Serial Stories எங்கே நானென்று தேடட்டும் என்னை

எங்கே நானென்று தேடட்டும் என்னை – 12

தேடல் –12

“பாலன்! எல்லாம் ஒழுங்காப் போயிட்டிருக்கா “

“யெஸ் ஸார். “

“லாவண்யாவுக்கு ஒன் வீக் ஆனதுமே அவளுக்கு வேற வேலையை அலாட் பண்ணுங்க! கொஞ்சம் கடினமானதாகவே இருந்தாலும் பரவாயில்லை. அவளையும் கண்காணியுங்க.எதுன்னாலும் கால் மீ இம்மீடியட்லீ! இன்னும் பத்து நாளைக்கு இம்பார்டென்ட் மீட்டிங்ஸ் வேண்டாம். அவசியம்னா நீங்க அட்டென்டு பண்ணுங்க “

            அடுத்து

திருச்சி ஆபிசுக்கு போன் செய்து பெற்றோருக்கு சேலம் வர ப்ளைட் டிக்கட் போடச்சொல்லி விட்டு வேறு வேலைகளை விவரித்தான்.

      ” அம்மா “




“விஷ்ணு கண்ணா!  சொல்லுடா “

“அம்மா! நான் சொல்றதை கவனமா கேளுங்க ஒரு மூணுசெட் டிரஸ் மட்டும் அப்பாவுக்கும் உங்களுக்கு எடுத்துகிட்டு தயாராகுங்க. நம்ம காரில் ஏர்போர்ட் வந்திடுங்க அங்கே நம்ம மேனேஜர் டிக்கட் தருவார். சேலத்துல நான் ரிசீவ் பண்றேன். உங்களுக்கு ஒரு ஆனந்தமான அதிர்ச்சி காத்திருக்கு! “

“என்னடா கண்ணா! மருமகளைப் பார்த்திட்டியா “

‘ம்! அதுவும் தான் ‘என்று மனதுள் சொல்லிக்கொண்டவன் முகம் சிவந்தது.

ஆனாலும்

“ஹையோ! அம்மா! அதில்லை!! வேறு ஒரு விஷயம் நாம் யாருமே எதிர்பார்க்காதது. ஆனால் எமோஷன் ஆகிடக்கூடாது.! முக்கியமா அப்பா..!”

“என்னப்பா விஷயம்? “

“நேரில வாங்களேன். அதை நீங்க நேராய் எதிர் கொள்ளும் போது உங்க சந்தோஷத்தைப் பார்க்கனும்  மா எனக்கு “

           போனை கட் செய்து விட்டான்.

நேரில் சத்யாவை பார்க்கும் போது அம்மாவும் அப்பாவும் எப்படி எதிர் கொள்வார்கள்? அம்மாவின் சந்தோஷத்தையல்லவா திருப்பிக் கொடுத்திருக்கிறாள் மதுமதி.

நேற்று

வில்லியம் கூப்பர் விடைபெற்றுக் கொண்டு கிளம்பி விட்டார். பேஷண்ட்டைப் பொறுத்தவரை எவ்ரிதிங் நார்மல் என்று

என்றவர் சிறிது காலத்திற்கு பழைசை  கட்டாயப்படுத்தி நினைவுறுத்த வேண்டாம். அவரே இயல்பாக நினைவு கூரட்டும். அதை கட்டுப்படுத்த வேண்டாம் என்று கூறிவிட்டார்.

    டாக்டர் ஜோசப் தேவ்விடம்.

“மிஸ்டர் தேவ்! இந்த ஏஞ்சலைத் தெரியுதா “

என்று கேட்க

மதுமதி கதவினருகே நின்றாள். அவன் ஏறிட்டுப் பார்க்க அவன் முகம் மலர்ந்தது. அனிச்சையாக விரிந்த கைகளில்

“மாம்ஸ் “

என்ற கதறலோடு அடைக் கலமானாள் பெண்ணவள்.

அவள் முதுகை வாஞ்சையோடு அவன் தடவ

அவளின் கேவல் இன்னும் ஆர்ப்பாட்டமாய்த் தொடர்ந்தது.

இத்தனை காலமும் அடைத்து வைத்திருந்த அத்தனையும் கண்ணீராகவும் விம்மல்களாகவும் தெறித்தன.

டாக்டர் ஆனந்த நம்பி அவளை தடுக்கப் போக டாக்டர் ஜோசப் அவரைத் தடுத்தார்.

தேவாவுக்கு டாக்டர் ஜோசப்பே சுருக்கமாய் தேவையானதை மட்டும்…நடந்த விபத்தை, உயிரிழப்பை,மதுமதியின் நிலைமையை  அவனுடைய குழந்தையை என்று கூறியிருந்தார். அடிக்கடி மதுமதி குழந்தையை அழைத்து வந்திருப்பதால் குழந்தைக்கு தந்தையை தெரியும் என்றார்.

பிறகு

மருத்துவர்கள்

இருவரும் நகர்ந்தனர்.

கதவினருகே சாய்ந்து நின்று ஒருகாலை சுவற்றிலும் மறுகாலை நிலத்தில் ஊன்றியும்  கைகளைக் கட்டிக் கொண்டு இந்தக் காட்சியை கண்கொட்டாமல் பார்த்தவன் மனதில் பொறாமையில்லை சஞ்சலமில்லை!  தம்பியின் அரவணைப்பில் தந்தை மகளின் பாசப்பிணைப்பே தெரிந்தது.

“மதுக்குட்டி… குட்டிம்மா !”




“……..”

“குட்டீம்மா! அழக்கூடாது! அதான் மாம்ஸ் பொழைச்சுட்டேனே! “

அவன் நெஞ்சின் மீது அவள் கைகளால் அடித்து நெற்றியால் முட்டினாள்.

“சரிடா …சரிடா.! மாம்ஸ்சுக்கு எல்லா விஷயமும் தெரிஞ்சுக்க ஆசையாயிருக்கு.   நிஷா எங்கேடா? அவளுக்கு என்னை அடையாளம் தெரியுமா? சொல்லுடா! ரொம்ப வளர்ந்திருப்பா இல்லே “

என்று திரும்பிய பார்வையில் விஷ்ணு விழ

“டேய்! அண்ணா! “

என்ற குரலில் மதுமதி விசுக் கென நிமிர்ந்து ஒதுங்கினாள்.

விஷ்ணு புன்னகையோடு தம்பியைப் பார்க்க இவன் வியப்போடு அண்ணனைப் பார்க்க மது தான் குழம்பி நின்றாள்.

‘மாம்ஸின் அண்ணனா இந்த முள்ளுக்காடு ‘

‘சொல்லவேயில்லையே! ‘

அவள் மெதுவே பின்னுக்கு நகர

இயல்பாக இரண்டெட்டில் தம்பியை நெருங்கி அணைத்துக் கொண்டவன்

தம்பியறியாமலே அவள் விரல்களைத் தன் விரல்களினால் கௌவிக் கொண்டான்.

மிகமிக நெருக்கமாக இருந்ததில் அவளுடல் முழுமையாக அவனுடலின் மீதே ஆதாரப்பட்டு  நின்றது. சங்கடமாய் அசைய

அதை உணர்ந்தவனாய்

“மது மதி! உட்காருங்க “என்று கட்டளையிட்டுவிட்டு

மறுபுறமாய் அமர்ந்தான்.

“அண்ணா! நீ எப்படிடா இங்கே? குட்டிம்மாவைத் தெரியுமா? “

“அம்மா அப்பா எல்லாம் சுகமா? எங்கேடா அவங்க? “

“இருடா! நாலு வருடக்கதையை நாலுகேள்வியா கேட்டா எப்படிடா சொல்றது. மெதுவா தெரிஞ்சுக்கலாம். .அம்மா அப்பா நல்லாயிருக்காங்க. வந்துட்டு இருக்கிறாங்க. ம்…மதுமதி யை நல்லாவே தெரியும். “

“குட்டீம்மா! இது என் அண்ணன்! “

“மாம்ஸ்! நீங்க பேசிட்டிருங்க! நான் உங்களுக்கு ஜூஸ் எதாச்சும் வாங்கிட்டு வரேன் “

அவள் விஷ்ணுவைப் பார்த்த பார்வையில்  அது என்ன உணர்வு என்றே புரியவில்லை அவனுக்கு.

நடை தளர்ந்து அவள் நடந்து போவதை பார்த்த விஷ்ணுவுக்கு அவளின் மனவோட்டம் புரிந்தது. மீண்டும் தேவையின்றி எதையெதையோ எண்ணி தவிக்கப் போகிறாள் என்று எண்ணமிட்டவன் இப்போதைக்கு அதைத் தள்ளி வைத்து விட்டு தம்பியை கவனித்தான்.

மரணவிளிம்பைத் தொட்டு விட்டு தன்னிலை மறந்து கிடந்து புனர்ஜென்மம் எடுத்திருப்பவனைத் தழுவிக் கொண்டு பேச ஆரம்பித்தான்.

மதுமதி ஜூஸ் கிளாஸ் இரண்டையும் ஒரு சிறுவன் மூலம் கொடுத்தனுப்பிவிட்டு மருத்துவமனையின் ஒதுக்கமாக இருந்த தூங்கு மூஞ்சி மரத்தினடியிலிருந்த சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்தாள். முழங்கால்களை மடித்துக்கொண்டு முகத்தை புதைத்துக் கொண்டாள்.

இத்தனை பெரிய உலகத்தில் அவளுக்கு மட்டுமே யாருமேயில்லை! சுயபச்சாத்தாபம் சுனாமியாய் கிளம்பியது.

இதுவரை தேவா மாமாவும் நிஷாவுமே உறவு என்று சுற்றி சுற்றி இதுவரை வாழ்ந்தாகி  விட்டது.

இனி…?

மாம்ஸ்சுக்கு பணமும் அதிகாரமும் படைத்த அண்ணன் கூடவே ஒரு குடும்பமே  பின்னால் நிற்கப் போகிறது. நிஷா அவர்களின் வாரிசு. பணக்கார குடும்பத்தின் வாரிசு.

ஒருமுறை மாம்ஸ் அக்காவை கல்யாணம் செய்து கொண்டு குடும்பத்தைப் பிரிந்து பட்டது போதும். இனியேனும் மாம்ஸ் நிஷாவுடன் குடும்பத்துடன்  சந்தோஷமாக இருக்கட்டும்.

அப்போ

நான்?

‘நீ ஒதுங்கித் தான் போகனும் மது!   அக்காவை ஏற்க மறுத்து விட்டதால் தானே தேவா மாமா  குடும்பத்தை விட்டே பிரிந்தார். இன்று நீ போய் அவர்களுடன் இணைய முடியுமா? உன் பாதையைப் பார்த்துக்கொண்டு போ. வேறெங்காவது வேலையைத் தேடு. இவர்கள் கண்ணிலேயே படாதே.  அப்போதான் நிஷாவும் தேவா மாமாவும் நிம்மதியாக இருப்பார்கள




 போய்விடு. நீ எங்காவது போய்விடு அவர்களை விட்டு வெகு தொலைவு போய்விடு. நீ ஒரு அனாதை! நீ பக்கத்திலிருந்தால் அவர்களின் நிம்மதி போய்விடும். நீ போய் விடு …போ! போ! ‘

மதுமதிக்குள் குரல் ஒன்று துரத்தியது.

‘அம்மா மா மா மா …’அழுகை பொங்கி பொங்கி வந்தது.

‘யாருக்காக நான் வாழனும். இந்த வாழ்க்கையே வேண்டாம்!நிஷா இப்போ தங்கம் அக்காவுடன் வந்திடுவாள். அவளை ஒப்படைச்சிட்டு யாருக்குமே தெரியாம கிளம்பிப் போயிடனும்.

மனதின் ஒரு சிறு மூலையிலிருந்து சின்ன சாமரம் வீசியது… நெற்றி குறுகுறுத்தது. விரலால் தடவிக் கொண்டபோது  முகம் ஏனோ சிவந்து போனது.

‘ஆனால்

அவனுக்கும் எனக்கும் எப்படி? அவன் முதலாளி. நானோ அவனுடைய எம்ப்ளாயி. கை நீட்டி சம்பளம் வாங்குபவள். ப்ச்!

அவன்  தம்பியை காப்பாற்றியதில் சந்தோஷம். அதில் என்னை முத்தமிட்டிருப்பான்.

ஆமாம்

விஷ்ணுவும் தேவா மாமாவும் உண்மையிலேயே அண்ணன் தம்பி தானா? இல்லை …’மனம் தனக்கு சாதகமாக யோசிக்க விரும்பியது.

அழுகை மட்டுமே துணையாக அந்தப் பேதைப் பெண் தனியே அமர்ந்து கொண்டிருந்தாள்.

அந்த தூங்கு மூஞ்சி மரம் மட்டுமே ஏதோ தாலாட்டு போல காற்றில் இலைகளை அசைத்து உதிர்த்தது.

அந்தக் கொடூரமான நாள் யாரும் அழைப்பு விடுக்காமலே மனத் திரையில் விரிந்தது.

நிஷா பிறந்ததுமே குலதெய்வம் கோயிலுக்கு போய் வேண்டுதலை நிறைவேற்றிவரலாம் என்று விரும்பினார் மதுவின் தாயார்.  ஏதேதோ காரணங்களால் தள்ளிப்போய்க் கொண்டேயிருக்க. மதுமதிக்கும் முதல்நாள் தான் கடைசி தேர்வு.  அதனால்

அவளை ஹாஸ்டலிலிருந்து இரண்டு மூன்று நாட்களுக்கான உடைகளை மட்டும் எடுத்துக் கொண்டு குறிப்பிட்ட பேருந்து நிறுத்தத்தில் நிற்கும் படியும் தாங்கள் வந்து பிக்அப் செய்து கொள்வதாகவும் ஏற்பாடு. ஏனைய பொருட்களை பேக் செய்து வார்டன்னிடம் ஒப்படைத்து விட்டு வந்து விடும்படியும் பிறகு போய் எடுத்து வந்துவிடலாம் என்றும் திட்டம்.

இவளும் வந்து விட்டாள் முதுகில் தொங்கும்  பேக் கும் ஹாண்ட் பேகுமாய் நின்று மாம்ஸ்ஸிடம் இடத்தை சொல்லி விட்டு காத்திருந்தாள். சற்றே தொலைவில் வருகிற தங்கள் காரையும் பார்த்து விட்டாள்.

அப்போதுதான் அந்த கோரம் நடந்தது.

பின்னிலிருந்து ஒரு பால் வண்டி இடிக்க கார் கட்டுப்பாடு இன்றி முன்னால் அப்போதுதான் டிப்போவுக்குள் நுழைய இருந்த பேருந்தின் மீது மோதியது.

பார்த்துக் கொண்டிருந்த மதுவுக்கு தங்கள் கார் தானா என்று ஐயமும் வர விபத்து நடந்த இடம் நோக்கி ஓடினாள்.

அவள் கண்ணெதிரே

திறந்திருந்த காரின் கதவு வழியே அக்கா தள்ளிவிடப்பட்டவளைப் போல் வெளியே விழ குழந்தையோடு உருண்டவளை  பாதையோரத்தில் நீட்டிக்கிடந்த கல் ஒன்று பதம் பார்த்தது.

அதிர்ச்சியில்

“அக்கா “என்ற அழைப்பு காற்றில் கரைந்தது. மூச்சு திணறுவது போலிருந்தது.

கார் ஒரு  நசுங்கியிருக்க ரத்தம் வெளியே  வழிந்தது .

மதுமதி  மயக்கத்திற்கு போக இருந்தவளை அக்கா தயாமலரின் குரல்  எங்கோ பாதாளத்திலிருந்து கேட்பது போல கேட்டு நனவுக்கு இழுத்தது.




“மதூதூதூ”

“அக்கா! “

“பா…பா…பாப்பா …வ… பி… பிடி!”

பாப்பாவைத்தூக்கினாள்.

நிஷா துணிக்குள் பொதிந்திருந்தாள். வீறிட்டது குழந்தை

“நல்லாருக்காளா..மதூ!  பாப்பாவை  நீ…நீதான்..”

அக்கா பேச்சோடு மூச்சையும் நிறுத்தி விட்டாள்.

யாரோ ஆம்புலன்சுக்கு சொல்ல இவள் செலுத்தப்பட்டவளைப்போல ஏறினாள். இறங்கினாள். கையெழுத்துப் போட்டாள். உட்கார்ந்தாள். யாரோ குழந்தைக்கு பால் வாங்கிப் புகட்டினார்கள். மதுமதி சித்தம் குலைந்தவளாய் நின்றிருந்தாள்.

                     *********

“அம்மா “

தூக்கிவாரிப்போட தலையைத் தூக்கிப்பார்த்தாள். நினைவுகளிலிருந்து மீட்டுக்கொண்டாள்.

எத்தனை இரவுகள் தூங்காமல் தூங்கவிடாமல் அடித்திருக்கிற காட்சி அது.

அப்பாவும் அம்மாவும் அந்த இடத்திலேயே  உயிரை விட்டிருக்க தேவ் செமையாக அடி வாங்கியிருந்தான். கால் முறிந்து  முகத்தில் கண்ணாடி கிழித்து கையில் தசை கிழிந்து அப்பப்பா…..

“அம்மா ” அருகில் யாரோ ஒரு குழந்தை அம்மாவை அழைத்த குரல்.

‘நிஷா இன்னும் வரவில்லையே!’

“ஹேய்!  ஹனி! நீ இங்கேயா இருக்கிறே… நான் தேடிதேடி அலுத்துப்போயிட்டேன்.. போனை வேற சத்யா ரூம்லேயே விட்டுட்டு வந்திட்டே! “

“ஸாரி ஸார்! களைப்பா இருந்தது இங்கேயே உட்கார்ந்திட்டேன் .”

‘நம்பிட்டேன் ‘ — என்பது  போல் பார்த்தவன்

“இந்தக் குட்டி மூளைக்குள்ளே என்ன ஓடுதுன்னு நான் சொல்லவா “

‘க்கூம் பெரிய இவர், அப்படியே மனசை படிச்சிடுவார் முள்ளுக்காடு! முள்ளுக்காடு. ‘

“க்கூம் பெரிய இவரூ. அப்படியே மனசை படிச்சிடுவாரூ…முள்ளுக்காடு முள்ளுக்காடு ‘இதானே! “”

மதுமதி வாயைப் பிளந்தாள்.

‘மைன்ட் வாய்ஸ்ன்னு வாய்விட்டு பேசிட்டேனோ’

“நான் அனாதை? இவங்களை விட்டுட்டு எங்கேயாவது போயிடனும். மாம்ஸ்க்கும் நிஷாவுக்கும் அதான் நல்லது….. இதானே யோசிச்சே “

மதுமதி வாயின் மீது விரலை வைத்து ‘ஆ’வென்று பார்த்தாள்.

“இதோ பார் மது! இது பத்தியெல்லாம் எதுவும் யோசிக்கக் கூடாது. அம்மாவும் அப்பாவும் வர்ராங்க. டாக்டர் டிஸ்சார்ஜ் பண்ணலாம்னதுமே நீயும் நிஷாவும் கூட எங்க வீட்டுக்கு வந்திடனும். “

“நிஷா, சரி ஆனா நான் எதுக்கு “

என்று அவள் மறுப்பு தெரிவிக்கத் துவங்கு முன்னே அவனுக்கு போன் வர அவன் சற்றே நகர்ந்து போய் பேச ஆரம்பித்தான்.

மதுமதி

தனக்கான தேடலை இடமாற்றத்தை உள்ளூரத் தேடிக் கொண்டிருந்தாள்.

எங்கே நானென்று அவளுக்கவளே தேடும் பரிதாபத்தில் பேதை…..!

(தேடல் தொடரும்)




What’s your Reaction?
+1
11
+1
14
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!