Serial Stories கற்பூர பொம்மை ஒன்று

கற்பூர பொம்மை ஒன்று – 10

10

சலனங்களை எனக்குள் கடத்தும் 
உன் இரக்கமற்ற 
விரல் நெரித்தல்களும் …
யாசிக்கவே வைக்கின்றன 
உன் விழிகளை 
என்னை விசுவாசிக்கும்படி

” இல்லை சார் .இன்று உங்கள் அப்பாயின்ட்மென்டின் போது நான் கண்டிப்பாக உங்களுடன் இருக்க வேண்டும் ….” சாத்விகா  சொன்ன உடனேயே அதற்கு பதில் போல் சண்முகபாண்டியனிடம் சொன்னான் வீரேந்தர் .

உன்னுடன் பேச வேண்டும் என சாத்விகா அனுப்பிய விழி கோரிக்கையை நிராகரித்தான் .

” யெஸ் பேபி .இது முக்கியமான அப்பாயின்ட்மென்ட் .எனக்கு வீரேந்தர் கண்டிப்பாக வேண்டும் ….”

” எனக்கும் வீரேந்தர்தான் வேண்டும் அப்பா …”

சாத்விகாவின் பதில் பேச்சில் ஒரு கணம் அங்கே அமைதி நிலவி , பின் காரத்திக் அந்த மௌனத்தை கலைத்தான் .

” அவர் அப்பாவின் டிரைவர் பாப்பா .உன்னுடன் நான் வருகிறேன் .இன்று அந்த பசங்களை நான் கவனித்து கொள்கிறேன் ” என்றான் .

” உன் மூஞ்சி ….நீ ஒண்ணும் வேண்டாம். ரோட்டில் போற எவன்கிட்டயாவது நீயே என்னை பிடிச்சு குடுத்திடுவாய் ….”

” ஆஹா இது நல்ல ஐடியாவாக இருக்கிறதே .கம்மான் …கமான் சீக்கிரம் கிளம்பு பாப்பா  போகலாம் …”

” ரொம்ப நல்லது கார்த்தி …அப்படி சீக்கிரமாக இவளை எவன்கிட்டயாவது பிடிச்சு தள்ளிடுங்க .அதற்கு பிறகுதான் நான் இந்த வீட்டில் நிம்மதியாக இருக்க முடியும் .” ரங்கநாயகி கண்ணாடியை சுழட்டி துடைத்தபடி நிதானமாக சொல்ல , சாத்விகாவிற்கு பாட்டியின் தலையில் கொட்டும் ஆவல் பிறந்த்து .

” அப்பா …அம்மா பாருங்க இந்த பாட்டியும் , அண்ணாவும் சேர்ந்து என்னை கலாட்டா பண்ணுகிறார்கள் …..” சாத்விகா சிணுங்கிக் கொண்டிருக்கையில் வீரேந்தர் வாசலுக்கு நடந்தான் .

கொஞ்ச நாட்களாகவே வீரேந்தரிடம் தான் ஒப்படைத்த வேலையை பற்றி தெரிந்து கொள்ள அவனை தனமையில் சந்திக்க சாத்விகா செய்த முயற்சகளணைத்தும் இப்படி தோல்வியில் தான் முடிந்தன.

” வருகிறாயா பாப்பா …? ” கேட்ட கார்த்திக்கின் கையிலிருந்த கார் சாவியை பிடுங்கிக் கொண்டு …

” போடா …உன்னுடன் வர மாட்டேன் ….” என்றுவிட்டு தள்ளி நின்றிருந்த வீரேந்தரை முறைத்தபடி தன் காரை வீட்டிற்குள்ளேயே டாப் கியர் போட்டு எடுத்து ஓரமாக நின்ற பூந்தொட்டகளை இடித்து சேதப்படுத்தி விட்டு
ஓரமாக நின்ற வீரேந்தர் , கார்த்தக்கையும் இடிப்பது போல் உரசிவிட்டு  வெளியேறி போனாள் .

” உங்கள் தங்கைக்கு அதிக செல்லம் சார் ….” என்ற வீரேந்தருக்கு …

” அவள் அப்பா செல்லம் வீரேந்தர் .நான் ஒன்றும் சொல்ல முடியாது ” என தோள்களை குலுக்கி போனான் கார்த்திக் .

———–

” அண்ணா இந்த கம்மலையும் சேர்த்து எடுத்துக்கொள்ளட்டுமா …? ” ஆசை பொங்க சண்முகபாண்டயனிடம் கேட்டுக் கொண்டிருந்தாள் சாரதா .சண்முகபாண்டியனின் தங்கை .சுகுமாரின் அன்னை .




” எடுத்துக்கோம்மா ….அது என்ன பெரிதாக வந்து விட போகிறது …” என்று சண்முகபாண்டியன் தங்கையிடம் சொல்லிக் கொண்டிருந்த வைரக்கம்மலின் விலை சில லட்சங்கள் .

முன்பே தான் கழுத்தில் அணிந்திருந்த வைர நெக்லஸுக்கு ஜோடியாக கம்மலையும் காதில் பூட்டிக் கொண்டிருந்த சாரதாவின் முகத்தில் உற்சாகம் அந்த வைரங்களை விட அதிக வெளிச்சத்தில் இருந்த்து .அவள் நகை கடைக்கு வந்த்தென்னவோ …சாத்விகாவிற்கு நகை வாங்க என்றுதான் .இதற்காகவே கல்லூரியில் பாதி வகுப்பிலிருந்து அவளை இழுத்துக் கொண்டு வந்திருந்தாள் .

நிச்சயதார்த்த்திற்கான நகை  என சாத்விகாவை கூட்டி வந்து அவளுக்காக வாங்கியது அரை பவுனில் சிறிய வைர மோதிரம் மட்டுமே .மற்றபடி மாலை , கம்மல் , வளையல் என வைரங்களினாலேயே அவள் அடுக்கிக் கொண்டிருப்பது சாரதாவுக்காக….கொஞ்சமும் முகம் சுளிக்காமல் தங்கைக்கு வாரி வழங்கிக் கொண்டிருந்த தங்கையை வெறுத்து போய் பார்த்த சாத்விகா அங்கிருக்க பிடிக்காமல் நகர்ந்தாள் .

கடையின் கீழ் தளத்தை அளப்பது போல் அங்குமிங்கும் நடந்தபடியிருந்தான் வீரேந்தர் .பெரிய இவன் …காவல் காக்கிறானாம் …உதடு சுளித்து அவனை பழித்துவிட்டு …

” நீங்கள் விசாரித்தீர்களா இல்லையா …? ,” என்றாள் .

” எதை …? ” நடையை நிறுத்தாமல் நிதானமாக கேட்டான் .
” நான் ..சுகுமாரை , அத்தையை …அவர்கள் குடும்பத்தை விசாரிக்க சொன்னேன் …” எரிச்சலோடு நினைவூட்டினாள் .அன்று அவ்வளவு தூரம் சொன்னேன் இவன் அதை கண்டு கொள்ளவே இல்லையா ..???

” அது என் வேலையில்லை ….” அவன் நடையை நிறுத்தவில்லை .

” ஓ…உனக்குத்தான் ஒரு வேலை செய்வதென்றால் லட்சம் லட்சமாக கொட்டிக் கொடுக்க வேண்டுமே …அதை மறந்துவிட்டேன் . சொல் நான் சொல்லும் வேலையை செய்வதற்கு உனக்கு எத்தனை லட்சங்கள் வேண்டும் …? உன் அக்கௌன்ட் நம்பர் சொல் .உடனே டிரான்ஸ்பர் பண்ணுகிறேன்…” தன் போனை வெளியே எடுத்தாள் .

” ஏய் ….” சொடுக்கிட்டு அவளை நிறுத்தினான் .

” மரியாதை .உன் அப்பா , அண்ணனை போல் என்னிடம் அலட்சியமாக பேசக்கூடாது பெண்ணே .மரியாதை கொடுத்து பேசு .உனக்கு ஒரு தேவையென்றால் தாழ்ந்து பேசு .நீ எறியும் லட்சங்கள் எனக்கு பொருட்டில்லை .என் தன்மானம் எனக்கு முக்கியம் …”

கடையில் சுற்றியிருக்கும் பணியாளர்கள் காதில் விழுந்து விடக் கூடாதென அடக்கிய குரலில் பேசினாலும் , அதில் தெறித்து விழுந்த ரௌத்திரத்தில் நடுங்கி போனாள் சாத்விகா .இது போன்ற கடினங்களை அறியாதவள் அவள். எனவே தானாக கலங்கி விட்ட கண்களை அவனிடமிருந்து மறைக்க சட்டென திரும்பி மேலே போய் கொண்டிருந்த எஸ்கலேட்டரில் நின்று மேலேற ஆரம்பித்தாள் .

ஒரு நிமிடம் அவள் முதுகை பார்த்தபடி நின்றவன் பின் அகன்ற எட்டுக்களுடன் நடந்து அவள் அருகாமை படியில் நின்று கொண்டு ” நான் என்ன செய்ய வேண்டும் ….? ” முடிந்தளவு குரலை மென்மையாக்கி கேட்டான் .

போடா …நீ எனக்கு ஒன்றும் செய்ய வேண்டாம் என்றுதான் சொல்ல நினைத்தாள் சாத்விகா .ஆனால் மேலே சாரதா செய்து கொண்டிருக்கும் அநியாயங்களை யாரிடமாவது சொல்ல வேண்டுமென்ற வேகத்தில் இருந்தவள் ….

” மேலே போய் அத்தையை பாருங்கள் .லட்சம் லட்சமாக அப்பாவிற்கு செலவு வைத்துக் கொண்டிருக்கிறார்கள் .தடையே சொல்லாமல் அப்பாவும் வாங்கி கொடுத்துக் கொண்டிருக்கிறார் ….”

” தங்கைக்கு அண்ணன் வாங்கிக் கொடுப்பதில் தவறு என்ன இருக்கிறது …? “

” ஐய்யோ …அப்படி வாங்கி கொடுத்தால் பரவாயில்லையே .இது ஏதோ நிர்பந்த்த்திற்கு செய்வது போல்ல்லவா இருக்கிறது .இந்த உணர்வு எனக்குள் ரொம்ப நாட்களாகவே இருக்கிறது .இதனை நான் யாரிடம் கேட்கமுடியும் …? பாட்டியிடம் கேட்கவே முடியாது .அம்மாவும் , அண்ணனும் உளறாதே பாப்பா என்றுவிடுவார்கள் . அப்பா இதில் சம்பந்தப்பட்டவர் .அதனால்தான் உங்களிடம் ….”

” உன் குடும்ப விசயங்களை என்னிடம் ஏன் சொல்கிறாய் …? “

இதற்கான பதில் இப்போது வரை சாத்விகாவிற்கே தெரியவில்லை .பதில் சொல்லும் வகையற்று அவனை பார்க்க …

” சரி நான் பார்க்கிறேன் …” திரும்பி இறங்க தொடங்கினான் .

” மறந்து விட மாட்டீர்களே …” சற்றே உயர்ந்த குரலில் சாத்விகா கேட்ட கேள்விக்கு ….

” முன்னால் பார்த்து ஒழுங்காக ஏறு ….” என்ற அவனது முகம் திருப்பாத பதில்தான் கிடைத்தது .

இரண்டு நாட்கள் கழித்து அதிகாலை ஜாக்கிங் பண்ணாமல் வீரேந்தர் தோட்டத்தில் மெல்ல நடந்து கொண்டிருப்பதை கண்ட சாத்விகாவிற்கு , அவன் தனக்காகவே காத்திருக்கிறானென தோன்றி விட வேகமாக கீழிறங்கி சென்றாள் .

What’s your Reaction?
+1
17
+1
7
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!