Serial Stories காதல் இளவரசி

காதல் இளவரசி – 14

14TH CHAPTER

எதிர்பாராமல் விழுந்த அடி பத்மினியின் கோபத்தை மேலும் கிளறத்தான் செய்தது. இதுவரையில் யாரும் அவளைக் கை நீட்டி அடித்தது இல்லை அப்படியிருக்க தவறே செய்தாலும் அடிக்கும் உரிமையை பரத்திற்கு யார் தந்தது அதுவும் உத்ராவின் பொருட்டு ?

நீங்க இரண்டுபேரும் கடலுக்குள் சென்றது அவருக்கு கோபத்தை உண்டு பண்ணியது மேலும், உத்ராவை கட்டாயப்படுத்தி கூட்டிப்போனதால் தான் அந்தக் கோபம் என்பதையும் ப்ரியனின் வார்த்தைகள்தான் அதை உறுதியும் படுத்திவிட்டதே ?! நடந்துவிட்டதை அருகில் இருந்து பார்த்த உத்ராவும் தன்னையேதும் சமாதானப்படுத்தாமல் பரத்தின் இருப்பிடம் நோக்கி விரைந்து விட்டாள். வேலை பார்க்கும் இடத்தில் எந்த உணர்ச்சிக்கும் அடிமையாகக் கூடாது என்று அவள் வெறும் வார்த்தையாகத்தான் சொல்கிறாளோ ?! வந்த நாளில் இருந்து இப்போது வரையில் பரத்திற்கும் அவளிற்கும் இடையில் ஏதோ ஒன்று இருக்கத்தான் செய்கிறது




அன்றைய இரவு பரத்தும் அதையேதான் உணர்த்தினான். தன்னை விருந்திற்கு என்று அழைத்துச் சென்றுவிட்டு உத்ராவின் மேல் எதிர்பாராமல் ஒரு வித நேசம் உருவாகியிருக்கிறது என்பதை சொல்லும் போதே பத்மினியின் மனதில் சற்று நெருடல் இருக்கத்தான் செய்தது. ஆனால் உத்ரா மாதிரி ஒரு நல்ல தோழியிடம் அந்த மனக்கசப்பை காட்டிடக் கூடாது தன்னைப் போல எல்லாவற்றையும் ஈசியாக எடுத்துக்கொள்ளும் குணாதிசயம் அவளுக்கு இல்லை, எல்லாவற்றையும் மனதிற்குள் போட்டு பூட்டிக்கொண்டு மறுகும் மனம் கொண்டவள். தன்னுடைய லைப் ஸ்டைலுக்கு பரத் ஏற்றவனாக இருக்கக் கூடும் ஆனால் அவன் மட்டும் இங்கு ஆண்மகன் இல்லையே ?! ஆனால் இப்படி நான் யோசித்தும் அவர்களுக்காக தன் மனதை மாற்றிக்கொண்டும் கூட பரத்திற்கும் உத்ராவிற்கும் தான் முதலாய் தெரியவில்லை, பரத் உத்ராவிற்காக தன்னை கண்டிக்கிறான் அதுக்கு வருத்தம் கூட தெரிவிக்காமல் உத்ரா பரத்திடம் விரைகிறாள்.

இதனால் தனக்கு ஏற்படும் மனவலியை ஏன் ஒரு தோழியாய் உத்ரா உணரவில்லை, அவரவர் உணர்ச்சிகள் அவரவருக்கு பெரியது போலும், நான் மட்டும் ஏன் எல்லாரைப் பற்றியும் நினைக்க வேண்டும். இவர்கள் யார் பாதுகாப்பை நம்பியும் நான் வரவில்லை, என்னுடைய தைரியத்தை நம்பித்தானே வந்திருக்கிறேன். நாளை மறுபடியும் நான் கடலில் இறங்கத்தான் போகிறேன் அப்போது இதே பற்று பரத்திற்கு வருகிறதா என்று பார்க்கலாம். மனது நிறைய பொருமலோடு தன் படுக்கையை நோக்கிச் சென்றாள் பத்மினி.

இறுகிய முகத்தோடு அமர்ந்திருந்த பரத்திடம் பேச முயற்சித்துக் கொண்டு இருந்தாள் உத்ரா. ஸாரி பரத் இத்தனை ஆபத்து இங்கேயிருக்கும் என்று எண்ணவில்லை ஒரு விளையாட்டாக,,,,

அடுத்தவர்களை காயப்படுத்துவதுதான் உங்களுடைய விளையாட்டா உத்ரா. நான் எத்தனை பயந்துபோயிருப்பேன் என்று உன்னால் எங்கே உணர முடியப் போகிறது ?! பத்மினி அழைத்தவுடன் ஒன்று நீ மறுத்து இருக்க வேண்டும் அல்லது அவளையும் போகவிடாமல் தடுத்திருக்க வேண்டும் இந்த டிரிப்பை ஏற்பாடு செய்தது நான் உங்கள் ஒவ்வொருவரின் உயிருக்கும் நான் தான் பொறுப்பு ஏதாவது ஒன்று ஆகியிருந்தால் நானல்லவா பதில் சொல்லியிருக்க வேண்டியிருக்கும். தக்க ஏற்பாடுகளோடு இறங்கியிருக்க வேண்டாமா ? அப்படியென்ன பொறுப்பில்லாததனம் உத்ரா. உன்னிடம் இருந்து இதைநான் எதிர்பார்க்கவில்லை.

நடந்ததற்கு நான்தான் மன்னிப்பு கேட்டுவிட்டேனே பரத், பத்மினி என்னை வற்புறுத்தவே இல்லை நானாகத்தான் சென்றேன் அதற்கு காரணமும் நீங்கள் தான் வந்தவுடன் நீங்கள் ஏதும் பேசாமல் கடல் பயணத்தை மேற்கொண்டீர்கள் நேரம் அதிகமாகியும் உங்களைக் காணவில்லை நான் என்ன நினைத்துக்கொள்வது. உங்களைப் பற்றிய கவலை எங்களுக்கும் இருக்கும்தானே ? உத்ராவின் அந்த பேச்சினூடே




எங்களுக்கு என்பதை நீ எனக்கு என்று சொல்லியிருந்தால் இன்னமும் மகிழ்ந்திருப்பேன் உத்ரா. அவனின் குரலில் ஏற்பட்ட இளக்கத்தில் சற்றே சலுகையாய் பாவம் பரத் பத்மினி அவள் மனம் கட்டாயம் காயப்பட்டு இருக்கும். பெற்றபிள்ளைகளை கட்டுக்கோப்பாக வளர்க்கிறேன் என்று கைக்குள்ளேயே வைத்திருப்பது எத்தனை தவறோ அதே போல்தான் சுதந்திரமாக விடுகிறேன் என்று கண்டுகொள்ளாமல் விடுவதும் தவறு, அந்த அலட்சியத்தில் இருந்து தன்னை விடுவிடுத்துக் கொள்ளத்தான் எல்லாவற்றையும் இயல்பாக எடுத்துக்கொள்வதைப் போல் அவள் நடிக்கிறாள். இயல்பாகவே தன்னிடம் யாரும் அன்பு கொள்ளவில்லை என்று அவளின் அடிமனதி ஒரு வருத்தம் இருந்துதான் உள்ளது. இன்று நீங்கள் எனக்காக அவளிடம் கோபித்தது இன்னுமும் அவளை சங்கடப்படுத்தியிருக்கும். முதலில் நடந்ததற்கு அவளிடம் மன்னிப்பு கேளுங்கள்

பத்மினியைப் போலத்தான் நானும் உத்ரா என்னுடைய தந்தையின் அலட்சியதினால் தான் நானும் பல பழக்கங்களை மேற்கொண்டேன். என் தனிமையிலிருந்து தப்பிக்க………. உன்னால் நான் என்ன சொல்லவருகிறேன் என்பதை உணர முடிகிறது அல்லவா….. நான்….

முதலில் பத்மினியை சமாதானப்படுத்துவோம் அதன்பிறகு மற்றதை பேசலாம் வாருங்கள் அவள் கண்கலங்கி நின்றபோதும் நான் ஆறுதல் சொல்லாமல் வந்ததற்கும் காரணம் உங்களை அவளிடம் சமாதானம் பேச வைக்கத்தான் பரத்தை அழைத்துக் கொண்டு பத்மினியின் ஜாகைக்கு வரும்போது அவளின் ஆழ்ந்த உறக்கம் தான் இருவரையும் எதிர்க்கொண்டது. சரி நாளைக்குப் பேசிக்கொள்ளலாம் உங்களுக்கும் அலுப்பாகத்தானே இருக்கும் போய் ரெஸ்ட் எடுங்கள் என்று அவனை விரட்டினாள்.

பரத் வாசல்வரை வந்தவன் திரும்பி உத்ராவைப் பார்த்தான். என்ன என்பதுபோல் அருகில் வந்தவளை மென்மையாக அணைத்தான் பரத் விடுங்கள்.

உத்ரா என்னை விலக்கிவிடாதே இந்த அணைப்பில் நிச்சயம் காமம் கலக்கவில்லை, உன்னை காணாமல் நான் பட்ட வேதனையின் வெளிப்பாடு பத்மினியைப் போல என்னையும் என் தவறுகளையும் நீ எடை போட்ட விதம் உன் அருகாமையில் என் தவறுகள் அத்தனையும் புனிதப்பட்டு விட்டன. இந்த அணைப்பு ஒன்று போதும் நான் மீண்டு வர …. என்னைப் பற்றி நான் உன்னிடம் சகலமும் ஒப்பித்து பின் என்னையே தரப்போகிறேன் சட்டென்று அவளை விலக்கிவிட்டு அங்கிருந்து மறைந்தான் பரத். உறக்கம் வந்தவளைப் போல நடித்துக்கொண்டு இருந்த பத்மினியின் கண்கள் அந்தக்காட்சியினைக் கண்டதும் மேலும் அதிகமாக வெறுப்பையை உமிழ்ந்தன. அதைப்போலவே மற்றும் ஒரு கண்களும் அவை பிரியனுடையது பரத் அந்த இடத்தில் இருந்து விலகிவிட்டான் என்பதை அறிந்ததும் உத்ராவிடம் நெருங்கிவந்தான் ப்ரியன்.

பரத்தின் திடீர் அணைப்பில் ஏற்பட்ட குறுகுறுப்பும், பொய் கோபமும் கலவையாய் கலந்து ஏதும் செயல்பட முடியாமல் நின்றிருந்தவளிடம் உன்னை நான் ரொம்ப புத்திசாலி என்று நினைத்திருந்தேன் உத்ரா ஆனால் நீயும் சராசரி பெண்தான் என்பதை உணர்த்திவிட்டாய். அதெப்படி பரத்திடம் மட்டும் எல்லா பெண்களும் சட்டென்று விழுந்து விடுகிறீர்கள் ஏற்கனவே பரத்தை நம்பிய ஒரு பெண்ணின் நிலைமையைப் பற்றி நான் சொல்லியிருக்கிறேன் ஆனால் நீயும் இப்படி

ப்ரியன் யார் அந்த பெண் ? அவளின் இறப்பிற்கு பரத் எப்படி காரணமாக முடியும் ஒன்று தெளிவாக சொல்லுவதென்றால் சொல்லுங்கள் இல்லையெனில் என்னைக் குழப்பவேண்டாம்.

ப்ரியன் தன் மொபைலை எடுத்து ஒரு பெண்ணின் புகைப்படத்தைக் காட்டினான் இந்தப் பெண்ணின் பெயர் நீரஜா உன்னைப்போல வந்தவள்தான். முதல் நாளே பரத்துடன் நெருக்கமாய் சுற்றிக்கொண்டு இருந்தவள். அவர்கள் இருவரையும் தனித்தே பார்க்க முடியாது பரத் எங்கிருக்கிறானோ அங்கே நீரஜா இருப்பாள் அத்தனை நெருக்கத்தைப் பார்த்து நான் கூட பரத் நீரஜாவைத் திருமணம் செய்துகொள்வான் என்று எதிர்பார்த்தேன் ஆனால் தன் தேவைகள் முடிந்தவுடன் பரத் அவளை அழகாக ஒதுக்கிவிட்டான், பணிமுடிந்து அவரவர் கிளம்பும் தருணம் நானும் பரத்தும் கடைசி கட்ட வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு இருந்தோம் அன்று நீரஜா அறைக்குள் நுழைந்தாள், பரத்திடம் தனிமையில் பேசிட விரும்புவதாகவும் கூறினாள். எனக்கு நன்றாய் அந்த சம்பவம் நினைவிருக்கிறது நான் வெளியேற முயற்சிக்க பரத் என்னை அங்கேயே இருக்கச் சொன்னார்.




நீரஜ் ப்ரியன் ஒன்றும் வெளியாள் இல்லை அப்படியென்ன ஒளித்து மறைத்து நாமிருவரும் பேசிவிடப் போகிறோம். இருவரும் மிக முக்கியமான பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறோம் அதனால் நீ இங்கேயே சொல்வதானால் சொல்லு

நீரஜா ஒரு விநாடி மெளனித்துவிட்டு, மீண்டும் பேச்சைத் துவங்கினாள் அடுத்த டரிப் போர்பிளேயரில்தானே நான் அதற்கு வர இயலாது என்று நினைக்கிறேன்

ஏன் நீரஜ் உன்னுடைய நீச்சலின் வேகத்தைக் கண்டு நான் பிரமித்து இருக்கிறேன் இப்போது நமது முதல் முயற்சி வெற்றிபெற்றதுக்கு நீயும் ஒரு முக்கிய காரணம் என்னுடைய முயற்சிகளில் உன் வெற்றியை நான் எதிர்பார்க்கிறேன்.

அதற்கு என் மனம் ஒத்துழைத்தாலும் என் உடல் ஒத்துழைக்காது பரத் நான் இப்போது உங்கள் குழந்தையைச் சுமந்து கொண்டு இருக்கிறேன் என்று முகம் நிறைய வெட்கதோடு அவள் சொல்லவும் பரத் கோபத்தோடு எழுந்தான். என்னை என்ன முட்டாள் என்று நினைத்தாயா ? கடல் பிராந்தியத்தில் நட்போடு சுற்றினால் கூட உடனே பிள்ளை உண்டாகிவிடுமோ, நான் உன்னிடம் வரம்பு மீறவில்லை நீரஜ், அப்படி பழகியிருந்தால் அதை ஒப்புக்கொள்ளும் தைரியமும் என்னிடம் இருக்கிறது. ஆனால் யாரோ சாப்பிட்ட விருந்திற்கு நீ என்னை காரணம் காட்டிட முடியாது அதற்கு நான் காரணமும் இல்லை என்று அடித்து சொல்லிவிட்டான்.

ஆனால் நீரஜாவின் கண்களில் பொய் இல்லை, அவளின் வார்த்தைகளில் உறுதியிருந்தது இருவரும் தனித்து சுற்றியிருந்ததால் அதற்கு சாட்சியும் இல்லை, அவர்களின் உறவு எனக்கு மட்டுமே தெரியும். அந்தப்பெண்ணிடம் பரத் பழகிய விதம் இப்போது அதை மறுப்பதற்காண காரணம் என பரத்தின் மேல் எனக்கு வெறுப்பு தான் ஏற்பட்டது. அப்படியும் அவள் அழுதுகொண்டே கெஞ்சினாள் கல்மனதாய் பரத் அப்படியொரு நிகழ்வு தங்களுக்குள் நடக்கவே இல்லை என்று சாதித்து விட்டதோடு அப்போதே அவள் கணக்கை தீர்க்கவும் சொல்லிவிட்டான். ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டது. அதன்பிறகு நீரஜா மிகவும் இறுக்கமாய் இருந்தாள். டிரிப் முடிவடையும் போது கூட பரத்தை சந்திக்க அவள் முயற்சி செய்தாள் ஆனால் அவன் ஒப்புக்கொள்ளவில்லை அதே கலக்கத்தோடு வெளியே சென்றவள் தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வந்தது பரத் அவளுக்காக ஒரு சின்ன வருத்தம் கூட அடையவில்லை இப்படிபட்டவன் இப்போது மீண்டும் உன்னிடம்….வேண்டாம் உத்ரா தயவுசெய்து அவனை நம்பாதே.. நான் சொல்லவேண்டியதை சொல்லிவிட்டேன் மீதி உன்விருப்பம் என்று சென்றுவிட்டான் ப்ரியன்

உத்ராவின் நிலை இறுதலைக் கொள்ளி எறும்பாய் போனது. பரத்திடம் இருந்து அவளையே அவள் விலக்கிகொள்ள முடியும் என்றுதோன்வில்லை, புதைகுழி என்று தெரிந்தும் அவனின் அருகாமை இனித்தது. தானும் நீரஜாவைப் போல ஆகிவிடுமோயென்று பயம் கொண்டது மனது. உறக்கம் தொலைத்த விழிகளோடு கட்டிலில் அமர்ந்தாள்.

தன் அறைக்கு வந்த ப்ரியன் கணிப்பொறியின் திரையை உயிர்ப்பித்தான். ஒவ்வொரு போல்டராக திறக்க நீரஜா என்ற பெயரில் உள்ள பைலைத் திறந்தான். நீரஜா கட்டிலின் மையப் பகுதியில் பார்வைக்கு கிடைத்தாள். மேற்கொண்டு காட்சிகள் நகர நகர ப்ரியனின் கண்கள் விரிந்தன. தன் கைபேசியின் அழைப்பை கவனித்து சொல்லுங்க நான்தான் பேசறேன்

என்ன செய்யறே

நீரஜாவைப் பார்த்துட்டு இருக்கேன்

செத்துப்போனவளை எத்தனை முறை பார்ப்பே ? எப்படியோ போய் தொலை தப்பு செய்றவன் ஆதாரத்தை கூடவே வச்சிக்கிட்டு சுத்தக் கூடாது ப்ரியன். நம்ம வேலை எப்படி போகுது பரத் என்ன சொல்றான்.

அவன் ஒரு முட்டாள், எதற்காக இந்த வேலைன்னு தெரியாமயே நமக்கு உதவிசெய்யறான். யுரேனியம் உருகும் நிலை அடைஞ்சிருக்கு மிஷனையும் உள்ளே அனுப்பியாச்சு கொஞ்ச கொஞ்சமா பவளப்பாறைகள் வளர ஆரம்பிக்கும் நம்முடைய யுரேனியமும் உருகிட தொடங்கும் அதற்குண்டான குழாய்களை எல்லாம் ஏற்கனவே பதிச்சாச்சு, எல்லாம் நல்லபடியா போயிட்டிருக்கு யாருக்கும் சந்தேகம் இல்லாம, இன்னொரு முக்கியமான விஷயம் நம்ம தயார் பண்ண ராட்ஸ மீன் இன்னைக்குதான் தலையைக் காட்டியிருக்கு, முன்னைவிடவும் ரொம்பவே ஆக்ரோஷமா…. நான் உனக்கு வீடியோ அனுப்பிவிடறேன் பாரு. அப்புறம் நீயெப்ப இங்கே வர்றே ?

இன்னும் இரண்டு வாரங்களுக்குள் …. ஏன் ஏதும் விசேஷமா

ம்..போன முறை நீரஜா மாதிரி இந்தமுறை இரண்டு பேர் இருக்காங்க நமக்கு விருந்தாக…..மொபைலை ஆப் செய்துவிட்டு மீண்டும் நீரஜாவிடம் பார்வையைச் செலுத்தினான் ப்ரியன்.




What’s your Reaction?
+1
14
+1
12
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!