Serial Stories முள்ளில் ரோஜா

முள்ளில் ரோஜா – 4

 4

நித்திரை தேடி நீளும் பின்னிரவுகளின் மீது
உன் திருத்தமான முகத்தின் இமை மயிரொன்றை
வீசிச் செல்கிறது
கலைந்து விட்ட மேகத்தின் கடைசி துண்டொன்று ,
பத்திரமாய் சேர்த்துக் கொண்டு
அணைக்க மறந்த அடுப்பென
காத்திருக்கிறேன்
விடியலுக்கு வெகு அருகாமையில்
வெளுக்க வேண்டாமென விண்ணை வேண்டியபடி ,
விண்மீன்களுடன் போட்டியிட்டபடி
உருண்டு கொண்டிருக்கிறது
என் கால் கொலுசின் உதிர்ந்த
மணியொன்று …




” இல்லை இந்த விபரங்கள் போதாது .இதோ இன்னமும் இந்த விபரங்களும் வேண்டும் .மேலும் எங்களுக்கு சேல்ஸ் விபரங்கள் வேண்டும் .அது எங்களுக்கு திருப்தியாக இருந்தால்தான் நான் உங்களுக்கு லோன் சாங்சன் பண்ண முடியும் …,” பைலை இவர்கள் புறம் தள்ளினார் அந்த மேனேஜர் .

” இந்த டீடெயில்ஸே போதுமென்றுதான் முன்பு சொன்னீர்கள் சார் .” சந்திரன் நினைவுறுத்தினான் .

” அப்போ சொன்னேன் சார் .இப்போ இல்லைன்னு சொல்றேன் .என்ன பண்ணணுங்கிறீங்க …? போங்க சார் போய் டீடெயில்ஸ் கொண்டு வாங்க “

பற்களை கடித்து கையை முறுக்கிய சந்திரனின் கைகளை பற்றினாள் சாம்பவி .” அண்ணா போகலாம் …ரொம்ப நன்றி சார் ” சந்திரனை இழுத்துக்கொண்டு வெளியேறினாள் .

” இவன் வேண்டுமென்றே செய்கிறான் சாம்பவி .”

” விடுங்கண்ணா …நாம் வேறு பேங்க்கில் முயற்சிக்கலாம் ..”

” எல்லா பேங்க்கிலும் அந்த உன் தோழிக்கு அக்கௌண்ட் இருக்கும் .பெரிய தொகை பிக்சட் டெபாஸிட்டாக இருக்கும் , இரண்டு ..மூன்று லாக்கர்கள் இருக்கும் .பிறகு எப்படி நமக்கு லோன் தருவார்கள் ….”

” ம்ப்ச் …நியாயமானவர்கள் எங்காவது இருப்பார்கள் .விடுங்கண்ணா …,”

” எனக்கு வருகிற ஆத்திரத்திற்கு அவள் கழுத்தை நெரித்துவிடலாமென்று இருக்கிறது .”

” எதற்கண்ணா இவ்வளவு ஆத்திரம் ..? அவளால் சாதிக்க முடியவில்லை .எங்கே நான் அவளை முந்தி விடுவேனோ என்ற பொறாமையில் இப்படியெல்லாம் செய்கிறாள் .”

இருவரும் பேசியபடி காரின் அருகில் சென்றனர் .சந்திரன் முதலில் ஏறி ஸ்டியரிங்கை பிடிக்க , சாம்பவி ஏற கதவில் கை வைத்தபோது  சர்ரென அங்கே ஒரு கார் வந்து நின்றது .சாம்பவி மேல் மோதுவது போல் வந்த அந்த காருக்கு துள்ளி விலகியபடி திரும்பி பார்த்து முறைத்தாள் அவள் .

” ஹாய் என்ன இந்த பக்கம் …? என்ன அண்ணனும் தங்கையுமாக பேங்க் பேங்க்கா அலையுறீங்க போல ..ஒண்ணும் நடக்கலையா …” வெற்றி முகத்தோடு இறங்கினாள் சஹானா .




அவளை ஒரு வழி பண்ணிவிடும் எண்ணத்தில் , வேகமாக இறங்கிய சந்திரனை கண்களால் தடுத்து ” அண்ணா நீங்க இறங்க கூடாது .” உத்தரவு போல் கூறிவிட்டு சஹானாவை ஏறிட்டாள் சாம்பவி .

” அன்று காரை ரொம்ப ஸ்பீடாக ஓட்டிட்டு போனியே …அடியெதுவும் படலையே …” நிதானமாக  கேட்டாள் சாம்பவி .

” ஏய் என்னடி நக்கல் பண்ணுறியா …? நான் அப்படித்தான்டி பண்ணுவேன் .என் வழியில் குறுக்க வந்தீன்னா முட்டி மோதிட்டு போய்கிட்டே இருப்பேன் “

” என் வழியில் …இல்லை என் வாழ்க்கையில் நீதான்டி குறுக்கே நின்று கொண்டிருக்கிறாய் “

” என் வாழ்க்கையையே நீ இல்லாமல் பண்ணிவிட்டாயே …”

” நானில்லை , உன் வாழ்க்கையை நீயேதான் கெடுத்துக்கொண்டிருக்கிறாய் …”

” என்ன நானா …? உன் நெஞ்சை தொட்டு சொல்லு .நீ என்னை ஏமாற்றவில்லை …? எனது நட்புக்கு துரோகம் பண்ணவில்லை …? “

” துரோகமா …? நீதான் ஆரம்பித்தாய் .நீயே முடித்துக்கொண்டாய் .இதில் எந்த இடத்திலாவது என் விருப்பமென்ற ஒன்று இருந்த்தா என்ன ..? நீயே யோசியேன் ….”

கோபம்தான் .மிகுந்த கோபம்தான் .ஆனாலும் நிதானமாக தெளிவாக சொற்களை உதிர்க்கும் சாம்பவியை பார்த்தாள் சஹானா .இவள் மாறிவிட்டாள் .கல்லூரியில் முதல் நாள் ராகிங்கிற்கு பயந்து கொண்டு , மெஸ்ஸிற்கு போகும் வழி தெரியாமல் விழித்துக் கொண்டு நின்றவளில்லை இவள் .

இதுபோல் இவளை மாற்ற வேண்டுமென்றுதான் சஹானாவும் நினைத்தாள் .ஆனால் அப்படி அவள் மாறும்போது தனக்கு உரிமையானவளாக இருக்கவேண்டுமென்று நினைத்தாள் .அந்த நினைப்பில்தான் எல்லா ஏற்பாடுகளும் செய்தாள் .ஆனால் அது எல்லாமே பாதியிலேயே நின்றுவிட்டது .




தனது உரிமையை விட்டுக்கொடுத்து விட்டும் , துவளாமல் நிமிர்ந்து நின்ற தோழியை உள்ளூர சிறு பிரமிப்புடனும் , வெளியே அதை காட்டாத அலட்சியத்துடனும் பார்த்தாள் சஹானா .

” உன் விருப்பம் இல்லை சரி .என் விருப்பமென்று ஒன்று இருந்த்தே ..அதாவது உனக்கு நினைவிருக்கிறதா …? ” சஹானாவின் குரலில் தெரிந்த நெகிழ்ச்சி சாம்பவியை கடினமாக பேச யோசிக்க வைத்தது .

” ஒன்று இல்லையென்று ஆகிவிட்டதாலேயே வாழ்க்கை முடிந்துவிடுவதில்லை சஹானா …” ஆதரவாக பேசினாள் .

” அதையேதான் நானும் உனக்கு சொல்கிறேன் .ஒன்று இல்லையென்றால் வாழ்க்கையே முடிந்து விடுவதில்லை .” சஹானாவின் குரலில் கொஞ்சம் குரூரம் இருந்த்தோ ….

” நிச்சயமாக ….இல்லையென்றே ஆகிவிட்ட ஒன்றை நினைத்து என் தங்கை இனிமேலும் ஏங்கிக்கொண்டிருக்க போவதில்லை .அவளுக்கென்று ஒரு வாழ்க்கையை உருவாக்கிக் கொண்டு வாழத்தான் போகிறாள் .அண்ணனாக அதை நான் அவளுக்கு நிச்சயம் உண்டாக்கி கொடுப்பேன் …” பொறுத்து ..பொறுத்து பார்த்துவிட்டு , முடியாமல் இறங்கி வந்து சீறினான் சந்திரன் .

” அண்ணா ..நீங்க ஏன் வந்தீங்க ..? உள்ளே போங்க ” சாம்பவி அவனை தள்ளினாள் .

” அட உங்கள் அருமை தங்கைக்கு ஒரு லோன் வாங்கி தர முடியவில்லை .நீங்களெல்லாம் ஏன் பேசுகிறீர்கள் …இப்படி கடன் வாங்கி  தொழில் பார்க்கும் நிலையில் அவளை வைத்துவிட்டு , அண்ணனென்ற பெரிய பேச்சு உங்களுக்கெதற்கு …? ” சஹானா .

” உன்னைப் போல் அப்பா பணத்தை அளவில்லாமல் வாங்கி தொழிலில் போட்டுவிட்டு லாபம் , நஷ்டம் பற்றிய கவலையில்லாமல் , காலாட்டி உட்கார்ந்து சாப்பிட சொல்கிறாயா ….? ” சந்திரன் .

” ஏய் ஒழுங்காக பேசு .எனக்கு சாப்பாடு நீயா போடுகிறாய் …?” சஹானா .

” நல்லவேளை அந்த துர்பாக்கியம் எனக்கு வாய்க்கவில்லை …,தப்பித்தேன் ”  சந்திரன் .




இந்த பதிலில் சஹானா கொதித்து போனாள் .மேலே அவள் பேசும் முன் ” சஹானா என் அப்பாவால் என் தொழிலுக்கு பணம் கொடுக்க முடியாமல் இல்லை .நானே கடனாக வாங்கி செய்தால்தான் எனக்கு ஒரு பொறுப்பு வருமென்று இப்படி லோன் வாங்கி செய்கிறேன் ” சாம்பவி அவளது கோபத்தை தன் மேல் திருப்பிக் கொண்டாள் .

” என்னவோ பத்து செங்கலை சுட்டு வைத்துவிட்டு பெரிய தொழிலதிபர் மாதிரி பீற்றிக் கொள்கிறாயே ….” தன் வழக்கம் போல் சாம்பவியை மட்டம் தட்டினாள் சஹானா .

” இது சுடுகிற செங்கல் இல்லை சஹானா .ப்ளை ஆஷ் ப்ரிக்ஸ் .உனக்கு தெரியாதா …? சிமெண்ட் செங்கல்னும் சொல்லுவாங்க .இதை சுடெல்லாம் வேண்டியதில்லை .எல்லாமே மெஷின்தான் ….” சிறு கேலியுடன் சாம்பவி விளக்க , சஹானா கோபத்தில் கொதித்தாள் .

” என்னடி ..எனக்கே விளக்கம் கொடுக்கிறாயா நீ …? நாலு வார்த்தை சேர்ந்தாற்  போல் பேசத் தெரியாதவள் நீ .உன்னை கொஞ்சம் பேச வைத்ததே நான்தான் .மறந்துவிட.டாயா ….? ” சஹானா .

” மறக்கிற காரியம் எதையும் நீ செய்யவில்லை .பேசவைத்தது மட்டுமில்லை , இதோ இப்போது தலை நிமிரந்து நிற்க வைத்திருப்பதும் நீதான் .உன் அலட்சியம்தான் எனக்கு  முன்னேற வேண்டுமென்ற வெறியை கொடுத்தது .இப்போது இந்த இடத்தில் நான் நிற்பதறகு உனக்கு நன்றி சொல் வேண்டும் …”

” அப்படி எந்த இடத்திலடி நீ இப்போது ஏறி நின்றுவிட்டாய் ….? “

” உண்மையிலேயே உனக்கு தெரியாதா …? தெரியாத்து போல் இருந்து கொள்கிறாயா …? வேகமாக முன்னேறி வரும் இளம் பெண் தொழிலதிபர் என்று சாம்பவியை பேட்டி எடுத்து , பத்திரிக்கையிலெல்லாம போட்டிருந்தார்களே …பார்க்கவில்லையா ….? ” சந்திரன் இடையிட்டு கூறினான் .

சஹானாவின் முகம் கூம்பியது .இது அவளுக்கு தெரியும் .சாம்பவியின் இந்த முன்னேற்றம் அவள் எதிர்பாராதது.இன்னமும் அவள் முன்னேறி விடக்கூடாது என்றே  , அவள் மேலும் லோன் வாங்குவதை தடுக்க முயல்கிறாள் .

” ஆரம்பத்தில் என் தங்கை தொழில் ஆரம்பித்த போது இது போல் தில்லு முல்லு செய்து லோனை தடுப்பது போன்ற வேலையெல்லாம் நீ செய்யவில்லையே . இப்போது ஏனம்மா இப்படி குறுக்குபுத்தி ….? “

சஹானா பதிலின்றி சந்திரனை முறைத்தாள் .

” நான் சொல்லவா …? சாம்பவி இவ்வளவு தூரம் தொழில் செய்வாளென்று நீ எதிர்பார்க்கவில்லை .மூன்றே மாதங்களில் கம்பெனியை மூடிவிட்டு வீட்டுக்குள் முடங்கி விடுவாளென நினைத்தாய் .ஆனால் என் தங்கை சாதித்துவிட்டாள் . இப்போது …மேலும் அவள் முன்னேறி விடக் கூடாது என பாடாக படுகிறாய் .சரியா …?




,” ஓ…பத்திரிக்கையில் போட்டோ வந்த்தும் . தங்கை நிறைய சாதித்துவிட்டாலென்ற எண்ணம் , அண்ணனுக்கு வந்துவிட்டது போல ,”

” அண்ணா போதும் வாங்க போவோம் ….” சாம்பவி அவன் கைகளை பிடித்து இழுத்தாள் .

” இரும்மா .உங்க கம்பெனி எப்படி போகுதுங்க மேடம் .? அப்புறம் ஆசையாக ஆரம்பித்தீர்களே அந்த புது ஷோரூம் அது எப்படி போகுது ….? “

” இதைப் பற்றியெல்லாம் உங்களுக்கு யார் சொன்னது …? ” சஹானா பல்லை கடித்தாள் .

” உங்களுக்கு இப்போது கொஞ்சம் இறங்குமுகம் போல…. ” என்று மேலும் சஹானாவை கோபமூட்டிக் கொண்டிருந்த சந்திரனை பிடித்து காரினுள் தள்ளினாள் சாம்பவி .

தானும் ஏறிக்கொண்டு ” போகலாம்ணா ….,”

காரினை ஸடார்ட் செய்து , அவளை சுற்றி வந்து உரசுவது போல் நிறுத்தி , கண்கள் சிவக்க இடுப்பில் கை வைத்து முறைத்துக் கொண்டுருந்தவளை பார்த்து

” உங்கள் ஷோரூம் உங்கள் கைகளை விட்டு போகப் போகிறது மேடம் …ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளுங்கள் …” என்று சிரித்து விட்டு போனான் சந்திரன் .

,” இல்லை .போகவிட மாட்டேன் .நான் தோற்கமாட.டேன் …” முனங்கியபடி தன் காரில் ஏறினாள் சஹானா .

” என்னண்ணா இப்படி பேசிட்டீங்க …? ” காரினுள் சந்திரனிடம் கேட்டாள் சாம்பவி .

,” இன்னும் என்னென்னவோ பேசியிருக்க வேண்டும் .நினைத்ததில் பாதிதான் பேசியிருக்கிறேன் ..”

” சே ..பாவம்ணா அவள் …”

,” பரிதாபமான நிலையில் நீ இருந்து கொண்டு   ,அவளுக்கு பாவப்படுகிறாயே பாப்பு ….”

” என்னண்ணா கொஞ்சநேரம் முன்புதான் சஹானா என் மேல் எவ்வளவு பொறாமை பட்டாள் …? இப்படி அடுத்தவர் பொறாமைபடும் நிலையில் நான் இருக்கிறேன். நீங்கள் என்னவென்றால் … “




,” வேண்டாம்மா …சும்மா உன்னை நீயே சமாளித்து கொள்ளாதே.அங்கே அவளிடம் சொன்னது பொய்யில்லை .நிச்சயம் உனக்கொரு புதிய வாழ்க்கையை நான் உண்டாக்கியே தீருவேன் ..”

இதுவரை அக்கறையாக அண்ணனை பார்த்து பேசிவந்தவள் இப்போது தீவிரமாக வெளியே வேடிக்கை பார்க்க தொடங்கினாள் .

” பாப்பு …சாம்பவி ….” சந்திரன் மாறி மாறி அழைக்க , அவனை திரும்பி பார்த்து அழுத்தமாக …

” உளறல் …” என்றாள் .பிறகு மீண்டும் வெளியே வேடிக்கை பார்க்க தொடங்கினாள.அமைதியாக காட்டிக் கொள்ள முயன்றாலும் உள்ளம் குமுறிக் கொண்டிருந்த்து .

சாம்பவிக்கு அன்று கெட்டநேரம் போலும் .அந்த நேரம் அவளை வீடு வரை துரத்தி வந்த்து .வாசலில் செருப்புகளை சுழட்டும் போதே சடகோபனின் குரலை அடையாளம் கண்டுகொண்டாள் .

சுழட்டிய செருப்புகளை மீண்டும் மாட்டிக்கொண்டு வெளியேற தயாரானபோது , அவள் கைகளை இறுக பிடித்த சந்திரன் ” சாப்பிடுற நேரம் .எங்கே வெளியே போகிறாய் …? ” என அதட்டியபடி உள்ளே கூட்டி சென்றான்.

சோபாவில் அமர்ந்திருந்த சடகோபன் பக்கம் இமை கூட திருப்பாது , வேகமாக தனது அறைக்குள் நுழைந்து பூட்டிக்கொண்டாள் சாம்பவி .

” சாம்பவி …அம்மாடி …நில்லுடா ….” என்ற சடகோபனின் அழைப்பு அவள் காதுகளில் எட்டியது போன்றே தெரியவில்லை .

” அட விடுங்க மாமா …அவளை பற்றி உங்களுக்கு தெரியாதா …? சின்னபுள்ளை அவ …இதுக்கு போய் கண்கலங்கிட்டு …” கண்ணீர் வடித்த தன் தாய்மாமனை தேற்றினான் சந்திரன் .

” அவுங்க என்னென்னவோ சொன்னாங்க , செஞ்சாங்க .ஆனால் என் அண்ணன் செஞ்சதுதான் இவளுக்கு பெரிசாப் போச்சு பார்த்தியா …? ” மரகதவல்லி தன் அண்ணனுக்காக குறைபட்டாள் .

” மரகதம் , நம்ம பொண்ணை நினைப்பியா …உன் அண்ணன் பக்கம் பேசுற .அப்போ அன்னைக்கு அவர் செஞ்சது சரிங்கிறியா ….? ” மணிவாசகம் அதட்டினார் .

” ஐய்யோ ஒரு பொண்ணா இருந்துட்டு அது எப்படிங்க அப்படி சொல்வேன் ..? “




” அன்னைக்கு என் உடம்பில் ஏதோ சாத்தான் புகுந்திடுச்சு போல.புத்தியில்லாமல் அப்படி செஞ்சிட்டேன் .என் குழந்தை அன்னையிலிருந்து என்னை திரும்பிக் கூட பார்க்க மாட்டேங்கிறாளே …” சடகோபன. நெற்றியிலறைந்து கொண்டு அழ…அவர் கைகளை பற்றிய சந்திரன் ..

” இல்லை மாமா .அன்று நீங்கள் செய்த்து தவறில்லை .அதனை இன்னமும் சரிப்படுத்தாமல் இருப்பதுதான் என் தவறு ” என்றான் .

மூவரும் ஆவலுடன் அவன் முகத்தை பார்த்தனர் .

” விரைவில் எல்லாவற்றையும் …நம் பாப்பு வாழ்க்கையையும் சரி செய்ய போகிறேன! மாமா ..”

கணவனின் இந்த பேச்சை கிச்சனிலிருந்து கேட்ட மாலினி , நீ உன் தங்கச்சிகிட்ட நல்லா வாங்கிக் கட்டிக்கிட்டுத்தான் ஓய்வ .எனக்கென்ன …நான் தள்ளி நின்னு பாசமலர்களின் சண்டையை வேடிக்கை பார்க்கிறேன் ,,”என தனக்குள் கூறியபடி வேலையை தொடர்ந்தாள் .




What’s your Reaction?
+1
40
+1
20
+1
0
+1
4
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!