Serial Stories thanga thamarai malare தங்க தாமரை மலரே

தங்க தாமரை மலரே – 10

10

” இந்தநெயில்பாலிஷ் எங்கே வாங்கினீர்கள் மேடம் ? ”  கமலினியின் கையில் ப்ரியம்வதாவின் கை .கோபமாக அவள் கையை உருவும் முன் ” ஆஹா என்ன அழகான விரல்கள் ! ” என்றொரு பாராட்டும் .ப்ரியம்வதாவின் வேகம் கொஞ்சம் குறைந்தது .

” இது நிச்சயம் காஸ்ட்லி ப்ராண்டாகத்தான் இருக்குமென்று நினைக்கிறேன் மேடம் .அதிலும் இந்த கலர் ரொம்ப பெக்கூலியர் இல்ல…! எனக்கு ரொம்ப நாட்களாகவே இந்த கலர் வாங்க வெண்டுமென்று ஆசை .ஆனால் கிடைக்கவேயில்லை
அதுதான் உங்களிடம் விசாரித்தேன் .”

” ம் …ம் .இதெல்லாம் ரொம்ப காஸ்ட்லி .உன்னாலெல்லாம் வாங்க முடியாது .நான் இதனை ஆன்லைனில் வாங்கினேன் …”

” ஓ …அப்படியா மேடம் .எந்த ஆப் மூலம் வாங்கினீர்கள்.? ” 

சரோஜாவும் மற்ற சேல்ஸ் கேர்ஸ்சும் இங்கே என்ன நடக்கிறதென குழப்பமும் , எரிச்சலுமாக நின்றனர் .மேடத்திற்கு பிடிக்கவில்லையென எடுத்து வெளியே வைத்த எல்லா நகைகளையும் திரும்பவும் உள்ளே வைக்க சொல்லவிட்டாள் கமலினி .இப்போது சாதாரண சகாவாக ப்ரியம்வதாவிடம் அரட்டை அடித்துக் கொண்டிருக்கிறாள் .

” ஆப் வழியாகவா …? நானா …? இந்த ஆபர் சேல்செல்லாம் என்னிடம் கிடையாது .நான் ஸ்டரெயிட்டாக கம்பெனியிலேயே வாங்கி விடுவேன் …” தன் செல்வ நிலையை பறைசாற்றும் பேச்சு ப்ரியம்வதாவிடம் .

” யு ஆர் கிரேட் மேடம் .ஆனால் இந்தக் கலர் உங்கள் நகங்களில் இருப்பதனால்தான் இத்தனை அழகாக இருக்கிறதோ என்றொரு சந்தேகம் இப்போது எனக்கு வந்திருக்கிறது .இதோ இங்கே பாருங்களேன் …இந்த பிராட் நெக்லெஸ் என் கழுத்தை விட உங்களுக்கு அழகாக இருக்குமென்று தோன்றுகிறது .டிரை பண்ணி பாருங்களேன. …” தன் கழுத்தை ஒட்டி போட்டிருந்த நெக்லெஸை சுழட்டி நீட்டினாள் .




கற்களோ பட்டை தீட்டிய பளபளப்போ இல்லாமல் தங்க வெல்வெட் பட்டை போல் இருந்த அந்த வித்தியாசமான கழுத்தணி ப்ரியம்வதாவை கொஞ்சம் கவரவே மெல்ல அதனை கை நீட்டி வாங்கினாள் .கழுத்தில் போட்டாள் .
” சூப்பர் .அப்படியே உங்கள் கழுத்தில் பொருந்தி நிற்கிறதே …” என்றபடி தன்னருகே நின்றிருந்த வசந்தியின் கையை லேசாக சுரண்டினாள் கமலினி.

” வாவ் …என்ன அழகு …கமலினியை விட இது உங்களுக்குத்தான்  நன்றாக இருக்கிறது மேடம் .அப்படியே ஜொலிக்கிறீர்கள் …” கருமமே கண்ணானாள் வசந்தி .

இது ஒரு சிறு தந்திரம்தான் .தன்னை விட அழகாக இருந்த பெண் அணிந்திருந்த நகை அவளைக் காட்டிலும் தனக்கு நன்றாக இருப்பதாக பிறர் சொல்ல கேட்பது ஒரு பெண்ணிற்கு மிகப் பிடித்தமானதாயிருக்கும் .இவ்வளவு நேரமாக டிரேயில் இருந்து எடுத்து தன் மேனியில் வைத்த நகைகளை விட , கமலினியின் கழுத்திலிருந்து தன் கழுத்துக்கு மாறிய , சேல்ஸ்கேர்ள்ஸால் அழகென்று புகழப்பட்ட நகை ப்ரியம்வதாவிறகு மெல்ல பிடித்துப் போக ஆரம்பித்தது .அவள் கண்ணாடியில் தன் தோற்றத்தை ரசிக்க ஆரம்பித்தாள் .

” ப்ரியா இது வேண்டாம்மா .இது வெயிட்லெஸ்ஸாக இருக்கிறது .சிறியதாக இருக்கிறது . உழைப்பும் இருக்காது , பார்வையும் இருக்காது .வேறு ஏதாவது பாரம்மா …” ப்ரியம்வதாவின் தந்தை கூற …

” நோ டாட் ஐ வான்ட் திஸ் …” சிணுங்கினாள் அவள் .

கமலினி புன்னகையோடு இருவரையும் பார்த்தாள் .” சார் உங்கள் விருப்பமும் நிறைவேற வேண்டும் .மேடத்தின் ஆசையும் நடக்க வேண்டும் .இருவருக்கும் பொதுவாக நான் ஒரு யோசனை சொல்கிறேன் .இதே போன்ற நவீன மாடல் நகைகளில் முத்து , ரூபி , செர்க்கான் , குந்தன் , எமரால்டு, டயமென்ட் போன்ற கற்கள் பதிக்கப்பட்ட நகைகள் எங்கள் கடையின் மேல் தளத்தில் இருக்கின்றன .அவற்றை பாருங்களேன் …”

ப்ரியம்வதாவின் முகத்தில் சம்மதம் தெரிய அவள் தாயும் , தந்தையும் தயங்கினர. .

” பார்க்கலாமே டாட் …”

” இல்லைடா நாம் வைர நகைகளை பரம்பரை பரம்பரையாக ஆந்திரா கோபால் செட்டியிடமதான்  வாங்குவது .இங்கே தங்கம் வாங்க மட்டும்தான் வந்தோம் …”

” ஹையோ சார் .நீங்கள் வாங்கவே வேண்டாம் .ஜஸ்ட் பாருங்கள் போதும் .ஆந்திரா வைர நகைகள் மிகவும் அருமையானவை . எனக்கும் தெரியும் சார் . இங்கே எங்கள் சார் மும்பை வைர நகைகள் வாங்கி வைத்திருக்கிறார் .சும்மா ஒரு பார்வை பாருங்கள் ” பேசியபடியே ப்ரியம்வதாவின்  கை பிடித்து  அவர்களை லிப்டுக்கு அழைத்து சென்று தானும் உடன் ஏறினாள் .ஏழாவது மாடி பட்டனை அழுத்தியவள் தொடர்ந்து பேச தொடங்கினாள் .

” ஆந்திரா நகைகள் தரமானவைதான் சார் .அதில் மாற்றுக் கருத்து இல்லை .ஆனால் அவையெல்லாம் கொஞ்சம் பழைய மாடலாக இருக்கும் .மேடத்தை போன்ற இளையவர்களுக்கு அது அவ்வளவாக பிடிப்பதில்லை . இவர்களை போன்றவர்களுக்காகவே இப்போது நியூ மாடல் கட்டிங் வைர நகைகளை எங்கள் விஸ்வா சார் மும்பை , சூரத்திலிருந்து வாங்கி வந்து வைத்திருக்கிறார் .பாருங்கள் …”

” ஏம்மா பழைய மாடல் நகைகளென்றால் மோசமானவைகளா …? ” ப்ரியம்வதாவின் அம்மா கோபத்தின் ஆரம்பத்தில் இருந்தாள் .

” ஐயோ நான் அப்படி சொல்வேனா அம்மா …? பழமைகள் எப்போதும் மதிப்பு வாய்ந்தவைகள்தான் .இதோ இப்போது நீங்கள் போட்டிருக்கும் கம்மலும் , மூக்குத்தியும் ப்ளூஜாகர்தானே …? நீலமும் , வெண்மையும் கலந்து எப்படி டாலடிக்கிறது பாருங்கள் .இதனை மோசமானதென்று யாராவது சொல்வார்களா …? “

” ம் .இது ப்ளூஜாகர்தான் .இதுவெல்லாம் இப்போது கிடைப்பதில்லை . அரிதாயிருப்பதிலேயே  இதன் மதிப்பு தெரிகிறதில்லையா …? ” தாயின் பார்வை இப்போது மகளிடம் இருந்த்து . மகளின்புதுமை மோகத்தை திருப்ப எண்ணினாள் அவள் .மகளோ வைரப்பூச்சர நெக்லசில் கண் பதித்திருந்தாள் .

” ப்ளூஜாகர் வைரம் மிக விலை உயர்ந்த்துதான் அம்மா . அழகானதும் கூட .அது இப்போது கிடைக்காத காரணம் , ப்ளூஜாகர் வைரங்கள் வெட்டி எடுக்கப்படும் ஆபரிக்க நாடுகளில் அந்த சுரங்கங்கள் மூடப்பட்டு விட்டன . அந்த வகை வைரங்கள் அச் சுரங்கங்களில் தீர்ந்துவிட்டன .அதனாலேயே அவை நமக்கு கிடைப்பதில்லை . பழமையாகி விட்டதாலேயே அவற்றின் மதிப்பும் எங்கேயோ போய்விட்டது .அங்கே கிடைக்காத வைரத்தை மனிதர்கள் விடுவார்களா..? ஆப்ரிக்காவில் இல்லையெனில் ஐரோப்பாவில் என தேடி தோண்டி விட மாட்டார்களா …? ப்ளூஜாகருக்கு பிறகு வந!ததுதான் பெல்ஜியம் கட்டிங் வைரங்கள் . இவை பெல்ஜியத்தில் பட்டை தீட்டப்படுபவை . இப்போதோ மும்பை , சூரத் என நம் நாட்டிலும்  வைரங்கள் பட்டை தீட்டப்படுகின்றன .உயர்ந்த்து , தாழ்ந்த்து என வைரத்தில் இல்லையம்மா .வைரம் வைரம்தான் .காரட்டிலும் , சென்டிலும் மட்டுமே வைரத்தின் மதிப்பை கணக்கிட வேண்டும் .இதோ எங்களிடம் மூன்று சென்ட் கல்லிலிருந்து இருபது சென்ட் கல் வரை இருக்கிறது . இவை அனைத்தும் மிக கவனமாக தோசங்கள் எதுவுமில்லாமல் எங்கள் விஸ்வா சாரால் தேர்ந்தெடுக்கப்பட்டு தேர்ந்த விற்பன்னர்களால் அழகாக கட்டப்பட்ட நகைகள் .பாருங்கள் உங்களுக்கு பிடிக்கும் …”




வைரங்கள் பற்றிய கமலினியின் விளக்கம் அனைவரையும் கவர்ந்த்து .மெலிதாக கை தட்டக் கூட செய்தான் ப்ரியம்வதாவிற்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை சுதாகர் .ப்ரியம்வதா பூச்சரம் , கண்டசரம் , மங்கலசரம் என ஒவ்வொரு வகை நகைகளாக எடுத்து அணிந்து பார்த்துக் கொண்டிருந்தாள் . அவளது கண்கள் அந்த வைரக் கற்களுடன் போட்டி போட்டுக் கொண்டிருந்தன .

” எங்களிடம் வைர ப்ரூச் கூட இருக்கிறது மேடம் .பாருங்கள் …” வித வித வைர ப்ரூச்களை ஒரு டிரேயில் அடுக்கி ப்ரயம்வதாவின் முன் வைத்த கமலினியின் விழகள் கடையின் உட்புறத்தை சுற்றி அலைந்த்து .அவள் விஸ்வேஸ்வரனை தேடிக் கொண்டிருந்தாள் .நவரத்தனங்களும் , பிளாட்டினங்களுமாக இருக்கும் இந்த ஏழாவது தளம் முழுக்க அவனது பொறுப்பில் இருக்கும் .அவனது ப்ரைவேட ரூம் கூட இங்கேதான் இருக்கும் .

கமலினி தன் முதலாளியிடம் நல்ல பெயர் வாங்கி விடும் துடிப்பில் இருந்தாள் .முதல்நாள் அவனிடம் இந்த நல்ல வேலையை மறுத்ததற்கான பரிகாரமாக இன்று அவனுக்கு ஒரு மிகப் பெரிய பிசினஸை முடித்து தர நினைத்தாள். எப்போதும் இங்கேதானே இருப்பான் …இன்று ஏன் உள்ளேயே உட்கார்ந்து கொண்டஇருக்கிறான் …? பூட்டப்பட்டிருந்த அவன் அறைக் கதவை அடிக்கடி பார்த்தபடி தனது வேலையை  கவனித்தபடி  இருந்தாள்

” வைரத்தில் ப்ரூச்சா …? “

” ஆமாம் மேடம் .இதோ வைரச் சிட்டி கூட இருக்கிறதே .இதனை தலைக் கொண்டையில் நீங்கள் வைத்துக் கொள்ளலாம் .நீங்கள் செட்டி நாட்டு பக்க கல்யாணத்திற்கு போயிருக்கிறீர்களா …? அங்கே உங்களை போன்ற உயர் குடும்பத்து பெண்கள் எல்லோரும் அவர்கள் திருமணத்தின் போது  இந்த மாதிரி நகைகளை அணிந்து கொள்வார்கள் “

கமலினியின் பேச்சும் ,விளக்கங்களும் கூடவே அந்த நகைகளின் வடிவமைப்பும் ப்ரியம்வதாவை மெல்ல மெல்ல இளக்கிக் கொண்டிருந்தன .

” அட சிகப்பு கல் . இதுவும் வைரமதானா …? “

” ஆமாம் அம்மா .வைரங்கள் பெரும்பாலும் வெள்ளை நிறங்களில்தான் கிடைக்கும் .வெகு அபூர்வமாகத்தான் இள மஞ்சள் , சிகப்பு கற்கள் கிடைக்கும் .அதனால் அவை மிக விலை உயர்ந்தவைதான் .இதோ இந்த நெக்லசில் கீழே தொங்கிக் கொண்டிருக்கும் இந்த ஒரே ஒரு சிகப்புக் கல் இந்த நெக்லஸ் முழுவதையும் அழகாக மாற்றிவிட்டது பார்த்தீர்களா ….? “

கமலினி அந்த நெக்லசை எடுத்து தனது கழுத்தில் வைத்துக் காட்ட ” வாவ் …” என முதலில் பாராட்டை வெளிப்படுத்தியவள் ப்ரியம்வதாவே .தொடர்ந்து வளையல் , கம்மலென அந்த செட்டின் மற்ற நகைகளையையும் அவளிடமே எடுத்து தந்து அணியும்படியும் சொன்னாள் . மறுக்காமல் அணிந்து நின்றவளை திருப்தியாக பார்வையிட்டு பின் அவற்றைமுழு உருவ கண்ணாடி முன் நின்று  தன் கழுத்தில் அணிய தொடங்கினாள் .

” இன்று வெறும் கையுடன்தான் கடையிலிருந்து திரும்ப போகிறோமென நினைத்தேன் .எப்படியோ ப்ரியாவை திருப்தி படுத்தி விட்டீர்கள் …” கமலினியிடம் முணுமுணுத்தான் சுதாகர் . .

” நன்றி சார் .மாப்பிள்ளைக்கென வைர கடிகாரம் , ப்ரேஸ்லெட் , சட்டை பட்டன் எல்லாம் இருக்கிறது .பார்க்கிறீர்களா …? “

” ஹா …ஹா .நீங்கள் ரொம்ப தெளிவுதான் . விஸ்வா ரொம்ப லக்கி .உங்களை போன்ற அர்ப்பணிப்பான பணியாட்கள் கிடைப்பது அபூர்வம் .எங்கே அவன் …? “

நானும் அவரைத்தான் தேடுகிறேன் …மனதிற்குள் நினைத்தபடி சுதாகரை பார்த்து புருவம் உயர்த்தினாள் .

” உங்க சாரும் நானும் ப்ரெண்ட்ஸ் மேடம் .அதனால்தான் இந்த ” ன் ” .நான்தான் ப்ரியா குடும்பத்தினரை வற்புறுத்தி இங்கே நகை வாங்க அழைத்து வந்திருக்கிறேன் …”

” ஓ .சரிதான் .ஆனாலும் பணியாட்களிடம் அவர்கள் முதலாளியை இப்படி பேசுவது கொஞ்சம் ..ஷ் …பார்த்து …” அவனது ஒருமையை நாசூக்காக ஆட்சேபித்தபடி கீழே குனிந்தாள் .




சுதாகருடன் வந்திருந்த ஒருவன் மோதிரங்கள் டிரேயை தட்டி விட்டு விட மோதிரங்கள் தரையில் சிதறின .அவற்றை குனிந்து அவசரமாக எடுத்துக் கொண்டிருந்தவளின் அருகே ஷூ அணிந்த கால்கள் வந்து நின்றன.

” வாங்க சார் .வணக்கம் சார் ” சுதாகரின் கேலிக் குரலுக்கு …” ஷ் என்னடா இது …? ” கண்டித்தபடி வந்து நின்ற  விஸ்வேஸ்வரன் ” இங்கே என்ன செய்கிறாய் …? போதும் உன் வியாபாரம் .செகன்ட் ப்ளோர் போ …” என கமலினியை சிடுசிடுத்தான்.

கமலினி திகைப்போடு எழுந்து நின்று அவனை புரியாமல் பார்த்தாள் .

What’s your Reaction?
+1
20
+1
19
+1
2
+1
2
+1
1
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!