Serial Stories பாதரஸ பற​வைகள்

பாதரஸ பற​வைகள் – 12

12

அபிராமி கல்லூரியின் வாசலில் நின்று கொண்டு இருந்தால் காலையில் கிளம்பும் போதே சிவாவிடம் பேசி மாலை வரச்சொல்லியிருந்தாள். புதிதாக வீட்டுக்கு வந்திருந்த விஜியின் செயல்பாடுகள் எதுவும் அவளுக்குப் பிடிக்கவில்லை, சிவாவை அவள் வைத்த கண் வாங்காமல் பார்த்ததும், காலையில் ஏதோ ஒரு சாக்கு வைத்து பேசுவதும் அபிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை, காலையில் அவர்கள் பேசும் போது கத்தரித்தாலும் இதைப் பற்றி தெளிவாக பேசிவிட்டால் சிவா ஓரளவிற்கு மேனேஜ் பண்ணிக்கொள்வான் என்று தோன்றியது. அபிராமி எதிர்பார்த்தபடியே சிவா வாசலில் நின்றுகொண்டிருந்தான். 

அருகில் சென்றதும் வசீகரமாய் சிரித்தான். வாங்க அந்த காபி ஷாப்பிலே போய் பேசுவோம் ஏதும் பேசாமல் அபிராமியின் பின்னால் நடந்தான். இடம் தேர்வு செய்து அமர்ந்ததும் என்ன அமைதியாகவே இருக்கீங்க ஒருவேளை உங்க புது தோழி வரலைன்னு கோபமா இல்லை காலையிலே பேச வந்தப்போ நான் நடுவிலே நந்தி மாதிரி இருந்திட்டேன்னு….

என்ன அபிராமி ஏன் இப்படியெல்லாம் பேசறீங்க ? விஜி சின்னப்பொண்ணு நம்ம காலனிக்கு புதுசா வந்திருக்காங்க நான் கிளம்பும் போது எந்தப் பக்கம் பஸ்ஸாண்ட்டுன்னு கேட்டாங்க சரி வாங்கன்னு கூட்டிட்டு வந்தேன். வயசுப்பொண்ணுங்கிறதால நான் இன்னைக்கு பைக்கூட எடுக்கலை 

அப்போ பைக்கில் கூட்டிட்டுப் போற ஐடியா வேற இருந்ததா ? நான் வந்து கெடுத்திட்டேன் இல்லை….

அட கஷ்டகாலமே ?! என் பைக்கில் உட்காரும் உரிமை நான் கல்யாணம் செய்துக்கொள்ளப்போகும் பெண்ணிற்கு மட்டும்தான் உண்டு. இடையில் பேரர் வந்து காபியும் இரண்டு பஜ்ஜிகளையும் வைத்து விட்டுப்போக அமைதியாய் சாப்பிட்டார்கள். 

சிவா உங்க மனசில என்னைப் பற்றி என்ன நினைத்திருக்கீங்கன்னு தெரியலை ஆனா உங்களோட குறும்பும் பேச்சும் எனக்கு ரொம்பவும் பிடிக்கும், ஈர்ப்பு இருந்தாலும் நீங்களும் ஒரு ஆண்மகன் யாருமில்லாத ஒரு நிலையிலே வாழறது எத்தனை கஷ்டன்னு எனக்கு மட்டுமில்ல உங்களுக்கும் நல்லாவேத் தெரியும் ஆனா நீங்க பின்னாடி வந்தப்போ எம் மனசுல சில குழப்பங்கள் இருந்தது என் பக்கத்து வீட்டுக்காரங்கன்னு தவிர உங்களைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது அப்படியே தெரிந்தாலும் என் படிப்பு முடியும் வரையில் நான் அமைதியா இருக்கணுமின்னு நினைச்சேன் நடுவிலே மதன் பிரச்சனை அதை பற்றிய விளக்கத்தை நான் தரணுமின்னு நீங்க எதிர்பார்த்தா ….




உன்னைப் பற்றி எனக்குத் தெரியும் அபிராமி அப்போ நான் உன்னைப் பின்தொடர்ந்ததற்கு காரணம் கூட அவனால் உனக்கு ஏதாவது பிரச்சனை வந்திடுமோன்னு பயந்து தானே தவிர உன்மேல் சந்தேகப்பட்டு இல்லை 

நல்லது. உங்களை மாதிரி சட்டுன்னு என்னால பேச முடியலை சிவா, ஆனா பாட்டிதான் என் உலகம் அந்த உலகத்தில் நான் யாரையும் அனுமதிப்பதைப் பற்றி யோசிக்கவே இல்லை, உங்க மேல ஒரு அபிப்ராயம் வந்தப்ப கூட நான் என் அம்மா போட்டோ முன்பு மானசீகமா பேசினேன் ஒப்புதல் தந்தாமாதிரிதான் தோணுசிச்சு ஆனா எனக்கு தெளிவு தேவைப்பட்டது என் சொந்தக்காலில் நான் நிற்கும் குறைந்தது என்னோட தேவைகளுக்காவவது தாலி கட்டினதுக்காக ஒரு ஆண்மகனை எதிர்பார்க்கக் கூடாது, அதனால நான் என் மனசை மூடி வைச்சிருந்தேன். ஆனா இப்போ

விஜியைப் பார்த்ததும் பயம் வந்திட்டது நான் எங்கே அந்தப் பொண்ணை லவ் பண்ணிடுவேனோன்னு தானே என்னையும் மதன் போலவே நினைச்சிட்டியே அபி

நிச்சயமா இல்லை பயம் வந்தது உண்மை அது அந்த பொண்ணு மேல அவளும் கஷ்டப்படற பொண்ணு போலத்தான் தெரியுது நம்ம மனசை நாம முதல்லயே தெளிவா சொல்லிட்டா அவளோட கற்பனைகளை வீணா வளர்க்க வேண்டாமே, அதனாலதான் அவகிட்டே கொஞ்சம் கோபமா நடந்துக்க வேண்டியதாகப் போச்சு, ஆனாலும் அவளையும் உங்களையும் ஒண்ணா பார்த்தப்போ லைட்டா கோவம் வந்தது

லைட்டாவா.. விட்டா நீ என்னை எரிச்சிருப்பே பேருதான் அபிராமின்னு சாதுவான பெயர் ஆனா கண்ணு பத்திரகாளி மாதிரி இருந்தது காலையிலே, அபி எனக்கு எப்போதும் நீதான் உன்னை மட்டும்தான் என் மனசிலே ராணியா வைச்சிருக்கேன். மதன் கூட உன் பழக்கம் பார்த்தப்பவே இலைமேல் தண்ணீர் போலத்தான்னு தோணுச்சி ஏதோவொரு காரணத்திற்காக நீ நடத்திற நாடகன்னு நான் புரிஞ்சிக்கிட்டேன். அது சரியாகவே போச்சு என் மனசுக்கு பிடிச்ச பொண்ணுக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாதுன்னுதான் உன்னை நிழலா தொடர்ந்தேனே தவிர வேற ஒன்றும் இல்லை அப்படியே நீ அந்த மதனை விரும்பியிருந்தாலும் உன்னோட நேர்மையான குணத்துக்கு அவனைப் பற்றி தெரிந்ததும் திரும்பிக் கூட பார்க்கமாட்டேன்னு எனக்கு தெரியும் நீ நெருப்பு அபிராமி உன்கிட்டே குற்றம் குறைகள் இருக்காது.

ரொம்ப நன்றி சிவா என்மனசிலே ஒரு சின்ன உறுத்தல் இருந்து கிட்டே இருந்தது நமக்குள்ளே ஒரு விலகல் இதனால் ஏற்படுமோன்னு இப்போ என் மனசை நான் சொல்லிட்டேன் இது சினிமாவோ கதையோ இல்லை கட்டிப்புடுச்சி முத்தம் கொடுத்து காதலை பகிர்ந்துக்க நான் என்னை என் அன்பை நேர்மையா வெளிப்படுத்திட்டேன் இனிமே நீங்கதான் சொல்லணும்

நான் என்ன சொல்றது இப்பவே கல்யாணம் பண்ணிக்க சொன்னாலும் தயார் ஆனால் எனக்கும் ஒரு கணவனா நிறைய கடமைகள் இருக்கு, இன்னும் கொஞ்சம் என் லைப்பை ஸ்டிடி பண்ணிக்கணும் பேங்கில் லோன் ஏற்பாடு செய்திருக்கிறேன் நிச்சயம் கிடைச்சிடும் நம்ம நல்ல வாழ்க்கை வாழப்போறோம் அபிராமி.




சரிபோகலாம் பாட்டி தேடுவாங்க சொன்னது நினைவிருக்கட்டும் விரல் நீட்டி எச்சரித்துவிட்டு சிரித்தபடியே அபிராமி பஸ்ஸாண்டை நோக்கி நடக்க சிவா தன் வண்டியைக் கிளப்பிவிட்டு நகர்ந்தான். எதிர்சாரியில் காருக்குள் அமர்ந்து கொண்டு விஜியும், மதனும் அவர்கள் இருவரையும் வயிறு எரியப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள். 

இதுக்குத்தான் காலையிலே சிவாவோட என்னைப் பார்த்ததும் அந்த எகிறு எகிறினாளோ என்று அபிராமியைக் கருவினாள். மதனின் மனதும் முகமும் எதையும் காட்டாமல் இறுகலாகவே இருந்தது. விஜியின் முகத்தில் விழுந்த நிழலையும் கவனித்துவிட்டான் இவளை வைத்துதான் காய் நகர்த்த வேண்டும் என்று முடிவு கட்டிவிட்டு தெருமுனையிலேயே விஜியை இறக்கிவிட்டு விட்டு காலையில் நீ வந்துவிடு மாலை நானே வந்து விட்டுவிடுகிறேன் என்று அவள் கன்னத்தை தட்டி விட்டு சென்றான். 

விஜிக்கு அவன் தட்டிய இடம் குறுகுறுவென்று இருந்தது. புன்னகையோடு வெளியே வர ராதிகா தன் கைப்பிள்ளையோடு சிவாவிடம் நின்று பேசிக்கொண்டு இருந்ததைக் கண்டதும் மேலும் எரிந்தது. 

அதென்ன நட்டநடு வீட்டுலே அந்நிய ஆடவன் கூட பேச்சு உனக்கு சொல்புத்தியும் இல்லை சுயபுத்தியும் இல்லை ஆயிரத்தெட்டு நியாயம் போதிக்கும் உன் அம்மா எங்கேபோயிட்டா ? கேட்க ஆளில்லைன்னு இப்படி நின்னு சீன் போடறீயா ? வெட்கமாயில்லை புருஷன் போயிட்டான் புள்ளையோட ஒரு மூலையிலே விழுந்து கிடக்க வேண்டியதுதானே, இந்த குடும்பத்திற்காக மாடுமாதிரி உழைச்சிடடு வர்றேன் நீ ஜாலியா கூத்தடிக்கிறே ? விஜயின் உச்சக்கட்ட கத்தலில் காம்பெளண்டு மொத்தமும் கூடிவிட சிவாவின் கரங்களில் இருந்து குழந்தையை வெடுக்கென்று பிடுங்கியபடியே அழுத கண்களோடு வீட்டுக்குள் ஓடினாள் ராதிகா.

சிவா அபிராமியின் ​மேலுள்ள ஆத்திரம் அத்தனையும் சேர்ந்து ராதிகாவின் மேல் சொல்லம்புகளாக விழ அவள் நெருப்பில் விழுந்த புழுவைப் போல் துடித்துப் போனாள்  அரைமணிக்கு முன்னதாகவே வந்திருந்த ராகவனின் கண்களில் ராதிகாவின் கண்ணீர் முகம் ​சோகச் சித்திரமாய் மனதில் நி​லைத்துப்​போனது. 




 

What’s your Reaction?
+1
5
+1
6
+1
0
+1
0
+1
0
+1
0
+1
3
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!