Serial Stories பாதரஸ பற​வைகள்

பாதரஸ பற​வைகள் -21

21

காம்பெளண்ட் திருவிழாக்கோலம் பூண்டிருந்தது. ராதிகா ராகவனின் திருமண நிச்சயத்தார்த்திற்கான ஏற்பாடுகள் களை கட்டியிருக்க சிவா மொட்டை மாடியில் ஷாமியானா பந்தல் பிளாஸ்டிக் நாற்காலிகள் ஒருபக்கம் விருந்து பதார்த்தங்கள் மினுக்மினுக்கென்று வெளிச்சம் சொறியும் விளக்குகள் என மொட்டை மாடி தன்னை அலங்கரித்து கொண்டு இருக்க, பால்கனி வழியாக வழக்கம் போல் ராதிகாவின் வீட்டுப்பக்கம் பார்வையைச் செலுத்தினான் அவன் ஏண்டா பாவி இன்னமும் ஜன்னல் வழி என்ன சைட் வேண்டியிருக்கு அதான் நிச்சயம் வரைக்கும் வந்தாச்சே போதாதாக்கும். சிவாவின் கேள்விக்கு சிரித்தான் ராகவன்

 எனக்கு மட்டுமா உனக்கும் ரூட் கிளியர் பண்ணிக்கொடுத்திருக்கேனே ?!

நினைத்த அனைத்துமே இப்படி உடனடியாக நடந்துவிடும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை அன்றைக்கு கோவிலில் ராதிகாவும் ராகவனும் பேசி பின் இருவீட்டார் சம்மதத்துடன் அது நிச்சயம் வரையில் சட்டுன்னு வந்துவிட்டது. ராகவனின் தாய் தயாபரி அவர்கள் பெயரைப் போலவே குணத்திலும் தயாபரிதான். அன்றைய காலையில் அவரின் விஜயம் உண்மையில் அற்புத விடியலாகவே இருந்தது.

சில இளைப்பாறல்களுக்குப் பிறகு ராகவனுடன் பேச அவர் மொட்டைமாடிக்கு வந்திருக்க, அம்மா நீங்க பேசிகிட்டு இருங்க நான் கொஞ்ச நேரம் வெளியே போயிட்டு வந்திடறேன் எழுந்திருந்த சிவா 

 இருப்பா… நானென்ன அவன்கிட்டே ரகசியமா பேசப்போறேன் எனக்கு ராகவன்கிட்டே சில தெளிவான பதில்கள் தேவைப்படுது அதற்கு பிறகுதான் நான் மற்ற காரியங்களில் இறங்க முடியும் அவன் மட்டும் அல்ல நீயும் என் பிள்ளை மாதிரிதான் உட்காரு, அவன் விஷயத்தில் உன்னதும் அடங்கியிருக்கே ஒரு நெகிழ்வோடுதான் அமர்ந்தான் சிவா

 ராகவா உன்னோட லட்டர் படிச்சப்போ எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருந்தது. அதே நேரம் கொஞ்சம் அதிர்ச்சியாகவும் எல்லா அம்மாவும் தன் பிள்ளைக்கு ஒரு நல்ல வாழ்க்கையினைத்தான் ஏற்படுத்தித்தரணுமின்னு நினைப்பாங்க நானும் அப்படித்தான் நினைக்கிறேன். ஆனா உன்னைக் காட்டிலும் அந்த பெண் ராதிகாவுக்கு, அப்பாவிற்

 கு பிறகு நான் பட்ட கஷ்டத்தினை பார்த்து வளர்ந்தவன் நீ. அதுவே ராதிகாவிடம் உனக்கு ஒரு பிடிப்பை உண்டாக்கியிருக்கலாம். படிக்கிற இடத்திலே நீ பார்க்காத பொண்ணுங்க இல்லை அவங்களை யாரையாவது நீ காதலிக்கிறேன்னு சொல்லியிருந்தாலும் நான் மறுக்கப்போவதில்லை. ராதிகா அப்படியில்லை அவ ஏற்கனவே வாழ்க்கையிலே அடிபட்டவ, இன்னைக்கு ஒரு காரணத்திற்காக கல்யாணம் செய்திட்டு நாளைக்கு சின்னதா ஒரு மனஸ்தாபம் வரும்போது நீ இன்னொருத்தன் கூட வாழ்ந்தவன்னு குத்தி காமிக்கக் கூடாது.

அம்மா நான் அப்படிப்பட்டவன் இல்லைம்மா




 நான் இன்னும் பேசி முடிக்கலை ராகவா. என்னதான் நல்லமனம் இருந்தாலும் ஆண் என்கிற கர்வம் எல்லார் மனதிலும் இருக்கும் அந்த கர்வத்தை தூண்டிவிடுவதைப் போல இப்பவரைக்கும் எந்த நிகழ்வும் நடக்காமல் கூட இருக்கலாம் எனக்கு நீ தர வேண்டியது ஒரே ஒரு உறுதிமொழிதான் ராதிகாவிற்கு ஒரு நல்ல கணவனா அவ குழந்தைக்கு ஒரு நல்ல தகப்பனா நீ வாழ் வேண்டியிருக்கும் அதற்காக நீ அதிகமான பொறுமையைக் கையாள வேண்டியிருக்கும். அந்த பெண்ணை ஒரு இக்கட்டில் இருந்து காப்பாற்றணும்ங்கிறதுக்காக கல்யாணம் செய்யும் நீ உன்னையும் அறியாமல் அவளை இன்னொரு இக்கட்டில் கொண்டு வந்து நிறுத்திடக் கூடாது அதுக்கு மட்டும் எனக்கு உறுதிகொடு அவங்க வீட்டில் போய் நான் இப்போதே பேசிடறேன் என்ற தயாபரி அம்மாவைக் கட்டிக்கொள்ள வேண்டும் போல் இருந்தது சிவாவிற்கு !

தன் மகன் ஒரு கைம்பெண்ணை அதுவும் பிள்ளையோடு இருக்கும் பெண்ணை காதலிக்கிறான் என்று தெரிந்ததும் தாம்தூம் என்று குதிக்காமல் எதிர்காலத்தில் அவளுக்கு தன் மகனால் எந்த சிக்கலும் வரக்கூடாது என்று நினைக்கும் உள்ளம் எத்தனை பெண்களுக்கு வரும். சிவா நெகிழ்வாக கையெடுத்து கும்பிட்டான் அடுத்தது உன் விஷயம்தான்.

ராகவனுக்கு சொன்னதையே தான் சிவா உனக்கும் சொல்றேன் உன்னை நம்பி வந்தவளை எந்த காரணத்தினாலும் அநாதையா உணர வைச்சிடாதே ?! ராகவன் ராதிகா கல்யாணம் முடிவாகும் போதே உன்னோட கல்யாணத்தையும் பேசி முடிச்சிடறேன். யாரும் இல்லைங்கிற கவலை இனி உனக்கு வேண்டாம். தொழில்ல எம் மகனோட போட்ட பங்கு அவனோட தாயன்பிலேயேயும் இருக்கட்டும். இனிமே அநாதைன்னோ எனக்கு யாரும் இல்லைன்னோ சொல்லாதே நீ தயாபரியின் இரண்டாவது மகன் ராகவனின் இளைய சகோதரன் புரிஞ்சிதா ?! காலில் விழுந்த பிள்ளைகளை நிமிர்த்தி அணைத்துவிட்டு இரு வீட்டு ஆட்களிடம் பேசி இதோ திருமணம் வரையில் கொண்டு வந்துவிட்டாரே….. சிவாவும் ராகவனும் பேசிக்கொண்டு இருக்கும் போதே, ராதிகா அந்த ரசமிழந்த கண்ணாடியில் தன்னை அலங்கரித்துக் கொண்டு இருக்கும் அம்மாவின் விரல்களில் ஒட்டிக்கொண்டு இருக்கும் குங்குமத்தை ஒரு கணம் ஆசையோடும், பயத்தோடும் பார்த்தாள். 

பயப்படாதே இனி உன் வாழ்வில் எல்லாம் நல்லதே நடக்கும் என்ற உணர்வை நெற்றியில் தீட்டும் குங்குமத்தின் வழியாக அழுத்தம் கொடுத்தாள் அன்னை அன்றைக்கு ராகவனுடன் எடுத்த புடவையைத்தான் உடுத்தியிருந்தாள் அவள். வாசல்பக்கம் சென்ற பார்வையின் அர்த்தம் உணர்ந்து என்ன விஜியை எதிர்பார்க்கிறியா? என்றாள் அம்மா மென்னையாய் அவளின் கூந்தலில் ராக்கொடியைச் சூடியபடியே ?

ஆமாம்…காலையிலே போகும் போதே நான் சொல்லிவிட்டேன் நீ கட்டாயம் வரணுன்டின்னு ஆனா அவ….?!

வருவா ராதிகா எங்கே போயிடறப்போறா ? கட்டாயம் வருவா உனக்குத்தான் அவ குணம் தெரியுமே ?! அம்மா வாசற்பக்கம் லட்சமி அக்காளின் குரல் கேட்டு நகர விஜி அன்றைக்கு தங்கள் இருவரையும் துணிக்கடையில் பார்த்ததாக வந்து குற்றப்பத்திரிக்கை வாசித்த நிமிடங்கள் கண்களில் ஆடியது.

அம்மா இந்த வீட்டுலே என்னதான் நடக்குது என்று தாடகையைப் போல வந்த இளைய மகளை திகைப்பாய் பார்த்தாள் ராஜம்

 என்னடி பிரச்சனை உனக்கு ? நீ கத்தறது நாலு வீட்டுக்கு கேட்கும் பொறுமையா பேசு இல்லைன்னா அமைதியா இரு. 

ஆமா நான் கத்தறதால் மட்டும்தான் உனக்கு மானம் போகுது. புருஷனை இழந்திட்டு கைப்பிள்ளையும் வைச்சிகிட்டு ஊமைக்கொட்டான் மாதிரியிருக்காளே உன் பெரிய பொண்ணு அவ செய்த காரியம் உனக்குத் தெரியுமா ? மாடிவீட்டு ராகவனோட துணிக்கடையில் ஒரே கொஞ்சல் அவன் என்னமோ புருஷன் மாதிரி புடவை தோள்மேல போட்டு இதுதான் உனக்கு எடுப்பா இருக்குன்னு கொஞ்சறதும் இந்தம்மா உடனே சந்தோஷமா தலையாட்டுறதும் இதெல்லாம் உனக்கு தெரிந்துதான் நடக்குதா இல்லைன்னா குடும்ப செலவுக்கு பணமில்லைன்னு எதாவது திட்டம் போடுறீங்களா என்ற வார்த்தையை முடிப்பதற்குள் பளாரென்று விழுந்த அறையில் பொறி கலங்கிப்போனாள் விஜி.

உன் நாக்கு தேளை விட விஷம். ராதிகாவும் அந்த ராகவனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடக்கப்போகுது. இருந்திருந்து அவ வாழ்க்கையில் ஒரு விடியல் வரப்போகுதேன்னு நான் இப்போதோன் பூரிச்சி போயிருக்கேன் அது உனக்கு பொறுக்கலையில்லை. அவ குணம் தங்கம்டி அதான் ராகவன் மாதிரி ஒரு பிள்ளையாண்டான் கிடைச்சியிருக்கான். தன்னோட விருப்பத்தை அந்த பிள்ளை என்கிட்டேதான் முதல்ல சொன்னான். அவங்க அம்மாவோட அனுமதியோட பெரியவர்கள் ஆசிர்வாதத்தோடதான் அவங்க தன் வாழ்க்கையைத் தொடங்க முடிவு செய்தாங்க. நாளை மறுநாள் அவங்க இரண்டு பேருக்கும் நிச்சியதார்த்தம்

 அம்மா சொல்லி முடித்ததும் நான் ஒருத்தி கூடப்பிறந்தவ இருக்கேன்னு உனக்கு நினைப்பே இல்லையில்லை, ஏன் என்கிட்டே இந்த விவரத்தை சொல்லலை, நானும் உன் வயித்திலே பிறந்தவதானே எனக்கும் அவளுக்கும் ஏன்மா வித்தியாசம் பாக்குறே ?

பத்துப்பிள்ளை பிறந்தாலும் பெத்தவளுக்கு ஒண்ணுதான். நீதான் அவளுக்கு ஒரு முழ ரவிக்கை எடுத்துக் கொடுத்தாலும் சண்டைக்கு வருவியே ? யாருக்கு எதை எப்போ செய்யணுமின்னு எனக்குத் தெரியும் நம்பினா நம்பு இல்லைன்னா போ…?! நானும் உன்னை கவனிச்சிட்டுதான் விஜி வர்றேன், தினுசுதினுசா புடவைக்கட்டும், புதிய நகையும் யாருகிட்டே இருந்து வந்தது இது ? இந்த வீட்டுக்கு வந்து இரண்டு மூணு மாசம் கூட இன்னும் முழுசா முடியலை அதுக்குள்ளே புதுசா புதுசா எத்தனை உன் அலமாரியை நிறைச்சிருக்குன்னு நான் சொல்லவா, உனக்கு கொஞ்சம் ஆசை அதிகம் அது தப்பான வழியிலே போயிடக்கூடாதுன்னு நான் கலைப் பட்டேன். ஆனாலும் நான் பெத்த பொண்ணு நெருப்புன்னு ஒரு நம்பிக்கை அடி மனசிலே இருக்கிறதாலதான் நான் உன்னை ஏதும் கேட்கலை. அவ வாழ்க்கையினை நிர்ணயம் பண்ண வேண்டியது அவ நீயோ நானோ இல்லை. கூடப்பிறந்தவளா லட்சணா நல்ல காரியத்திலே கலந்துக்கோ அத்தோடு அம்மா சொல்லிவிட்டுப் போனதும் விஜியின் முகம் கருத்தது. 




இதென்ன அதிசயம் ராகவனின் கண்களுக்கு தன்னைத் தெரியாமல் கன்றோடு இருக்கும் அவளையா தெரியவேண்டும். பாட்டியும் அபிராமியும் வீட்டுக்குள் நுழைந்தார்கள். ராஜம்மாள் என்பேத்திக்கு கல்யாணம் நிச்சயம் ஆகியிருக்கு, நீங்க அவசியம் கலந்துக்க வேண்டும் என்று சொல்லி அழைக்க இதென்ன புதுக்கதை இதைப் பற்றி மதனிடம் சொல்லியாகிட வேண்டுமே ?! மாப்பிள்ளை யாராக இருக்கும் என்று அவள் யோசிக்கும் போதே தயாபாரி உள்ளே நுழைந்தாள். என்ன சம்பந்தியம்மா மலைச்சிப்போய் நிக்கிறீங்க ராதிகா ராகவன் நிச்சயத்தன்னைக்கே சிவா அபிராமி நிச்சயத்தையும் சேர்த்து பண்ணிடலான்னு ஒரு முடிவு எடுத்திருக்கோம். சமையல் பொறுப்புக்கு எல்லாம் ஆள் ஏற்பாடு செய்திட்டேன் அன்றைக்கு நீங்க கண்ணுக்கு நிறைவா உங்க மகளைப் பார்த்தாப்போதும். இது கல்யாண ஜவுளி உங்க குடும்பத்திலே எல்லாருக்கும் இருக்கு என்றவர் விஜியைப் பார்த்ததும் இதுதான் ராதிகாவோட தங்கையா ? இந்தாம்மா இது உனக்கு எடுத்த புடவை என்று கைகளில் திணித்துவிட்டு அப்போ நாங்க கிளம்பறோம் என்று திரும்ப, தன் கைகளில் திணிக்கப்பட்ட புடவையை வீசியெறிந்தாள் விஜி. அது ராதிகாவின் காலில் போய் விழுந்தது.




 

What’s your Reaction?
+1
8
+1
6
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!