Serial Stories பாதரஸ பற​வைகள்

பாதரஸ பற​வைகள்-19

19

ராகவன் ராதிகாவையே பார்த்தான் தான் கொடுத்த கடிதத்தை முழுவதும் அவள் படிக்கும் வரையில் காத்திருந்தான். கண்கள் பரபரவென்று வார்த்தைகளை தடவிக் கொடுத்து, அதன் பின் அவனை நிமிர்ந்துப் பார்த்தாள். கடிதத்தில் தன் மனதில் உள்ள அத்தனையும் கொட்டியிருந்தான். 

ராதிகா மெல்ல அழைத்தான் அவர்கள் இரண்டுபேரும் நாம பேசணுங்கிறதுக்காகத்தான் காத்திருக்காங்க. அவளும் அவர்களைப் பார்த்தாள். குழந்தை அபியின் தோளில் உறங்கிக்கொண்டிருந்தது சிவா அபிராமியின் பேச்சில் இவர்களைப் போல அந்நியத்தனம் இல்லை மாறாக ஒருவித நெருக்கம் இருந்தது. அது அவளுக்கும் புரிந்தது ஒரு ஏக்கப் பெருமூச்சோடு ராகவனை நிமிர்ந்து பார்த்தாள். 

நீங்க உங்க மனசில உள்ளதை வெளிப்படையா சொல்லிட்டீங்க இந்தக் கடிதம் மூலமா ஆனா என்னால அப்படிச் சட்டுன்னு ஒரு முடிவுக்கு வர முடியுமான்னு தெரியலை ஊர் உலகம் என்ன பேசுன்னு மனசு அடிச்சிக்குது. வாழ்க்கையில் ஒரு பொண்ணு ஒரு முறைதான் மணமேடையைப் பார்ப்பா நான் இப்போ இரண்டாவது தடவை அதைப்பற்றி யோசிக்கணுமான்னு நினைச்சி பயப்படறேன்.




ராதிகா எந்த காலத்தில இருக்கிறீங்க புருஷன் செத்ததும் உடன்கட்டை ஏறுற பொண்கள் எல்லாம் இப்போ இல்லை இருக்கவும் கூடாது அவங்க சுதந்திரமா இருக்கணும் அதுதான் என்னோட எண்ணம். நான் பாரின்ல படிச்சவன்தான் என்னோட கடிதம் உங்களுக்கு எத்தனை மன அதிர்ச்சியைக் கொடுத்திருக்குன்னு எனக்கு புரியுது ராதிகா. என்னடா வந்து மூணுநாள் முழுசா முடியலை இவனை நம்பி நாம எப்படி வாழ்நாள் முழுவதையும் ஒப்படைக்கிறதுன்னு கூட நீங்க நினைக்கலாம். ஆனால் உண்மை என்னன்னா தனியா ஒரு பொண்ணு கணவன் துணையில்லாம ஒரு குழந்தையோட காலம் தள்ளறது எத்தனை கொடுமை, அதுக்கு அவ எத்தனை வேதனைகளைக் கடந்து வரணுமின்னு எனக்கு நல்லாத் தெரியும். அந்த வேதனையை என் அம்மாவின் மூலம் கண்ணாரப் பார்த்தவன் நான். இன்னைக்கு நாங்க ஒரு நல்ல நிலைமையில் இருக்கிறோம். எந்த சொந்தபந்தங்கள் ஒருவேளை சோறு போடாம ஓடி ஒளிந்தாங்களோ அவங்களே எங்களை இப்போ வலிய கூப்பிட்டு உபசரிக்கிற அளவிற்கு வந்திருக்கிறேன்னா அதுக்கு காரணம் அம்மாவின் அயராத உழைப்பு.

அப்பாவின் மரணம் எனக்கு இரண்டு கெட்டான் வயசு, காதல் கல்யாணம் இரண்டுபக்கமும் எதிர்ப்பு. புருஷனையும் தொலைச்சிட்டு எங்கே இவ நம்மகிட்டேயே ஒட்டிக்குவாளோன்னு பயம் அந்த பயத்திலேயே அம்மாவை யாரும் கிட்டக் கூட சேர்க்கலையாம். ஒரு நல்லது கெட்டதுக்கு கூட வலிய போய் பேசினா ஒதுங்கிப்போயிடுவாங்களாம். 

நல்லவேளை அப்பாவோட கம்பெனியிலே வேலையில் இருக்கும் போது அவர் இறந்தததல் அந்த அடிப்படையில் அவங்களுக்கும் வேலை கிடைச்சது கிடைச்ச நுனியைப் பற்றி நாங்களும் மேல வந்திட்டோம். ஒரு ஆண் துணையில்லாம எத்தனை பேருக்கு பயந்து நள்ளிரவு நேரங்களில் அப்பாவோட நினைவில் தன்னையும் அறியாமல் அழுத காலங்கள் எல்லாம் என்னால மறக்கவே முடியாது. எப்படியாவது அவங்களோட துயரைத் தொடைக்கணுமின்னு முடிவு பண்ணினேன். படித்தேன் நல்ல நிலைமையில் செட்டில் ஆயிட்டேன் 

இங்கே வந்ததும் அபிக்குத்தான் என்னை மாப்பிள்ளையாக்கப் பார்க்கிறாங்க லட்சுமி ஆன்ட்டின்னு தெரிந்தது. அபிகிட்டே எந்தக் குறையும் இல்லை, ஆனால் அவங்க மனசில சிவா இருக்கிறான்னு சமீபமாத்தான் தெரிந்தது. ஆனால் இந்த காம்பெளண்டை நான் முதலில் தொடும்போதே என் கண்களில் விழுந்தது உங்களின் கலங்கிய முகம்தான். ஏன்னு தெரியலை அந்த கண்ணீர் உங்களை எனக்கு ரொம்ப நெருக்கமா கொண்டு வந்து விட்டுடுச்சி. இதுக்கு காரணம் சின்ன வயசிலே இருந்து அவங்களோட வலியைப் பார்த்ததால் கூட இருக்கலாம்.

ராதிகாவின் அந்தகண நேரப்பார்வையை உணர்ந்தவனாய்.. உங்க கேள்வி எனக்குப் புரியுது. உங்கள் மேல உள்ள பரிதாபத்தினாலேயோ இல்லை உங்களுக்கு வாழ்க்கைத் தரணுமின்னு முட்டாள்தனமாகவோ நான் யோசிக்கலை, என்னவோ பார்த்தவுடனே பிடிச்சது. உங்ககூட ஒரு வாழ்க்கை என் அம்மாவின் மனதிற்கும் நிறைவா இருக்கும் என்று தோணியது.

நீங்க இத்தனை தூரம் வெளிப்படையா பேசிட்டீங்க ஆனா எனக்கு இன்னமும் தயக்கமாவே இருக்கு. அப்படியே நான் சம்மதித்தால் மற்றவங்க முக்கியமா உங்க அம்மா




அம்மாவுக்கு நான் எடுத்திருக்கிற முடிவு டபுள் சந்தோஷமாத்தான் இருக்கும் அதில் நோ டவுட். அம்மாவுக்கு எழுதியாச்சு நாளை மறுநாள் வர்றாங்க அதுக்குள்ளே உங்களோட முடிவைத் தெரிந்து கொள்ள வேண்டுமே.

எனக்கு இன்னமும் குழப்பம் தீரலை, நீங்க சொன்னா மாதிரி நான் கட்டுப்பெட்டித்தனமா யோசிக்கலை, இன்னொரு கல்யாணம் செய்துக்கொள்வது ஒப்பாத அளவுக்கு என் கணவர் கூட வாழ்ந்த வாழ்க்கை திகட்டலை. எப்போது ஒரு முடிவுக்கு வரும் என்று நான் ஏங்கிய நாட்களில் கடவுள் எனக்காக அமைத்துத்தந்த ஒரு விசித்திரம்தான் இந்த நிலைமை. ஒரு குழந்தையோட நான் சகலத்தையும் தொறந்து பெத்தவளோட கையைப் பிடிச்சிட்டு உள்ளே நுழைச்சப்போ நல்லவேளை வந்திட்டேன்னுதான் அம்மா கூப்பிட்டுக்கிட்டா, என்னோட இந்த முடிவு அவங்களுக்கும் சந்தோஷமாத்தான் இருக்கும். ஆனா என் பயம் வேற.

உங்கப்பாவா ? 

இல்லை என் தங்கை தேள் கொடுக்கில் கூட விஷம் குறைந்திருக்கும் அவளின் நாக்கில் எப்போதும் ஊறிக்கிட்டே இருக்கும் எட்டாத கனிக்கு ஆசைப்படுகிறாள். இளமையில் வறுமை அவளுடைய பேராசைக்கு அப்பாவால் போட முடியாத தீனி எல்லாம் ஒரு மோசமான பாதைக்கு அவளைத் தள்ளிடுமோன்னு பயமாயிருக்கு. அவ நல்லவதான் ஆனா, உங்கமேல§யும், சிவா மேலயும் அவளுக்கு ஒரு அபிப்ராயம் இருக்கு. அத்தோடு இப்போ அவ கம்பெனி உரிமையாளர் இடமும். அமைந்த வாழ்க்கை இழியாய் இருக்க அமையப்போற வாழ்க்கையை நல்லவிதமா அமைச்சிக்கணுமின்னு அவ நினைக்கிறா. ஒருவிதத்தில் அதை தப்பு சொல்ல முடியாது ஆனா அந்த அன்பிலும் நேசத்திலும் எந்த அளவுற்கு உண்மையிருக்குன்னு தெரியலை. 

ராகவ் உங்ககிட்டே உடைச்சி ஒரு உண்மை சொல்லட்டுமா நான் உங்களை இங்கே சந்திக்க ஒப்புக்கொண்டது கூட நீங்க என் தங்கையை கல்யாணம் செய்து கொள்ள முடியுமான்னு கேட்கத்தான். ஒரு நல்ல கணவன் அவளுக்கு கிடைச்சிட்டா அவளோட போக்கு மாறிடும். எதிர்காலத்தில் வரப்போகிற பெரிய ஆபத்தில் இருந்து கூட அவளைக் காப்பாத்திடலாம் அதனால….

அவன் ராதிகாவின் பேச்சினைக் கையமர்த்தினான். ராதிகா நான் உங்களைத்தான் நேசிக்கிறேன் உங்க தங்கைக்கு நீங்க வக்கீலாக வேண்டாம். என் மனசிலே நீங்க இருக்கீங்க உங்களுக்கு விருப்பமில்லைன்னா இப்பவே சொல்லிடலாம் ஆனா நான் யாரை கல்யாணம் செய்துக்கணுன்னு எல்லாம் நீங்க சொல்ல வேண்டாம். அவனின் குரலில் வரவழைத்துக் கொண்ட கோபத்தில் ராதிகா மெளனமானாள். ரவி மேலும் சில விநாடிகளில் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு, சாரிம்மா உங்களின் மறுப்பு கூட தனிவிஷயம் காலம் மாறுன்னு காத்திருக்கலாம் ஆனா யாருக்கோ நீங்க தூது வர்றது எனக்குப் பிடிக்கலை. ஒரு நல்ல இடமா பார்த்து நானே அவளுக்கு மணம் முடித்து வைக்கிறேன் போதுமா ?! 

ப்ளீஸ் இப்போ உங்க முடிவைச் சொல்லுங்க நான் என் அம்மா கிட்டே பேசணும். 

எனக்கு ஒரு இரண்டு நாள் அவகாசம் கொடுங்க ரவி, எனக்காக ஒரு ஜீவன் வாழுது அதுகிட்டே கேட்டு சொல்லிடறேன். இப்போ நான் கிளம்பணும் ரொம்ப நேரம் ஆச்சின்னா எல்லாரும் சந்தேகப்படுவாங்க. என்று சொல்லி அவனிடம் இருந்து பிரிந்து எழுந்தாள் தேங்க்ஸ் உங்கள் பதிலுக்காய் காத்திருப்பேன் ராதிகா என்று சொல்லி அவனும் கிளம்பினான். கோவில் பிரகாரம் வந்து அபியும் ராதிகாவும் கிளம்ப சிவாவும், ரவியும் வேறுபக்கம் நடந்தார்கள்

ராதிகா என்ன சொல்றாங்க….

விருப்பம் மாதிரிதான் தெரியுது, யார் என்ன சொல்லுவாங்கன்னு பயப்படறா ?

ம்.. அடுத்தவங்க என்ன சொல்லுவாங்கன்னு பயந்து பயந்தே நாம அநேக வாழ்க்கையை இழந்திடறோம். நான் அபிகிட்டேயும் பேசியிருக்கேன் அவளும் அவங்ககிட்டே பக்குவா எடுத்துச் சொல்லுவாங்க.

நான் உனக்குத்தான் நன்றி சொல்லணும் சிவா நீயும் அபியும் இல்லைன்னா ராதிகாவிடம் நான் இத்தனை சீக்கிரம் என் மனதில் இருக்கிறதை சொல்லியிருக்க முடியாது.

ம்…. ஆனால் நீ ரொம்பதான் பாஸ்ட் நண்பா நானெல்லாம் பாரு லவ் பண்ணின்னு மூணுநாலு வருஷம் ஆனாபிறகு எங்கே வேற யாராவது அவளை லவ்பண்ணிடுவாங்களோன்னு பயத்திலேதான் என் காதலையே சொன்னேன் இல்லைன்னா இன்னமும் இதயம் முரளி மாதிரி ஒரு ரோஜாபூவோட சுத்திட்டு இருக்கவேண்டியதுதான் அவன் சொல்ல இருவரும் சிரித்தபடியே வீட்டுக்கு நகர்ந்தார்கள்.




What’s your Reaction?
+1
9
+1
5
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!