Cinema Entertainment விமர்சனம்

மலையாளி ஃப்ரம் இந்தியா விமர்சனம்..

இந்த ஆண்டு மலையாளத்தில் தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்கள் வெளியாகி வந்த நிலையில், கொஞ்சம் சுமாரான படமாகவே நிவின் பாலி நடித்துள்ள ‘மலையாளி ஃப்ரம் இந்தியா” திரைப்படம் வெளியாகி இருக்கிறது. சமீபத்தில் வெளியான வர்ஷங்களுக்கு சேஷம் படத்தில் கேமியோ ரோலில் நடித்து கலக்கிய நிவின் பாலி தனது சோலோ ஹிட் படமான மலையாளி ஃப்ரம் இந்தியா படத்தில் பெரிதாக ஜொலிக்கவில்லை.

നിവിൻ പോളിയുടെ 'മലയാളി ഫ്രം ഇന്ത്യ' മെയ് ഒന്നിന് റിലീസ് | Malayali From India Release




பிருத்விராஜை வைத்து இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கிய “ஜன கன மண” திரைப்படம் கோர்ட் ரூம் டிராமா படமாக வெளியாகி படத்தை பார்த்த ரசிகர்களை எல்லாம் மிரட்டி விட்டது. அந்த அளவுக்கு ஒரு படமாக இந்த படம் இருக்கும் என நினைத்து அதிக எதிர்பார்ப்புடன் சென்ற ரசிகர்களுக்கு முழு தீனியை இயக்குநர் போடவில்லை.

ராம் இயக்கத்தில் நிவின் பாலி நடித்த “ஏழு கடல் ஏழு மலை” திரைப்படம் சம்மருக்கு வெளியாகும் என தயாரிப்பாளர் சொல்லியிருந்தார். ஆனால், இன்னமும் அந்த படம் வெளியாகவில்லை. மலையாளத்தில் நிவின் பாலி நடித்துள்ள இந்த படம் எப்படி இருக்கு என்பது குறித்து விரிவான விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..

மலையாளி ஃப்ரம் இந்தியா கதை: ஊரில் எந்தவொரு வேலைக்கும் செல்லாமல் வெட்டியாக இருக்கும் இளைஞராக நிவின் பாலி இந்த படத்தில் நடித்துள்ளார். சும்மாவே எப்படி இருப்பது என ஒரு கட்சிக்கு பரப்புரை செய்யும் வேலையை பார்க்கிறார். அதனால் ஏற்படும் பிரச்சனை காரணமாக அந்த ஊரை விட்டு வெளிநாட்டுக்கு வேலைக்கு போய் விடலாம் என நினைக்கிறார். ஆடு ஜீவிதம் படத்தில் பிருத்விராஜ் மாட்டியது போல இவரும் ஆடு மேய்க்கும் வேலையில் மாட்டிக் கொள்ள இரண்டாம் பாதியில் இந்தியா – பாகிஸ்தான் பிரச்சனைகளை இயக்குநர் எடுத்து பேசியிருக்கிறார்.




படம் எப்படி இருக்கு?: நிவின் பாலி கோபி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது நண்பராக வரும் தியான் ஸ்ரீனிவாசன் மல்கோஷ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இருவரும் பெரிதாக எந்த வேலைக்கும் செல்லாமல் கிரிக்கெட் விளையாடுவது, ஊர் சுற்றுவது என பொழுதை கழித்து வருகின்றனர். அன்ஸ்வரா ராஜனுக்கு ஹீரோ மீது காதல் வருகிறது. கொரோனா கால பிரச்சனைகள், இரண்டாம் பாதியில் வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்று அங்கே சிக்கிக் கொள்ளும் ஹீரோ என படம் காமெடி கலந்த ஜானரில் செல்கிறது. ஆனால், முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு படத்தின் இரண்டாம் பாதியில் இல்லை. கடைசியாக பெண்களுக்கு கல்வி எந்தளவுக்கு முக்கியம் என்பது போல கதையின் கருவை வேறு ஒரு தளத்துக்கு கொண்டு சென்று முடித்திருக்கிறார் இயக்குநர்.

பிளஸ்: நிவின் பாலி, அன்ஸ்வரா ராஜன் மற்றும் நண்பராக நடித்துள்ள தியான் ஸ்ரீனிவாசன் நடிப்பு பிரம்மாதம். அந்த பாகிஸ்தானிய நபரின் போர்ஷனும் நல்லாவே இருக்கிறது. பாடல்கள், பின்னணி இசையும் படத்துக்கு பலமாக உள்ளது. ஒளிப்பதிவு படத்தை தூக்கி நிறுத்துகிறது.

மைனஸ்: ஆனால், இந்த ஆண்டு மலையாளத்தில் வந்து வெற்றிப் பெற்ற படங்கள் போல இந்த படம் ரசிகர்களை முழுமையாக கவரவில்லை. மேலும், மலையாளத்தில் மட்டுமே இந்த படம் வெளியாகி இருப்பதால் பாக்ஸ் ஆபிஸிலும் பெரியளவில் வசூலை அள்ளுமா என்பது கேள்விக் குறிதான். நிவின் பாலிக்கு தொடர்ந்து படங்கள் சொதப்பி வரும் நிலையில், இந்த படமும் பெரிய ஹிட் கொடுக்கும் படமாக அமையுமா? என்பது சந்தேகம் தான். படம் முழுக்கவே ஒரு நல்ல சீன் இருந்தால் இன்னொரு மோசமான சீனாகவே வந்து கடுப்பேற்றுகிறது. ஆனால், ஜாலியாக ஒரு அரசியல் நய்யாண்டி படமாக இந்த படம் உருவாகி இருப்பதால் நிச்சயம் ஒரு முறை தியேட்டருக்கு சென்று பார்க்கலாம்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!