Serial Stories பாதரஸ பற​வைகள்

பாதரஸ பற​வைகள் -18

18

விஜி….அந்த புதுப்புடவையின் வாசத்தை ஆழமாய் இழுத்து நுகர்ந்தாள். எட்டாயிரத்துக்கும் மேல் நேற்று அலுவலகம் விட்டு வரும்போது ஒரு பெரிய புடவைக்கடையின் முன்னால் வண்டியை நிறுத்தினான் ….

இங்கே ஏன் ஸார் ?

இது என் நண்பன் ஒருவனின் கடை இப்போதான் புதியதாக பட்டுபுடவைகள் பகுதி திறந்திருக்கிறார்கள்.வா வா என்று அழைத்துக் கொண்டே இருந்தான். நான் மட்டும் போய் புடவை எடுப்பது எப்படி யாருக்கு கொடுக்க அம்மாவிற்கு பட்டு கட்டப் பிடிக்காது பருத்தி மட்டும்தான் போனால் கட்டாயம் எடுக்க வேண்டும். அதனால்தான் உன்னை அழைத்துப் போகிறேன்

தேர்வு செய்து தரவேண்டுமா.

தேர்வு மட்டும் இல்லை எடுத்து கொடுக்கிறேன் உடுத்திக்கொண்டும் வரவேண்டும். மனதிற்குள் நீரூற்றில் நனைந்ததைப் போன்று குளுமை இருந்தாலும், உங்கள் நண்பரின் கடை என்று சொல்கிறீர்கள் ஆனால், என்னை அழைத்துப் போனால் யார் என்று கேட்பார்களே ? முன்பின் அறியாத பெண்ணிற்கு புடவை எடுத்துத் தந்தால் உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை ?

நிறைய யோசிக்காதே அப்படி யாரும் பார்க்கவும் மாட்டார்கள். என் நண்பனுக்கு நம்மைப் பற்றி எல்லாம் தெரியும். 

நம்மைப் பற்றி….

அவன் புன்னகையுடன் இப்படித்தான் பேசிக்கொண்டே இருப்பாய் விஜி. நீ எப்போதும் இப்படி சாயம் போன தாவணியிலும் புடவையிலும் வருவது எனக்கு சற்று கஷ்டமாகவே உள்ளது. நான் உன்னிடம் சில விஷயங்கள் பேச வேண்டும் அதற்காக நாளை மறுதினம் நாம் மகாபலிபுரம் போகிறோம் அங்கே இதுபோன்ற உடைகளில் நீ வந்தால் உன்னைப் பற்றி தவறாக நினைப்பார்கள். அப்படிப் பார்க்காதே உடைகளுக்குள்ளும் ஒளிரும் உன் அழகு நான் மட்டும் அறிந்தால் போதுமா ? என்னுடன் வரும்போது எனக்கு சமமாக இருக்க வேண்டாமா ? அதனால் இன்று நான் எதை வாங்கித் தந்தாலும் அதை மறுக்காமல் நீ ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று விஜியை அழைத்துக் கொண்டு அந்த கடைக்குள் நுழைந்தான்.

ஒளிரும் விளக்குகள் வெளிச்சத்தில் சற்றே கூசித்தான் போனாள். அதிலும் வழுவழுவென்ற தரையில் பாதத்தை அழுத்தி வைத்து நடந்தாள். இம்மாதிரி கடைகளை எல்லாம் அவள் வெளியே நின்று ஏக்கத்தோடுதான் பார்க்க முடியும். அதிலும் விலை என்று ஒன்று இருக்கிறதே ?! 

அவனின் அருகில் நடக்கும் போது ஒவ்வொருவரின் மரியாதைக் கலந்த பயப்பார்வையும் என்ன வேண்டும் மேடம் என்ற கேள்வியும் ஏதோ பெரிய மகாராணியைப் போல உணர வைத்தது. அவன் கடைசிப்பந்தியை அழைத்தான் இவங்க அளவுக்கு ஏற்றாற் மாதிரி உடைகளைத் தேர்வு செய்து தாருங்கள் விலை பற்றிக் கவலையில் விஜி நீ தேர்வு செய்து கொண்டு வா நான் என் நண்பனை பார்த்து தொழில் விஷயமாக பேசிவருகிறேன். தயங்காதே உனக்கு தேவையானதை வாங்கிக்கொள் என்று சொல்லிவிட்டு அவன் மூடியிருந்த ஒரு அலுவலக அறைக்குள் செல்ல, விஜி அந்த சிப்பந்திப் பெண்ணுடன் சென்றாள். 

சேலைகளைத் தேர்வு செய்து அதற்கேற்றாற் போல சோளியும் அணிந்து பார்த்தாள். மேடம் இன்றிலிருந்து ஒருவாரத்திற்கு பிரைடல் மேக்கப் டிரைவல் அரேன்ஞ் பண்ணியிருக்காங்க இந்த ஷிபான் புடவைக்கு ஏற்றாற்போல தலையலங்காரமும் முக அலங்காரமும் சரி செய்தால் ரொம்ப எடுப்பா இருக்கும் செய்யட்டுமா

விஜி தலையசைத்தாள். அரைமணியில் ஆளையே மாற்றிக் காட்டிவிட்டார்கள் அப்பெண்கள். முகத்திற்கு ரூஜ் சேர்த்து கண்ணுக்கும் உதட்டுக்கும் சாயம் போட்டு எடுப்பாக காஜலையும் சேர்க்க அவளின் முகமும் அழகும் தனி சோபையைக் கூட்டினால் போல இருந்தது. ரொம்ப சந்தோஷமாக இருந்தது இந்த அலங்காரத்தில் அவன் பார்த்தால் நிச்சயம் மயங்குவான் இனி அபிராமியைப் பற்றி நினைத்துக் கூடப் பார்க்கமாட்டான் என்று  நினைப்பிலேயே அவனையே தேடினாள். 




 

என்னதான் எல்லாம் எடுத்துக் கொள் என்ற சொன்னாலும் இரண்டு ஷிபான் சேலைகளை மட்டும் எடுத்துக் கொண்டு காத்திருந்தாள். வெளியே வந்தவனின் கரங்களில் ஒரு பெட்டி இருந்தது. இந்தாம்மா எல்லாம் இந்தப் பயல் சொன்னான். ரொம்ப நல்லவன் தீலிபன் நண்பனின் தோளைத் தட்டி இது என்னுடைய பரிசு உனக்கு என்று அந்த பெட்டியை நீட்டினான். அவன் மனசிலே ஒரு குறை இருக்கு அதை போக்க வேண்டியது உன் பொறுப்பு என்று சொல்லிவிட்டு டேய் இத்தனை நேரம் பேசிட்டு இருந்தே அந்த டாக்குமெண்டில் கையெழுத்து போடலையே சிஸ்டர் நீங்க கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க ஐந்துநிமிடம் அவளின் அனுமதிகேட்டு அவர்கள் நகர, அதே நேரம் கடைக்குள் ராவனும் ராதிகாவும் நுழைய அவர்களைக் கண்டதும் மறைமுகமாக நின்று கவனிக்க தொடங்கினாள் விஜி.

ராகவன் அவளிடம் ஏதோ கேட்க அவள் தயங்கத்தோடு ஒரு சிரிப்புடன் பட்டுபுடவை செக்ஷனுக்குத்தான் நுழைந்தார்கள். அங்கே சில புடவைகளை காட்டி இளம் ரோஜா வண்ணத்தில் நீலவண்ண பூக்களும் கோல்டன் பார்டரும் சேர்ந்தார்ப்போல புடவையைத் தேர்வு செய்து அதை அவளின் மேல் போட்டு அழகு பார்க்க விஜியின் கண்கள் நெருப்பினைக் கக்கின இது எத்தனை நாளாக நடக்கிறது என்று கேள்விக்குறியுடன் அவர்களைப் பார்த்துக் கொண்டே இருக்க எதிர்ப்பட்ட சேல்ஸ் பெண்ணுடன் அவர்கள் கண்ணில் படாமல் நகர்ந்தாள் விஜி. 

கோவிலில் கூட்டம் சற்றே மட்டுப்பட்டு இருந்தது. பிராத்தனைகளை இறைவனின் முன்னால் சமர்ப்பித்துவிட்டு இருப்பிடம் நோக்கி நகரத் தொடங்கினார்கள். கோபுரத்தின் பின்புறம் இருந்த குளக்கரையில் இடைவெளி விட்டு அமர்ந்திருந்தார்கள் ரவியும் ராதிகாவும். 

இத்தனை சீக்கிரம் இப்படியொரு நிகழ்வினை ராதிகா எதிர்பார்க்கவில்லை. ஆன்ட்டி நான் கோவிலுக்குப் போகிறேன் எனக்கு துணைக்கு ராதிகாவை அழைத்துப் போகட்டுமா என்று அம்மாவிடம் வந்து நல்லபிள்ளை போல வந்து கேட்டு அபிராமி அழைத்தபோது அவளுக்கும் மூச்சு முட்டினாற்போல இருக்கும் இந்த இடத்தைவிட்டு வெளியே போனால் தேவலாம் போல தோன்றியது அதனால் அம்மாவிடம் கேட்கும் போதே போயிட்டு வரவாம்மா என்று கேட்டாள் ராதிகாவும். 

அம்மாவின் தலையசைப்பிற்கு பிறகு அப்பாவின் ஒற்றைப் பார்வையின் கழிந்து மீண்டும் அவர் இயல்பாக தன் சைக்கிளைத் துடைக்கத் தொடங்க அவர்கள் பயணமானார்கள். அங்கே அவளின் வாழ்க்கையின் நிலையே மாறப்போவது தெரியாமல்.




What’s your Reaction?
+1
7
+1
9
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!