Serial Stories என் காதல் ராட்சசி

என் காதல் ராட்சசி-18

18

அலுவலக அறைக்குள் வந்து நின்ற மகிதாவை கேள்வியாக பார்த்தார் சத்யேந்திரன். 

மகிதா இரு காது நுனியையும் தன்னிரு கைகளால் பற்றிக் கொண்டாள் “மன்னிச்சிடுங்க மாமா. பெரியவங்க நீங்க சொன்னா சரியாகத்தான் இருக்கும். நான் உங்களுடைய நியாயத்தை ஒத்துக் கொள்கிறேன்”

“என்ன சொல்கிறாய் ?ஒன்றும் புரியவில்லை”

“காதல் என்ற வார்த்தையே வீண் மாமா.நீங்கள் சொல்வது போல் அது பருவ காலத்தின் பக்குவமின்மை. பெரியவர்கள் பார்த்து செய்து வைக்கும் திருமணம்தான் நிலைத்து நிற்கும். இதற்கு சிறந்த உதாரணம் நம் திவ்யா”

மருமகள் தன் பக்கம் வந்துவிட்டதாக எண்ணி மலர்ந்து கொண்டே போன சத்யேந்திரனின் முகம் இறுதியாக அவள் திவ்யா பெயரை உச்சரிக்கவும் திக்கிட்டது.

“திவ்யாவிற்கு என்ன பிரச்சனை?” பதறினார்

“கதிரவன் சரி இல்லை அப்பா” ஆதித்யன் அறைக்குள் வந்தான்.

“ஆதி நாம்தான் விசாரித்தோமே, கொஞ்சம் வசதி குறைவான குடும்பம்,மற்றபடி கதிரவன் மேல் பழுது சொல்ல எதுவும் இல்லையே, எந்தக் கெட்ட பழக்கமும் கிடையாது”

“கெட்ட பழக்கம் என்று நீங்கள் எதனை சொல்கிறீர்கள் மாமா? தண்ணி அடிப்பது தம் அடிப்பது பெண்கள் பின்னால் சுற்றுவது இது மட்டுமே இல்லை .எவ்வளவோ கெட்ட விஷயங்கள் இருக்கிறது மாமா”

“வேறென்ன கதிரவன் என்ன செய்கிறான் என் மகளை?” சத்யேந்திரனின் குரல் நடுங்கியது.

“பாடி ஷேம் அப்பா” ஆதித்யன் மெல்லிய குரலில் சொல்ல சத்யேந்திரன் புரியாமல் பார்த்தார்.

———

“நேரா நேரத்திற்கு இப்படி வகை வகையாக செய்து சாப்பிடுவீர்களோ? அதனால் தான் இப்படி உருண்டு திரண்டு இருக்கிறாயோ?”

“ஏற்கனவே அணைந்த விளக்கு திரி நிறம் .இதில் இந்த பிரவுன் கலர் சுடிதாரில் உன் முகமும் தெரியவில்லை, உடலும் தெரியவில்லை”




 

“லைட்டை அணைத்து விட்டே வந்துவிடு. விடிவிளக்கு கூட வேண்டாம்”

“ஸ்கூட்டர் உனக்கு எப்படி பற்றும்? அந்த அளவு உன் அண்ணனுக்கு விவரம் தெரியாதா என்ன ?உனக்கு லாரி தான் வாங்கிக் கொடுக்க வேண்டும் அவர்”

“உன் வெயிட்டை விட இந்த பட்டுச்சேலை அரை கிலோ குறைவாக இருக்குமா?”

“கிலோ கிலோவாக எவ்வளவு நகையை மாட்டினாலும் திருவாரூர் தேருக்கு அலங்காரம் செய்து தெருவில் விட்டது போலத்தான் எனக்குத் தோன்றுகிறது”

ஒவ்வொன்றாக சொல்லிவிட்டு திவ்யா குமுறிக் குமுறி அழ பாட்டி அவள் தலையை தன் மடியில் வைத்து தடவி கொடுத்தார். அவர் முகம் செந்தனலாய் எரிந்து கொண்டிருந்தது.

——-

“என்ன ஆதி இதெல்லாம் ஒரு விஷயமா? சற்றே குண்டான கருப்பான மனைவியை குண்டம்மா, கறுப்பி என்று கூப்பிடும் ஆண்கள் நம் நாட்டில் நிறையவே இருக்கிறார்கள். இதுவும் அதுபோல தானே” மகனும் மருமகளும் குறிப்பிட்ட குறைபாட்டை சத்யேந்திரனால் புரிந்து கொள்ள முடியவில்லை.

“அப்பா அதெல்லாம் உங்கள் காலம். இந்தக் காலத்து பெண்கள் இப்படியான பேச்சுக்களை பொறுத்துப் போக மாட்டார்கள். பொறுத்துப்போகும் அவசியமும் அவர்களுக்கு கிடையாது “ஆதித்யன் விளக்க முற்பட சத்யேந்திரன் தலையசைத்தார்.

“நம் வீட்டிலேயே சில நேரங்களில் விளையாட்டாக திவ்யாவை கருவாச்சி என்று கூப்பிடுவோம் தானே?”

“அப்பா அது சிறு பிள்ளையில் விளையாட்டாக சொன்னது. இப்போது…”

பேசிக் கொண்டிருந்த ஆதித்யனின் கைப்பிடித்து நிறுத்திய மகிதா “மாமா பாட்டி உங்களை வீட்டிற்கு அழைத்து வரச் சொன்னார்கள்” என்றாள்.

வீட்டில் நடுக்கூடத்தில் தன் கைத்தடியுடன் நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்த தாயை அதிர்ச்சியாக பார்த்தார் சத்யேந்திரன்.

“என்னடா பார்க்கிறாய்? எனக்கு ஒன்றும் கிடையாது. உடம்பு சரியில்லாதது போல் நடித்தேன். காரணம் நீதான்” கர்ஜித்தார் பாட்டி.




What’s your Reaction?
+1
61
+1
29
+1
1
+1
7
+1
1
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!