Serial Stories தோட்டக் கலை நெஞ்சம் மறக்கவில்லை

நெஞ்சம் மறக்கவில்லை-24 (நிறைவு)

24

பிறரோடு ஒப்பிட்டுப் பார்க்கதவரை எல்லோருடைய வாழ்க்கையிலும் இன்பம் தான்…. போராட்டம் இல்லாத வாழ்க்கை உப்பு கசப்பில்லாத உணவைப் போல, அந்த மாதிரி மலர் தன் காதலில் மிகுந்த போராட்டத்தை சந்தித்து விட்டாள். ஆனால், ஆனந்தனின் அத்தனை நல்ல குணங்களும்,வெளி வந்த பிறகு இருதலை கொள்ளி எறும்பாய் தவித்தாள்.

ஆனந்த் உண்மையை மூடி போட்டு பூட்டி விட்டு அன்புயென்னும் சாவியால் திறக்க வந்த உங்களையும் வெறுத்தேனே, திருமணம் என்ற கூரைக்கு அன்பும் நம்பிக்கையும் தானே தூண் அந்த ஆதாரத்தையே சந்தேகம் எனும் உளி கொண்டு தகர்த்து விட்டேனே!

வாழ்க்கையில் செய்யும் தவறுகள் வெளிச்சத்துடன் பிறந்த நிழல்களைப் போன்றவை, உங்களைப் பின் தொடர்ந்தே போகும் என்பது எத்தனை உண்மையான வார்த்தைகள்.

பகல் அறிந்திராத இருள், வெளிச்சத்தின் மறுகோடி எல்லாம் முடிந்து விட்டதா? நான் செய்த தவறு என்னை உங்களிடம் இருந்து பிரித்து விட்டது. சகல விதமான அந்தஸ்தோடு அழகே உருவாய் ஒரு பெண், இந்தப் பாவி கொண்ட காதலினால் தானே அதனை வேண்டாமென்று சொன்னீர்கள், ரத்னா சொன்னது போல் நான் உங்களுக்கு ஏற்றவள் இல்லை. இனி உங்க முகத்தில் விழிக்க கூட தகுதியில்லாதவள்.

தோட்டம் இருளைப் போர்த்தி இருந்தாலும் பௌர்ணமி நிலவு விளக்கென சுடர் விட்டுக் கொண்டிருந்தது. சிறிய குட்டையில் நீர் தேங்கியிருந்தது அதில் தாமரை இலைகள் மிதந்திருந்தன். நடு நடுவே அல்லியும் பூத்திருந்து கொள்ளை அழகாய் இருக்க அதை அனுபவிக்க, அழகை ரசிக்கும் நிலையில் மலர் இல்லை. மலர் கண்களில் இருந்து நீர் சுரந்து கொண்டே இருந்தது.

அவன் பெயர்ச் சொல்லிய படியே இதழ்கள் அரற்றியபடி இருக்க, நீரில் ஆனந்தன் முகம் தெரிந்தது.

“என்னை மன்னிது விடுங்கள் ஆனந்த், நான் பெரிய தவறு செய்து விட்டேன். எத்தனை முறை உங்களை வார்த்தையால் தாக்கி இருக்கிறேன். நம்பிக்கையிழந்த நான் உங்களை காதலிக்க தகுதியில்லாதவள். இனி இப்பிறவியில் நீங்கள் எனக்கில்லை.” மடியில் மடியில் முகம் புதைத்து அழுதவளை தொட்டான் ஆனந்தன்.

தன் மேல் உண்டான ஸ்பரிசத்தால் அதிர்ந்த மலர், “நீங்களா?” பரபரவென்று கண்களைத் துடைத்தாள்.

“நானே தான் நிழலோடு ஏன் பேச வேண்டும் மலர், இதோ நிஜமாய் நானே வந்து விட்டேனே.”

“இல்லை நான் போகணும்”

“நில்லு, நான் உன் கூட பேசணும்”

“என்னிடம் பேச என்ன இருக்கிறது”




“நிறைய என் உயிரே நீதானே நான் நேரடியா விஷயத்திற்கே வருகிறேன்.”

“வேண்டாம் ஆனந்த் நான் எதையும் கேட்கும் மன நிலையில் இல்லை”

“நானும் இன்று உன்னிடம் ஒரு முடிவு கேட்காமல் போவதில்லை. அம்மா பேசியதை நீயும் கேட்கத்தானே செய்தாய். மலர் இன்னும் எத்தனை நாட்களுக்கு உனக்காக நான் காத்து இருக்கனும்”

“நான் உங்களை காத்திருக்க சொல்லவில்லையே, நீங்க தாராளமா, ரத்னாவை கல்யாணம் செய்துக்கலாம் எனக்கு ஆட்சேபனையும் இல்லை.”

“பைத்தியகாரி மாதிரி பேசாதே! நீ என் மனதில் இருக்கும் போது, நான் எப்படி இன்னொருத்தியை மணக்க முடியும். மலர் உன் விலகலை சகித்துக் கொண்ட என்னால் உன் பிரிவைத் தாங்கிக் கொள்ள முடியாது!”

“ஆனந்த்!”

“மலர் எப்படி என் அன்பை நான் வெளிபடுத்த வேண்டும் என்று சொல்லு. நானும் எப்படியெல்லாமோ செய்து பாத்து விட்டேன். நாளாக நாளாக என்னை விட்டு நீ பிரிந்து சென்று விடுவாயோ என்று எனக்கும் பயமாக உள்ளது.

“ப்ளீஸ் ஆனந்த் உங்க அன்பிற்கு நான் தகுதியானவள் இல்லை, சந்தேகங்கிற பேய் என் மனசுக்குள்ளே புகுந்துகிட்டு தூய்மையான அன்பை, காதலை நான் தூக்கியெறிஞ்சிட்டேன்.”

“மலர்..”

“உண்மைதான் ஆனந்த் உங்க அன்பை அடைய ரத்னா தான் சரியானவள் எல்லாவிதத்திலும் அவள் தான் பொருத்தமானவள்”

“உன் உதடுகள் தான் இந்த வார்த்தையை சொல்லுகிறது மலர், உள்ளத்தில் நான் தான் குடி இருக்கிறேன் என்று நானறிவேன். எங்கே என் கண்ணைப் பார்த்துச் சொல்லு. நீ.. உன் மனசில் நான் இல்லை என்று?”

அவளின் தோள்களைப் பிடித்து தன்புறம் திருப்பினான். ” நீ என்னை நேசிக்கிற, அது எனக்குத் தெரியும். என் அன்பும் பரிசுத்தமானது. நீ என் மேல் கொண்ட அதீதமான காதல் தான் என்னை சந்தேகப் பட வைத்தது.”

“மேல் பூச்சு பூசவேண்டாம் ஆனந்தன் இது தான் என் முடிவு நான் இனி இங்கிருப்பதும் சரியில்லை, மலர் நகர முற்படவும்”

“நான் உன்னைப் போக விட்டால் தானே என்று வேகமாய் இழுத்தனைத்து, இறுக கட்டிக் கொண்டான். சில விநாடிகள் திமிறிய மலரால் அந்த அணைப்பினுள் இருந்து விலக முடியாமல் கட்டுண்டாள். அவள் விழி நீர் அவன் மார்புக் கூட்டை நனைத்தது.”

அவளை விலக்காமலே, முதுகினை ஆதரவாய்த் தடவிக் கொடுத்தான். “மலர் உணர்வு பூர்வமாக எடுக்கும் எந்தவொரு முடிவும் நல்லதாய் இராது. யோசி, நான் உன் மேல் கொண்ட அன்பு புரியும், நாம இருவரும் ஒருவரையொருவர் விலகினால், உயிரற்ற உடல்களாகத்தான் இருப்போம் என்று புரியும்.”




“என் வகையில் எந்த தடங்கலும் இல்லை,இன்னொன்று சொல்லவா? ராஜீவும் வசந்தியும் இந்தியாவிற்கு எதற்குப் போய் இருக்கிறார்கள் என்று நினைக்கிறாய்? நம் விஷயமாக பேசத்தான்”

“அழுகை ஓய்ந்து தலையை தூக்கிப் பார்த்தாள். ஆனந்த் உங்களுக்கு என் மேல் கோபம் வரவில்லையா?’

“எதற்குடா? நான் ஏன் கோப பட வேண்டும். நீ என்னைப் புரிந்து கொள்ளவில்லையே என்ற வருத்தம் இருந்தது. சரியாய் பத்து நாட்கள் கழித்து நான் அங்கு உன்னை காண எத்தனை ஆவலாய் வந்தேன் தெரியுமா? ஆனால், நீ அங்கு இல்லையென்றதும், ஒரு நொடி ஒன்றுமே புரியவில்லை”

சித்தி பார்வதி நீ எழுதியதாக அந்தக் கடிதத்தை தந்தவுடன் மொத்தமாய் நொறுங்கி விட்டேன். அங்கே உன்னை பற்றிய எந்த தகவலும் தெரியாமல்…” திக்கு முக்காடிப் போய்விட்டேன்.

“ஸாரி ஆனந்த்! நீங்க சென்றாலும், உங்க நினைவோடேயே எப்போ வருவீங்கன்னு ரொம்பவே ஆர்வமார் இருந்தேன். ஆனா உங்க சித்தியோட பேச்சு என்னைத் தடுமாற வைச்சிருச்சு”

“அதான் சொல்லாம் கொள்ளாம ஓடி போய்ட்..”

“ச்சீ.. இந்த நாலு வருடங்களா உங்களை தவறாய் எண்ணிக் கொண்டு நான் பட்ட வேதனை எனக்குத்தானே தெரியும்”

“அப்போ என்னைப் பார்த்தவுடனேயே நீ நேரடியாய் கேட்டு இருக்கலாமில்லையா?”

“உங்க கண்களைப் பார்த்தால் என்ன பேசமுடியவில்லையே, நீங்கள் யோசியுங்கள், நான் முதலில் பார்க்கும் போது திட்டமிட்டு இங்கு அழைத்து வந்தாற் போல் பேசினீர்கள், பிறகு நீலாவுடன் அதன் பிறகு ரத்னாவைப் பற்றி!…”

“அடக் கடவுளே! உங்கிட்ட மத்த பெண்களைப் பற்றி பேசவே கூடாது”

“பார்க்கவே கூடாது என் மனசு ரொம்பவே காயப்படுமே”

“இத்தனை அன்பை என் மேல் நெஞ்சுகுள்ளேயே வைச்சிகிட்டுத்தான் அவ்வளவு கோபம் காட்டினாயா?”

“மன்னிசுடுங்க ஆன்ந்த் என் சந்தேகப்புத்தியோட விளைவில் உங்களை இழக்க இருந்தேனே!” அவளின் உடல் நடுங்க மேற்கொண்டு இறுக்கினான்.

“இனி எக்காரணம் கொண்டு என்னை விட்டு நீ பிரியவே கூடாது” சரியா?

“ஆனந்த் நீங்க என்னை மன்னித்தது போல் அத்தை என்னை மன்னிப்பார்களா?”

“ம்… அதற்கு ஒரு கண்டிஷன் உண்டு. என்னை நீ அத்தான்னு கூப்பிடனும்”




“விளையாடுறீங்களா?”

ச்சீ…அம்மாவுக்கு என்னை விட உன்னைத்தான் ரொம்ப பிடிக்கும். நீதான் அவங்களுடைய சின்ன மருமகள்ன்னு சொன்ன என்னைத் தலையிலே தூக்கி வைச்சிக்கிட்டு கொண்டாடுவாங்க.

“நிஜமாவா?”

“ம்…நம்ம வீட்டுலே காதலுக்கு தடையேயில்லை. நீ தான் ரொம்ப தொந்தரவு தந்தே உன்னை திருத்திட்டேனே”

“ஆஹா… ரொம்ப பெருமை பட்டுக்காதீங்க. போனா போகுதுன்னு ஒத்துகிட்டேன்.

“அப்படியா அவள் காதைப் பிடித்து திருகினான். மேலும் அவன் மார்புக் கூட்டிற்குள் ஒண்டினாள். போகலாம் ஆனந்த் இப்பவே நேரமாயிடுச்சு?’

“வேண்டாம். எத்தனையோ நாளைக்குப் பிறகு இன்றுதான் என் தேவதையைக் கைப்பிடித்து இருக்கிறேன். அத்தனை சீக்கிரத்தில் விட்டுவிடுவேனாயென்ன?” இன்று இரவு முழுவது உன் மடியில் தான் நான் தஞ்சம் அடையப் போகிறேன்.

அவன ஆசையாய் அவள நோக்கி வரவும் மலரும் அந்த வெப்பத்தில் இணைய தயாராகிப் போய் இணைந்தாள். அங்கு இருந்த நீண்ட நாள் இறுக்கம் தகர்ந்தது. ஏக்கம் வழிந்த இமைகள் இன்றோடு இன்பமாய் ஒன்றையொன்று தழுவின. அந்த நெஞ்சத்தின் நினைவுகள் காதலில் பூத்திருந்ததன. நெஞ்சம் மறப்பதில்லை என்று ஊருக்கு பறைச் சாற்றிக் கொண்டிருந்தது அந்த இரவில் பௌர்ணமி நிலவு.




What’s your Reaction?
+1
17
+1
21
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!