Serial Stories பாதரஸ பற​வைகள்

பாதரஸ பற​வைகள் -20

20

அடுக்களைக்குள் தயங்கித் தயங்கித் தாயருகில் வந்தவள் அம்மா நான் ஏதாவது உதவி செய்யவா என்றவளிடம் இன்னைக்கு ஒண்ணும் பிரமாத சமையல் இல்லை வெறும் ரசமும் உருளை வறுவலும் தான் தம்பி தூங்கறானே நீயும் போ என்று தாய் விரட்ட மேலும் தயங்கியவளாய். அம்மா உன்கிட்டே ஒண்ணு பேசணும் என்று தலைகுனிந்து நின்ற மகளை வியப்பாய் பார்த்தாள் தாய்.

சொல்லு ராதிகா முழுக்க நனைஞ்ச பிறகு முக்காடு எதுக்கும்மா நீ பேச வந்த விஷயம் என்னன்னு எனக்கு தெரியும் உன் வாயினாலே அது வெளியே வரணுமின்னுதான் நான் இத்தனை நேரம் இதைப்பற்றிப் பேசலை, ராதிகா திகைக்கும் போதே மாடிப்போர்ஷன் ராகவனைப் பற்றித்தானே பேசப்போறே ? என்று கூறி மேலும் மகளைத் திகைக்க வைத்தாள். 

அந்தப்பையன் எல்லாத்தையும் என்கிட்டே சொல்லிட்டான் ராதிகா. முதல்ல எனக்கும் அதிர்ச்சியாத்தான் இருந்தது. படிச்சவன் பணக்காரன் வெளிநாட்டு வாசம் பெத்தவளுக்கு கறிவேப்பிலைக் கொத்து மாதிரி ஒத்தைப் பிள்ளை அப்பிடியிப்படின்னு லட்சுமி அவனைப் பற்றி அப்படி அளந்தாளே. அவன் தகுதிக்கு ஏத்த பொண்ணா பார்க்கணுன்னு யோசிக்கிறவ ஆனா இவன் என்னடான்னா உன்னைத்தான் பண்ணிப்பேன்னு என்கிட்டேயே சம்மதம் கேட்குறான். நாலு நாளுக்கு முன்னாடி துணி உலத்தப்போனேனே அப்பத்தான் மாமி கொஞ்சம் பேசணுன்னு ஆரம்பிச்சான். எனக்கு ஒரே குழப்பம். 

இதெல்லாம் சரியா வருமான்னு கேட்டேன். அவன் அம்மா பட்ட கஷ்டம் இவனுக்கு உன்மேல் தோன்றின அன்புன்னு கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் அவன் பேச்சிலே துளி கூட பொய்யில்லை, நிறைய உண்மையிருந்தது. உன் அத்தைக்கும் பாட்டிக்கும் பயந்து உனக்கு அவசரமா கல்யாணம் செய்திட்டேனோன்னு ஒரு உறுத்தல் எனக்கு இருந்திட்டே இருந்தது. நீ எதுவும் இல்லாம திரும்பி வந்தப்போ பொசுக்குன்னு உயிரையே விட்டு இருப்பேன். இன்னும் எத்தனை நாளைக்கு என் துணையிலேயே காலம் கழிப்பே ராதிம்மா, அப்பாவும் சரியில்லை, கூடப்பிறந்தவளும் உன்னை விரோதியை விட மோசமா பார்க்கிறா எனக்கென்னவோ கடவுளா பார்த்து உனக்குன்னு அனுப்பினா மாதிரியிருக்கு 

அம்மா அப்ப உனக்கு ?

என்ன அந்த காலத்து மனுஷி இப்படி சட்டுன்னு ஒத்துக்கிட்டாளேன்னுதானே பார்க்கிறே ? தனக்கும் வரும்போது தவிக்கிற மனசு பிள்ளைக்குன்னு வரும்போது சாவைக் கூட உடனே ஒப்புக்கும் ராதிகா அப்படித்தான் எனக்கு பூரண சம்மதம் உங்கப்பாவையும் கவிதாவையும் ஒப்புக்கொள்ள வைக்கிறது என் பொறுப்பு அவங்க ஒத்துக்கலைன்னாலும் பரவாயில்லை, உன்னை இப்படியே நிர்கதியா விட எனக்கு மனசில்லை. நேத்து என்கிட்டே பேசி சம்மதம் வாங்கின பிறகுதான் அந்த தம்பி உன்னைக் கோவில்ல வந்து பார்த்ததே ?!

ராதிகாவிற்கு இப்போதுதான் பொரி தட்டியது. இதுநாள் வரையில் தன்னைத் தனியா அம்மா எங்குமே அனுப்பியதில்லை என்பது. கல்யாணத்திற்கு முன்பும், அப்படித்தான் இப்போது இந்த நிலைமைக்கு வந்த பிறகும் அப்படித்தான். யாராவது ஏதாவது மனம் நோக பேசிடுவாங்கன்னு ஒரு அரணைப்போல துணையாகவே இருப்பாள். பெரும்பாலும் தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் அந்த சாட்டையான நாக்கிற்குச் சிக்காமல் அழகாகவே தப்பித்து அழைத்து வந்தும் விடுவாள். நீ என்கிட்டே பேசற அந்த சங்கடத்தைக் கூட உனக்குத் தரக்கூடாதுன்னு அந்த பிள்ளை நினைக்கிறான் அவன் மனசுக்கு நீங்க இரண்டுபேரும் நல்லாயிருக்கணும். எதையும் யோசிக்காம ஒத்துக்கொள் அம்மா நானிருக்கிறேன் என்று தைரியம் சொன்னதும் ராதிகாவின் தயக்கம் தொலைந்து போனது இனிமேல் ராகவனிடம் தன் விருப்பதைச் சொல்லத் தடையில்லை என்று அமைதியாய் அதே நேரம் பலவிதமான கனவுகளோடு அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள் ராதிகா. அதன் தொடர்ச்சிதான் அம்மா வர்றப்போ நீ பளிச்சின்னு இருக்கணும் ராதி என்று அவளை வற்புறுத்தி துணிக்கடைக்குள் வந்தபோதுதான் விஜி அவர்கள் இருவரையும் பார்த்து வைத்தாள். 




ஒப்பனைகளை கலைக்க விஜி சென்றிருந்த போது திலீபன் மதனிடம் கேள்விகளால் துளைத்துக் கொண்டு இருந்தான். ஏண்டா அபிராமி மாதிரி ஒரு பொண்ணை கரெக்ட் பண்ண டிரை பண்ண காதல்ன்னு ஒரு டிராமா போட்டே சரி ஆனா இவயெல்லாம் நீ பார்த்தாலே போதுமே வந்திடுவாளே அதுக்கு இத்தனை செலவு தேவையா ?

கரெக்ட்தான் கொஞ்சம் அலைபாயுற மனசு கொண்ட பொண்ணு. பிறந்ததில் இருந்து வறுமையில் சிக்கின பொண்ணு அபிராமி ஜாக்பாட்னா இவ எக்ஸ்ட்ரா டிக்கெட்ன்னு நினைச்சிக்கோ இதெல்லாம் இன்வென்ஸ்மெண்ட் திலீபா இவ மூலமாத்தான் நான் அபியை அசிங்கப்படுத்தப் போறேன் 

என்னடா பண்ணப்போறே ?

இவளை லவ் பண்றா மாதிரி வலையிலே விழ வைக்கப்போறேன் இவ மூலமாகவே அபிராமியை என் வழிக்கு கொண்டு வரப்போறேன். திட்டம் தயாரா இருக்கு அதை நாம இன்னொரு நாள் டிஸ்கஸ் பண்ணலாம். இப்போ ரொம்ப நேரம் அவ காத்துக்கிட்டு இருக்கா. அடுத்த டிராமாவை நான் வண்டியில் வைச்சித்தான் செய்யணும் வரேன்டா அவன் சிரித்தபடி சொல்ல, 

வெற்றிக்கான கூட்டணிப் பார்ட்டியில் என்னையும் சேர்த்துக்கோ எனக்கு இவ கூட போதும் தான் என்று சிரித்தான் திலீபன் அவர்கள் இருவரும் தன்னைப் பற்றிய மட்டமான கற்பனையில் இருக்கிறார்கள் என்பதை எதையும் உணராமல் தன் கண்களுக்கு முன்னாலேயே புதிய புடவையும் அன்பான விழி உபசரிப்புகளுமாய் அவர்கள் செல்லவும் பின்னாடியே வந்த அவனோடு என்ன மேடம் எங்கே பார்த்துட்டு இருக்கே என்க

ஒண்ணும் இல்லைங்க போகலாம். அவள் அவனோடு இணைந்து காரில் ஏறினாள் முன்புறம் உட்காரச் சொல்லி கடைசிப்பந்தி கார் கதவை சாத்தி நன்றி கூற இளவரசியைப் போல உணர்ந்தாள் விஜி.

என்ன விஜி அமைதியா வர்றே. இந்த ஸாரியில் நீ ரொம்ப அழகு பெண்கள் இயற்கையாகவே புடவையில் தான் அழகு 

சட்டென்று உற்சாகம் வடிந்தாற் போனது விஜிக்கு காரணம் ராதிகா​வையும்ராகவ​னையும் ஒன்றாகப் பார்த்தது அதையே நினைத்துக் கொண்டு இருந்தவளை அவனின் பேச்சு இழுத்து வந்தது, இதை பிறகு பார்த்துக் கொள்ளலாம் இத்தனை நாள் அபிராமி புராணம் பாடியவன் இன்றுதான் ஏதோ சொல்ல வருகிறான் அதனால் இவனைப் பார்க்கலாம் என்று அந்த நினைவுகளை ஒதுக்கிவிட்டு, 

எனக்கு ரொம்பவும் வியப்பா இருக்கு எதிர்பாராம புடவை அதையும் விட உங்க நண்பரின் பேச்சு 

என்ன பேசினான் குறும்பு தொனிக்கும் குரலில் அவன் கேட்க அவள் வெட்கப்படுவதைப் போல பாவனை செய்தாள்.

நானே நேரில் சொல்லணும் என்று இருந்தேன் அதற்குள் முட்டாள் அவசரப்பட்டு உளறிவிட்டான். நாளை மறுதினம் மகாபலிபுரம் போகப்போவதாக சொன்னேன் இல்லையா ? அன்னைக்கு என் பிறந்தநாள் அங்கே வைத்து அந்த கடலலைகளோடு உன் கண்களைப் பார்த்து நான் உன்னைக் காதலிக்கிறேன் என்று சொல்லலாம் என்று நினைத்தேன். ஆனால் ….

இந்த வார்த்தைகளுக்காகத்தானே காத்திருந்தாள். இருந்தாலும் உடனே ஒப்புக்கொண்டால் தன்னை அசிங்கமாக எண்ணிக்கொள்வான் என்று நினைத்து இதற்கு இந்த அன்பிற்கு எல்லாம் நான் தகுதியானவள்தானா சார்… என்று இழுத்தாள்.

தகுதி பணத்தில் வருவதில்லை விஜி. எனக்கு உன்னைப் பிடித்திருக்கிறது உன் விருப்பம் இதில் முக்கியம் 

உங்கள் அன்னை மிகவும் கண்டிப்பு என்று…




ஆமாம் படிப்பு, பணம், அழகு இவையெல்லாம் சேர்ந்து இருந்தால் தவறான சகவாசத்தில் கெட்டுவிடுவேனோ என்று நிறைய கட்டுப்பாடுகள் எனக்கு உண்டு, அம்மாவின் பேச்சை நான் என்றுமே மீறியதில்லை, ஆனால் மேலே வந்து விழும் பெண்களை நான் என்ன செய்ய ? அப்படியொரு சிக்கலில்தான் அம்மாவிற்கு என்மேல் ஒரு தப்பான அபிப்ராயம் வந்து என்னை இந்த பிரான்ஞ்சிற்கு மாற்றிப்போட்டது. ஆனால் இந்த தண்டனையும் எனக்கு சந்தோஷம்தான்

என்ன சொல்றீங்க ?

இப்படி வர்லேன்னா உன்னைப் பார்க்க முடியுமா ? இந்த நிமிஷம் இந்த சந்தோஷத்தை அடைய முடியுமா ? மெல்ல தோளைத் தொட்டு அவள் நெற்றியில் முத்தமிட்டான் கிறங்கிப் போனாள் அவள். அவன் மட்டும் சரியென்றால் அவனுடன் இப்போதே வாழ்ந்து விடவும் அவள் தயாராக இருந்தவளைப் போல உணர்ச்சி வசப்பட்டால் அவளும் முத்தமிட்டாள். சிரித்தபடியே என் மன காயங்களை இந்த எச்சில் ஆற்றுகிறது என்று கண்களைக் கலங்கவிட்டான்.

என்ன வருத்தம் உங்களுக்கு ? நிச்சயம் அதற்கு நான் மருந்தா இருப்பேன் சார்

இன்னும் என்ன சார்….? பெயரை சொல்லி  

கூப்பிடு

இன்றைய சந்தோஷங்களை கிரகித்துக் கொள்ள கொஞ்ச நேரம் வேண்டும் அதனால் உங்கள் பெயரை சொல்லி பிறகு கூப்பிடுகிறேன் என்று சொல்லிவிட்டு உங்களின் கவலைப் பற்றி கேட்டேனே என்றாள்.

எல்லாவற்றிற்கும் காரணம் அபிராமிதான் என்றால் நம்புவாயா ? என்றான் வருத்தம் தோய்ந்த குரலில்

நீங்கள் சொன்னால் எதையும் நம்புவேன் என்ன செய்தாள் அவள், எப்படி துன்பத்தினை உங்களுக்குக் கொடுத்தாள். 

உதட்டை ஈரப்படுத்திக் கொண்டு, அபிராமியின் கல்லூரிக்கு அருகில் தான் எங்களின் துணிக்கடை நிறுவனம். அடிக்கடி தோழிகளோடு அவள் வந்திருக்கிறாள். சிலநேரம் கல்லாவில் நான் இருக்கும் போது விழிகளாலும், பேச்சிலும் சிரிப்பிலும் என் கவனத்தை கவரும் வகையில் அவள் பலமுறை நடந்திருக்கிறாள். அப்போது அவர்கள் கல்லூரி விழாவிற்கு பணம் தேவைப்பட்டு என்னிடம் கூப்பனோடு கேட்டாள். தொழில் நிர்வாகம் என்னுடையது என்றாலும் அம்மாவைக் கேட்காமல் நான் எதையும் செய்தது இல்லை எனவே பிறகு தருகிறேன் என்றேன்.

ஒருமுறை ஹோட்டல் ஒன்றில் திறப்புவிழா அவளும் வந்திருந்தாள் தோழிகளுடன் அப்போது என்னுடன் சேர்ந்து புகைப்படம் ஒன்றை எடுத்துக்கொண்டு கல்லூரிவிழாவைப் பற்றி பேசினாள். அன்று அம்மா என்னுடன் இல்

லை எனவே மீண்டும் நேரம் கேட்டிருந்தேன். தாமாகவே என்னுடன் பேசும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொண்டவள். ஒருமுறை நண்பர்களுடன் தொழில் முறை விருந்திற்கு சென்றிருந்த இடத்தில் அவளை ஹோட்டல் சோழாவில் கண்டேன். பேசவேண்டும் என்று கேட்டுக்கொள்ள காத்திருக்க சொன்னேன். 

உங்களைப் பார்ப்பதற்காக ஓடிவந்தேன் சாலையில் இருந்த சேற்றை வண்டி ஒன்று பூசிவிட்டது கொஞ்சம் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்க நானும் பாவம் பெண் என்ற என்னுடைய அறைக்குச் சென்று மாற்றிக் கொள்ள சொன்னேன். ஆனால் அங்கே அவள் எனக்கென ஒரு சதிவலை பின்னியிருக்கிறாள் என்று தெரியாது அவளும் ஒரு போட்டோகிராபரும் சேர்நது என்னுடன் அவள் பேசுவது அறையில் இருப்பது என புகைப்படம் எடுத்து அம்மாவிடம் காட்டி என் பெயரைக் கெடுத்து விட்டாள். அம்மாவிற்கு என்மேல் முழு நம்பிக்கை ஆனால் ஆதாரங்கள் கையில் இருக்கும் போது அதை மறுக்க முடியாமல் போகவே, அவர்களுக்கு தேவையான பணத்தை செட்டில் செய்துவிட்டு அம்மா என்னை இங்கே அனுப்பிவிட்டார்கள். வெளியே தவறானவனாக சித்தரித்து விட்டார்கள். அதுதான் அந்த ஹெட்கிளார்க் பேசியது. 

கடவுளே அப்பாவி மாதிரியிருக்கும் அவளுக்குள் இத்தனை துவேஷமா ?

நல்ல குடும்பத்துப் பெண்ணைப் போல தோற்றம் ஆனால் பெற்றோர் இல்லை பார் கண்டித்து வளர்க்கத் தெரியவில்லை உன்னைப்போல். என்று சொல்லிவிட்டு தான் சொன்ன கதையை அவள் நம்பிவிட்டாள் என்பதை உணர்ந்து தவறே செய்யாமல் தண்டனை அனுபவிக்கிறேன் விஜி. அவளைப் பழி வாங்க வேண்டும் என்று வெறியே ஏற்பட்டது ஆனால் பிரயோசனம் அம்மாவிடம் என் நம்பிக்கையை மீண்டும் வரவைக்க முடியுமா ? என் மனம் பட்ட வேதனை மாறுமா ? சரி ஏதோ அறியாப் பெண் தெரியாமல் செய்துவிட்டால் என்று விட்டுவிட்டேன் அன்றிலிருந்து பெண்கள் என்றாலே சற்று பயம் இருக்கும் அதுவும் உன்னால் மாற்றப்பட்டு விட்டது.

இல்லைங்க உங்க பெருந்தன்மையால நீங்க அவளை விட்டுடீங்க ஆனா அப்படி விடக்கூடாது அவளை ஏதாவது ஒரு வகையில் நீங்க தண்டிச்சி இருக்கணும். 

எப்படிம்மா அவ அளவிற்கு என்னால் இறங்க முடியாது. நானே என்மேல சேற்றை பூசிக்கொள்ளவும் முடியாது. அதனால..

நீங்க விடலாம் நான் விடப்போவதில்லை. இவளைமாதிரி பெண்களை எல்லாம் விடக்கூடாதுங்க 

இதையேதான் திலீபனும் சொன்னான். அவளுக்கு ஒரே அடி கொடுக்கணும் அது மரணஅடியா இருக்கணும். அவளோட கேரக்டர் லெஸ்ன்னு தெரிந்தது அதை வைச்சே அவளை அழிக்கணுமிங்கிறது அவனோட ஐடியா அந்த போட்டோகிராபர்தான் அவளுக்கு உதவினான் அவனையே

இல்லைங்க அவனுக்கும் அவளுக்கும் இடையே ஏதோ இருக்கு எனக்கு தெரிந்து லவ்வா கூட இருக்கும் இந்தமுறை காந்துவது அவனுடையதாகிப்போனது அதற்காகத்தான் அவளுக்காக அத்தனை செய்தானோ ? இதை இப்படியே விடக்கூடாது இவளை வைத்தே அழிக்கவேண்டும் என்று யோசித்து.

இப்படி செய்தால் என்ன ? 

என்ன ? 

நீ மகாபலிபுரம் வரும்போது அவளை அழைத்து வந்துவிடு எனக்கென்னமோ அவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்தால் மீண்டும் என்னிடம் பணம் பறிக்க ஏதாவது செய்வார்களோ என்று தோன்றுகிறது அதனால் நீ சொன்னால் போல சூடு பலமாக இருக்க வேண்டும் அவள் வெளியே தலைகாட்ட முடியாதபடி, இந்தா இந்த மாத்திரை அம்மாவின் டிப்ரசனுக்காக சாப்பிடும் தூக்கமாத்திரை அவளை எப்படியாவது உன்னுடன் வரவைத்துவிடு அதுமட்டும் போதும் காரில் வரும்போது இந்தமாத்திரையை கொடுத்து மயக்கம் வர வைத்துவிட்டால் நம் வேலை சுலபம் என்று அவளின் கையில் ஒரு மாத்திரைப்பட்டையைக் கொடுத்தான். வாங்கிப் பத்திரப்படுத்திக் கொண்டாள் விஜி. அவள் மனதில் ஒரு திட்டம் உருவானது. ஆனால் அவள் செய்யப்போகும் காரியத்தினால் அபிராமிக்கு மட்டும் அல்ல தனக்கும் ஒரு பெரிய சிக்கலை உருவாக்கிக் கொள்ளப் போகிறாள் என்று உணராமல்.




What’s your Reaction?
+1
6
+1
9
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!