தோட்டக் கலை

பூச்செடிகளை வளர்ப்பவர்கள் கண்டிப்பாக இந்த தவறுகளை மட்டும் பண்ணிடாதீங்க..!

என்ன தான் இன்றைய சூழலில் அனைவரின் வீடுகளிலும் ஒரு சிறிய அளவிலான தோட்டம் அல்லது மாடி தோட்டத்தை அமைத்து அதில் பலவகையான செடிகளை வளர்த்தாலும் நமது வீடுகளில் உள்ள சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்குமே மிக மிக பிடித்து வளர்க்கும் செடிகள் என்றால் அது பூச்செடிகள் தான். ஏனென்றால் பூச்செடிகள் என்றால் அனைவருக்குமே பிடிக்கும்.

அதாவது அவற்றின் நறுமணம் மற்றும் வண்ணங்களினால் பார்ப்பவர்களின் மனதில் இடம் பிடித்து மகிழ்ச்சியை உண்டாக்கும். ஆனால் நாம் நமது தோட்டத்தில் வளர்க்கும் பூச்செடிகள் அதிக அளவு பூக்கவில்லை என்றால் நமக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். அதனால் தான் நாம் நமது தோட்டத்தில் பூச்செடிகளை வளர்க்கும் பொழுது ஒரு சில தவறுகளை செய்துவிடுவோம். அது என்ன தவறு அதனை செய்யாமல் தவிர்ப்பது என்பதை பற்றி தான் இன்றைய பதிவில் விரிவாக காண இருக்கின்றோம்.




பூச்செடிகளை வளர்க்கும் பொழுது செய்ய கூடாத தவறுகள்:

தவறான நீர்ப்பாசனம்:

ஒரு தாவரம் வளர வேண்டும் என்றால் அதற்கு முக்கியமாக தேவைப்படுவது நீர்ப்பாசனம். நாம் அனைவருமே தாவரங்களின் மேற்பகுதியில் தான் நீர்ப்பாசனம் செய்வோம். ஆனால் அது தவறு நாம் முதலில் வேர்களுக்கு தான் தண்ணீரை அளிக்க வேண்டும்.

அதேபோல் செடிகளுக்கு நன்கு வெயில் உள்ள நேரங்களில் தண்ணீர் பாய்ச்சகூடாது. மேலும் அதிக அளவு தண்ணீரை பாய்ச்சகூடாது.

தாவரங்களை நறுக்கிவிட வேண்டும்:

பொதுவாக ஒரு தாவரத்தின் இறந்துபோன அல்லது பூக்காத பகுதிகளை சரியாக நறுக்கி விட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் தாவரங்களின் ஆற்றல் சேமிக்கப்பட்டு மற்ற பகுதிகளுக்கு சென்று அவற்றுக்கு பலத்தை அளிக்கும்.




காலநிலை:

நாம் தாவரங்களை நடவு செய்யும் பொழுது கவனிக்க வேண்டிய மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று காலநிலை நிலைமைகள். ஏனென்றால், தாவரங்கள் பழுக்க வைப்பதில் காலநிலை முக்கிய பங்கு வகிக்கிறது. வளர வாய்ப்புள்ள காலநிலையில் நீங்கள் நடவு செய்வது முக்கியம் ஆகும்.

இடம்:

சில தாவரங்கள் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு நேரடி சூரிய ஒளி தேவை. இத்தகைய செடிகளை நேரடி சூரிய ஒளிபடும் இடங்களில் நடவு செய்தால் அது நன்கு வளரும். மாறாக இத்தகைய செடிகளை நீங்கள் நிழலில் வைத்து வளர்த்தால் அது சரியாக வளராமல் போகிவிடும்.

அதேபோல் தாவரங்களை மிக நெருக்கமாக வைப்பது தவறான நடைமுறையாகும். தாவரங்கள் வளர தேவையான இடத்தைப் புறக்கணிப்பது நோய்களுக்கு வழிவகுக்கும். இந்த நோய்கள் ஒரு தாவரத்திலிருந்து மற்றொரு தாவரத்திற்கு பரவும், இதனால் அனைத்து தாவரங்களும் அழிக்கப்படுகின்றன.

மேலும், செடிகளை மிக அருகில் வைப்பதால் அவை வளர இடம் கிடைக்காது. எனவே, இரண்டு தாவரங்களுக்கு இடையில் போதுமான இடைவெளி வைத்திருப்பது முக்கியம்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!