Serial Stories Sollamal Thotu Sellum Thenral

Sollamal Thottu Sellum Thendral – 20

20

உலக வரைபடத்திற்குள்ளும்
உன்னைத்தான் தேடுகிறேன்..
சரக்கொன்றை மரங்களையும்
மஞ்சள் வானத்தையும்.. விட்டு
உன்னை மட்டுமே..

“குடோன் சாவியை எங்கே..?” பின்னால் கேட்ட பரசுராமனின் குரலுக்கு திரும்பாது அம்மியை இழுத்து அரைத்தாள் மைதிலி..
“அது இருக்கும் இடத்தில்தான் இருக்கும்..”
“அங்கே இல்லை..”
“உங்கள் அத்தை மகளிடம் கேட்டு எடுத்து போங்க..” இன்னமும் மைதிலி திரும்பவில்லை.. தற்போதைய தனது வழக்கம் போல் தங்களுக்கிடையே வந்தனாவை நிறுத்தினாள்.
“ஏய் அவளைக் காணோம்டி.. நீ வந்து எடுத்துக் கொடு..” அதிகாரம் சுமந்து வந்த அவனின் குரலுக்கு அம்மி மசாலாவை வழித்த அவன் முகத்தில் அப்பலாமா.. எனும் எண்ணம் மைதிலிக்கு வந்தது..
“ஆணியில் மாட்டியிருக்கிற சாவியை பார்த்து எடுக்க முடியாது.. வீட்டு பொம்பளைங்ககிட்ட வாய் மட்டும் ஏழு ஊருக்கு..” முணுமுணுத்தபடி சாவி இருக்கம் இடத்தில் வந்து பார்க்க, அங்கே சாவியை காணவில்லை..
இந்த வந்தனா எங்கே போய் தொலைந்தாள்.. அவர்களது எதிர்வீட்டை சுத்தம் செய்ய வேண்டுமென கௌரியம்மாவை அழைத்துக் கொண்டிருந்தாள்.. இருவரும் அங்கேதான் போயிருக்க வேண்டும்.. சமையலுக்கு பயந்து அங்கே ஓடிவிட்டிருப்பாள் எரிச்சலுடன் நினைத்தபடி சாவி கீழே விழுந்து விட்டதா.. குனிந்து சோபாவுக்கடியில் பார்த்தாள்..
சீக்கிரம் சாவியை எடுத்துக் கொடுத்து இவனை இங்கிருந்து அனுப்ப வேண்டும்.. பரபரப்போடு நினைத்தாள்.. காரணம் பரசுராமனின் பார்வை.. அவன் உள்ளே வந்ததில் இருந்து நிமிர்ந்து அவனை ஒருமுறை கூட அவள் பார்க்கவில்லை.. ஆனாலும் அவனது உறிஞ்சல் பார்வையை அவளது உடலின் ஒவ்வொரு பாகமும் உணர்ந்து.. என்ன காரணத்திற்கு இப்படி பார்த்து தொலைகிறான்.. தனது உடையை அநிச்சையாக சரி செய்து கொண்டவள் இப்போது சோபாவை விட்டு பிற இடங்களில் தேட ஆரம்பித்தாள்..
“எங்கே வீட்டில் யாரையும் காணோம்..?”
“பெரியம்மா மனது கொஞ்சம் மாறட்டும்னு அத்தை அவர்களை கூட்டிட்டு யாரோ உறவினர் வீட்டு விசேசத்திற்கு போயிருக்காங்க.. வந்தனா அவுங்க வீட்டை க்ளீன் பண்ணனும்னு மாம்டாக்காவை கூட்டிக் கொண்டு..” சொல்லிக் கொண்டே போனவள் தன் தனிமையை உணர்ந்து பேச்சை நிறுத்தி உதட்டைக் கடித்தாள்.. சட்டென திரும்பிப் பார்க்க, பரசுராமனை காணவில்லை..
எங்கே போனான்..? விழிகளை பரபரக்க விட்டபோது வாசல் கதவு திறக்கும் சத்தம் கேட்க.. நல்லவேளை வந்தனா வந்து விட்டாள், நிம்மதி மூச்சுடன் திரும்பியவளின் கழுத்தில் சூடான மூச்சுக்காற்று அனலாய் அடித்தது தாகம் கொண்ட சிறுத்தையின் வேகத்துடன் அவள் மிக அருகே நின்றிருந்தான் பரசுராமன்..




“வா..” இருகைகளையும் விரித்தான்..
“ம்ஹீம்..” தலையசைத்து மிரட்சியாய் பின்னால் நகர்ந்தாள்..
“வ்வா..” அழுத்தம் கூடிய குரலுடன் விரிந்த கைகளுடன் அவளை நெருங்கினான்..
“வே.. வேண்டாம், பகல் நேரம், திடீரென யாராவது..”
“வரமாட்டார்கள் வா..” அவளது ஒவ்வொரு மறுத்தலுக்கும் அவனது வேகம் கூடியது..
“யா.. யாரோ கதவை திறந்தார்கள்.. இப்போது வருவார்கள்..”
“யாருமில்லை.. நான்தான் கதவை பூட்டினேன்..”
அடப்பாவி யாரும் இல்லைன்னு சொன்ன அடுத்த நொடியே விழுந்தடித்து ஓடிப் போய் கதவை பூட்டியிருக்கிறான்.. எமகாதகன்..
“நா.. நான் விரதம் இருக்கிறேன்..” மாமியாரை ஏமாற்ற சும்மா தன் கையில் கட்டி வைத்திருந்த மஞ்சள் நோன்பு கயிற்றை உயர்த்திக் காட்டினாள்..
பரசுராமன் அசராமல் கைநீட்டி அவள் கையிலிருந்த நோம்புக் கயிற்றின் முடிச்சை பட்டென உருவி அவிழ்த்தான்.. கயிற்றை கீழே எறிந்தான்..
“விரதமாடி இருக்கிற விரதம்.. வாடி உன்னை..” மீதி வார்த்தையை முடிக்காமல் குனிந்து அவளைக் கைகளில் அள்ளிக் கொண்டான்.
வளர்ப்பு பூனையை தூக்கும் வாஞ்சையுடன் அவளை அவன் கைகள் மென்மையாக சுமந்திருக்க, அந்த மென்மைக்கு சம்பந்தமில்லாமல் வன்மையாக அவள் கன்னத்தில் பதிந்தன அவன் இதழ்கள்.. ஆப்பிளை கடித்து தின்னும் அணிலின் வேகம் அப்போது அந்த உதடுகளில் இருந்தன..
“ம்ஹீம்.. என்னை விடுங்க..” சிணுங்கலாய் திமிறியவளை வாகாக தன்னோடு அணைத்து இறுக்கிக் கொண்டவன், காலால் உதைத்து அவர்கள் படுக்கையறைக் கதவை திறந்து உள்ளே போய் கதவை தாளிட்டான்.
தாழிட்ட ஓசையில் அதிகம் திமிறியவளை சமாளித்து கொண்டு போய் கட்டிலில் எறிந்தான்.. உடனே எழுந்து கொள்ள போனவளின் தோளை அழுத்திப் பற்றி மீண்டும் சரித்தான்..
“ஏய் சும்மா குதிக்காமல் இருடி.. எத்தனை நாட்கள் ஆயிற்று..?” மோகம் கொப்பளிக்க சூடேறிய தேகத்துடன் அருகே நெருங்கிய கணவனின் தேகக் காய்ச்சல் மைதிலியின் உடம்பிற்கும் பரவ.. ஆமாம் ரொம்ப நாளாச்சில்ல என்று அவள் மனது அவளிடம் நியாயம் கேட்டது.. மைதிலி விழி மூடி சரிந்து தன்னை கணவனின் கைகளில் ஒப்படைத்தாள்..
தொடர்ந்த நிமிடங்கள் இனிமையும், இளமையும் மோகத் தூண்டலும், தாகத் தணிப்புமாய் கணவன் மனைவிக்கு மட்டுமேயான ஏகாந்த பொழுதுகளாய் இருந்தன..
மிஷின் துப்பிய கரும்புச் சக்கையின் அயர்வை தன் உடல் முழுவதும் உணர்ந்த மைதிலி, சிவந்து கிடந்த தன் முகத்தை கணவனுக்கு காட்ட கூசி, இரு கைகளாலும் முகத்தை மூடிக் கொண்டு படுக்கையில் கிடந்தாள்.. திரி கெட்ட நெருப்பாய் எவ்வளவு வேகமாக பரவுகிறான் இவன்.. சீ, கணவனின் முடிந்து போன கூடலின் பின்பும் தகித்துக் கிடந்த தன் தேகத்தில் கூச்சம் பிடுங்கித் தின்ன, இமைகளை இறுகமூடி இருளாக்கி கிடந்தாள்.
அவளருகே உரசியபடி படுத்திருந்தவன் அவள் கூச்சத்தை மதிக்காது அவள் முகத்தை மூடியிருந்த கைகளை வலுக்கட்டாயமாக விலக்கினான்.. உடன் இன்னும் இறுகிக் கொண்ட அவள் இமைகளின் மீது இதழ்களை அழுத்தி பதித்தான்..
“வித்தாரக்கள்ளிடி நீ..” தீராத் தாபத்துடன் குழைந்து ஒலித்த அவன் குரல் மைதிலியின் உடலில் ஏதோதோ ரசாயணங்களை பாய்ச்சி கொதிக்க வைத்தது..
“எமகாதகன்..” ஒலி வெளியே வராமல் இதழ்களை மட்டும் அசைத்தாள்.
அந்த இதழசைப்பை கேட்கும் சாக்கில் அவள் இதழில் தன் காதினை உரசியவன்.. “வசியக்காரி..” என்று அடுத்தொரு முணுமுணுப்புடன் அவள் காதில் தன் இதழுரசினான்..
இவனது வித்தாரக்கள்ளியின் அர்த்தம் வசியக்காரியா.. அப்படி யாரை நான் வசியம் செய்து வைத்திருக்கிறேனாம், கட்டின புருசனையே வசப்படுத்த தெரியவில்லை, எப்போது பார்த்தாலும் அவனது விரைப்பும், முறைப்பும் மனதிலாட மெல்ல விழி திறந்து பார்த்தாள்..
மனோகரமான முறுவலுடன் அவனது முகம் கண்களுக்கு மிக அருகில் தென்பட அதில் இருந்த அழைப்பிற்கு அஞ்சி மீண்டும் கண்களை மூடிக் கொண்டாள்.. சிரிக்கவே மாட்டானே.. இப்போது என்னை ஜெயித்த புன்னகையா இது..?
“ஏய்.. ஏன்டி.. என்னை பாருடி..” கொஞ்சலாய் ஒலித்த கணவனின் குரலில் தேன் துளிகள் விரவ ஆரம்பித்து விட்ட தன் தேக தேவைக்கு பயந்து எழ முயற்சித்தாள்..
“ப்ச் இப்போது எங்கே போகிறாய்..?” அதட்டலாய் அவளைத் தடுத்தான்.
“விடுங்க யாராவது வந்துடப் போறாங்க..”
“முடியாது.. யார் வந்தாலும் கவலை இல்லை..” அவன் அவளை மீண்டும் கட்டிலில் சரிக்க முயன்றான்.
“அதுதான் உங்கள் தேவையெல்லாம் முடிந்ததே.. இன்னும் என்ன..? தள்ளிப் போங்க..”
“எந்த தேவைடி முடிந்தது..? அது இருக்குது இன்னமும் நிறைய.. வரிசையாக சொல்லட்டுமா..?” என அவன் பேசத் துவங்க மைதிலி அவனது இரண்டொரு வார்த்தைகளிலே காது கூசி சிவக்க அவசரமாக அவன் வாயை பொத்தினாள்..
“சை என்ன பேச்சு இதெல்லாம்..?”
“புருசன் பேச்சுடி இது வா..” அவளை சிந்திக்க விடாமல் இறுக்கினான்.
மைதிலி மெல்ல அவனிடம் அடங்க ஆரம்பித்த போது வாசல் காலிங்பெல் அலறியது.. உடன் உடல் தடதடவென நடுங்க அவனை விட்டு விலகி நின்றவளை விசித்திரமாக பார்த்தான்.
“ஏய் நாம் புருசன் பொண்டாட்டி.. இப்படி பயந்து நடுங்க என்ன தப்பு செய்து விட்டோம்..?” பரசுராமனின் முகம் கொஞ்சம் முந்தைய கனிவை இழந்து பழைய கடுமைக்கு மாறியிருந்தது..
மைதிலி மௌனமாக தலைகுனிந்து நிற்க, அவளை முறைத்தபடி அறை வாசலுக்கு போனவன் திரும்பி அவளை பார்த்துவிட்டு நின்றான்.
“இதோ வர்றேன்..” வாசலுக்கு சத்தமான பதில் ஒன்றை தந்தவன் மீண்டும் அவளருகே வந்தான்.
கலைந்து கிடந்த அவளது உடைகளை ஓரளவு சீர் செய்தவன் அவளை அப்படியே அள்ளிப் போய் பாத்ரூமினுள் விட்டான்..
“வந்தவர்களை நான் சமாளித்து கொள்கிறேன்.. நீ இந்த தப்பு செய்துவிட்ட உணர்வை மாற்றிக் கொண்டு மெல்ல வெளியே வா..” சொல்லிவிட்டு போய்விட்டான்.
ஐந்தே நிமிடங்களில் தன்னை சரிபண்ணிக் கொண்டு மைதிலி வெளியே வந்தபோது அங்கே கௌரிம்மா இருந்தார்.. அவரது பார்வை அர்த்தத்துடன் அவள் மேல் படிய மைதிலியின் உடல் கூசியது சை.. இவர் என்ன நினைப்பார்..?
“அ.. அது குடோன் சாவி எடுக்க வந்தார் மாம்டாக்கா.. சாவியைக் காணோம்னு நாங்க தேடிட்டு இருந்தோம்..”




“கண்டுபிடித்து எடுத்தீங்களா இல்லையா..?” இல்லை இவர் கேள்வியில் உள் ரகசியம் எதுவுமில்லை தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டாள்..
“ம்.. இ.. இதோ.. இப்போதே..” வேகமாக மீண்டும் சாவியிருக்கும் இடத்திற்கு போனவள் திகைத்தாள்.
அங்கே சுவற்றில் சாய்வாய் மாட்டியிருந்த பிள்ளையார் போட்டோவின் பின்னாலிருந்து குடோன் சாவியை அவளைப் பார்த்தபடி நிதானமாக எடுத்துக் கொண்டிருந்தான் பரசுராமன்..
பாவி.. சாவியை தூக்கி இங்கே ஒளித்து வைத்துவிட்டு என்னிடம் வந்து வம்பிழுத்து.. மேலே யோசிக்க முடியாமல் முகம் சிவக்க நின்றவளை, சுவாரஸ்யமாக வேடிக்கை பார்த்தான்..
வேண்டாம்.. ஓடிடு.. மைதிலி மிரட்டலாய் அவனைப் பார்க்க, அவன் அவளுக்கு உதடு குவித்துக் காட்டினான்.
“போடா..” அவள் உதடசைக்க, அவன் போதையேறிய உணர்வுடன் மீண்டும் அவளருகே வர எட்டு எடுத்து வைத்தான்..
“டேய் பரசு கடைக்கு போகலையா..?” அடுப்படியில் இருந்து கௌரிம்மாவின் குரல் உரத்து ஒலிக்க, அவன் சலித்த முகத்துடன் வெளியேறினான்.
தன் பக்கமே திரும்ப கூச்சப்படும் தலை குனிந்தே வேலை பார்த்துக் கொண்டிருந்த மைதிலியை கனிவாக கவனித்தபடி இருந்த கௌரிம்மா, மெல்ல அவளருகே வந்து கை வருடினார்..
“சாதாரண விரதம் தானேம்மா.. பாதியில் தடைபட்டால் ஒன்றுமில்லை.. இதற்கெல்லாம் ஆத்தா கோவிச்சுக்க மாட்டா..”
முதலில் அவர் சொல்வது புரியாமல் விழித்தவள், பின் புரிந்து உடல் முழுவதும் கூச தவிப்பாய் நின்றாள்.
சே.. இதுபோன்ற இக்கட்டான நேரங்களில் ஒரு பெண்ணிற்கு வரும் தவிப்பை இவன் புரிந்து கொள்ள வில்லையே.. மைதிலியின் மனம் முரண்டியது.. 
பரசுராமனிடமோ அதுபோன்ற எந்த தவிப்பும் இல்லை.. எனக்கு உரிமையானது, நான் எடுத்துக் கொள்கிறேன் என்று பாவனையில் இருந்தான் அவன்.
அன்று இரவு உணவு முடிந்ததும் ‘உள்ளே வாடி’ என படுக்கையறை பக்கம் காட்டிய கண் ஜாடைகளை கவனிக்காதது போல் தவிர்த்து விட்டு வந்தனாவுடனேயே படுத்துக் கொண்டாள் மைதிலி.
தோற்றுக் கொண்டிருக்கிறேன் எனத் தெரிந்தும் மீண்டும் மீண்டும் அவனிடம் தோற்க அவள் விரும்பவில்லை.. இரண்டு நாட்கள் முன்பு அவன் ஆசையை அனுமதிக்கவே கூடாது என தான் எடுத்த முடிவை நினைத்துக் கொண்டாள்.. ஏமாளி.. தோத்தாளி என அவள் மனது பறையடித்து அறிவித்தாலும், அழகாக புன்னகைத்தன அவள் இதழ்கள்.
“தூங்குகிறாயா..? விழித்திருக்கிறாயா..?” அருகில் கேட்ட வந்தனாவின் குரலுக்கு பதில் சொல்ல விரும்பாது விழியை இறுக மூடிக் கொண்டாள்..
“தூங்கும் போது கூட இளிச்சிட்டே தூங்குவாயா..?” அலுப்போடு கண் திறந்தாள் மைதிலி..
“உனக்கு இப்போது என்ன வேண்டும் வந்தனா..?”
“ஏன் கண்ணை மூடிட்டு சிரிக்கிற..? கனவு காண்கிறாயா..?”
“ஆமாம்.. என் புருசனை நினைச்சுட்டிருந்தேன்..”
வந்தனாவின் முகம் மாறியது..
“நீ நினைச்சுட்டிருந்தாய் சரி.. அவர் உன்னை நினைக்கனுமே..”
“நிச்சயம் என்னைத்தான் நினைச்சிட்டிருப்பார்..” இதில் மைதிலிக்கு சிறிதும் சந்தேகமில்லை.. அங்கே அவள் கணவன் அவள் நினைவுகளுடன் உறக்கம் பிடிக்காமல் படுக்கையில் புரண்டு கொண்டிருப்பான் என்பதில் அவளுக்கு மிக நிச்சயமே..
“அவர் மனதில் என்னைத் தவிர இன்னொரு பெண்ணிற்கு இடம் கிடையாது..”
வந்தனாவின் உறுதிக்குரல் வழக்கமாக கொடுக்கும் மனக்கலக்கத்தை இப்போது மைதிலிக்கு தரவில்லை..
“அத்தை மகளை மனதில் வைத்திருப்பதில் தவறில்லை வந்தனா.. ஆனால் அத்தை மகள்களெல்லாம் மனைவி ஆகிவிட மாட்டார்கள்..”
“அத்தை மகளென்றாலே மனைவிதான்.”
“அப்படி ஒரு தப்பான எண்ணம் உன் மனதில் இருக்கிறது.. அத்தை மகள் என்பது ஒரு உறவுதான்.. தாலிகட்டிக் கொண்டவள் மட்டும்தான் மனைவி..”
“கழுத்தில் தாலி இருக்கும் திமிரா உனக்கு..? பரசுவும் நானும் ரொம்ப காதலித்தோம் தெரியுமா..? என்னைக் காதலித்து விட்டு உன் கழுத்தில் தாலி கட்டிவிட்டார்.. என்னை ஏமாற்றி விட்டார்..”
மனம் தளரக்கூடாது என நினைத்த பிறகும் வந்தனாவின் காதலித்தோம் என்ற பதம் மைதிலியின் மனதை வெகுவாக பாதித்தது..
“அப்படி அவர் உன்னிடம் சொன்னாரா..?”
“எப்படி..?”
“உன்னைக் காதலிப்பதாக..”
“சொன்னால்தானா..? எனக்காக பரசு ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செய்வார்.. எனக்கு சேலை, நகை.. இதோ இந்தக் கொலுசு கூட அவர்தான் வாங்கிக் கொடுத்தார்..” தனது கால்களை தூக்கி கொலுசின் ஓசை எழுப்பிக் காட்டினாள்..
இந்தக் கொலுசு விசயம் மீண்டும் மனதை சோர்வுற வைக்க, தன்னை சமாளித்தாள் மைதிலி..
“இதெல்லாம் பரசு மட்டும்தான் செய்தாரா..?”
“புரியவில்லை..”
“உனக்கு மூன்று மாமன் மகன்கள் வந்தனா.. பரசு மட்டும்தான் இப்படி உனது தேவைகளை கவனித்து செய்தாரா..? கல்யாணமும், ரவியும் எதுவும் செய்ய வில்லையா..?”
“இல்லையே எல்லோரும் என்னை நன்றாகத்தான் கவனித்துக் கொள்வார்கள்.. அவர்கள் மூன்று பேருக்குமே நான் ஸ்பெசல்தான்..” வந்தனாவின் குரலில் பெருமிதம்.
“ஆமாம் ஒரே ஒரு அத்தை மகள்.. செல்லப்பெண், அவர்களுக்கும் ஆசை இருக்கும்தான்..”
தன்னை ஒத்துப் போன மைதிலியை கூர்ந்தாள் வந்தனா..
“என்ன சொல்ல வருகிறாய்..?”
“உன்னை நீயே ஏமாற்றிக் கொண்டிருக்கிறாய் என்கிறேன்.. சாதாரணமாக அத்தை மகள் மீது அத்தான்களுக்கு இருக்கும் பாசத்தை நீ தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறாய்..”
வந்தனாவின் முகம் குழப்பத்தை காட்டத் துவங்க, மைதிலியின் மனம் நிம்மதியானது.
“யோசி வந்தனா..” என சொல்லி அவளின் தூக்கத்தைக் கெடுத்துவிட்டு, தனது தூக்கத்தை நிம்மதியாக ஆரம்பித்தாள் மைதிலி.

What’s your Reaction?
+1
11
+1
2
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

3 Comments
Inline Feedbacks
View all comments
Nancy john
Nancy john
4 years ago

Mam epo upload panivinga……pls

Sarojini
Sarojini
4 years ago

மைதிலி, வந்தனாவ நல்லா போட்டுத் தாக்கிட்டு தூங்கு, அருமையான பதிவு!!!

3
1
Komathi Rameshkumar
Komathi Rameshkumar
4 years ago

இது கூட்டு குடும்பத்தில் உள்ள கணவன் மனைவியின் உண்மையான நிகழ்வு அருமை அருமை

3
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!