Serial Stories காதல் இளவரசி

காதல் இளவரசி – 24

24TH CHAPTER

காணாமல் போன விமானத்தின் பாகங்கள் சிலது கடலுக்கு மேற்குப் பகுதியில் உள்ள கடற்கரையில் கரை ஒதுங்கியிருக்கிறது அது ஒரு தனிவிமானம் அல்ல என்றாலும், முக்கியமானவர்கள் செல்லும் போது ஏதேனும் அசம்பாவிதம் நடந்து விட்டால் ஒரு சிறு ராசாயன குடுவைப் போன்ற அறைகலன் ஒன்றில் அவர்களை காப்பாற்றும் சுரங்க அறை வசதி கொண்டது. அப்படிப்பட்ட விமானத்தில் தான் அவர்கள் பயணித்தது. எதிர்பாராவிதமாக இந்த சூழலில் நிச்சயம் விமானி அதைப் பயன்படுத்தியிருப்பார் மேலும் சில பாகங்கள் கடல் பகுதியில் ஒதுங்கியிருப்பதால் அந்த ரகசிய குடுவை அறை பயன்படுத்தப்பட்டு இருக்கும் என்பது நிச்சயமாகிப் போனது அதன் குறியீடு வெகு சமீபத்தில் இருக்கிறது என்பதை அலெக்ஸ் உணர்ந்திருந்தான் அதை ஏஞ்சலினாவிற்கும் பார்வையால் உணர்த்தினான்.

வெற்றிகரமாக நாம் அடைய வேண்டிய இலக்கை நெருங்கிக்கொண்டு இருக்கிறோம் என்றார் அலெக்ஸ், இங்கிருந்து சற்றே தொலைவில் தான் ஒரு சிக்னல் கிடைக்கிறது எனக்கென்னவோ சீக்கிரம் அந்தக் குடுவையை கவனித்து விடுவோம் என்றுதான் தோன்றுகிறது. சப்மரைனில் பர்ஸ்ட் எய்ட் பாக்ஸ் எல்லாம் இருக்கிறது இல்லையா ஏஞ்சல் அவர்கள் என்ன நிலையில் இருப்பார்கள் என்று தெரியவில்லை, அவர்களுக்கு நமது உதவி உடனே தேவைப்படலாம், எல்லாம் இருக்கிறது என்று தலையசைத்தாள் ஏஞ்சல்.



அந்த நால்வரும் சப்மரைனுக்குள் புகுந்தார்கள். சீக்கிரம் நம்மிடம் நேரம் குறைவாகத்தான் இருக்கிறது, அதற்குள் அந்த அரசியல்வாதியையும், பத்மினியையும் காப்பாற்ற வேண்டும். அலெக்ஸிடம் ஒரு தீர்மானம் ஏற்பட்டதைப் போல குரல் ஒலித்தது. பத்மினியின் மறைவு பூட்டிவைத்திருந்த கதவை தாண்டி, ப்ரியன் தப்பித்தது, பரத்தின் அருகாமையில் தோன்றிய காதல், அதைப்பற்றிய ஏதுவும் யோசிக்க முடியாமல் அவளின் அத்தனை நினைவுகளையும் பத்மினி ஆக்கிரமித்திருந்தாள். ஏறக்குறைய பரத்தின் நிலைமையும் அப்படித்தான் இருந்தது. ஏஞ்சலினா சப்மரைனை இயக்கத் தயாராயிருந்தாள். தங்களின் கப்பலில் சப்மரைனின் செயல்களைக் குறித்துக்கொள்ளும் அட்மிரலுடன் தொடர்பு கொண்டு வேகத்தைக் கூட்டத் தொடங்க கடலைக் கிழித்துக் கொண்டு சர்ரென்று அதிவிரைவாக பாய்ந்தது அந்த வாகனம்.சுற்றிலும் நீர்குமிழிகள் பணிப்பெண்ணாய் துணைக்கு வர சப்மரைனின் விளக்குகளின் வெளிச்சத்தைப் பரப்பிக்கொண்டு வந்தது.

அலெக்ஸ் ஏதோ சமிக்ஞை செய்து ஏஞ்சலினாவினை உஷார் படுத்தினான் ஆனால், ஏஞ்சல் அது தேவையா என்பதைப் போல பார்த்தாள் வேறு வழியில்லை என்பதை உறுதிப்படுத்திய அலெக்ஸ் மரைனின் வேகத்தை அதிகப்படுத்திட, ஏஞ்சலினா பதறியபடி அலெக்ஸ் இப்போ இந்த தேவையில்லாத பவரை நீங்க எடுத்துக்கிறதால நம்மோட டெம்பரேச்சரை யாராலும் கணிக்க முடியாது. சில நேரத்தில் கண்ட்ரோல் ரூமில் நம்மோட இணைப்பு கூட துண்டிக்கப்படலாம்.

உத்ராவுக்கும், பரத்துக்கும் இந்த பயணத்தில் பழக்கம் இருக்கான்னும் தெரியலை, லைட் சப்போட் அதிகப்படியான சூட்டை கொடுக்கும் இதனால் புதிய நபர்களுக்கு மயக்கம் வர வாய்ப்பு இருக்கு, அவள் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே உத்ராவின் பல்ஸ் ரொம்பவும் வீக்கா இருக்கிறது என்று பரத் சொன்னான்.

எஞ்சலினா அதற்கான காரணத்தை சொல்லி அவளுக்கு சற்று ஆக்ஸிஜன் லெவலை அதிகப்படுத்தினால் எந்த ஆபத்தும் வராது என்று பதில் கூறிவிட்டு அலெக்ஸிடம் சேர்ந்து கொண்டாள். பரத்திற்கு உத்ராவைப் பற்றிய கவலையோடு அலெக்ஸின் செயல்பாடுகள் சந்தேகத்தை கொண்டு வந்தது, அத்தோடு தேவையில்லாமல் இவர்களோடு வந்து சேர்ந்து கொண்டோமோ என்று தவிப்பாய் உணர்ந்தான் பரத். அலெக்ஸ்ன் பார்வை வெகு உன்னிப்பாய் கடலை ஆராய்ந்தது.

பத்மினி கடைசியாய் ஒருமுறை அந்த அலைதொடர்பை உயிர்ப்பித்தாள் அடக்கடவுளே இங்கு வந்து சேர்ந்ததில் இருந்து யாருக்கும் தகவல் கூட கொடுப்பது இல்லை, ப்ரியன் தான் இங்கிருப்பதை அறிந்து வந்ததைப் போல பரத்திற்கும் உத்ராவிற்கும் தெரிந்திருக்கவில்லையே அவர்கள் நிச்சயமாய் என்னைத் தேடிக்கொண்டுதான் இருப்பார்கள். ஆனால் இப்படி ஒரு சுரங்கம் இருப்பதே அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லையே தகவல் தொடர்புபகள் ஏதோ ஒரு காரணத்தினால் செயலிலந்து போயிருக்கிறது. அந்த சாதனங்கள் ஒவ்வொன்றையும் ஒயர்களை மாற்றி மாற்றி முயற்சிக்க சட்டென்று உயிர்பெற்றது அங்கிருந்து ஒரு சிக்னல் கிடைக்க அருகில் ஏதோ உதவி என்று மீண்டும் முயற்சித்தாள் பத்மினி

ஏஞ்சல் எனக்கு ரொம்ப குழப்பமா இருக்கு,

என்னாச்சு அலெக்ஸ்….




இங்கே இரண்டு சிக்னல் காட்டுது…. இரண்டுக்கும் இடைவெளி சில 15 அல்லது 20 மீட்டர்தான் இருக்கும். பேசிக்கொண்டு இருக்கும் போதே அவர்களின் சப்மரைன் ஏதாலோ தாக்கப்பட்டது. சற்றைக்கெல்லாம் நீண்ட பெண்டகன்கள் கொண்ட ஒரு ராட்சத மீன் ஒன்று அவர்களின் சப்மரைனை சுற்றி வளைத்தது. அதன் இறுக்கம் அதிகரிக்க அலெக்ஸ் விளக்குகளை அணையுங்கள் வெளிச்சம் காரணமாக கூட அது நம்மைத் தாக்க வரலாம்

ஆனால் அலெக்ஸால் விளக்குகளை அணைக்க முடியவில்லை எதுவும் வேலை செய்யவில்லை, இதன் இறுக்கம் இன்னும் அதிகரித்தால் சப்மரைன் நசுங்கலாம் அல்லது கண்ணாடிகள் உடையலாம்

வாய்ப்பு இல்லை நான்தான் சொன்னேனே இது பாலி கார்ப்பனேட்டால் ஆனது பிளாஸ்டிக் போன்ற தோன்றம் அளித்தாலும் ஆட்டோ மீட்டரின் வேகம் அதிகரிக்கிறது இதனால் நமது தகவல் தொடர்புகள் துண்டிக்கப்படலாம் எதிர்வரும் ஆபத்தை பற்றி அவர்கள் விவாதித்துக் கொண்டு இருக்கும் போதே அந்த ராட்சத மீன் தன்னுடைய பெண்டகன்களை சப்மரைனில் இருந்து விடுவித்துக் கொண்டது. உள்ளிருந்தவர்களுக்கு மிகுந்த ஆச்சரியம்… பயம் விலகியதைப் போல பெருமூச்சு விட்டார்கள். ஆனால் அலெக்ஸ் மட்டும் ஜீசஸ் என்ற வார்த்தையை பெரும் சப்தத்தோடு உபயோகித்தான்.

சப்மரைனை சுற்றி வளைத்திருந்த ராட்சத மீனை தன் கொடூர பற்களில் கவ்விக் கொண்டவாறு சப்மரைனைக் கடந்து சென்றது ஒரு திமிங்கலம் உத்ராவின் பரத்தின் கரங்களுக்குள் ஒடுங்கிக்கொண்டாள் கடவுளே ?!

இந்த திமிங்கலம் மெக்லோடன் வகையைச் சேர்ந்தது. இவை ரொம்பவும் அரியவகையும் கூட நம்ம டைனோஸர்ஸ் மாதிரி ஒரு காலத்திலே கூட்டம் கூட்டமா வாழ்ந்துட்டு இருந்தது. கடலின் சீதோஷ்ணம் மற்றும் வேறு பல காரணங்களால இதோட வேட்டையாட குணம் அதுங்களோட இனத்தையே அழிச்சிடுச்சி ! நம்மோட கெட்ட நேரம் இப்போ இதுகிட்டே வந்து மாட்டிட்டு இருக்கோம். அலெக்ஸ் இப்போ நமக்கு யாரோட உதவியாவது தேவை…..ஏதாவது செய்யுங்கள் இல்லைன்னா நாம அதோட வாய்க்குள் போக வேண்டியதுதான். முதலில் விளக்குகளை செயலிழக்க முயற்சி செய்யுங்கள் ஏஞ்சலினா சொல்லவும் மீண்டும் முயற்சித்தான் அலெக்ஸ் விளக்குள் அணைந்தது. ஒரு நீண்ட நிம்மதி பெருமூச்சு எடுத்துக்கொண்டு அவர்கள் நால்வரும் அமைதிகாக்க,

அதேநேரம் தகவல் தொடர்புகள் வேலை செய்ய தொடங்கியதும் தனக்கு வெகு அருகாமையில் உள்ள இரண்டு புள்ளிகளில் ஒன்றை உதவிக்கு அழைக்கலாம் என்று பத்மினி முயற்சித்தாள். அவள் தொடர்பு கொள்ள முயன்றது அலெக்ஸின் சப்மரைனை உதவி அழைப்புக்கு மீண்டும் விளக்குகள் உயிர்பெற ஏஞ்சல் வெகு அருகில் இரண்டு அலைவரிசைகள் தெரிவதாக சொன்னேன் இல்லையா அங்கிருந்து நமக்கு உதவி அழைப்பு வந்து இருக்கிறது சந்தோஷமாக சொல்லிக்கொண்டு இருந்த அலெக்ஸ் மற்றவர்கள் ஏதும் பேசாமல் போக அவர்களின் பார்வை சென்ற திசையை நோக்கினான், மீண்டும் வெளிச்சம் பெற்ற அலெக்ஸின் சப்மரைனை நோக்கி தனக்கு தரப்பட்ட விருந்தை சுவைக்க வர ஆரம்பித்தது அந்த திமிங்கலம்.




 

What’s your Reaction?
+1
13
+1
5
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!