு கண்டுகிட்டு இருக்கே?

காலேஜ்‌ வரப்போவூது டீ…” அன்றைய சம்பவத்தில்‌ மூழழ்கியிருந்தவள்‌ சுபாவின்‌ குரலைகேட்டு நடப்புலகிற்கு திரும்பினாள்‌.




What’s your Reaction?
+1
21
+1
19
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!