Serial Stories அதோ அந்த நதியோரம்

அதோ அந்த நதியோரம் – 14

14

 

 

 

” உன் அத்தை மகன் மிக தெளிவாக இருக்கிறார் ஜீவிதா .நானும் எதிலாவது அவரை மாட்டி வைக்கலாமென நினைக்கிறேன் .ம்ஹூம் …சிக்க மாட்டேங்கிறாரே ….” கைலாஷின் பேச்சு எரிச்சலூட்டியது .

” அப்படி அவரை எதில் சிக்க வைக்க நினைக்கிறாய் ….? ” இதமாய் இருந்த ஜீவிதாவின் மனது இந்த பேச்சில் சுணங்கியது .




அவர்கள் இருவரும் அந்த நதிக்கரையில் இருந்தனர் .ஸ்படிகம் போல் தெளிவாய் ஓடிக் கொண்டிருந்த ஆற்று நீரில் பாறையில் உட்கார்ந்து கால்களை நனைத்தபடி இருந்தாள் ஜீவிதா .ஜில்லென்ற அந்த நீரை போலவே அவள் மனதும் குளிர்ந்து கிடந்த்து .

” எதிலாவது …எப்படியாவது …அவரை சிக்கவைத்து , இப்படி செய்வது தப்பில்லையா எனக் கேட்க நினைக்கிறேன் .ஆனால் …” உதடு பிதுக்கினான் .

” உனக்கு ஏன் இப்படி ஒரு ஆசை கைலாஷ் …? “

” எல்லோரும் ….ஊர் முழுவதும் …அவரை ஏதோ தேவதூதன் போல் பார்க்கிறார்களே …ஆணுக்கு ஆணாய் எனக்கு கொஞ்சம் பொறாமை வராதா தோழி …? “

” ப்ச் …எதையாவது உளறாதே ….”

” உங்க பேக்டரி வொர்க்கர்ஸிடம் கூட பேசி பார்த்தேன் .அவர்கள் உடலை கூட நாம்தானே செக் செய்தோம் .ஆல் வெரி பெர்பெக்ட் ….”

” ம் .கெமிக்கல் தாக்க கூடாதென்று எல்லோருக்கும் முகமூடி வாங்கி தந்திருக்கிறார் .சிலர் அதன் அருமை தெரியாமல் யூஸ் பண்ணாமல் விட்டு உடம்பு சரியில்லை என்று வருகிறார்கள் “.  அன்று தன்னிடம் வந்த தொழிலாளியின் கவனமின்.மையை நினைவில் வைத்து சொன்னாள் .

” எல்லாவற்றிலும் அக்கறைதான் . இதோ இந்த நதி இன்னொரு சாட்சி .இது போல் பேக்டரிக்கு பின்னால் ஓடும் நதிகள் அந்த பேக்டரியின் மீதங்களை வாங்கிக் கொண்டு அழுக்காக ,கெமிக்கல் ஆறாக ஓடிக்கொண்டிருக்கும் .அப்படி ஒரு நதியை எதிர்பார்த்துத்தான் வந்தேன் .ஆனால் இந்த அளவு ஒரு சுத்தமான நதி நீர் …ஐ.ஆம் நாட் எக்ஸ்பெக்ட் திஸ் “




” இதில் பாலாவுடைய பங்கு மட்டும் இல்லை கைலாஷ் .  இந்த பேக்டரியை  இந்த நதியோரம் ஆரம்பிக்க நினைத்தபோதே என் தாத்தா இந்த நதியை களங்க படுத்த கூடாதென்ற உறுதியோடுதான் ஆரம்பித்தார் .பேக்டரிக்கான தண்ணீரை மட்டும் இதிலிருந்து எடுத்துக் கொண்டு , கழுவுகளை பல லட்சம் செலவு செய்து நிலத்திற்கடியில் பெரிய குழாய்கள் அமைத்து கடலூர் வரை கொண்டு போய்  கடலில் போய் கலக்க வைத்தார் .அதனையே என் அப்பா , சித்தப்பாவும் …இப்போது பாலாவும் பின்பற்றுகிறார்கள் .அவ்வளவுதான் ” ஜீவிதாவின் குரலில் தன் குடும்பத்தினரின் பெருமை .

” ம் ….உன் தாத்தா கிரேட் மேன் ….”

” இது போல் எங்கள் குடும்பத்திற்கேயான நிறைய நியாய தர்மங்கள் எங்கள் தொழிலில் உண்டு கைலாஷ் .நானும் சுகன்யாவும் பெண் வாரிசுகளாக போய்விட்டதால் , இந்த சொத்துக்களை அந்நிய ஆணிடம் ஒப்படைக்க நேரிட்டால் தங்களது தொழில் தர்ம்ம் மாற்றப்பட்டு விடக் கூடுமென்றுதான் , அப்பாவும் , சித்தப்பாவும் எங்களுக்கு மாப்பிள்ளைகளை சொந்த்ததிலேயே பார்த்தார்கள் .ஆனால் ….” மேலே பேசாமல் உதடு கடித்து நிறுத்தனாள் .




” அதனால்தான் என்னை என் காதலை மறுத்தாயா ஜீவிதா …?   இப்போது …உன் சித்தப்பாவிற்கு அவர்கள் எண்ணப்படிதானே மாப்பிள்ளை அமைந்து விட்டது .உனக்கு …வேறு யாராவது மாப்பிள்ளை இருக்கிறானா …இது போல் சொந்த்த்தில் …” கைலாஷின் குரலில் எள்ளல் இருந்த்து .

பதில் சொல்ல முடியாமல் தலையசைத்து மறுத்தாள் ஜீவிதா .

” பிறகு …என்னிடம் என்ன குறை ஜீவிதா …? “

” ஒருவரை மறுப்பதற்கு அவரிடம் குறை இருந்தாக வேண்டுமென்ற கட்டாயம் இல்லை கைலாஷ் …”

” ம் …சொல்லு .முழுவதுமாக சொல்லி முடி …”

” நீ குறைகளற்றவன் கைலாஷ் .சொல்லப் போனால் நான்தான் உனக்கு பொருத்தமானவள் இல்லை .”

” இது சும்மா …சிரித்துக் கொண்டே கழுத்தறுப்பது என்பார்களே …அந்த மெதட் இது …,”

” கைலாஷ் ப்ளிஸ் இப்படி பேசாதே .இந்த பேச்சு என்னை காயப்படுத்துகிறது ….”

ஜீவிதாவின் துடிப்பை கைலாஷ் கண்டு கொள்ளவில்லை .

” உங்கள் சொத்துக்களை காக்க வேண்டுமென்பதற்காக , உங்கள் இரு குடும்பங்களுக்கும் சேர்த்து ஒரே வாரிசு இருந்து விட்டு போகட்டுமென்று நினைத்து விட்டீர்களா …? “

” என்ன கேட்கிறாய் …? புரியவில்லை …”

” தங்கள் இரு மகளுக்கும் ஒரே மாப்ப்பிள்ளையாக தங்கள் தங்கை மகனே இருந்து விட்டு போகட்டுமென உங்கள் தந்தைகள் நினைத்து விட்டனரா ..எனக் கேட்கிறேன் .சொத்துக்கள் வெளியே எங்கேயும் போகாது பாரேன் .அவர்கள் கைக்குள்ளேயே  வைத்துக் கொள்ளலாமே …”

” வார்த்தைகளை யோசித்து பேசு கைலாஷ் .உன் பேச்சு எங்கள் குடும்பத்தை கேவலப்படுத்துவது போலுள்ளது “




” இல்லாததை நான் பேசவில்லையே .இன்னமும் உங்கள் அனைவர் மனதிலும் அந்த சிவபாலன்தானே குடும்ப வாரிசாக அமர்ந்திருக்கிறார் .அனைவரும்  அவரைத்தானே நினைத்துக் கொண்டிருக்கறீர்கள் …நீ உட்பட …” ஜீவிதாவின் முகத்தின் முன் குனிந்து கைலாஷ் இதனை அழுத்தமாக சொல்ல ஜீவிதாவின் முகம் கோபத்தில் சிவந்த்து .

” ராஸ்கல் …இந்த அளவு என் குடும்பத்தின் மீது உரிமை உனக்கு யார் கொடுத்தது …? ” அவளது பேச்சில் என் வீட்டை விட்டு போடா என்ற செய்தி மறைந்திருந்த்து .

ஆனால் அது கைலாஷை பாதிக்கவில்லை .

” உங்கள் குடும்பத்தில் இன்னமும் கொஞ்சம் தன்மானத்தோடு ஒரே ஒரு ஜீவன் இருக்கிறார்கள் .உன் அம்மா . எங்கே தன் மகள் இரண்டாம் தாரமெனும் கேவலமான நிலைக்கு தள்ளப்பட்டு விடுவாளோ …எனப் பயந்தபடி இருக்கிறார்கள் .அவர்கள் கொடுத்த உரிமை இது .நான் எப்போதும் அவர்கள் பக்கம் ஜீவிதா …”

உன்  வீட்டில் தங்க உன் சம்மதம் எனக்கு தேவையில்லை …சொல்லாமல் சொன்ன கைலாஷ் ஜீவிதாவிற்கு மிகுந்த வெறுப்பை கொடுத்தான் .

” முதன் முறையாக உன்னுடைய ப்ரெண்ட்ஷிப்பை நான் வெறுக்கிறேன் …” வேகமாக திரும்பி நடந்த ஜீவிதா அப்போது வந்த சிவபாலன் மேல் மோதிக்கொண்டாள் .

” பார்த்துடா பாப்பு .எதற்கு இத்தனை அவசரம் …? கிளம்பி விட்டாயா …இப்போதுதான் நீ இங்கே இருப்பதை அறிந்து உன்னை பார்க்கத்தான் வந்தேன் . நேற்று நான் கூப்பிட்ட போது வராமல் இப்போது திடீரென ….” பேசிக் கொண்டே போனவன் அவளது கலங்கயிருந்த முகத்தை பார்த்ததும் நிறுத்தினான் .

” என்ன விசயம் ஜீவா …? ” அவன் கண்கள் தள்ளிநின்றிருந்த  கைலாஷ் பக்கம் போக , தானும் திரும்பி கைலாஷை பார்த்த ஜீவிதா கைலாஷின் கேலி பார்வையில் குழம்பி தன்னை பார்த்தாள் .

தடுமாறியவளின் தோள்களை பற்றி நிறுத்தியிருந்த சிவபாலன் இன்னமும் அவள் தோளணைத்தபடியே ஒட்டி நின்று அவளை விசாரித்துக் கொண்டிருந்தான் .சிறிதும் விலகும் எண்ணமின்றி அவனருகில் உரசி நின்றிருந்தாள் ஜீவிதாவும் .

நான்தான் சொன்னேனே …என்ற கைலாஷின் குத்தல் பார்வையில் உடல் கூச , தீச்சுட்டாற் போல் சிவபாலனின் கைகளை உதறியவள் துரத்தும் உணர்வுகளிலிருந்து தப்பிப்பது போல் அங்கே இருந்து நிஜமாகவே ஓடியே போனாள் .




திடுமென மாறிய ஜீவிதாவின் நடத்தையில் குழம்பி  சிவபாலன் கைலாஷை கோபமாக பார்த்தான் .நீதான் காரணமாடா …என்ற அவனின் பார்வைக்கு ..” சீ யூ சூன் ப்ரெண்ட ….” அலட்சியமாக கையை டாடா காட்டி நடந்தான் கைலாஷ் .

———————-

,” கைலாஷை இங்கே ஏன் வர வைத்தாய் ஜெயந்தி …? ” ஜீவிதாவின் கோபம் ஜெயந்தியை பாதிக்கவில்லை .

” உங்களுக்காகத்தான் அக்கா .எத்தனை நாட்கள் பழசையே நினைத்துக் கொண்டு இப்படியே இருப்பீர்கள் .உங்களுக்கென ஒரு வாழ்க்கை வேண்டுமே அதற்காகத்தான் அவரை வரவழைத்தேன் …”

” அது …எனக்கு பிடிக்கவேண்டாமா ஜெயந்தி …? ” பொறுமையை இழுத்துப் பிடித்தபடி கேட்டாள் .

” பழக …பழக சரியாகி விடும்கா ….” தத்துவம் பேசனாள் அவள் .தனது நன்மையை மட்டுமே நினைத்து செயல்படும் ஜெயந்தியிடம் இதற்கு மேல் கடுமையாக பேச ஜீவிதாவால் முடியவில்லை  .

வீட்டில் சௌதாமினியின் தொல்லையோடு , கைலாஷின் தொல்லையும் சேர்ந்து கொள்ள அவர்கள் மேல் காட்ட முடியாத கோபத்தை எல்லாம்  சிவபாலன் மேல் காட்டினாள் .இவன்தானே எல்லாவற்றிற்கும் காரணம் .




அவன் முகம் பாராமல் ஓடினாள் .அவன் போனை கட் செய்தாள் . பத்தடி தூரத்திலேயே அவனை உணர்ந்து இருபதடி தொலைவு ஓடினாள் .அவனிடமிருந்து எட்டி நிற்க வெகுவாக முயன்றாள் .இருந்தும் ஒருநாள் அவனிடம் தனிமையில் மாட்டிக் கொண்டாள் .

முந்திரி கொட்டைகளுக்கான வாரக் கணக்கினை அப்பாவின் அலுவலகத்தில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள் .தொழில்களை முழுவதுமாக சிவபாலன் கைகளுக்குள் விட அவள் விரும்பாததால் இதுபோல் அடிக்கடி தொழில் கணக்குகளை தானும் பார்த்துக் கொண்டிருந்தாள் .

திடுமென அறைக்குள் வந்து நின்ற சிவபாலன் ” எதற்காக ஓடிக்கொண்டே இருக்கிறாய் …? ” நிதானமாக விசாரித்தபடி அழுத்தமான காலடிகளுடன் அவளை நெருங்கினான் .

What’s your Reaction?
+1
9
+1
4
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!