Serial Stories கற்பூர பொம்மை ஒன்று

கற்பூர பொம்மை ஒன்று- 7

7

நாமாக சேர்த்துக்கொண்ட நம் பிரியங்களைத்தான் 
நலம் விசாரித்துக்கொண்டிருந்தேன் 
தாமதமான உன் வரகையின் ஒவ்வொரு நொடியிலும்

” என்ன வக்கீல் சார் ரிவால்வர் பிடிப்பீங்களா ….? ” கைகளில் துப்பாக்கியை சுற்றியபடி கேட்டான் வீரேந்தர் .

” அது உன் வேலை .எனக்கு அது தேவையில்லை …”

” அப்படி சொன்னால் எப்படி …? உங்கள் வருங்கால மனைவியின் உயிரை காப்பாற்றுவது உங்கள் வேலையில்லையா ..? “

” அதற்குத்தான் உனக்கு சம்பளம் கொடுத்து வேலையில் வைத்திருக்கிறோம் …”

” என் வேலை சண்முகபாண்டியன் சாருக்கு மட்டும்தான்…”

” சரிதான் பிறகு ஏன் எங்களை கட்டுப்படுத்தி உள்ளே அடைக்க பார்க்கிறாய் …? “

” ஏன் …உங்களை …இதோ இந்த அம்மையாரை பிடித்து வைத்துக்கொண்டு சண்முகம் சாரை மிரட்டலாமில்லையா …? “

பேச்சின்றி மௌனமாகி விட்டனர் சுகுமாரும் , சாத்விகாவும் .இதற்கு சாத்தியம் உண்டுதானே .ஏன் அவர்கள் இதனை யோசிக்கவில்லை .ஆனாலும் முழுவதுமாக விட்டுக்கொடுக்க மனமின்றி …




” உன் வசதிக்கு எதையாவது சொல்லிக் கொண்டிரு ….” அலுப்பது போல் சொல்லிவிட்டு …” நாம் இன்னொரு நாள் போகலாம் சாத்வி …” தனது அறையை நோக்கி நடந்தான் சுகுமார் .

” இதெல்லாம் சும்மா .உங்களுக்கு நாங்கள் இங்கே வந்த்து பிடிக்கவில்லை .அதனால் எதையெதையோ சொல்கிறீர்கள் ….” வீம்பாக அவனுக்கு பதிலளித்து விட்டு …

” நான் அப்பாவை பார்க்கவேண்டும் …” அவனை கடந்து சண்முகபாண்டியனின் அறைக்குள் நுழைய முனைந்தவளின் கைகளை இறுக பற்றியவன் அப்படியே கையை முதுகுப்புறம் வளைத்து பிடித்து முறுக்கினான் .

” நாங்கள் ஒவ்வொரு நிமிடத்தையும் திகிலோடு கழித்துக் கொண்டிருக்கிறோம் .உனக்கு எல்லாமே விளையாட்டாக இருக்கிறதா …? “

” ஸ் …ஆ …வலிக்கிறது .விடு கையை ….”

” நான் உன் அப்பாவை பார்ப்பேனா …? உன்னை பார்ப்பேனா …? ஒழுங்காக குன்னூரிலேயே இருந்திருக்கலாமே .இங்கே ஏன் வந்தாய் …? “

” அப்படி வந்த்தற்குத்தானே என்னை பழி வாங்கி கொண்டிருக்கிறாய் ….”

” சின்னப்பிள்ளையா நான் …? உன்னோடு சொப்பு வைத்து விளையாடிக் கொண்டிருப்பேனென நினைத்தாயா …? உன்னை பழி வாங்கத்தானா இந்த பிறவி எடுத்திருக்கிறேன் .ம் ….? ” மேலும் தன் பிடியை அழுத்தினான் .




” ஆ….விடு …ஆமாம் அதுதான் உண்மை .நீ என்னை பழி வாங்கத்தான் செய்கிறாய் …கையை விடு ” கலங்க தொடங்கிவிட்ட அவள் கண்களை பார்த்து விட்டோ என்னவோ தன் கைகளை எடுத்தவன் …

” அப்பா இக்கட்டான நிலைமையில் இருக்கும் போது காதல் பேச உன்னால் மட்டும்தான் முடியும் …” வெறுப்போடு கைகளை உதறினான் .

” அவர் என் வீட்டில் எனக்கு பார்த்து வைத்திருக்கும் மாப்பிள்ளை .அவர் அப்படி பேசிக் கொண்டிருக்கும் போது …நான் எப்படி ….” என்றவள் இதை ஏன் இவனிடம் சொல்லிக்கொண்டிருக்கிறேன் என நினைத்து நிறுத்தி …

” உனக்கு விளக்கங்கள் தர வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது …” என்றுவிட்டு அப்பாவின் அறைக்குள் நுழைந்து கொண்டாள் .

கொஞ்சநேரம் அங்கே பால்கனியில் நின்று வெளியில் வெறித்து பார்த்துக் கொண்டிருந்துவிட்டு …வீரேந்தர் அறைக்குள் நுழைந்த போது ….

” அத்தனையும் பூக்கள் அப்பா .எவ்வளவு அழகான பூக்கள் தெரியுமா …? அத்தனை அழகாக வண்ணங்கள் பூசி …அப்பப்பா ….ஆசையாக நெருங்கி போய் தொட்டால் …” என்று நிறுத்தியவள் அறையினுள் நுழைந்த வீரேந்தரை பார்த்தபடி …” அத்தனையும் கற்கள் .தொடத் தொட கைகளை குத்துகிறது ….” என்றாள் .

” ம் ….அப்புறம் …”

” அவ்வளஙுதான் .கனவு முடிந்துவிட்டது .விழிப்பு வந்துவிட்டது .போங்களப்பா கதையா சொல்லிக் கொண்டிருக்கிறேன் …” சிணுங்கினாள் .

” ஐயோ பேபி …அப்போது இது கதையில்லையாடா …நான் க்ளைமாக்ஸிற்காக காத்துக் கொண்டிருந்தேனேடா ….”

” ம் …போங்க .இந்த கனவை சொல்லத்தான் ஓடி வந்தேன் . நீங்கள் கிண்டல் பண்ணுகிறீர்கள் ” அப்பாவின் தோள்களை செல்லமாய் குத்தனாள் .

” ம் ….கல்லில் பூத்த பூக்கள் …இப்படி ஒரு கனவு உனக்கு ஏன்டா பேபி வந்த்து …? “

” கனவுகள் ஆழ் மனதின் வெளிப்பாடுதானே சார் . மேடத்தின் மனதில் ஏதாவது இது சம்பந்தமான சம்பவங்கள் பதிந்திருக்கலாம் .அதுதான் அவர்களுக்கு கனவாக வந்திருக்கிறது …” பவ்யமான குரலில் பேசியவனை முறைத்தாள் .

கொஞ்ச நேரம் முன்பு அவளை மிரட்டியதென்ன …இப்போது பவ்யமாக மேடம் போடுவதென்ன .வீரேந்தர் எப்போதும் இப்படித்தான் .அனைவரின் எதிரிலும் மட்டும் அவளுக்கு மிக மரியாதை கொடுப்பான் .தனியாக இருவருமாக பேசும் போது மிகுந்த அலட்சியம் .வா …போ …இதோ இப்போது சற்று முன்பு கையை கூட முறுக்கினானே …

” எங்கள் இருவரின் பேச்சிற்கிடையே நீங்கள் ஏன் வருகிறீர்கள் …? ” இன.னமும் வலித்த தன் கைகளை தந்தையறியாமல் வருடியபடி கேட்டாள் .




” பேபி …வீரேந்தரின் ஒவ்வொரு பேச்சிற்கும் அர்த்தம் இருக்கும் …” கேள்வி கேட்கப் பட்டவன் பதில் சொல்லும் எண்ணமெதுவுமின்றி இருக்க , சண்முகபாண்டியன் அவனுக்காக குரல் கொடுத்துக் கொண்டிருந்தார் .

” கற்களில் பூக்கள் மலர்வது அதிசயமில்லை சார் .உங்களுக்கு சம்மதமென்றால் அது போன்ற கற்பூக்களை நான் காட்டுகிறேன் …” சண்முகபாண்டியனிடம் சொன்னான் .

” இன்ட்ரஸ்டிங் …அப்படி ஒன்று இருக்கிறதா என்ன …? “

” நம்முடைய இந்த ப்ராஜெக்ட் முடியட்டும் சார் .உங்களை கூட்டி போகிறேன் …”

அவன் பேசிக்கொண்டிருக்கும் போதே ” நான் வர மாட்டேன்பா …” தலையை திருப்பிக் கொண்டு எழுந்து போனாள் சாத்விகா .

” பேபி ….” என புன்னகைத்த சண்முகபாண்டியனுக்கு பதிலாய்  தந்த வீரேந்தரின் புன்னகையில் உயிர்ப்பில்லை .

” நாளை காலை ஏழு மணிக்கு தயாராக இரு .வெளியே போகலாம் ….” போக மாட்டேனென அடம்பிடித்த பொழுதுகளை அந்த ஹோட்டலின் பார்க்கில் வைத்து தள்ளிக் கொண்டிருந்த ஒரு மாலை நேரத்தில் வீரேந்தர் சொன்னான் .

வானத்தில் தெரிவது நிலாவா …சூரியனா …? ஆராய்ந்தாள் சாத்விகா .

” நாங்கள் வந்த வேலை நல்லபடியாக முடிந்துவிட்டது .ப்ரைம் மினிஸ்டரிடம் எங்கள் தகவல்களை ஒப்படைத்துவிட்டோம் . நாளை இரவு நமக்கு குன்னூர் போக ப்ளைட் .அதற்குள் ….”

” என்ன …பிரதமரை சந்திக்கவா இங்கே வந்தீர்கள் …? ” அவனோடு பேசக்கூடாது என்பதை மறந்து ஆச்சரியமாக அவனை பார்த்து பேசிவிட்டு தன் தலையில் தானே கொட்டிக் கொண்டாள் .




அதே நேரம் அவனும் கீழுதட்டை மடித்து கடித்தபடிதான் இருந்தான் . தெரியாமல் சொல்லிவிட்டேனே என்பது போன்ற ஒரு பாவம் அவனிடத்தில் .

” கனவில் கண்டதை நேரில் பார்த்து விட்டால் , பிறகு அது போல் கனவு வருவது நின்றுவிடும் .அதனால் சொன்னேன் .பிறகு உன்னிஷ்டம் ….” வழக்கமான அலட்சியத்தோடு போனவனின் முதுகில் …

” இந்த குளிரில் அதிகாலை ஏழு மணிக்கெல்லாம் என்னால் கிளம்ப முடியாது …” என கத்தனாள் .நடையை சிறிதும் தளர்த்தாமல் பேனான் அவன் .

ஐந்தே நிமிடங்கள்தான் சௌந்தர்யாவிடம் பேசினான் .அவள் தொணதொணத்து சாத்விகாவை அதிகாலை அடித்து எழுப்பி கிளப்பி கொண்டு வந்துவிட்டாள் .

ஆனால் அந்த இடத்தை பார்த்ததும் இங்கே வர மாட்டேனென சொன்னது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் …வருந்தினாள் சாத்விகா .




What’s your Reaction?
+1
21
+1
10
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!