karpoora pommai onru Serial Stories கற்பூர பொம்மை ஒன்று

கற்பூர பொம்மை ஒன்று – 30

   30

சாவகாசமாய் சரிந்திருக்கும் தருணங்களையும் 
சாஸ்வதமாய் ஆக்ரமிதது கொள்கிறாய், 
பின்னிய பின்னலுக்குள்
புகுந்துவிட்ட மல்லிகையாய்
வாசம் பரப்பிக்கொண்டு 
என்னுள் நீ.

” உங்க ஊர் சம்பார் வைக்க எனக்கு ரொம்ப நல்லா கத்துட்டேன் திதீ ….” சாந்தினி துவரம்பருப்பை அளந்து எடுத்தபடி சொன்னாள் .அவள் வீரேந்தர் வீட்டில் சமையல் வேலை செய்பவள் .

” தால் செய்வதோடு சாம்பாரும் செய்வாயா சாந்தினி …? ” அவளின் மழலை தமிழை ரசித்தபடி கேட்டாள் சாத்விகா .

” ஹான் திதீ …மேடம் நான் சொல்லிக் கொடுத்தது .ரொம்ப ஈஸியாக படித்துவிட்டது…”

” உனக்கு மேடம் சொல்லிக்கொடுத்தார்களா …? நீ அவர்களுக்கு சொல்லிக்கொடுத்தாயா …? “

” நானுக்கில்லா …மேடம் நானுக்கு …” தான் சொல்வது ஏதோ சரியில்லையென உணர்ந்தவள் ” எப்படி சொல்ல வேண்டும் திதீ …? ” அவளிடமே கேட்டாள் .

” உன்னை என்னிடம் குறிப்பிடும் போது எனக்கு , எனது …என்று சொல்ல வேண்டும் …” விளக்கினாள் .

” ஓ….” என தலையாட்டிக் கொண்ட சாந்தினி இந்த ஒரு வாரத்தில் அந்த வீட்டில் சாத்விகாவின் தோழியாக மாறியிருந்தாள் .தோழியென்றால் அவளது அந்தரங்க காரியதரிசி போல் எந்நேரமும் அவளுடனேயே சுற்றினாள் .சந்திரிகாவும் , சக்கரவர்த்தியும் இதனை துளியும் விரும்பாத்து தெரிய மிக ஈடுபாட்டோடு சாந்தினியுடன்  நட்பு கொண்டாள் சாத்விகா .

இவர்களின் நட்பினை வீரேந்தர் ஆட்சேபிக்காமல் போக …தனது புது நட்பில் உற்சாகமானாள் சாத்விகா .




” எனக்கும் பரிமாறுங்கள் ஆன்ட்டி ….” இயல்பாக வீரேந்தரின் அருகேயிருந்த நாற்காலியை இழுத்து போட்டுக் கொண்டு சாப்பிட அமர்ந்தாள் சாத்விகா .

” என்னை ஆன்ட்டின்னு கூப்பிடாதே …” எரிச்சலாக சொன்னாள் சந்திரிகா .

” அம்மா …” என வீரேந்தர் எச்சரிக்கை குரல் கொடுக்க …

” பின்னே எப்படி கூப்பிட ஆன்ட்டி …? ” சாத்விகாவின் முகம் வாடியது .

” என் கணவர் மேஜர் .என்னை எல்லோரும் மேடம் என்றுதான் கூப்பிடுவார்கள் .நீயும் மேடமென்றே கூப்பிடு …” அதிகாரமாக கூறினாள் சந்திரிகா .

முகம் வாட சாத்விகா தட்டிலிருந்த உணவை குனிந்து அளைய ஆரம்பிக்க ” என்னம்மா இது ….? ” அதிருப்தியாய் ஆட்சேப குரல் எழுப்பினான் வீரேந்தர் .

” எதை எப்படி செய்ய வேண்டுமென்று எனக்கு தெரியும் .நீ பேசாமலிரு …” சந்திரிகா மகனை அதட்ட , அவன் தந்தையை திரும்பி பார்த்தான் .

” இன்று சாம்பாரில் ஒரு கல் உப்பு கூடுதல் சந்திரி ….” சாநாரணமாக சொன்னார் அவர் .

பெருமூச்சு விட்டவன் ” சாப்பிட்டு விட்டாயானால் கிளம்பு பேபி .கொஞ்சம் வெளியே போய்விட்டு வரலாம் …” சாத்விகா வை சமாதானப்படுத்த அழைத்தான் .

அவன் நினைத்தது போலவே உற்சாகமானவள் ” ரொம்ப தேங்க்ஸ் வீரா .ஒரு வாரமாக வீட்டிலேயே அடைந்து கிடந்து எனக்கு பைத்தியம் பிடிக்கும் போலிருந்த்து . நல்லவேளை இன்றாவது வெளியே கூட்டிச்செல்வதாக சொன்னீர்களே …”

” ம்க்கும் …பேபி …” முகத்தை சுளித்தாள் சந்திரிகா .

” ஆமாம் பேபி ….” சந்திரிகாவுக்கு பழிப்பு காட்டினாள் சாத்விகா .

” நீ போய் கிளம்பு பேபி ….” சாத்விகாவின் பழிப்பிற்காக அவளை விழியால் கண்டித்தபடி , தனது தாய்க்காக பேபியில் ஒரு அழுத்தம் சேர்த்தான் வீரேந்தர் .சாத்விகா உற்சாகமாக மாடியேறினாள் .

” நீங்கள் அன்று செய்த பிழை .இப்போது என் தலையில் வந்து உட்கார்ந்து பாடாய்படுத்திக் கொண்டிருக்கிறது ” சந்திரிகா சக்கரவர்த்தியிடம் படபடத்ததை கேட்க சாத்விகா அங்கே இல்லை .அவள் மாடியேறியபடி சிந்தனையிலிருந்தாள் .

” அதென்ன தீதி …சாப் உங்களை பேபி என்று ஏன் கூப்பிடுகிறார் …? ” சாந்தினி அவளிடம் கேட்டதும் தான் அந்த அழைப்பையே உணர்ந்தாள் சாத்விகா .

பேபி …அப்பாதானே அப்படி கூப்பிடுவார் .இவன் எப்போது அப்படி கூப்பிட ஆரம்பித்தான் .யோசித்து பார்த்தாள் .நினைவிற்கு வரவில்லை .இன்று அவனிடமே கேட்டுவிடுவோம் .ஆவலுடன் சாத்விகா கிளம்பி வாசல் வந்த போது , கிளம்பி விட்ட ஜீப்பில் ஒரு சாரியுடன் அமர்ந்திருந்தான் வீரேந்தர் .அவசர வேலையாம் .மாலை போகலாம் …எளிதாக சொல்லிவிட்டு போய்விட்டான் .

ஆத்திரத்துடன் கால்களை தரையில் உதைத்தவள் அங்கேயே வாசல் படியிலேயே அமர்ந்துவிட்டாள் .

” நாம் வேண்டுமானால் வெளியே போய் வரலாமா …மேடம் …? ” பணிவுடன் கேட்டபடி எதிரே நின்றான் வஹீப் .அவன் வீரேந்தரின் இன்ஸ்டியூட்டில் பயிற்சி பெறுபவன் .

வீரேந்தர் திடுமென விட்டு போனதால் கோபத்தில் சட்டென முடிவெடுத்து அவனுடன் கிளம்பினாள் சாத்விகா .அவளுக்கு மீண்டும் அந்த ஆஸ்பத்திரியில் போய் விசாரிக்கும் எண்ணமிருந்த்து . வீரேந்தர் அவன் வீட்டில் கொண்டு வந்து அவளை விட்டதோடு வேலை முடிந்த்து என்பது போல் எந்நேரமும் ஙெளியேதான் இருந்தான் .இங்கே பாராமுகத்தோடு இருக்கும் சந்திரிகாவோடு பாடு பட்டுக்கொண்டிருந்தாள் சாத்விகா .சக்கரவர்த்தியோ அவளை வீட்டிலிருக்கும் ஜடப்பொருள் போன்ற பாவனை செய்துகொண்டிருந்தார் .

இந்த நிகழ்வுகளால் வெறுத்துப் போன சாத்விகா சமையல் வேலை செய்யும் சாந்தினி , அடிக்கடி வீட்டிற்கு வரும் வஹீப் …இவர்களுடன் ஒரு ஆரோக்யமான தோழமை பூண்டிருந்தாள் சாத்விகா .

” உங்களுக்கு சிந்தி படிக்க வருமா வஹீப் …? “

” ஓ…அழகாக வரும் மேடம் .ஆனால் எதற்கு கேட்கிறீர்கள் …? “

” எனக்கு சிலவற்றை படித்து காட்டவேண்டும் ….”

” சரி மேடம் .இப்போது எங்கே போக வேண்டும் …? “

” பாதை சொல்கிறேன் ஓட்டுங்கள் …” அந்த ஆஸ்பத்திரி பாதை சொன்னாள் .

” என்னம்மா …சும்மா …சும்மா வந்து அட்ரஸ் கேட்கிறீங்க …? ” எகிறிய ஆபிஸ் ப்யூனை வஹீப் இந்தியில் சமாளிக்க , மீண்டும் அந்த லிஸ்ட்டை பைலிலிருந்து எடுத்தாள் சாத்விகா.

அந்த ரேணுகாதேவியின் அட்ரஸை வஹீப்பிடம் வாசிக்க சொன்னாள் .அவன் சொன்ன அட்ரஸில் குழம்பி அங்கே போகப் போகவே அவளிக்கு தெரிந்து போனது .அது …அன்று வீரேந்தருடன் போய் விசாரித்த அந்த ஆஸ்பத்திரி ஆயா ரேணிகாதேவி இருந்த அதே வீடு .

அந்த வீட்டு பாட்டியிடம் மீண்டும் விசாரித்தார்கள் .ஆயா ரேணுகாதேவியின் பாதுகாப்பில் அந்த வீட்டில் ஒரு பெண் தங்கியிருந்த்தை ஒத்துக்கொண்டார்கள் .அவள் பெயரும் ரேணுகாதேவி .அவள் கர்ப்பமாக இருந்த்தையும் , ஆயா வேலை பார்த்த அதே ஆஸ்பத்திரியில்தான் அந்த பெண்ணிற்கும் பிரசவமானதை சொன்னார்கள் .

” இதனை நீங்கள் ஏன் அன்றே சொல்லவில்லை …? ” சாத்விகாவின் உடைந்த இந்தியை வஹீப் தெளிவாக மொழிபெயர்த்தான் .

” அன்று நீங்கள் ரேணுகாதேவி என்றீர்கள் .எங்களுக்கு உடனேயே அந்த ஆயாதான் நினைவு வந்தார் .அவர் எங்கள் வீட்டில் வாடகைக்கு இருந்தார் .சொந்தக்கார பெண்ணென கூறி அந்த பெண்ணை இங்கே அவருடன் கொஞ்சநாட்கள் தங்க வைத்திருந்தார் ்அவருடனேயே வேலைக்கு கூட்டிப்போவார் .கூட்டி வருவார் ..ஒருநாள் நள்ளிரவில் பிரசவ வலி கண்டு அந்த பெண்ணை ஆஸ்பத்திரி கூட்டிப்போனார் .பிறகு அந்த பெண் வரவேயில்லை …”




” ஏன் அந்த பெண்ணுக்கு என்ன ஆயிற்றாம் …? நீங்கள் கேட்கவில்லையா …? ” சாத்விகா படபடத்தாள் .

” கேட்டோம் …பிரசவத்தில்  , அந்த பெண்ணுக்கு மனநிலை பாதித்து விட்டதாகவும் , அதனால் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டதாகவும், அந்த குழந்தையை யாருக்கோ தத்து கொடுத்து விட்டதாகஙும்  கூறினார் …”

சாத்விகாவிற்கு தலை சுற்றுவது போலிருந்த்து .ரேணுகாதேவியின் பாதுகாப்பில் ஒரு பெண் இருந்திருக்கிறாள் .அவள் பெற்ற குழந்தை தத்து கொடுக்கப்பட்டு இருக்கிறது .அது ஏன் நானாக இருக்க கூடாது …?

” அந்த பெண்ணை எந்த பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள் …? அவர்களுக்கு உண்மையில் பைத்தியம் தானா …? ” பிரசவத்தில் ஒரு பெண்ணுக்கு பைத்தியம் பிடிக்குமா …என்ற எண்ணம் அவளுக்கு .

” இருக்கலாம்மா .அந்த பொண்ணுக்கு அப்போது ரொம்ப சின்ன வயசு .ஆனால் ஒரு வார்த்தை பேசாது .ஒரு வேலை செய்யாது ்எப்போது பார்த்தாலும் கூரையை அண்ணாந்து பார்த்துட்டு உட்கார்ந்திருக்கும் …”

இது …டிப்ரசன் …என சாத்விகாவின் மனது கணக்கு போட்டது .ஏதோ டிப்ரசனில் இருந்த அந்த பெண் பிரசவமானதும் , பைத்தியக்காரி பட்டம் கட்டப்பட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்ப பட்டாளா …? ” அப்படியானால் அது எதற்காக …?

” அந்த ஆஸ்பத்திரி பெயர் …? “

“அதெல்லாம் எனக்கு தெரியாதம்மா .”

” சரி ஆயா ரேணுகாதேவியின் அட்ரஸ் கொடுங்கள் …”

” அவள் பாகிஸ்தான் போய்விட்டாளம்மா .அங்கே உயிரோடு இருக்கிறாளோ …என்னவோ …? “

” அதை நான் பார்த்துக்கொள்கிறேன் ….” என்று கூறி அவர்களிடம் அட்ரஸை ஒரு பேப்பரில் எழுதி வாங்கிக் கொண்டிருந்த போது …

” இங்கே என்ன செய்கிறாய் …? ” என கேட்டபடி வீரேந்தர் உள்ளே வந்தான் .

சூழ்ந்து வந்து கொண்டிருந்த இருளுக்கு மத்தியில் ஒளிக்கீற்றொன்று பாய்ந்த்து போலிருந்த்து சாத்விகாவிற்கு .” வீரா …” என்ற பாய்ச்சலுடன் அவனிடம் சென்றவள் தன் கையிலிருந்த அட்ரசை அவனிடம் கொடுத்தாள் .தான் விசாரித்தவற்றை அவனிடம் ஒப்பித்தாள் .

அவள் சொன்னவற்றை கவனமாக கேட்டுக் கொண்டவன் அந்த வீட்டு பெரியவர்களிடமும் மீண்டும் ஒரு முறை விசாரித்து தெளிந்து கொண்டான் .வஹீப்பை காரெடுத்துக் கொண்டு போக சொல்லிவிட்டு , வீரேந்தருடன் காரில் ஏறிய சாத்விகா அந்த பெண் தன் தாயாக இருப்பாளோ …என்ற கவலையை அவனிடம் சொல்லியபடி வந்தாள் .

” அந்த பவத்தியக்கார ஆஸ்பத்திரியை கண்டுபிடிக்க முடியுமா வீரா …? “

” அதை எப்படி பிடிப்பது என்றுதான் யோசித்துக் கொண்டிருக்கிறேன் .ஆனால் நிறைய காரியம் சாதித்திருக்கிறாய் சாத்விகா ….” என்றவனின் குரலில் இருந்த்து பாராட்டா …? கேலியா …? 

” கிட்டத்தட்ட இருபத்தியிரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் இது .இதற்குள் அந்த பெண் குணமாகி போயிருக்கலாமில்லையா ..? இந்த ஏரியாவில் மனநலம் குன்றியவர்களுக்கான ஹாஸ்பிடல் இரண்டு இருக்கிறது .அங்கே விசாரித்து பார்க்கலாம் “

இரண்டு இடங்களிலுமே இருபத்தியிரண்டு வருட நோயாளி யாரும் இல்லை .ஐந்து அல்லது ஆறு வருடங்களுக்குள் எல்லா நோயாளிகளுமே குணமாகி சென்றுவிடுவார்கள் என கூறிவிட்டனர்.அப்படி போனவர்களின் அட்ரஸ் கேட்டபோது ,தேடி எடுக்கவேண்டும் ,ஒரு வாரம் கழித்து வாருங்கள் என்றனர் .

அட்ரஸ் கிடைக்குமா …என்ற தீவிர சிந்தனவயுடன் வெகு நேரம் பேசாமலேயே வந்த சாத்விகா , வீரேந்தரை திரும்பி பார்த்த போது ,அவனும் ஏதோ ஓர் ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்திருந்தான் .

இருவரும் மௌனமாகவே வீட்டு படியேறிய போது ” எங்கே போய் தொலைந்தாய் …? இப்படித்தான் சொல்லாமல் கொள்ளாமல் ஊர் சுற்ற போய்விடுவாயா ..? என வசவுகளுடன் வரவேற்றாள் சந்திரிகா .

” என்னுடன்தான்மா இருந்தாள் .நாங்கள் இருவரும் தான் போய் வந்தோம் …” அம்மாவிற்கு பதில் சொல்லியபடி வீரேந்தர் உள்ளே போய்விட ,பின்னாலேயே போகப் போன  சாத்விகாவின் கையை பற்றிய சந்திரிகா …

” ஏன்டி நீ யாருக்கும் அடங்கவே மாட்டாயா …? வீட்டில் மலை மாதிரி நான் ஒரு மனுசி இருக்கிறேன் .இப்படித்தான் ஒரு வார்த்தை சொல்லாமல் காணாமல் போய்விடுவாயா …? திடீரென காணோமென்றால் நான் என்ன நினைப்பது …? ” என்றாள் .




எரிச்சலுடன் அவள் கையை உதறிய சாத்விகா உள்ளே சோபாவில் இரண்டு ஆட்காட்டி விரல்களையும் சேர்த்து வைத்து அதில் நெற்றியை சாய்த்து கண்களை மூடிக் கொண்டு  சிந்தனையில்  அமர்ந்திருந்த வீரேந்தரின் அருகே போய் அமர்ந்து கொண்டாள்…

” உங்கள் அம்மா தொல்லையிலிருந்து தப்ப எனக்கு ஏதாவது வழி சொல்லுங்கள் வீரா .ஷ் …அப்பா …முடியலை …” என அலுத்தாள் .

” ம் …ஒரு வழியிருக்கு .பேசாமல் என்னை கல்யாணம் செய்து கொள்ளேன் …” சேர்ந்திருந்த விரல்களை பிரிக்கவில்லை .மூடியிருந்த விழிகளை திறக்கவில்லை .நிதானமாக அவன் சொன்னவிதம் தனக்கு தானே சொல்லிக் கொள்வதை போல் இருந்த்து . நிதானமாக …மிக நிதானமாக இருந்தான் .

தீடீரென்று தன்னருகே ஒரு குண்டு விழுந்து வெடித்தது போல் அதிர்ச்சியடைந்தவள் சாத்விகாதான் .

What’s your Reaction?
+1
16
+1
11
+1
1
+1
3
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!