Serial Stories பாதரஸ பற​வைகள்

பாதரஸ பற​வைகள்-13

13

பிள்ளையை வாரி அணைத்துக் கொண்டாள் ராதிகா. பெண்களின் பிரிக்கப்பட்ட இரண்டு வாழ்க்கையின் நிலையில் பிறந்தகமும் புகுந்தகமும் இரண்டுமே தள்ளிநின்று பார்க்க கூடிய ஒரு நிலையையினைத்தான் உருவாக்கிக் கொண்டு இருக்கிறது. அப்படியொரு நிலைதான் ராதிகாவிற்கும். திருமணத்திற்கு முன்னாலும் கூட எதிலும் கலந்து கொள்ளாத தந்தை, தான் வைத்ததுதான் சட்டம் என்று சுயநலத்தின் மொத்த உருவமான தங்கை, சிறுவயதில் இருந்தே தனக்கான ஒரே ஜீவன் என்றால் அது அம்மா மட்டும்தான் எத்தனையோ கொடுமைகளை தாங்கியிருக்கிறாள் அவர்களையே அவள் எதிர்த்தது என் வாழ்விற்காகத்தான் ஆனால் அதுவும் கோணலாகிப் போய்விட்டது. 

தனக்கு அப்பறம் இந்த பெண்ணிற்கு யார் என்ற எண்ணமே அவளை கலையிழந்த ஓவியமாக்கிவிட்ட போது தையல் மட்டுமே ராதிகாவிற்கு கைகொடுத்தது பழைய வீடுகளில் அக்கம் பக்கத்தினரின் உடைகளை வாங்கித் தைத்துக் கொடுத்தாள் ஆனா ல் இங்கே புதியதாய் வந்த இடத்தில் அதுவும் இல்லை, தன் வயதிற்கும் மீறிய ஒரு பிள்ளையின் முதிர்ச்சியோடு ராதிகாவின் வேலைச் சமயங்களில் அவளைத் தொந்தரவு செய்ததேயில்லை குழந்தை, அவள் எல்லா வேலையும் முடித்துவிட்டு வரும் வரையில் கைக்கு அகப்பட்ட பொருட்களை வைத்து விளையாடிக் கொண்டே இருப்பான் அடிக்கடி அன்னையின் முகம் கண்களில் படுவது மட்டுமே அவனின் விருப்பமாக இருக்கும். பிள்ளையை அழைத்துக்கொண்டு உணவை ஊட்டிவிட்டு விளையாட்டு காட்டிக்கொண்டு இருந்தாள். அந்தப் பக்கமாய் சென்ற சிவாவை குழந்தையின் செய்கைகள் ஈர்க்க ரொம்ப சேட்டைப் பயல் என்று ராதிகாவிடம் பேச்சு கொடுத்தான்.

என்னங்க ஒரே சேட்டை பண்றானா 

அ​தெல்லாம் இல்​லைங்க என்ற ஒற்​றை வார்த்​தை​யோடு நிறுத்திக்​கொண்டாள் சிவாதான் குழந்​தை​யோடு வி​ளையாடிக்​zzகொண்டு இருந்தான்

ராகவன் முன்னால் மருண்ட பார்வையோடு தண்ணீரில் தழும்பும் மீனாய் விழிகளில் நீரோடு சென்ற அந்த பெண்ணின் முகமே கண்ணுக்குத் தெரிந்தது. லட்சுமிக்கு தலைகால் புரியவில்லை, அம்மா உன்னை என் கூட தங்க ஒத்துக்குவான்னு நான் நினைக்கவே இல்லை

ஏன் சித்தி இப்படி பேசறீங்க ? எனக்கும் அம்மாக்கும் உங்களையும் சித்தப்பாவையும் விட்டா வேற யார் இருக்காங்க ? அம்மாவுக்கு வேற ஏதும் ஹோட்டல் தங்காமல் உங்க கூட இருக்கிறதுதான் பிடிக்கும். நான் குளிச்சிட்டு வந்திடறேன் பசிக்குது சீக்கிரம் சாப்பாடு தயார் செய்யுங்கள்.

ராகவனின் வருகையினை சகோதரிக்கு தெரிவித்தபிறகு சிவாவிடம் அவனை அறிமுகப்படுத்தி தங்கும் அறைக்கு ஏற்பாடு செய்திருந்தாள் லட்சுமி. சிவா ரொம்ப தங்கமான பையன் ராகவா இங்கே உனக்கு தங்க வசதிகளைப் பற்றி யோசித்த போது சிவாவின் அறை சரியாக இருக்குன்னு தோணிச்சி. ஒரே வயதையொத்தவர்கள் இல்லையா பொழுதும் நல்லா கழியும். 

அறிமுகப்படுத்திய சற்று நேரத்திற்கெல்லாம் சிவாவும் ராகவனும் நண்பர்களாகிவிட்டனர். கலகலப்பான பேச்சும் சுபாவமும் கொண்ட சிவாவை ராகவனுக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டது. வாங்க ராகவன் காலாரா நடந்திட்டு வரலாம் தூக்கமும் நல்லா வரும் என்று சிவாவின் அலமாரியில் இருந்து ஒரு புத்தகத்தை புரட்டிக் கொண்டு இருந்த ராகவன் கிளம்பினான்..

நாம் செல்லும் இடத்தில் எல்லாம் ஒரே வயதையொத்த நண்பர்கள் கிடைப்பது அரிது. இதிலும் நான் லக்கிதான்.  அப்படியே நமக்குள் என்ன வாங்க போங்க எல்லாம் வா போன்னே கூப்பிடலாம் சிவா….என்ற ராகவனுக்கு தலையசைத்து நடைபயணத்தை மேற்கொண்டார்கள்.  நேரம் 9மணியை நெருங்கிக் கொண்டு இருந்தபடியால், பெரும்பாலும் மக்கள் அந்த காலணியைத் தாண்டி உறங்கிக் கொண்டும், உறக்கத்திற்கான ஆயத்தங்கங்களை மேற்கொண்டும் இருந்தார்கள். 

மடை திறந்த வெள்ளத்தைப் போல தனது பால்யத்தைப் பற்றி பேசத் தொடங்கினான் ராகவன். எனக்கு அப்பா இல்லை சிவா அம்மா மட்டும்தான் சின்னவயசில அவங்க எப்படியிருப்பாங்க தெரியுமா ஆனா பலநேரம் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிப் போன அப்பாகூட சண்டை போடவே நேரம் சரியா இருந்தது. அவர்கிட்டே இருந்து இந்த சொத்தையும் என்னையும் காப்பாற்றவும் போராடவே நேரம் போச்சு, அப்பா இறந்தபிறகு சுத்தியிருக்கிறே சொந்தக்காரங்ககிட்டே இருந்து தப்பிக்கணுமே, பணம் இருந்தாலும் சரி, இல்லைன்னாலும் சரி பாதுகாப்பு இல்லாத அரண்மனைக்கு காவலாளி மாதிரி எனக்காகவே மிஞ்சியிருந்த வாழ்க்கையை வாழ்ந்தவங்க அம்மா அப்போ அவங்களுக்கு ஆதரவு சித்தி மட்டும்தான். நல்லா படிச்சேன் கேம்பஸ் இண்டர்வியூவில் செலக்ட் ஆனேன், வெளியூர்ல வேலைக்குப் போறேன்னு நினைச்சப்போ அம்மாவை விட்டுட்டுப் போறோமேன்னு கொஞ்சம் கவலையா இருந்தது எங்களோட பழைய வீட்டை வாடகைக்கு விட்டு அவங்களைப் பாதுகாப்புக்கு வைச்சிட்டுத்தான் நான் நிம்மதியா போனேன். 




எட்டு வருஷ எக்ஸ்பீரியன்ஸ் எங்க கம்பெனி நிர்வாகம் சென்னையில ஒரு பிரான்ஞ் தொடங்க போறாங்க. இடம் பார்த்தாச்சு, எங்க பொருட்களுக்கு வரவேற்பு எப்படியிருக்குன்னு பார்க்கணும், வென்டார்ஸ், கஸ்டமர்ஸ் சேல்ஸ் புரோமஷன்னு எல்லா விஷயங்களையும் செக் பண்ணி ரிப்போர்ட் தயார் பண்ணி அனுப்பனும். இதுக்கு நடுவிலே சித்தியும் அம்மாவும் சேர்ந்து எனக்கு எப்படியாவது கல்யாணம் செய்யணுமின்னு வேற  

ஒரு சதியா​லோச​னை பண்ணிட்டு இருக்காங்க.

நல்ல விஷயம்தான் பொண்ணெல்லாம் பார்த்தாச்சா ?

தெரியலை இரண்டு மூணுநாளாவே அம்மாவும் சித்தியும் குசுகுசுன்னு பேசிட்டே இருக்காங்க, யாரையாவது என் தலையிலே கட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கு  இல்லை. ராகவனின் சிரிப்பில் தானும் கலந்து கொண்டான் சிவா.

நமக்குன்னு ஒரு விஷயத்தை பார்த்துப் பார்த்து செய்யும் உறவுகள் கிடைக்கிறது ரொம்பவும் அசீர்வதிக்கப்பட்ட விஷயம்  ராகவா நானெல்லாம் அதுக்காக நிறைய ஏங்கியிருக்கேன். 

ம்…நாம யாருக்கு பிறக்கிறோன்னு நாம முடிவு செய்வது இல்லை சிவா, எல்லாருக்கும் எல்லாம் கிடைத்துவிடுவதில்லை எனக்கு முதுகெலும்பா அம்மா இருந்தாங்க சோர்ந்தப்போ தலை கோதிவிட, ஆனா யாருமில்லாம சுயம்புவா நீங்க முன்னுக்கு வந்திருக்கீங்க அது பெருமைதானே.  சீக்கிரம் கல்யாணம் செய்துக்கோங்க வெறுமை தன்னால் குறைஞ்சிடும்.

அதுக்கும் வாய்ப்பிருக்கு இப்போதான் லவ்வுலே சிக்னல் விழுந்திருக்கு கொஞ்ச நாள் அதை அனுபவிப்போம் அப்பறம் கல்யாணம் செய்துக்கலாம்.

சூப்பர் . நாளைக்கு லீவுதான் சிவா எங்கேயாவது வெளியே போகலாமா ?! ஏதாவது மூவி..

போகலாம் …. இப்போ வீட்டுக்குப் போவோம். நாளைக்கு எனக்கும் லீவு அதிலும் நாளைக்கு பெளர்ணமி நிலாச்சோறு சாப்பிடும் வழக்கம் உண்டு எங்கேயிருந்தாலும் நைட்டு வீட்டுக்குள்ளே வந்திடணும். அதிலும் நீங்க வேற புதுசா வந்திருக்கீங்க உங்களுக்காகவே லட்சுமி அக்கா ரொம்ப ஸ்பெஷலா சமைப்பாங்க. 

இருவரும் சிரித்து பேசியபடியே காலணிக்குள் நுழைய தன் வீட்டின் முன் அமர்ந்து பாத்திரம் விளக்கிக் கொண்டு இருந்த ராதிகா சட்டென்று உள்ளே நுழைந்து கொண்டாள். சிவா அதைக் கவனிக்கவில்லையெனினும், ராகவனின் பார்வையில் பட்டுவிட்டது. தன்னைக் கண்டதும் அவள் பயந்து உள்ளே சென்றிருக்கிறாள் அதற்கு காரணம் ​​நேற்று ​நெருப்​பைக் கக்கிய அந்த​பெண்ணின் ​பேச்சுதான் என்று என்பது புரிந்து இருந்தது ராகவனுக்கு யாரிவள்  ?. 

ராதிகாவின் கண்களில் நீர் தழும்பியது தடாகத்தில் மிதக்கும் மீனைப் போல இருந்தது. அற்புதமான முகம் ஆனால் தெளிவாக உணர்வுகள் துடைக்கப்பட்டு இருந்தது அந்த முகத்தில் யார் அந்த பெண் ? என்ற கேள்வியில் நிமிர்ந்த சிவாவைக் கண்டபிறகு நாக்கைக் கடித்துக் கொண்டான் ராகவன். 

என்னடாயிது ? வந்து ஒரு நாள் கூட முழுசா ஆகலை, ஆனா அதுக்குள்ளே பொண்ணா ? கிண்டலாக கேட்டுவிட்டு அது சரி இங்கே நிறைய பெண்கள் இருக்காங்க நீ எந்தப் பெண்ணைச் சொல்றே ?

நாம காலணிக்குள்ளே வரும்போது ஒரு பொண்ணு வந்தாளே ?

விஜியா அவங்க குடும்பம் இந்த காலணிக்கு புதுசா வந்திருக்காங்க. நல்ல பொண்ணுதான் கொஞ்சம் வாய்துடுக்கு, மத்தபடி வேற எதுவும் தெரியாது. 

அவ இல்லைப்பா அவ பேசினப்போ ஒரு பொண்ணு அழுதுகிட்டே உள்ளே போனாங்களே அவங்க ?! நண்பன் படுப்பதற்கு தோதாக படுக்கையைத் தயார் செய்தவன் அது ராதிகா விஜியோட அக்கா ஏன் அவங்களைப் பற்றிக் கேட்குறே தம்பி

தெரியலை எனக்கு எதையும் ஒளிச்சி மறைச்சி பேசுவதில்லை அதிலும் நீ என் நண்பன் என்று ஆன பிறகு உன்னிடம் எதையும் மறைக்கப்போவதில்லை, எத்தனையோ பெண்களை நான் சந்தித்திருக்கிறேன் ஆனால் இந்த பெண் என்னை ரொம்பவும் தொந்தரவு செய்கிறாள். அதிலும் அவளின் முழுமையடையாத வெற்று நெற்றி பரிதாபம் ததும்பிடப் பார்த்த கண்கள், பயந்து மருண்ட போது மானைப் போன்ற தோற்றம் புலியின் குகைக்குள் அகப்பட்ட மானைப் போல அவள். என்னவோ அவளின் துயரத்தை உடனே தீர்க்கவேண்டும் என்ற வெறி எனக்குள் தோன்றி வருகிறது.

அந்த பெண் பற்றி எனக்கு அத்தனை தெரியாது என்றாலும் ஏற்கனவே திருமணமாகி கணவனை இழந்தவள் என்பதை அறிவேன் ராகவா ஆனால் நண்பன் என்பதால் உரிமையோடு கேட்கிறேன் நீ இருக்கப்போவது கொஞ்சநாள் அதுவரையில் அநாதரவற்ற அதிக பின்புலமில்லாத ஒரு பெண் அவளிடம் வேறு ஏதாவது காரணத்திற்காக…




ச்சீ… நான் அப்படிப்பட்டவன் இல்லை, உண்மையான ஒரு அன்பிற்கு ஆயுள் கிடையாது நான் ஒன்றும் கண்டதும் காதல் கொண்டு அந்த பெண்ணின் பின்னால் அலைந்து விஷயம் தீர்ந்ததும் அவளை விட்டுவிட்டுப் போகும் எண்ணமும் இல்லை நான் பண்பட்டவன் சிவா, சந்தர்ப்பவாதியில்லை தயவு செய்து என்னை நம்பு அம்மா என் பேச்சும் விருப்பத்திற்கும் நிச்சயம் எதிர்ப்பு சொல்லப்போவதில்லை  என் மனம் அதன் நினைப்புதான் முக்கியம் ராதிகா அதுதானே அவளின் பெயர் அவளை நான் மணம் செய்து கொள்ள விரும்புகிறேன் அதுக்கு உன்னோட உதவிதான் எனக்குத் தேவை, 

அடப்பாவி நீயென்ன என்னைவிடவும் பாஸ்ட்டா இருக்கே வந்து ஒருநாள் முழுசா முடியலை அதுக்குள்ளே லவ்வா…கொஞ்சம் பொறு ராகவா. ஒருவேளை நீ வளர்ந்த சூழலினால் ராதிகாவின் இந்த நிலை உனக்குள் ஒரு பரிதாபத்தை வரவழைத்து இருக்கலாம் அதை காதல்ன்னு முத்திரை குத்த வேண்டாம்.

சத்தியமா இது ஈர்ப்பு இல்லை நான் விடலைப் பையனும் இல்லை

ஒத்துக்கறேன். ஆனால் அந்தப்பொண்ணைப் பத்தியும் நீ யோசிக்கணும் சாதாரண பேச்சையே தாங்கிக் முடியலை இது அவளோட எதிர்காலம் எத்தனைபேரை அவ சமாளிக்க வேண்டியிருக்கும் அதுக்கு அவ தயாரான்னு தெரியவேண்டாமா ? கொஞ்சநாள் காத்திரு. உன் காதல் உண்மைன்னு நீயும், அதை ஏற்றுக்கொள்ள அவளும் முன்வந்தால் உங்களை சேர்த்துவைக்க நானாச்சு என்று சூளுரைத்தான் சிவா. அவனை கட்டியணைத்துக் கொண்டான் ராகவன்.

இங்கே பக்கத்திலே நம்ம ராகவனுக்கு ஏத்தாமாதிரி ஒன்று பொண்ணு இருக்கா பேரு அபிராமி அத்தனை அழகு அப்பாஅம்மா இல்லை ஆனா சொத்துபத்து இருக்கு நீ நேரில வந்து பாரு அப்பறம் முடிவு செய்யலாம் லட்சுமி வெகு சுவாரஸ்யமாய் தன் அம்மாவிடம் பேசியதை ராகவன் அறிந்திருக்கப்போவதில்லை நண்பனின் பேச்சில் நிம்மதியாய் ராதிகாவின் நினைவுகளோடு உறக்கப்போனான் அவன்.




 

What’s your Reaction?
+1
9
+1
5
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!