gowri panchangam Sprituality

இன்றைய ராசி பலன்(06.05.24)

சந்திர பகவான் இன்று மீன ராசியில் பயணம் செய்கிறார்.இன்று பிற்பகல் 01.25 வரை திரியோதசி. பின்னர் சதுர்த்தசி. இன்று மாலை 04.39 வரை ரேவதி. பின்னர் அஸ்வினி. ஆயில்யம் மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம். மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

மேஷ ராசி

மேஷ ராசிக்காரர்களுக்கு சாதகமான நாளாக இருக்காது. அதனால் பொறுமையை கடைபிடிக்க வேண்டிய நாள். பணிகளில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. உங்கள் வாழ்க்கைத் துணையை புரிந்து நடந்து கொள்ள வேண்டும். பண இழப்பு ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் பணத்தை கவனமாகக் கையாள வேண்டும். கால்வலி ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. 




ரிஷபம் 

 ரிஷப ராசிக்காரர்களுக்கு  முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாளாக இருக்கும். புதிய வாய்ப்புகளை உங்களை தேடி வரும். பணிகளில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்தி மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். பணவரவு அதிகமாக காணப்படும். மகிழ்ச்சி காரணமாக ஆரோக்கியம் நன்றாக இருக்கும். 

 மிதுன ராசி பலன் 

மிதுனம் ராசிக்காரர்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும் நாளாக இருக்கும். உங்கள் கடின உழைப்பிற்கான பலன்களை பெறுவீர்கள். நாளைய நாள் பணியிடத்தில் முன்னேற்றத்தை காண்பீர்கள். புதிய வேலை வாய்ப்புகள் உங்களை தேடி வரும். குடும்பத்தில் இருப்பவர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்வீர்கள். நிதிநிலைமை மகிழ்ச்சியை தரும். ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் இருக்காது. 

கடகம்:

கடகம்

 கடக ராசிக்காரர்களுக்கு  அமைதியை கடைபிடிக்க வேண்டிய நாள். வெளியிடங்களுக்கு செல்வதன் மூலம் அமைதி காண்பீர்கள். நாளை பணிகள் அதிகமாக காணப்படும். ஆகவே பணியில் தவறுகள் ஏற்படாமல் இருக்க கவனமாக பணியாற்ற வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணையிடம் கடுமையாக நடந்து கொள்வதை தவிர்ப்பது நல்லது. அவருடன் அன்பாக பழகுங்கள். செலவுகள் அதிகமாக காணப்படும். குளிர்ச்சியான உணவுகள் உண்பதை தவிர்க்க வேண்டும். 




சிம்மம்

சிம்மம்

 சிம்ம ராசிக்காரர்களுக்கு முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாளாக இருக்காது. ஏழைகள் மற்றும் உடல் ஊனமுற்றோருக்கு உதவி செய்வதன் மூலம் மகிழ்ச்சியை பெறலாம். பணிகள் அதிகமாக காணப்படும். சக பணியாளர்களால் சில தொல்லைகளை சந்திப்பீர்கள். எனவே அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. உங்கள் வாழ்க்கைத் துணையுடன் அமைதியை கடைபிடிப்பது நல்லது. தேவையில்லாத செலவுகள் காணப்படும். முதுகு வலி ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. 

கன்னி:


கன்னி ராசிக்காரர்களுக்கு  உங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். முக்கியமான முடிவுகளை நீங்கள் தாராளமாக எடுக்கலாம். பணியிடத்தில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நட்புடன் நடந்து கொள்வீர்கள். பணவரவு அதிகமாக வரும். இது உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். 

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் உங்களுக்கு பயனுள்ள நாளாக இருக்கும். பணிகளை குறித்த நேரத்தில் முடித்து வெற்றி காண்பீர்கள். உங்களின் திறமைகள் அங்கீகாரம் உங்களுக்கு கிடைக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள். பணவரவு அதிகமாக இருக்கும். அதனால் பணத்தை சேமிப்பீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். 




விருச்சிகம் 

 விருச்சிகம் ராசிக்காரர்களுக்குஎதிலும் முயற்சி செய்ய வேண்டிய நாள். நீங்கள் அனைவரிடமும் எதார்த்தமாக பழகுவது நல்லது. பணிகளில் அதிக கவனம் தேவை. பணிகளை திட்டமிட்டு செய்ய வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணையை அனுசரித்து செல்வது நல்லது. நீங்கள் நினைத்த அளவுக்கு பணவரவு இருக்காது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். 

தனுசு:

 தனுசு ராசிக்காரர்களுக்கு கவனமாக செயல்பட வேண்டிய நாள். முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்காமல் இருப்து நல்லது. உங்கள் பணிகளை செய்யும் போது சில தடைகளை காண்பீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் அமைதியாகவும், அனுசரணையாகவும் நடந்து கொள்வது நல்லது. தேவையில்லாத செலவுகள் அதிகமாக காணப்படும். தாயின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். 

மகரம் 

மகரம் ராசிக்காரர்களுக்கு  சிறப்பான நாளாக இருக்கும். நல்ல முடிவுகளை எடுக்க உகந்த நாளாக இருக்கும். நாளைய னால உங்களின் வளர்ச்சி அதிகரிக்கும். உங்கள் பணிகளை குறித்த நேரத்தில் முடித்து வெற்றி காண்பீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள். இருவரும் இணைந்து மகிழ்ச்சியான நேரத்தை செலவழிப்பீர்கள். பணவரவு மகிழ்ச்சியை தரும். ஆரோக்கியத்தில் எந்தப் பிரச்சினையும் இருக்காது.




கும்பம் 

 கும்ப ராசிக்காரர்களுக்கு  மகிழ்ச்சியும் திருப்தியும் உண்டாகும் நாளாக இருக்கும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். பணியிடத்தில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் அதிக நேரத்தை செலவிடுவீர்கள். பணவரவு அதிகமாக காணப்படும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். 

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு  அனைவரையும் அனுசரித்து செல்ல வேண்டும். நீங்கள் தன்னம்பிக்கையை வளர்த்து கொள்வது நல்லது. நாளை பணிகள் அதிகமாக காணப்படும். அதை குறித்த நேரத்தில் முடிக்க திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணையை அனுசரித்து செல்வது நல்லது. பணவரவு திருப்தி தராது. ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் இருக்காது. 




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!